புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
69 Posts - 58%
heezulia
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
111 Posts - 59%
heezulia
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_m10மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Mar 12, 2011 10:53 am


ஞாநி

44 வருடங்களாக எங்களை அண்டிப் பிழைத்த கட்சி எங்களை இப்போது மிரட்டுவதா என்று கொதிப்படைந்திருக்கும் தி.மு.க. தொண்டன் நிச்சயம் 63 தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றிக்காக அரும்பாடெல்லாம் படப் போவதே இல்லை.

தம்முடைய 75 வருடப் பொது வாழ்க்கையின் இறுதியில் இத்தனை பெரிய அவமானத்தை கலைஞர் கருணாநிதி சந்தித்திருப்பது பரிதாபமாகத்தான் இருக்கிறது. அரசியல் சாணக்கியர், ராஜதந்திரி என்றெல்லாம் புகழப்பட்டவரின் அரசியல் கணக்கு அவர் பேரன் வயதில் இருக்கும் ராகுல் காந்தியிடம் அடி வாங்கியிருக்கிறது.

எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்கிற கூட்டணித் தலைவரான சோனியாவிடம் இதுவரை மிரட்டியே காரியம் சாதித்து வந்த கருணாநிதிக்கு, இனி அந்த மிரட்டல்கள் வேலை செய்யாது என்பது எப்படிப் புரியாமல் போயிற்று என்றுதான் புரியவில்லை. எத்தனை மந்திரி பதவி வேண்டும், யார் யாருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படவேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு முறையும் காங்கிரஸை மிரட்டியே சாதித்து வந்திருக்கிறது தி.மு.க. இந்த முறை முடியவில்லை.

அறுபது இடம் வரையில் தர ஒப்புக் கொண்டோம். அதற்குப் பின்னர் இன்னும் மூன்று கேட்டால் எப்படி நியாயம்? அதுவும் எந்தெந்த தொகுதி என்பதை அவர்களே முடிவு செய்யவேண்டுமென்று சொன்னால் எப்படி என்று ஒரு புலம்பல் அறிக்கை வெளியிட்டுவிட்டு அமைச்சரவையிலிருந்து விலகுகிறோம் என்று மிரட்டல் ஆயுதத்தைக் கருணாநிதி கையில் எடுத்தபோது, பழைய காங்கிரஸாக இருந்திருந்தால் நிச்சயம் பயந்திருக்கும்.

இந்த முறை காங்கிரஸ் தி.மு.க.வின் மிரட்டல்களுக்குப் பயப்படப்போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்தன. ஆனால் அவை எதுவும் அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்கு உறைக்கவே இல்லை. முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு வந்த காங்கிரஸ் குழுவில் தி.மு.க.வுக்கு ஜால்ரா போடும் தங்கபாலுவை விட ப.சிதம்பரத்துக்கே முக்கியத்துவமும் அதிகாரமும் இருந்ததை நடத்திய பேச்சிலேயே தி.மு.க. உணர்ந்திருக்க வேண்டும். தில்லிக்குச் சென்று சோனியாவிடம் தகவல்களைப் பரிமாறும் போதும், தங்கபாலு, குலாம்நபி ஆசாத் போன்ற தி.மு.க. ஆதரவு நபர்கள் பின்தள்ளப்பட்டனர். முன்பிருந்திராத அளவு ஒவ்வொரு கட்டத்திலும் ராகுல்காந்தியின் பங்களிப்பு இந்த முறை அதிகரித்திருந்ததையும் தி.மு.க. கவனிக்கத் தவறிவிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதியின் தி.மு.க மத்திய அமைச்சர்கள் ராஜினாமா மிரட்டல் அறிவிப்பு வெளியான பிறகு, தில்லி காங்கிரஸ் தலைமையிடமிருந்து துளிக்கூட சலனமே இல்லை. பழைய நிலையில் காங்கிரஸ் இருந்திருந்தால், அடுத்த விமானத்தில் குலாம்நபி ஆசாத் சென்னை வந்திருப்பார். பிரணாப் சென்னை வருகிறார், ஆசாத் சென்னை வருகிறார் என்று தி.மு.க தரப்பிலிருந்து பல்வேறு தொலைக்காட்சி சேனல் நிருபர்களிடம் சொல்லி செய்தி வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் காங்கிரஸிடமிருந்து எந்த அசைவும் இல்லை.

பிரதமரை சந்திக்க அழகிரி, தயாநிதி ஆகியோர் நேரம் கேட்டதும், பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி விட்டது. அதற்கு என்ன அர்த்தம் என்று தி.மு.க.வுக்கு அப்போதுதான் உறைத்தது. நீங்கள் வந்து ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துவிட்டுப் போகலாம் என்பதுதான் அதன் அர்த்தம். ராஜினாமா செய்வோம் என்று மிரட்டிக் கொண்டிருப்பது வேறு. கடிதத்தைக் கொண்டு போய் தருவது வேறு. எனவே தி.மு.க. தரப்பிலிருந்து பிரணாப் முகர்ஜி மூலம் சமரசத்துக்குக் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சோனியாவை அழகிரியும், தயாநிதி மாறனும் சந்தித்த போது எல்லாம் மிகத் தெளிவாக தி.மு.க.வுக் குப் புரிந்தது. முன்பு போல இனி காங்கிரஸை மிரட்ட முடியாது. ஆட்சிக் கவிழ்ந்தாலும் சரி, எனக்குக் கவலையில்லை. ஏழாண்டுகளாக உங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் இப்போது எங்களை மிரட்டுவதை சகிக்க முடியாது என்று சோனியா தெளிவாகச் சொல்லி விட்டார். மிரட்டலுக்கெல்லாம் இனி பயப்படமாட்டோம் என்று தில்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை சொன்ன அடுத்த நிமிடமே வாலைச் சுருட்டிக் கொண்டு காங்கிரஸ் சொன்னதற்கெல்லாம் ஒப்புக் கொண்டுவிட்டது தி.மு.க.

வீரமணி வர்ணிப்பில் மானமிகு கலைஞர் கருணாநிதியாக இருந்தவர் இப்போது அவமானமிகு கலைஞர் சரணாகதியாகி விட்டார்.

தன் வழக்கமான வார்த்தை விளையாட்டுகளின் மூலம் தம் முகத்தில் கரி பூசப்பட்டதை மறைக்க முயற்சிக்கிறார் கலைஞர் சரணாகதி. காங்கிரஸுக்கு 63 சீட்டுகள் கொடுத்ததை 63 நாயன்மார்களுடன் ஒப்பிட்டு அவமானத்திலிருந்து பத்திரிகையாளர்களின் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கிறார்.

‘விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் தோழமை உணர்வுடனும்’ இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இப்போது சொல்கிறார். ஏன் இந்த மனப்பான்மையும் உணர்வும் மூன்று தினங்கள் முன்னால் இல்லாமல் இப்போது முளைத்தன என்பதை அவரால் விளக்க முடியாது. தேவையில்லாமல் பத்திரிகைகள் விஷமம் செய்தன என்று குற்றம்சாட்டுகிறார். உண்மையில் பத்திரிகைகளும் சேனல்களும் தி.மு.க பிரமுகர்கள் ஆஃப் தி ரிகார்ட் என்று சொல்லி வரவழைக்க முயன்ற பொய்ச் செய்திகளையெல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தன என்பதுதான் உண்மை. காங்கிரஸ் தரப்பிலிருந்து எதுவும் வரவில்லை.

தி.மு.க மிரட்டல் ஆயுதத்தைக் கையில் எடுப்பதற்கு முன்னால் காங்கிரஸ் என்ன கேட்டதோ அதையேதான் இப்போது தந்திருக்கிறது. மொத்தம் 63 தொகுதிகள். எந்தெந்தத் தொகுதிகள் என்பதையும் காங்கிரஸ் தேர்வு செய்யலாம். ஆட்சியில் பங்கு பற்றி பகிரங்க அறிவிப்பு இல்லாவிட்டாலும், அதற்கும் உடன்பட்டே ஆகும் நிலை. போட்டியிடும் 121 தொகுதிகளில் 118 தொகுதிகள் தி.மு.க. வுக்கு என்றால் மட்டுமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். அதற்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை. எனவே ஆட்சி அமைத்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எல்லாக் கூட்டணிக் கட்சிகளுக்குமே ஆட்சியில் பங்கு தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தி.மு.க.வின் மிரட்டல்கள் இந்த முறை புஸ்வாணமான தற்குக் காரணம் என்ன ?

கருணாநிதியின் வீட்டுக் கதவையே சி.பி.ஐ. தட்டும் நிலைக்குக் கொண்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். தி.மு.க.வின் அரசியல் வாழ்க்கையை கி.மு. கி.பி போல ஸ்.மு., ஸ்.பி. என்று பிரித்துப் பார்க்கலாம். ராசா பதவி நீக்கப்பட்டதை முதலில் சகிக்க வேண்டியிருந்தது. அந்த இடத்தில் இன்னொரு தி.மு.க. அமைச்சர் நியமிக்கப்படாததை சகிக்க வேண்டியிருந்தது. ராசா கைது செய்யப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஈழத் தமிழர் பிரச்னைக்கெல்லாம் கூட அதிகபட்சம் சில மணி நேர உண்ணாவிரதம்தான். அப்போதெல்லாம் பிரயோகிக்காத ராஜினாமா மிரட்டலை இப்போது தி.மு.க. தலைவர் பயன்படுத்திப் பார்க்கக் காரணம் என்ன ?

அடுத்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை மும்பை கம்பெனியிட மிருந்து கடனாகப் பெற்ற கலைஞர் டி.வி. யின் இயக்குனர்களான தயாளு அம்மாளும் கனிமொழியும் இருக்கிறார்கள். இந்த நெருக்கடிச் சூழலில் தொகுதிப் பங்கீட்டை பேரமாக்கி, குடும்பத்தைக் காப்பாற்ற தி.மு.க. தலைவர் செய்த முயற்சிகள் விபரீதமாகிவிட்டன.எல்லாம் நலமாக முடிந்துவிட்டது எனக்கு மகிழ்ச்சிதான் என்று கருணாநிதி சொன்னாலும், விளைவுகள் என்ன ?

சராசரி தி.மு.க. தொண்டன் தன் தலைவர் மீதும் சரி, காங்கிரஸ் மீதும் சரி கடும் எரிச்சலில் இருக்கிறான் என்பதுதான் நிஜம். தம் குடும்ப நலனுக்காக, கட்சியை காங்கிரஸிடம் தலைவர் விற்றுவிட்டார். ஈசன் சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்டது போல காங்கிரஸ் கேட்டது. சொந்தப் பிள்ளையைக் காப்பாற்ற, கழகம் என் குடும்பம் என்று சொல்லிவந்த தலைவர், கழகக் குடும்பத்தைக் கறி சமைத்து காங்கிரஸுக்குப் பரிமாறி விட்டார். 44 வருடங்களாக எங்களை அண்டிப் பிழைத்த கட்சி எங்களை இப்போது மிரட்டுவதா என்று கொதிப்படைந்திருக்கும் தி.மு.க. தொண்டன் நிச்சயம் 63 தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றிக்காக அரும்பாடெல்லாம் படப் போவதே இல்லை.

மறுபக்கம், காங்கிரஸ் கட்சிக்குள் ஏழாண்டுக் காலமாக இருக்கிற அதிருப்தி இப்போது 63 சீட் அறிவித்ததால் தீர்ந்து விடவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலினால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தி.மு.க.வுக்கு இழப்பு. காங்கிரஸுக்கோ அனைத்திந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கு எதிராக ஸ்பெக்ட்ரம் ஊழல் எதிர்க் கட்சிகளால் பெரிதுபடுத்தப்படுகிறது. தி.மு.க.வைக் கழற்றிவிட்டிருந்தால் இந்தப் பழியிலிருந்து தப்பித்திருக்கலாம் என்றே இளைஞர் காங்கிரஸினர் நினைக்கிறார்கள். ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடங்கியபோதே நீட்டிய ஆதரவுக்கரத்தை அப்போதே பற்றியிருக்கலாம் என்று நினைக்கும் காங்கிரஸார் தேர்தலில் தங்கள் தொகுதிக்கு வெளியே தி.மு.க.வுக் காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.

கலைஞர் கருணாநிதியின் சரணாகதியால் தி.மு.க.வுக்கு ஏதாவது உடனடி லாபம் என்றால் அது ஒன்றே ஒன்று தான். காங்கிரஸ் அ.தி.மு.க. வுடன் கூட்டு சேர்ந்துவிடாமல் தடுக்க முடிந்திருக்கிறது. அப்படி ஒரு கூட்டு ஏற்பட்டிருந்தால், தேர்தலில் தி.மு.க.வின் நிலை இன்னும் சிக்கலாகி விடும்.

தி.மு.க, காங்கிரஸ் தொகுதி உடன்பாடு சிக்கல் இருவருக்கும் உணர்த்தும் முக்கியமான உண்மை ஒன்று பாக்கி இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் நீரா ராடியா போன்ற தரகர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதுதான் அது! நீரா ராடியா இருந்தவரையில் இருதரப்பு பேரங்களும் பரஸ்பரம் சுமுகமாகவே நடந்திருக்கின்றன. இந்த முறை ஒரு நீரா ராடியா இல்லாதது எவ்வளவு பேரிழப்பு தி.மு.க.வுக்கு!


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 11:10 am

மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 677196அருமை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 812496
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 12, 2011 11:13 am

//கலைஞர் கருணாநிதியின் சரணாகதியால் தி.மு.க.வுக்கு ஏதாவது உடனடி லாபம்
என்றால் அது ஒன்றே ஒன்று தான். காங்கிரஸ் அ.தி.மு.க. வுடன் கூட்டு
சேர்ந்துவிடாமல் தடுக்க முடிந்திருக்கிறது.//

ஞானி ஐயா அருமயான கணிப்பு.... பகிர்வுக்கு நன்றி..



மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Tமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Hமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Iமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Rமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 12, 2011 12:03 pm

உடன்பிறப்பே ,,இதும் ஒருவகை ராஜதந்திரமே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 4:45 pm

எப்படியோ இரண்டு கட்சிக்காரனும் தேர்தல் வேலை செய்யாமல் இந்த இரண்டு கட்சியும் தோத்தா சரி



மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Uமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Dமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Yமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Aமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Sமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Uமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Dமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி Hமானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 5:00 pm

மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 453187 மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 453187 மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 453187



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மானமிகு கலைஞர் கருணாநிதி சரணாகதி 812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக