புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
10 Posts - 4%
prajai
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அன்பு  I_vote_lcapஅன்பு  I_voting_barஅன்பு  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Mar 11, 2011 11:40 am

அன்பு ஒரு மனநிலை
தொலைக்காட்சியில் ஒருமுறை “மனோதத்துவ” நிபுணர் ஒருவரின், பேட்டியை
பார்த்து கொண்டு இருந்தேன் Depression என்ற மன அழுத்தம் எதனால் வருகிறது
என்று ஒரு கேள்வி?
அந்த “மனோதத்துவ” நிபுணர் பல காரணங்களை, வரிசையாக கூறுகிறார். இறுதி
யில் நாம் எல்லோரும் அன்புக்காக ஏங்குகிறோம். அந்த அன்பு கிடைக்காமல்
போகும் பொழுது மன அழுத்த நோய்க்கு ஆளாகிறோம் என்றார்.
நம் ஆழ்மனம் கூட நாம் அன்பாக, சொல்லும் கட்டளைக்கு தான் அடி பணிகிறது அதிகாரத்துக்கு அல்ல.
கடவுள் யார்? அவர் செய்கைகள் என்ன? என்ற கேள்விக்கு நம் முன்னோர்கள்
மிக அழகாக “அன்பே சிவம்”, “அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே”
என்றார்கள்.
ஜீவன்கள் மீது அன்பு கொண்டதால் தான் “பசிக்குடில்” என்ற அமைப்பை
ஏற்படுத் தினார் வள்ளலார். இன்று வரை எத்தனையோ மனிதர்கள் பசியார அது
உதவுகிறது.
இப்படி ஜீவன் மீது அன்பு கொண்டத னால் தான் “சிதம்பரம் இராமலிங்கமாக” இருந்தவர் “அருட்பிரகாச வள்ளலார்” ஆனார் அவர் கடவுளை,
“அருட்பெருஞ்ஜோதியே”
என்றல்லவா அழைத்தார்
“அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
என்றார் வள்ளுவர். அன்பு கொண்டவர் களின் நினைப்பு எப்படி? இருக்கும்
என்பதை இதைவிட தெளிவாக உலகில் யாரும் கூறி இருக்க முடியாது. இந்த வான்புகழ்
வள்ளுவனை நாம் அடைந்தது, நம் தமிழ் மண்ணுக்கும் நம் தமிழ் மொழிக்கும்
கிடைத்த பெருமை.
அன்பு ஓர் ஆசிரியன்
எனக்கு ஒரே மகள், அவளை நான் மிக அன்பாக வளர்த்தேன். அவள் காதல்
திருமணம் செய்து கொண்டாள். இன்று எங்களை விட்டு சென்று விட்டாள். இப்படி
கூறும் பெற்றோர்கள் உண்டு. இது பரிதாபத்திற்கு உரிய விஷயம். இதற்கு ஒரு
சிறந்த தீர்வை காண்போம்.
நம் பிள்ளைகளை நாம் சினிமாவிற்கு அழைத்து செல்வோம். உறவினர்கள்
வீட்டுக்கு அழைத்து செல்வோம். சிலர் தான் பணிபுரியும் அலுவலகத்துக்கு கூட
அழைத்து செல்வோம். நாம் என்றாவது நம் பிள்ளைகளை “அனாதை குழந்தைகள்” வளரும்
இல்லங்களுக்கு அழைத்துச் சென்று இருக்கிறோமா? நம் பிள்ளைகளை மாதம் ஒரு முறை
அல்லது இரு முறை ஆதரவற்ற வர்கள் வாழும் இல்லங்களுக்கு அழைத்துச் செல்வோம்
(இதை ஒரு பழக்கமாகவே வைத்துக் கொள்வோம்) அங்கு உள்ள அந்தப் பிள்ளைகளிடம்
பேசி பழகச் சொல்வோம். விளையாடச் சொல்வோம். “பார்த்தாயா அந்தக்
குழந்தைகளுக்கு அன்பு காட்ட யாரும் இல்லை. உனக்கு நாங்கள் இருக்கிறோம்”
என்றே ஒரே ஒருமுறை உங்கள் அன்பான குரலால் உங்கள் குழந்தைகளிடம் சொல்லிப்
பாருங்கள். அவர்கள் திருமணம் காதல் திருமணமாகவே இருந்தாலும் அது உங்கள்
சம்மதத்தோடு நடக்கும்! மேலும் நம் குழந்தைகள் மற்றவர்கள் மீது அன்பு
காட்டுவதற்கு நாமே ஆசிரியர்களாவோம்.
அன்பில் எச்சரிக்கை
நான் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறேன். என்னிடம் 100 பேர் வேலை
செய்கிறார்கள். அவர்களிடம் அன்பாக நடந்து கொண்டால் வேலை நடக்காது என்று
நம்மில் பலர் கூறுகின் றனர். நாம் ஒரு மனிதரை சத்தமாக, கூச்சலிடும் பொழுது
நாம் சொல்லும் கருத்தை அவர் மனம் ஏற்க மறுக்கிறது. அதனால் செயல்திறன்
குறைகிறது. “தாமஸ் ஆல்வா எடிசன்” வாழ்க்கை குறிப்பு இந்த தகவலை
குறிப்பிடுகிறது. எடிசன் தன் நிறுவனத்தில் பணிபுரிகிறவர்கள் யாரேனும் தவறு
செய்தால் அவர்களைத் திட்டி உடனே வேலையை விட்டு நீக்கி விடுவார். அடுத்த
நாளே யாரைத் திட்டி வேலையை விட்டு அனுப்பி னாரோ, அவர் வீட்டுக்கே போய்
“நான் ஏதோ கோபத்தில் நேற்று பேசிவிட்டேன் மனதில் வைத்து கொள்ளாதீர்கள்
வேலைக்கு வாருங்கள்” என்று தன் “காரிலேயே” அவர்களை வேலை அழைத்து வருவார்.
சில நேரங்களில் நிலைமை தலைகீழாக மாறி அவர்கள் இவரை திட்டி அனுப்பி
விடுவார்கள். அப்பொழுது கூட அமைதியாக இருந்து விடுவார். எடிசன் இந்த அன்பு
அவரிடம் இருந்ததால் தான் அவர் மாபெரும் விஞ்ஞானியானார்.
நாம் உடன் வேலை செய்பவர்கள், நமக்கு கீழ் வேலை செய்பவர்கள்,
இவர்களிடத்தில் அன்பு காட்டுவோம், நாம் அவர்கள் மீது காட்டும் அன்பை
சொல்லாகவோ அல்லது செயலாகவோ வெளிக் காட்டலாம். “விகிதா சாரத்தில்” குறைவாக
இருந்தாலும் பரவாயில்லை நாம் தொழில் செய்யும் இடத்தில் அன்பு காட்டுவோம்.
இது நம் மனநிலையையும் வீட்டில் இருப்பவர்கள் மனநிலையையும் அமைதியாக
வைத்திருக்க உதவும்.
அன்பின் வெளிப்பாடு
“கருணை, ஈகை” என்ற குணங்கள் அன்பின் வெளிப்பாடே. நம் மனதில் அன்பு
இருந்தால் போதும் கருணை, ஈகை போன்ற உயரிய பண்புகள் தானே நமக்குள் வரும்.
எந்த ஒரு விஷயமும் நமக்குள் வரும் பொழுது அது புதியது? ஆனால் அன்பு
ஒன்றும் நமக்கு புதியதல்ல. நாம் பிறந்தது முதல் நம் தாயால் நமக்கு
ஊட்டப்பட்ட நம் மனதில் இருக்கக்கூடிய அன்பை சில குணங்கள் மறைத் திருக்கிறது
அவ்வளவு தான். “அருட்பிரகாச வள்ளலார்”, “திருவள்ளுவர்” இவர்கள் எல்லாம்
இந்த மண்ணில் பிறந்தவர்கள் தானே அவர்களால் முடிந்த விஷயம் நம்மாலும்
முடியும். ஏன்? என்றால் நாமும் இந்த மண்ணில் பிறந்தவர்கள் தானே! யாரேனும்
நம்மிடம் பிரதி பலன் எதிர்பாராமல், நமக்கு நல்லது செய்தால் “நான்
உங்களுக்கு ரொம்ப கடன்பட்டிருக்கேன்” என்று கூறுவதுண்டு. அந்த வகையில் நாம்
எல்லோரும் திருவள்ளுவருக்கு கடன் பட்டிருக்கிறோம்.
நம் வீட்டில் மூதாதையரின் படங்களின் பக்கத்தில் “திருவள்ளுவரின்” படத்தை மாட்டுவோம்! அந்த படத்திற்கு கீழ்
“அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
என்ற இந்த குறளை எழுதுவோம். தினமும் உள்ளத்தில் தூய்மையோடும், உடல்
தூய்மையோடும் வள்ளுவர் இயற்றிய இந்த குறளின் தெளிவுரையை அகக் கண்களால்
(உள்ளே இருக்கும் மனக்கண்களால்) எப்பொழுதும் வாசிப்போம் புறக்கண்களால் (நம்
கண்களால்) வள்ளுவரின் உருவத்தை பார்ப்போம். இதனால் அகத்திலும் (உள்ளேயும்)
புறத்திலும் (வெளியேயும்) நாம் அன்பு கொண்டவர்களாகிறோம்.
வங்கியில் இருந்து நாம் பணம் எடுக்கும் பொழுது நம் சேமிப்பு கணக்கில்
பணம் குறையும் அன்பு எனும் வங்கியில் நாம் அன்பை மற்றவர்களுக்கு கொடுக்க
கொடுக்க நம் கணக்கில் அன்பு வளரும்.
அ – அங்கீகாரம்
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பெரும்பாலும்
இந்த அங்கீ காரம் என்ற வாசகத்தை நாம் கேள்விப்பட்டிருப் போம். அரசு
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படித்தால், அந்த
படிப்பின் மூலம் அவர்கள் பெறும் சான்றிதழ் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும்.
அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனங்கள் தரும் சான்றிதழ்கள் அரசாங்கம்
தருவதற்குச் சமமானது.
சில வருடங்கள் வாழப்போகும் நம் வாழ்க்கையில் நாம் நலமாக வாழ அரசின்
அங்கீகாரம் கேட்கிறோம். என்றாவது நம் எண்ணங்களுக்கு நாம் அங்கீகாரம்
அளித்திருக் கிறோமா? அல்லது மற்றவர்களின், நல்ல (உன்னத) எண்ணங்களுக்கு நாம்
அங்கீகாரம் அளித்திருக்கிறோமா? பெரும்பாலும் இந்த கேள்விக்கு நம்மிடையே
பதில் இல்லை! நான் “டாக்டர்” ஆக வேண்டும் என்று நினைத்தேன், இன்று
குமாஸ்தாவாக இருக்கிறேன். நான் விமானி ஆகணும்னு நினைச்சேன், இன்று கார்
ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். இப்படி பலர் வாழ்க்கையில் பல கதைகள் நாம்
கேள்விப் பட்டிருப்போம்.
பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ளது
“காலர்காதி” என்ற கிராமம். அது ஒரு மலை சூழ்ந்த கிராமம். சுமார் 60க்கும்
மேற்பட்ட மலை சூழ்ந்த கிராமங்கள் அங்கு உள்ளன.
“காலர்காதி” கிராமத்தில் எந்த வசதியும் கிடையாது. மருத்துவ வசதி, கல்வி
மற்றும் எல்லா தேவைகளுக்கும் அருகில் உள்ள “வசிர்கஞ்ச்” எனும்
சிற்றூருக்குத் தான் செல்ல வேண்டும்.
“காலர்காதி” கிராமத்தையும் “வசிர்கஞ்ச் யையும்” இணைய விடாமல், இரண்டு
ஊர் களுக்கும் இடையே ஒரு மலை இருந்தது. “வசிர் கஞ்ச்” செல்வதற்கு இந்த
மலையை சுமார் 50 கி.மீ. சுற்றி செல்ல வேண்டும். இந்த மலைக்கு அருகே ஒரு
ஆபத்தான ஒற்றையடிப் பாதை ஒன்று உள்ளது. இந்த ஒற்றையடிப் பாதை வழியாக சுமார்
25 கி.மீ. சென்று குடிக்கத் தண்ணீர் எடுத்து வருவார்கள் இந்த பகுதி
மக்கள். சரியான சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லாத கிராமம் “காலர்காதி”.
மலையை உடைக்க வேண்டும் என்று மக்கள் “பீகார்” மாநில அரசாங்கத்திடம்
கோரிக்கை வைத்தனர். அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்
இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் வசித்து வந்தவர்
தான் அந்த மாமனிதர் “தஸ்ரத்மஞ்சி”.
“தஸ்ரத்மஞ்சி” இவர் ஊர் மக்களை கூட்டி “வாருங்களேன்! இந்த மலையை
எல்லோரும் சேர்ந்து உடைப்போம்” என்றார். அந்த பகுதி மக்கள் அவரை
ஏசினார்கள்; கிண்ட லாக பேசினார்கள். யாருடைய தயவையும் எதிர் பாராமல்
“தஸ்ரத்மஞ்சி” தனி மனிதராய் அந்த மலையை உடைக்க ஆரம்பித்து விட்டார்.
இதெல்லாம் முடியக்கூடிய வேலையில்லை என்று அந்த பகுதி மக்களும் அவர்
மனைவியும் “தஸ்ரத்மஞ்சியை” தடுத்தனர். அதையெல்லாம் காதில் போட்டுக்
கொள்ளாமல் அவர் மலையை உடைக்கும் வேலையில் தீவிரமானார். அந்த பகுதி மக்கள்
அவருக்கு அளித்த அங்கீகாரம் என்ன தெரியுமா? பைத்தியக்காரன்.
உடைத்தார், உடைத்தார், மலையை உடைத்தார், சுமார் 22 ஆண்டுகளுக்கு
(1960-1982) பிறகு ஒரு தனி மனித சாதனையாய் 25 அடி உயரம் இருந்த அந்த மலையை
365 அடி நீளத்திற்கு, 16 அடி அகலத்திற்கு (ஒரு பேருந்து செல்லும் அளவு)
தகர்த்து எரிந்தார். அவருடைய சொத்தாக இருந்ததே அவர் வளர்த்த பத்து ஆடுகள்
தான். அந்த ஆடுகளை விற்று உளியும், சுத்தியலும் வாங்கி காலை 6 மணி முதல்
தொடங்கி மாலை 7 மணி வரை அயராது பாடுபட்டு இந்த சாதனையை படைத்தார். போதுமான
மருத்துவ வசதி இல்லாததால் நோய் வாய்ப்பட்ட இவரது மனைவி இறந்து போனார். தன்
மனைவியின் மரணத்தை கூட பெரிது படுத்தாமல் தன் எண்ணங்களுக்கு அவர் “அங்கீ
காரம்” அளித்தார். “தஸ்ரத்மஞ்சி” தன் மனைவி மீதும் தன் பகுதியில் வசிக்கும்
மக்கள் மீதும் அவர் கொண்டது அன்பு. அந்த அன்பினால் அவருக்கு ஏற்பட்டது
“தன்னம்பிக்கை”. தன் மனதில் விளைந்த அந்த எண்ணத்திற்கு அவர் அளித்தது
அங்கீகாரம். அதன் விளைவு முயற்சியை தந்தது. முயற்சி வெற்றியைத் தந்தது.
காலம் அவருக்கு சாதனை நாயகன் என்றஅழியா பட்டத்தை தந்தது. இத்தனைக்கும் அவர்
படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை விவசாயி. பீகார் மாநில அரசு அவருக்கு பரிசாக
அளித்த 5 ஏக்கர் நிலத்தையும் “காலர்காதி” பகுதியில் ஓர் அரசு மருத்துவமனை
கட்டச் சொல்லி அந்த மாநில அரசிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.
“தஸ்ரத்மஞ்சியின்” தன்னலமற்ற இந்த செயலை பாராட்டிய பீகார் அரசு அவரை
தன்னுடைய இருக்கையில் அமரச் செய்து அவரை பெருமைப் படுத்தியது.
“தஸ்ரத்மஞ்சிக்கு” ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மகன் உடல் ஊனமுற்றவன், மகள் ஓர் இளம் விதவை. தன் பிள்ளைகள் கஷ்டப்படும்
நிலையில் இருந்தாலும் தான் வசித்த பகுதி மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற
உன்னத எண்ணம் கொண்டு அந்த எண்ணத்திற்கு அங்கீகாரம் கொடுத்து நம் மனதில் மலை
போல் உயர்ந்து நிற்கும் அந்த மாமனிதரை போற்றுவோம். நாமும் நம் உன்னத
எண்ணங்களுக்கு அங்கிகாரம் அளிப்போம்.
அன்பர்களே! நம் மனதில் எழும் உன்னத எண்ணங்களுக்கு நாம் தான் அங்கீகாரம்
அளிக்க வேண்டும். எண்ணங்கள் நம்மைக் கேட்டா வருகின்றன? நம் மனதில்
உன்னதமான எண்ணங்கள் வளர நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கு முதலில் நம்
மனதில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறு வயதிலிருந்து நம்மை பாதித்த சம்பவங்கள், நாம் கேட்ட கதைகள், நாம்
பார்த்த காட்சிகள், இவை களெல்லாம் நம் மனதிற்குள் தகவல்களாக செல்கின்றன.
இந்த தகவல்களை மனம் மின்னல் வேகத்தில் எண்ணங்களாக மாற்றம் செய்கிறது. பிறகு
இந்த எண்ணங்கள் நம் செயல்களாகிறது. சுருக்கமாக சொன்னால் (Informations are
thoughts) நம் மனதில் உன்னதமான எண்ணங்கள் வளர வாழ்க்கையை அமைத்துக்
கொள்வோம்.
வெற்றி தரும் எண்ணங்கள், வெற்றி தரும் சிந்தனைகள், வெற்றி தரும்
செயல்கள் இதுவே உயிர் மூச்சாகட்டும். என்றும் நாம் ஒருவருக் கொருவர்
‘அன்பு’ கொள்வோம். எண்ணங்களை ‘அங்கீகரிப்போம

நன்றி தன்னம்பிக்கை.கொம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக