புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_m10இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 9:15 pm

விஷ்ணு ஆலயத்தின் முன்பு அகத்தியர் வந்ததும், வழியில் வந்த அக்கோயிலின் வைணவர்கள் சினந்து பார்த்தனர்.

""சாம்பலையும் ஏதோ ஒரு மணியையும் அணிந்திருக்கிறாய்... பிட்சை எடுக்கும் சிவனுக்கு அடியவனான நீ இங்கு எதற்காக வந்தாய்? இங்கு வரக்கூடாது. இவ்விடத்தை விட்டுச் செல்லுக...!'' என்று விரட்டினார்கள்.

அகத்திய மாமுனிவர் கோபம் கொள்ளாமல் நகைத்தார். ""வேத நெறியை மறந்த நீவீர் இங்கே இருப்பதை நான் அறியேன். கோபிக்க வேண்டாம். நான் செல்லுகிறேன்'' என்று திரும்பிச் சென்றார்.

""சிவநிந்தை புரியும் இவர்களது அறியாமையை அடியுடன் களைவேன்'' என்ற எண்ணிக்கொண்டார்.

விஷ்ணு பக்தரைப் போல பாகத வடிவம் கொண்டு அங்கு மீண்டும் சென்றார். அகத்திய மாமுனிவர்தாம் என்றறியாத அவ்வைணவர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்து துதித்தனர்.

""இவ்வணக்கம் விஷ்ணு மூர்த்திக்கு உரியதாகுக. உமது தரிசனத்தால் மிக்க மகிழ்ச்சியுற்றோம். திருமலையிலிருந்து வந்தோம். இப்பொழுது அத்திகிரிக்குச் செல்ல இருக்கிறோம். இங்கு எம்பெருமானுடைய திருத்தளியுளது என்று அறிந்து வணங்கிச் செல்ல வந்தோம்'' என்று கூறினார்.

அவ்வைணவர்களும் அவரை வணங்கி ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

அகத்தியரும் வலம் வந்து வணங்கினார்.""வைணவர்களே, இவரை வணங்கும் முறையை எல்லோரும் பாருங்கள்'' என்று கூறி, ""திருமஞ்சனத்திற்கு உரியவற்றைத் தாருங்கள்''என்று கேட்டார்.

வைணவர்களும் அவற்றைச் சித்தம் செய்து அளித்தனர்.

அகத்தியர் சிவத்தை எண்ணி வணங்கி, திருமாலின் திருமுடி மேல் கரத்தை வைத்து ""குறுகு, குறுகு'' என்று இருத்தி, அனலிற்பட்ட மெழுகு போல் குழையச் செய்து சிவலிங்கமாக்கினார். பாகவத வடிவை நீக்கி அகத்திய மாமுனிவ வேடம் தாங்கி பஞ்ச சுத்தி செய்து பூஜித்தார்.

அதுகண்ட வைணவப் பெரியவர் ஒருவர் கோபித்து, ""இக்குறியன் மிகவும் வஞ்சகன். இவன் நம்மை ஏமாற்றிவிட்டான். இவனை பிடியுங்கள்'' என்று கத்தியதும், மற்றவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். தம்மைப் பற்றும்படி வந்த அவர்களை கனல் எழப் பார்த்து சினத்தீயை விடுத்தார். அகத்தியர். அத்தீ அவர்களை விடாமல் விரட்டியது.

அன்றிலிருந்து அத்தலம் சிவத்தலமாக ஆயிற்று. அகத்தியர் சிவனாரைப் பணிந்து பொதியமலையை அடைந்து சிவனாரைக் குறித்து தவம் செய்யலானார். அகத்தியர் குறுக வைத்த திருமால் சிவனாரான தலமே திருக்குற்றாலம் என்ற பெயரில் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது.

அகத்திய முனிவருடைய கமண்டலத்தை காகம் கவிழ்த்து விட்டதல்லவா? அக்காவிரி நதி, பல காதவழி கடந்து சந்தனம் போன்ற தருக்களையும், பொன், முத்து, யானைத் தந்தம் போன்ற உயர்ந்த பொருள்களையும் வாரி அடித்துக் கொண்டு கீழ்த்திசையை நோக்கி விரைந்து வந்தது. இந்திரன் தவமியற்றும் சீர்காழிப்பதிக்கு வந்து சோலையிலே புகுந்து ஓடியது. அது ண்டு அமரர்கோன் ஆனந்தக் கூத்தாடினான். அன்னைக் காவிரியின் அருளால் நந்தவனம் தழைத்தது. சிவபூஜைக்கு அளவற்ற மலர்கள் கிடைத்தன. இந்திரன் மலர்களைத் தக்க தருணங்களில் கொய்து சிவவழிபாடு செய்து கொண்டிருந்தான்.

இந்திரன் இவ்வாறு பூஜித்துக் கொண்டிருக்க, சூரபத்மனின் கொடுமையால் வருந்திய சில தேவர்கள் சீர்காழிப்பதிக்கு வந்து இந்திரனைப்பணிந்தனர். சூரனின் கொடுமை என்று நீங்கும் என்று ஏங்கினர்.

""தேவர் கோனே, அறநெறி சிறிதும் இல்லாத அவுணர்கள் வசம் எங்களை ஒப்படைத்து விட்டு நீங்கினீர். எங்களைக் காக்க உம்மையின்றி, வேறு யார் இருக்கிறார்கள்? தாரகன் என்னும் யானைமுக அசுரனிடமும், ஆயிரம் சிங்க முகங்களைக் கொண்ட சிங்கமுகாசூரனிடமும், சூரபதுமனிடத்திலும் தேவர்களாகிய பசுக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு நீர் மறைந்து வாழ்வது சரியா! இது நியாயமாகுமா? ஊனும், மீனும் சுமந்து மானம் குலைந்து ஏவல் செய்து உழல்கிறோம். சீலமும், சிவபூஜையும் எங்களைவிட்டு நீங்கியது. விரைவில் எங்கள் துன்பத்தை நீக்க ஆவன செய்யுங்கள்'' என்று வேண்டினார்கள்.

""தேவர்களே, அளவற்ற தவங்களைச் செய்த சூரனால் எம்முடைய வாழ்வும், பறிபோயின. என் இந்திராணியைக் கைப்பற்றவும், என்னைச் சிறைப்படுத்தவும் சூரன் தன் அவுணர் படையை ஏவிவிட்டிருக்கிறான். அதனால்தான் நான் மறைந்து வாழ்கிறேன். நமக்கு நலத்தைத் தரவேண்டும் என்று சிவனாரை பூஜிக்கிறேன். இத்துன்பம் தீர திருக்கயிலாயம் சென்று சிவனாரைத் துதித்து முறையிடுவோம். வாருங்கள்'' என்று கூறினான்.

தேவர்கள் மழைகண்ட பயிர்போல மகிழ்ந்து, ""நாங்களும் வெள்ளி வெற்புக்கு வருகிறோம்'' என்று கூறிக் கிளம்பினார்கள்.

இந்திரன் தன் மனைவி இந்திராணியைச் சந்திக்க சென்றான். கணவனை கண்ட இந்திராணி அவனை இறைஞ்சி நின்றாள்.

""பெண்ணரசியே, சூரனின் கொடுமை தாங்காமல் என்னிடம் முறையிட வந்த தேவர்களோடு நம் குறைகளை சிவமூர்த்தியிடம் முறையிட கயிலாங்கிரிக்குச் செல்கிறேன். விடை தருவாய்'' என்று கூறினான்.

ஆனால் இந்திராணி மறுகணம் அப்படியே மயங்கி விழுந்தாள். தெளிந்தபின் எழுந்து இடர்க் கடலில் விழுந்தாற்போலத் துடித்தாள். இந்திரன் அவளை எடுத்துப் பற்பல சமாதானங்களை எடுத்துரைத்தான். மயக்கம் தணிந்தாலும் இந்திராணியின் நடுக்கம் தீரவில்லை.

""என் அன்பரே, நான் பொன்னுலகை விட்டு விட்டு மண்ணுலக வனத்தில் இருக்கிறேன். உமது திருவருளால் மனம் மகிழ்ந்திருக்கிறேன். என்னை நீர் பிரிந்தால் என்னால் எப்படி உயிர் தரித்திருக்க முடியும்? சக்கரவாளப் பறவைக்குச் சந்திரனும், வானம்பாடிக்கு மழையும் துணையாவது போல் எனக்கு நீரே துணைவர். தங்களைப் பிரிந்து நான் தனித்திருப்பது எப்படி? அவுணர்கள் தனித்திருக்கும் என்னைத் துன்புறுத்துவார்களே. நமது மைந்தனான சயந்தனும் இங்கு இல்லை. ஐராவதமும் இல்லை. பொல்லாதவரும், பழிக்கு அஞ்சாதவரும், பாவங்களுக்கு உறைவிடமானாவரும் ஆகிய அசுர்கள் என்னை அபகரிக்கப்பார்ப்பார்களே.. அதனால் யான் உம்முடனேயே வருகிறேன்''என்றாள்.

இந்திரன் சற்று நேரம் யோசித்து விட்டுக் கூறினான்! ""என் அன்பிற்கினியவளே, கலங்காதே. துணை இல்லை என்று சிறிம் கலக்கம் வேண்டாம். சிவபெருமானும் திருமாலும் கூடிப்பெற்ற ஐயனார் உன்னைக் காப்பாற்றுவார். அவரை தியானித்தால் உடனே இங்கு வருவார். அவரிடம் உன்னை அடைக்கலமாகத் தந்துவிட்டுச் செல்வேன். அவர் உன்னைக் காத்தருள்வார். அஞ்சவே தேவையில்லை'' என்று உரைத்தான்.

""என் அன்பான நாயகரே, அந்த ஐயனாருடைய வரலாறு என்னவென்று எனக்கு உரைக்க வேண்டும்!'' என்று கேட்க, இந்திரன் சொல்ல ஆரம்பித்தான்.

""முன்பொரு சமயம் திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானுடைய அருளினால் பாற்கடலைக் கடைந்தார்கள். அசுரர்களும் சேர்ந்து கடைந்தார்கள். முதலில் அதில் ஆலகால விஷம் வந்தது. அதைக் கண்டதும் அலறிக்கொண்டு அவர்கள் ஓடிப்போய் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தார்கள். முக்கண்ணனார் அவ்விஷயத்தைத் தாமே உண்டு அவர்களுக்கு அருள்புரிந்தார்.

அதன் பின்னரும் கூட வினாயகப்பெருமானை வணங்காது பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மந்திரமலை மத்தாகச் சுழலாமல் பாற்கடலில் அழுந்தத்தொடங்கியது. பாதாளம் வரை மலை அழுந்தியதைக் கண்ட அவர்கள் உடனே வினாயகப் பெருமானை துதித்து பூஜிக்க, மலை மேலே எழும்பியது.

பின்னர் பாற்கடலைக் கடைய பொற்குடத்தோடு அமிர்தம் வந்தது. அமிர்தம் உண்ணும் விஷயத்தில் வானவர்களுக்கும் தானவர்களுக்கும் சண்டை எழுந்தது. திருமால் மூவுலகமும் வியக்கும்படியான ஒரு மோகினி வடிவெடுத்தார்.

""நான் ஒருவர் பங்கு; அமிர்தம் ஒருவர் பங்கு'' என்றார்.

பெண் பித்துப் பிடித்த அசுரர்கள் தங்களுக்கு மோகினியே வேண்டும் என்றார்கள்.

அமரர்கள் அமுதமே வேண்டும் என்ற கேட்டார்கள். மோகினி அமுதத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தாள். அசுரர்களைப் பார்த்து, ""உங்களில் வீரர் யார்?'' என்று கேட்டாள்.

அசுரர்கள்,""நானே வீரன்; நானே வீரன்' என்று ஒருவரோடு ஒருவர் சண்டை இட்டு அனைவரும் அழிந்தனர். திருமாலோ தாம் கொண்ட மோகினி வடிவுடன் பாற்கடலின் கரையில் இருந்தார். சிவபெருமான் தம்முடைய சக்திகள் நால்வரில் திருமாலும் ஒரு சக்தியாய் இருக்கும் தன்மையை அனைவருக்கும் தெரிவிக்கும் பொருட்டு ஒரு பெருவனப்புடைய திருவடியை தாங்கி அங்கு வந்தார். மோகினி வடிவெடுத்திருந்த மகாவிஷ்ணு அவரைக் கண்டு மோகித்தாள். கண்ணுதற் கடவுளும் ""உன் மீத எனக்கும் வேட்கை உண்டு. உன் வடிவம் மிகவும் இனிது'' என்றார்.

மோகினிப் பெண் நாணமடைந்தாள்.

""உலக மாதாவாகிய உமையம்மை என்றென்றும் உம்மை காதலித்திருக்க நீர் எம்மை விரும்பியது ஏன்? உம் அற்புதத் திருவிளையாடலை அறிய வல்லவர் யார்?'' என்று வினவினார்.

""திருமாலே! நீயும் எம்முடைய சக்திகளுள் ஒருத்தியாவாய். முன்பு நீ எம்மைக் கூடி பிரமனைப் பெற்றாய். இப்பொழுது என்னிடம் வருவாய்'' என்று மோகினியைப் பிடிக்கச் சென்றார்.

மோகினி நாணி ஓடினாள். அரனார் அவரைத் தொடர்ந்து ஓடிப் பற்றினார். நாவலந் தீவில் வடதிசை கடலோரத்தில் உள்ள ஆலவிருட்ச நிழலில் மோகினியை அணைத்துக் கூடினார். அவர்கள் இருவரும் சேரும்பொழுது பெருகிய வியர்வை நீர் கண்டகி என்னும் நதியாகப் பிரவாகமெடுத்து ஓடியது. இந்நதியில் தான் சாளக்கிராமம் கிடைத்து வருகிறது.

இவ்வாறு அரியும் அரனும் கூடிய பொழுது கரியமேனியும் சிவந்த சடையும் கொண்டு செண்டு தரித்த கையினராக உக்கிரத்தோடு ஒரு குமாரர் அவதரித்தார். அரனார் அப்புதல்வருக்கு "அரிஹரபுத்திரன்' என்னும் திருநாமத்தைச் சூட்டினார். பல வரங்களைத் தந்தார். ருத்திரர்களுள் ஒருவராக ஆக்கி, ஒரு புவனத்தை நல்கி தேவர்களும், முனிவர்களும் வணங்கும் முதன்மையைத் தந்து, அவருக்கும், அரிக்கும் விடை தந்து மறைந்தருளினார்.

அரிஹர புத்திரர் தமது புவனத்தில் பூதணங்களுடன் வீற்றிருந்தார். அவர் விண்ணவரும், மண்ணவரும், விரிஞ்சனும் புகழக்கூடியவர். இத்தகைய ஐயனார் என்னும் அரிஹரபுத்திரர் உன்னைக் காத்தருள்வார்'' என்று இந்திரன் கூறி முடித்தான்.

இந்திரன், ஐயனாரைத் துதித்தான். தியானித்தான். அவர் பூதகணங்கள் சூழ வெள்ளை வாரணத்தின் மீது பூரணை, புஷ்களை சமேதராய் அங்கு வந்தார். இந்திரன் அவரைத் துதித்தான்.

""ஐயனே, சூரபத்மனுக்கு பயந்து போய் இங்கே வந்து மூங்கில் வடிவாய் நின்று முக்கட் பெருமாளை வணங்கி வழிபட்டு வருகிறேன். அவுணரின் கொடுமை தாங்காமல் அமரர்கள் எம்பால் வந்து முறையிட்டனர். அவர்களுடன் சென்று கயிலை நாதரிடம் முறையிட கயிலைங்கிரிக்குச் செல்லப் போகிறேன். அயிராணி தனித்திருக்க பயப்படுகிறாள். அவுணர்கள் தன்னைக் கைப்பற்றுவார் என்று அஞ்சுகின்ற அவளை உம் அடைக்கலமாகக் தந்துவிட்டுச் செல்லுகிறேன்'' என்று கூறி பணிந்தான்.

ஐயனார்,""தேவேந்திரனே, அஞ்சவேண்டாம். யாம் இந்திராணியைக் காத்து நிற்போம். நீ செல்லுக'' என்று பணித்தார்.

சற்றுத் தள்ளி நின்ற மகாகாளரை அணுகி, ""இந்திரன் கயிலையங்கிரிக்குச் செல்லுகிறான். தனித்து இருக்கும் இந்திராணியை நீ காத்து வா!'' என்று ஆக்ஞை பிறப்பித்தார்.

இந்திரன், இந்திராணியைத் தேற்றி பின் தேவர்களுடன் கயிலையங்கிரிக்குச் சென்றான். திரு நந்திதேவரை வணங்கித் துதித்துத் தம்முடைய குறைகளை முறையிட்டான். அதற்கு நந்திதேவர்,

""இந்திரனே, புரமெரித்த புண்ணியவர் இப்பொழுது நால்வர்க்கும் மௌன நிலையை உபதேசித்துக் கொண்டிருக்கிறார். தரிசிக்க அனுமதியில்லை'' என்றார்.

அனுமதி கிட்டுமா?

- லட்சுமி ராஜரத்னம்



இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 9:25 pm

அட்டா படிச்சிட்டே வரும்போது பாதில விட்டுட்டேங்களே சிவா....

சிவனும் ஹரியும் ஒன்று.... இந்த பகிர்வில் இருந்து அறிய முடிகிறது.... இது நான் அறியாதது... அகத்தியரின் முழு பங்கை இதில் காண்கிறேன்... முழுமையா தாங்க படிச்சிட்டு அம்மாவுக்கு சொல்வேன் சிவா...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 9:27 pm

தொடரும்.....!!!!



இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 15, 2011 10:50 pm

ம்ம்ம் நல்லா இருக்கு. மீண்டும் படிக்கலாம். தொடரட்டும். நன்றியுடன்..



இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Aஇந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Aஇந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Tஇந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Hஇந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Iஇந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Rஇந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Aஇந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 10:19 am

தொடரும் போட்டுட்டா முடிஞ்சுதா சிவா?

இன்னிக்கு போடமாட்டீங்களாப்பா? அடுத்த வாரம் தானா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்திரன் சொன்ன ஐயனார் வரலாறு!- கந்தபுராணம் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக