Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி ஒரு பிறவி.....!
5 posters
Page 1 of 1
இனி ஒரு பிறவி.....!
இந்த எழுத்துக்கள்
இருகண்டங்களின்
வேறுபாடுகளில்லை;
ஒரு பேருந்து நிறுத்த
நிகழ்வுகளின் ஒப்பீடு!
என் உடம்பு மட்டும் பேருந்தினுள்;
கண்களில்
வெளிநிகழ்வின் பதிவுகள்!
கூட்டநெரிசலின் குறியீடு-
என் மடியில் ஒரு குழந்தை!
கால் தடுமாறி கையில்
அலுமினியத்தட்டோடு ஒரு குழந்தை!
காற்றுவர திறக்கப்பட்ட ஜன்னல்கள்
'காசு' என்றதும் மூடிக்கொண்டது!
என் பாதங்களில் படரும்
பிஞ்சு விரல்கள்.............
பார்க்கிறேன் குழந்தைகளை
ஒன்று மடியிலும்,
மற்றொன்று காலடியிலும்!
அடுத்தநொடி தராசாகும் கண்கள்!
மடிகுழந்தைக்கு மையிட்ட
பவுடர்பூச்சு முகம்;
காலடிகுழந்தைக்கு
சிக்கெடுக்கப்படாத தலைமுடி!
மடிகுழந்தைக்கு பசியில்லை
ஆனாலும் கையில் பால்புட்டி;
காலடிகுழந்தைக்கு
ஒடிசலான அலுமினியத்தட்டு!
மடிகுழந்தைக்கு
கட்டைவிரலுக்கும் தங்கம்;
காலடி குழந்தைக்கு
நறுக்கப்படாத நகஇடுக்கில் அழுக்கு!
மடிகுழந்தைக்கு
காரில் இருந்து உலகம் பார்க்க ஆசை;
காலடி குழந்தைக்கு
கார் பார்க்க!....................
கணப்பொழுதின் ஒப்பீடுகள்
கனமானது மனதிற்கு!
என் மேல்'பை' சில்லறைகளின்
மின்னல் வேக பரிமாற்றம் தட்டிற்கு!
தயங்கிச்செல்லும் பிஞ்சுபாதங்கள் முன்
பாதைகள் இல்லை?......
வறுமையை வசனங்களில் அடக்கிவிட்டோம்;
வார்த்தையின்றி ஊமையானது!
பிஞ்சுஇதழ்கள்
உச்சரிப்பின்றி ஓலமிட்டது எதை?
வடியும் கண்ணீரைத்துடைக்கிறேன்
யாருக்கும் சுமயாக்காமல்!
கண்ணீர் கறை
இங்கு படிக்கிறது;பதிகிறது!
இனி ஒரு பிறவிவேண்டாம்
இதைப்போல அனுபவிக்க!.........
D.SABARINATHAN- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
Re: இனி ஒரு பிறவி.....!
உண்மையான உருக்கமான வரிகள்..D.SABARINATHAN wrote:
தயங்கிச்செல்லும் பிஞ்சுபாதங்கள் முன்
பாதைகள் இல்லை?......
வறுமையை வசனங்களில் அடக்கிவிட்டோம்;
வார்த்தையின்றி ஊமையானது!
வறுமையை வசனங்களில்தான் அடக்கி வைத்திருக்கிறோம் நாம் வெறும் வாய்பேச்சோடு.
எதன்பாடு இந்த ஏற்றத்தாழ்வுகள் என்று யோசித்து யோசித்து ஒன்றும் புரியாமல் போகிறது.
வறுமையும் ஏற்றத்தாழ்வுகளும் எடுத்துரைத்த விதம் மிகவும் அருமை நண்பரே .. மிக்க நன்றி உங்கள் வரிகளுக்கு..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: இனி ஒரு பிறவி.....!
நியாஸ் அவர்களுக்கு என் நன்றிகள்!
D.SABARINATHAN- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
Re: இனி ஒரு பிறவி.....!
சபரி மனதை கனமாக்கும் வரிகள்பா....
ஒப்பீட்டு நம் மனதில் ஏன்
வசதி உள்ள குழந்தைக்கு கேட்பதெல்லாம் கிடைத்துவிடும்
ஏழைக்குழந்தையின் கனவோ வலிக்கும் வயிற்றுப்பசி தீருவது மட்டுமே...
அதை கூட செய்ய இயலாத ஜடங்களாகி நிற்கிறோம் தலைகுனிந்து...
மனதை கனமாக்கும் வரிகளை அழகாய் அமைத்து சிந்திக்கவும் வைத்த சபரிக்கு அன்பு வாழ்த்துக்கள்.
ஒப்பீட்டு நம் மனதில் ஏன்
வசதி உள்ள குழந்தைக்கு கேட்பதெல்லாம் கிடைத்துவிடும்
ஏழைக்குழந்தையின் கனவோ வலிக்கும் வயிற்றுப்பசி தீருவது மட்டுமே...
அதை கூட செய்ய இயலாத ஜடங்களாகி நிற்கிறோம் தலைகுனிந்து...
மனதை கனமாக்கும் வரிகளை அழகாய் அமைத்து சிந்திக்கவும் வைத்த சபரிக்கு அன்பு வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இனி ஒரு பிறவி.....!
மஞ்சுபாஷிணி wrote:சபரி மனதை கனமாக்கும் வரிகள்பா....
ஒப்பீட்டு நம் மனதில் ஏன்
வசதி உள்ள குழந்தைக்கு கேட்பதெல்லாம் கிடைத்துவிடும்
ஏழைக்குழந்தையின் கனவோ வலிக்கும் வயிற்றுப்பசி தீருவது மட்டுமே...
அதை கூட செய்ய இயலாத ஜடங்களாகி நிற்கிறோம் தலைகுனிந்து...
மனதை கனமாக்கும் வரிகளை அழகாய் அமைத்து சிந்திக்கவும் வைத்த சபரிக்கு அன்பு வாழ்த்துக்கள்.
மஞ்சுபாஷினி அவர்களுக்கு என் நன்றிகள்!
D.SABARINATHAN- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: இனி ஒரு பிறவி.....!
பிரகாசம் அவர்களுக்கு நன்றிகள்!
D.SABARINATHAN- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
Re: இனி ஒரு பிறவி.....!
கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இனி ஒரு பிறவி.....!
முரளி ராஜா அவர்களுக்கு நன்றிகள்!
D.SABARINATHAN- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum