புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_m10பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 9:54 pm

"மார்ச் - 8', சர்வதேச மகளிர் தினம். பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள் வழக்கமான உற்சாகத்துடன் மகளிர் தினத்தை கடந்த 8ம் தேதி கொண்டாடி களித்தனர். காலங்காலமாக அடிமைப்பட்டு கிடந்த பெண்ணினத்துக்கு குடும்ப, சமூக அமைப்புகளில் சம உரிமை, கல்வி உரிமை, வேலை உரிமை கிடைத்துள்ளதாக, மகளிர் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் பலரும் ஆரவார வார்த்தைகளை உதிர்த்தனர். உண்மையில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு குடும்ப, சமூக அமைப்புகளில் பூர்த்தியாகியுள்ளதா? என்ற கேள்வி சுடுகிறது. காரணம் கடத்தல், கற்பழிப்பு, கொலை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்திய சமூக அமைப்பின் ஆரம்ப காலம் முதலே ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவோராகவும், பெண்கள் அடங்கிப் போகக்கூடிய பலவீனமானவர்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இந்த ஆணாதிக்க போக்கு காரணமாக குடும்ப மற்றும் சமூக அமைப்புகளில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் பெண்களையும், அவர்களது உரிமைகளையும் நிலைநாட்ட அவ்வப்போது பிரத்யேக சட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன.வரதட்சணை தடைச் சட்டம் 1961, குடும்ப வன்முறை தடைச் சட்டம் 2005, பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம் 2007, ஈவ் டீசிங் தடை சட்டம், ஆபாச சித்தரிப்பு தடைச் சட்டம், பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம் என கிரிமினல் குற்றம் சார்ந்த சட்டங்களும்; கார்டியன் சட்டம் 1890, மணமான பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1959 என சிவில் உரிமை சட்டங்களும்; ஆனந்த் திருமண சட்டம் 1909, அந்நிய திருமணச் சட்டம் 1969, இந்து திருமணச் சட்டம் 1955, திருமணம் மற்றும் மனமுறிவு சட்டம் 1936 என, திருமண சட்டங்களும் பல்வேறு பட்டியல்களாக நீள்கின்றன. இப்படி, மாறி வரும் சமூகச் சூழல், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கு தகுந்தாற்போல் எண்ணற்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட போதிலும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் சங்கிலித் தொடராக நிகழ்கின்றன.

கடத்தல், மானபங்கம், கற்பழிப்பு, கொலை, பாலியல் ரீதியான துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகின்றன. கோவை மாநகர எல்லைக்குள் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 15 கற்பழிப்புகள், 35 மானபங்க சம்பவங்கள், 10 ஆள் கடத்தல்கள், 45 துன்புறுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. இவை உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 161 வழக்குகள் போலீசில் பதிவாகியுள்ளன. இவற்றில், 9 வழக்குகள் விபசாரம் தொடர்பானவை. விபசார வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் கோர்ட் மற்றும் போலீசாரின் விசாரணையில் உள்ளன.அதேபோன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டத்தில் கடந்த 2010ம் ஆண்டில் 143 கற்பழிப்புகள், 26 வரதட்சணை தற்கொலைகள், 402 மானபங்க சம்பவங்கள், 29 பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. தவிர, கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் 259, கடத்தல் சம்பவங்கள் 410, தற்கொலைக்கு தூண்டல் சம்பவங்கள் 50 என்ற எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளன. கடந்த 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு, வரதட்சணை சாவு, மானபங்கம், கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுதல், ஆள் கடத்தல் குற்றங்கள் அதிகரித்திருப்பது போலீஸ் ஆவண புள்ளி விபரங்களில் தெரியவருகிறது.

தடுப்பு நடவடிக்கை தீவிரம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கோவை மாநகர போலீசாரும், தமிழக மேற்கு மண்டல போலீசாரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தல், கற்பழிப்பு குற்றங்கள் அதிகரிக்க ஆபாச சினிமா, "இன்டர்நெட்', ஆபாச "சிடி' ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் ஆபாச காட்சிகள் மீதான மோகம் அதிகரித்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இணையதளங்களிலுள்ள ஆபாச காட்சிகளை "சிடி'க்களில் பதிவிறக்கம் செய்யும் இளைஞர்கள் பலருக்கும் அதை வினியோகிக்கின்றனர். சிலர், ஆபாச"சிடி' தயாரித்து விற்றும் வருகின்றனர்.இதன் மூலம், வக்கிரமமாக பாலுணர்வு தூண்டப்பட்டு கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சில வழக்குகளின் விசாரணையில் இதை கண்டறிந்த போலீசார்,"கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர்கள்' மற்றும் ஆபாச "சிடி' விற்பனையாளர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பிரவுசிங் சென்டருக்கு வருவோர் வெளிப்படையான முறையில் பிரவுசிங் செய்யும் வகையில், "பிரைவெசி' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள மறைவு தடுப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதே போன்று, ஆபாச "சிடி' தயாரித்த பலர் கைது செய்யப்பட்டு பல ஆயிரம் "சிடி'க்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையின் மூலமாக இளைஞர்களிடையேயான பாலுணர்வு தூண்டலை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஆபாச படமெடுத்து மிரட்டல்: கோவை மாநகரில் "சைபர் குற்றங்கள்' அதிகரித்ததை தொடர்ந்து, "சைபர் கிரைம்' போலீஸ் பிரிவு பிரத்யேகமாக துவக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ல் மட்டும் இப்பிரிவில் 610 புகார்கள் குவிந்தன. இவற்றில் பல புகார்கள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து "பிளாக்மெயில்' செய்தது தொடர்பானவை. கோவை நகரில் வசிக்கும் டாக்டர் தம்பதியின் மகளை காதல் வலையில் வீழ்த்திய வாலிபர், தனது வீட்டுக்கு வரவழைத்து படுக்கையில் ஆபாச வீடியோ காட்சிகளை பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டினார். பணம் தர மறுத்த மாணவியின் ஆபாச காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் "பிளாக்மெயில்' செய்தார். மிகவும் தாமதமாக தகவலறிந்து அதிர்ச்சியடைந்த டாக்டர் தம்பதியர், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளிக்க, "பிளாக்மெயில்' பேர்வழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.இதேபோன்று, தனது கள்ளக்காதலியின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு மிரட்டிய கோவை, வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த வாஸ்து நிபுணர் கைது செய்யப்பட்டார். இவ்வாறான குற்றங்கள் தவிர, பெண்களுடன் மொபைல் போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த நபர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க "ஆன் லைனில்' புகார் பதிவு செய்யும் பிரத்யேக புகார் பிரிவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படுகிறது.

பாலியல் தொந்தரவு அதிகரிப்பு: கோவை புறநகரிலுள்ள தனியார் மில்கள் பலவற்றில் தென்மாவட்ட பெண்கள் கூலித்தொழிலாளராக பணியாற்றுகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் சொந்த ஊர்களில் இருந்து அழைத்து இவர்கள் வரப்பட்டு மில் வளாகத்தில் அடிப்படை வசதிகளற்ற கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியே செல்ல முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதித்து, காவலாளிகளை கொண்டு தீவிர கண்காணிப்பை செலுத்தி வரும் மில் அதிபர்கள், குறைந்தபட்ச கூலியை கூட வழங்காமல் உழைப்பு சுரண்டலில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் புகார் கிளப்பியுள்ளன. மேலும், இதுபோன்ற ஒப்பந்த பெண் தொழிலாளர்களை பணியாற்றுமிடத்திலும், தங்கியிருக்கும் முகாம்களிலும் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கும் உள்ளாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக புகார் அளிக்க தயங்குவதால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்கின்றனர், போலீசார்.இதுகுறித்து, தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி கூறுகையில், ""பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குடும்ப மற்றும் சமூக அமைப்புகளில் நிகழ்கின்றன. கணவன் - மனைவி தகராறு, வரதட்சணை கொடுமை, குடும்ப உறுப்பினர்களால் தனித்து விடப்படுதல், கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் குடும்ப அமைப்பில் நிகழ்கின்றன. பாலியல் துன்புறுத்தல், கற்பழிப்பு, காதலனால் கைவிடப்படுதல், பணியாற்றுமிடங்களில் தொந்தரவு, ஈவ் டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் சமூக அமைப்பில் நிகழ்கின்றன. இக்குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்து கோர்ட்டில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.

எதிர்கொள்வது எப்படி? கோவை பாரதியார் பல்கலையின் செனட் உறுப்பினரும், வக்கீலுமான சண்முகம் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து இயற்றியுள்ள சட்டங்களும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகளில் வழங்கியுள்ள தீர்ப்புகளும் பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்ப்பதாக உள்ளன.

பெண்களின் பாதுகாப்புக்காக எண்ணற்ற சட்டங்கள் தொடர்ச்சியாக இயற்றப்படுவது, இன்னமும் கூட நமது சமூகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இந்நிலை மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும். தங்களுக்கான உரிமைகள் என்ன? என்பதை பெண்கள் ஒவ்வொருவரும் அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில், பணியாற்றுமிடத்தில், சமூகத்தில் என எங்காவது ஓரிடத்தில் தாங்கள் உடல், மன ரீதியான தாக்குதலுக்கு உள்ளானால் சட்ட ரீதியாக நிவாரணம் பெற முடியும், என்ற விழிப்புணர்வு மிக, மிக அவசியமானது. சகித்துக்கொள்ளக் கூடிய விஷயங்களை அறிவுப்பூர்வமாகவும், சகித்துக்கொள்ள முடியாத துன்புறுத்தல்களை சட்ட ரீதியாகவும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு, வக்கீல் சண்முகம் தெரிவித்தார்.

பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை!கோவை பெண் வக்கீல்கள் நலச்சங்கச் செயலாளர் வெண்ணிலா கூறியதாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் 10 சதவீதம் மட்டுமே வெளியுலகம் அறியும்படி அம்பலமாகின்றன; 90 சதவீத குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தாரால் மூடி மறைக்கப்படுகின்றன. போலீசில் புகார் அளித்தால் கோர்ட் விசாரணைக்கு செல்ல வேண்டுமே என அஞ்சி பலரும் சம்பவத்தை மூடி மறைத்துவிடுகின்றனர்.இது, சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் தப்ப சாதகமாகிறது. முன்பெல்லாம், நமது சமூக அமைப்பில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தங்களது மகன், மகள், பேரன், பேத்திகளை கண்காணித்து, பாதுகாக்கும் பொறுப்பை பெரியவர்கள் ஏற்றிருந்தனர். தவறான நபர்களுடனான தொடர்பை கண்டிப்போராக இருந்தனர். தற்போதைய நாகரீக வாழ்க்கை முறையில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை கசந்து, தனிக்குடித்தனம் அனைத்து மட்டங்களிலும் தலைதூக்கியுள்ளது.இதனால் குடும்ப அமைப்பின் பாதுகாப்பு, உறுப்பினர்கள் மீதான கண்காணிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. ஆண்களுக்கு நிகராக சம்பாத்யம் பார்க்கும் பெண்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும், பல நேரங்களில் ஆண்களால் ஏமாற்றப்பட்டு பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். காலம் எப்படி மாறினாலும், சுயகட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துக்கொண்டால், எவ்விதமான தாக்குதல்களில் இருந்தும் பெண்கள் தற்காத்துக்கொள்ள முடியும்.இவ்வாறு, வக்கீல் வெண்ணிலா தெரிவித்தார்.

கே.விஜயகுமார்
தினமலர்



பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 15, 2011 10:09 pm

//பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் தொடர்பான
துன்புறுத்தல்களில் 10 சதவீதம் மட்டுமே வெளியுலகம் அறியும்படி
அம்பலமாகின்றன; 90 சதவீத குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும்
குடும்பத்தாரால் மூடி மறைக்கப்படுகின்றன. போலீசில் புகார் அளித்தால்
கோர்ட் விசாரணைக்கு செல்ல வேண்டுமே என அஞ்சி பலரும் சம்பவத்தை மூடி
மறைத்துவிடுகின்றனர்.இது, சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் தப்ப
சாதகமாகிறது.//
என்ன செய்வது? இல்லாவிட்டால் தானே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட யானை கதை ஆகிவிடுமே. எப்போது இவர்கள் திருந்துவார்கள்? கடவுளே காப்பாற்று பெண்களை இந்த மிருக்ங்களிடமிருந்து.
மனம் பதைக்கும் புள்ளி விவரத்திற்கு நன்றி சிவா.



பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Aபாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Aபாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Tபாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Hபாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Iபாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Rபாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Aபாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்... Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக