Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலககோப்பை வரலாறு
Page 1 of 1
உலககோப்பை வரலாறு
அந்தக் கோப்பையின் எடை 11 கிலோகிராம். உயரம், 60 செ.மீ. வெள்ளியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசிப்பட்டிருக்கும் அந்தக் கோப்பையில் உலகத்தைப் போன்ற தோற்றமளிக்கும் கிரிக்கெட் பந்தும், அதனைத் தாங்கி நிற்பது போன்ற மூன்று ஸ்டம்ப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டின் மூன்று முக்கிய அம்சங்களான பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் இந்த மூன்றையும் குறிக்கும் வகையில் அந்த 3 ஸ்டம்ப்புகள் உள்ளன. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் ஒரே விதமாகத் தோற்றமளிக்கும் அந்தக் கோப்பையை வெல்வதற்காக 14 நாடுகள் களமிறங்கியுள்ளன. நம் இந்திய அணியும் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆடிக் கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் போட்டியை உலகளவில் நடத்துவதற்கான முயற்சிகள் 20-ஆம் நூற்றா ண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பமாகி விட்டன. 1900-ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த ஒலிலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் நாட்டை வென்று, தங்கப்பதக்கத்தைப் பெற்றது இங்கிலாந்து. அந்நாடுதான், கிரிக்கெட் விளை யாட்டைக் கண்டுபிடித்த நாடாகும். அதன்பின், ஒலிலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் ஆட்டம் இடம்பெறவில்லை. பின்னர், 1912-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மூன்று நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடு களும் பங்கேற்ற இப்போட்டி, தட்பவெப்பநிலை காரணமாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 3 நாள், 5 நாள் என கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற்றுவந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் சங்கங்கள், ஒருநாள் போட்டிகளை நடத்தத் தொடங்கின. அவற்றிற்கு வரவேற்பு அதிகரித்ததையடுத்து, 1975-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. டெஸ்ட் போட்டிகள் எனப்படும் 5 நாள் ஆட்டங்களில் ஆடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலிலியா, வெஸ்ட் இன்டீஸ், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளுடன் இலங்கையும் கிழக்கு ஆப்பிரிக்காவும் சேர்த்துக்கொள்ளப்பட, முதல் உலகக்கோப்பை போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றன. 60 ஓவர்கள் கொண்ட இந்த ஆட்டங்களின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்தியத் தீவுகள்)அணியும் ஆஸ்திரேலிலியாவும் மோதின. இதில், வெஸ்ட் இண்டீஸ் வென்று முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதன்பின், 4 ஆண்டுகளுக்கொரு முறை உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்துவதென சர்வதேச கிரிக்கெட் சங்கம் முடிவு செய்ய, 1979-ஆம் ஆண்டு அதே இங்கிலாந்தில் இரண்டாவது உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் இங்கிலாந்தும் மோதின. மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியனானது.
மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியும் இங்கிலாந்தில்தான் நடந்தது. கிழக்கு ஆப்பிரிக்க அணி இல்லை. ஜிம்பாப்வே அணி இடம்பெற்றது. இம்முறை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது இந்திய அணி. பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அந்த இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான்காவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் இங்கிலாந்துக்கு வெளியே நடத்தப் பட்ட முதல் உலகப் போட்டியாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தப் போட்டிகளை நடத்தின. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை மாற்றம் பெற்றன. சொந்தமண்ணில் இந்திய அணியே மீண்டும் கோப்பையைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்திய இருநாடுகளும் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகவில்லை. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது ஆஸ்திரேலிலியா.
1992-ஆம் ஆண்டில் ஐந்தாவது உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலிலியாவும் நியூசிலாந்தும் நடத்தின. போட்டி நடத்துவதற்கான சூழல் காரணமாக, மூன்றாம் நான்காம் போட்டிகளுக்கிடையிலான இடைவெளி சற்று அதிகரித்திருந்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில்தான் தென்னாப்பிரிக்க அணி இடம் பெற்றது. அந்நாட்டில் அதுவரை இருந்துவந்த நிறவெறி ஆட்சி அகற்றப்பட்டதால், தென்னாப் பிரிக்க அணிக்கு இருந்துவந்த தடை நீக்கப்பட்டு, அந்த அணி இடம்பிடித்தது. பகல் - இரவு ஆட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும் 1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி களில்தான். அதுவரை, பயன்படுத்திவந்த சிவப்பு நிற கிரிக்கெட் பந்துகளுக்குப் பதில் இரவு விளக் கொளியிலும் பளிச்செனத் தெரியும் விதத்தில் வெள்ளைப் பந்துகள் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்தது. மழையின் குறுக்கீடு- வெளிச்சக் குறைபாடுகள் இவற்றால் ஆட்டம் பாதிக்கும்போது, போட்டியைக் கைவிடாமல், ரன் விகிதத்தை மாற்றி அமைக்கும் டக்வொர்த் - லீவிஸ் முறையும் இந்தப் போட்டிகளில்தான் அறிமுகமானது. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டென்டுல்கர் கலந்து கொண்ட முதல் உலகக்கோப்பைப் போட்டி இதுதான்.போட்டியை நடத்திய ஆஸ்திரேலிலியாவும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவில்லை. அரையிறுதிப்போட்டியில் டக்வொர்த்-லீவிஸ் முறையால் ஒரேயொரு பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத முடிவால் தென்னாப்பிரிக்க அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறமுடியவில்லை. இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதிய இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. மூன்று முறை இறுதிப்போட்டிக்குத் தேர்வு பெற்றும் கோப்பையை வெல்ல முடியாத அணியானது இங்கிலாந்து.
ஆறாவது உலகக் கோப்பை போட்டி1996-ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை ஆகிய 3 நாடுகளிலும் நடந்தன. இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப்புலிலிகளுக்கும் சண்டை நடந்ததால், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அங்கே விளையாடத் தயங்கியதால் ஒன்றிரண்டு போட்டிகள் கைவிடப்பட்டன. கொல்கத்தாவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி வீரர்கள் மளமளவென அவுட் ஆனதால், ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட, ஆட்டம் கைவிடப்பட்டது. லாகூரில் நடந்த அரையிறுதிப்போட்டியில் இலங்கையும் ஆஸ்திரேலியாவும் மோதின. இலங்கை அணி யினர் அபாரமாக ஆடி வெற்றி பெற்றனர். அந்நாட்டு அணியில் இடம் பெற்றிருந்த இலங்கைத் தமிழரான முத்தையா முரளிதரனின் பந்துவீச்சும், ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, அர்ஜூன ரணதுங்கா ஆகியோரின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தன.
20-ஆம் நூற்றாண்டின் கடைசி உலகக் கோப்பைப் போட்டியை, 1999-ஆம் ஆண்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. 2000-ஆம் ஆண்டு என்பது அடுத்த நூற்றாண்டின் தொடக்கம் என்பதால் ஓராண்டு முன்னதாகவே நடந்த ஏழாவது உலகக் கோப்பைப்போட்டிகளை, முதன்முதலில் இப்போட்டிகளை நடத்திய இங்கிலாந்து நாடே நடத்த விரும்பியதால், சர்வதேச கிரிக்கெட் அமைப்பும் அனுமதித்தது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும், சில போட்டிகள் நெதர்லாந்து நாட்டிலும் நடைபெற்றன. கால் இறுதிப் போட்டிக்குப் பதில் சூப்பர் சிக்ஸ் என்ற முறை இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அறிமுகமானது. இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது தந்தையின் இறுதிச்சடங்கை முடித்துக்கொண்டு உடனடியாக அணிக்குத் திரும்பி, சதமடித்து சாதனை புரிந்தது, அவருடைய பொறுப்புமிக்க ஆட்டத்திற்கு சான்றாக விளங்கியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலிலியாவும் மோதின. இம்முறை, ஆஸ்திரேலிலிய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போது வடிவமைக்கப் பட்ட உலகக் கோப்பைதான் தற்போது வரை இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்கப்படுகிறது. 1983-இல் இந்தியா வென்ற கோப்பையை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது தாக்குதல் நடத்திய மதவாத சக்திகள் சேதப்படுத்தி விட்டதால், எந்த நாட்டு அணியிடமும் உலகக் கோப்பையை ஒப்படைப்ப தில்லை. போட்டி முடிவில் வழங்கியதும், திரும்பப் பெற்றுக்கொண்டு, கோப்பையின் வடிவ மாதிரியையே வழங்குகிறது சர்வதேச கிரிக்கெட் சங்கம்.
எட்டாவது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2003-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகளில் நடந்தன. அதுவரை அதிகபட்சமாக 12 நாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தநிலையில், இந்தப் போட்டியில் 14 நாடுகள் இடம் பெற்றன. ஜிம்பாப்வேயில் நடந்து வந்த இனக் கலவரத்தால் அந்நாட்டில் நடைபெறவேண்டிய ஒரு சில போட்டிகள் கைவிடப்பட்டன. கென்யாவை அரையிறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிலியாவை எதிர் கொண்டது. 1983-க்குப் பிறகு, 20 ஆண்டு இடைவெளியில் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமான ஆட்டத்தால் பரிதாபமாகத் தோல்வி யடைந்தது. ஆஸ்திரேலிலிய அணியே மீண்டும் சாம்பியன் ஆனது. வெஸ்ட் இன்டீசுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையுடன், மூன்றாவது முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலிலியா பெற்றது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் 500-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் போட்டித் தொடரின் நாயகனாகத் தேர்வு பெற்றது, இந்திய ரசிகர் களுக்கு ஆறுதலையும் பெருமையையும் அளிப்பதாக அமைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் 2007-ஆம் ஆண்டு ஒன்பதாவது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. பெர்முடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 418 ரன்களைக் குவித்து, உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் அதிக ரன் குவித்த அணி என்ற பெருமையைப் பெற்றது. ஆனாலும், இந்திய அணியின் வெற்றி நீடிக்கவில்லை. வெகு விரைவிலேயே போட்டி யிலிருந்து வெளியேறிவிட, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிலியாவும் இலங்கையும் மோதின. வெளிச்சக் குறைவினால், டக்வொர்த்-லீவிஸ் முறையில் ஆட்டம் தீர்மானிக்கப்பட, ஆஸ்திரேலிலிய அணி நான்காவது முறை உலகக் கோப்பையை வென்றது. ஹாட்ரிக் எனப்படும் தொடர்ந்து மூன்று முறை (1999, 2003,2007) கோப்பையை வென்ற அணி என்ற பெருமையும் அந்த அணிக்குக் கிடைத்தது. அத்துடன் உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆட்டங்களில் தொடர்ந்து 29 போட்டிகளில் வென்ற அணி என்ற சாதனையையும் ஆஸ்திரேலிலிய வீரர்கள் படைத்தனர்.
பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்த 2011-ஆம் ஆண்டில் இந்தியா- இலங்கை- பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளும் சேர்ந்து நடத்துகின்றன. இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் ஆறாவது (1992, 1996, 1999, 2003, 2007, 2011) உலகக்கோப்பை போட்டி இதுவாகும். இத்தகைப் போட்டிகளில் உலகின் எந்த வீரரும் பங்கேற்றதில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டி களின் தரவரிசையில் இந்தியாவின் நிலை சிறப்பாக இருப்பதால், 28 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் நிலவுகிறது. அதேநேரத்தில், 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலிலியாவும் இங்கிலாந்து, தென்னாப் பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வலுவான நிலையில் இருப்பதால், ஆரோக்கியமான விறுவிறுப்பான ஆட்டங்களை இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் எதிர்பார்க்கலாம்.
இந்தியா கோப்பையை வெல்லுமா ???????????????
நன்றி: நக்கீரன்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
» ஐசிசி கிரிக்கெட் உலககோப்பை 2011 பாடல்
» உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
» உலககோப்பை கால்பந்து: பிரேசில் அணி அறிவிப்பு- ரொனால்டினோவுக்கு இடமில்லை
» பெண்கள் உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி., இன்று மோதல்
» ஐசிசி கிரிக்கெட் உலககோப்பை 2011 பாடல்
» உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
» உலககோப்பை கால்பந்து: பிரேசில் அணி அறிவிப்பு- ரொனால்டினோவுக்கு இடமில்லை
» பெண்கள் உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி., இன்று மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum