Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்!
4 posters
Page 1 of 1
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்!
உலக அமைதிக்காக தனது 16 வயதில் பயணத்தை சைக்கிளில் துவக்கிய ரவி, 42 வயதிலும் தனது பயணத்தை தற்போது மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இதுவரை சைக்கிளில் ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக... பைக்கில் 4 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணம் செய்து கொண்டே இருக்கும் ரவி, சென்னையை சேர்ந்தவர் என்பது தமிழகத்திற்கு பெருமை.
ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஹாலந்து, இத்தாலி ஆகிய வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்ட ரவி, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பைக் மூலம் சுற்றிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவியை சந்தித்தோம்,
``நான் புகழுக்காகவோ அல்லது சாதனைக்காகவோ இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. உலக அமைதிக்காக இதற்கு முன்பு பல தலைவர்கள் போராடியுள்ளனர். அதேபோல் என்னால் முடிந்த ஒரு செயலை செய்கிறேன்.
இதன் மூலம் பல கிராமங்களில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன். உலக அமைதிக்கு அடிப்படை காரணமாக... அனைவரையும் படிக்க சொல்லி வலியுறுத்துகிறேன். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத உலகம் இருந்தால் போதும்... உலகம் அமைதி பெறும் என்பது எனது கருத்து. இதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்கிறேன். அதேபோல் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை உருவாக்கி வருகிறேன்.
என்னுடைய பைக்கின் பின்புறம் உலக அமைதிக்கான வாசகமும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளைக் கொடியும் எப்போதும் பறந்து கொண்டிருக்கும். இப்படி நான் பல ஊர்களைக் கடக்கும்போது அங்குள்ள மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள். உலக அமைதிக்காக ஒருவர் நீண்ட தூரம் பயணம் செல்கிறார் என்ற செய்தி அவர்களையும் சிந்திக்க வைக்கும் என்பதுதான் எனது நோக்கம்! உலக அமைதிக்காக மட்டுமின்றி, கார்கில் போர் குறித்தும் பயணம் செய்துள்ளேன்'' என்று தனது பயணத்தின் நோக்கத்தை விளக்குகிறார்.
மேலும் கூறுகையில், ``பள்ளிக் குழந்தைகளிடம் உலகப் போர், அணு ஆயுதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அவர்களை கட்டுரை எழுதச் சொல்ல வேண்டும். உலகம் அமைதியாக இருப்பதற்கான விதையை அவர்களின் மனதில் விதைக்க வேண்டும்'' என்கிறார் அமைதியாக...
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. ஆனாலும் தனது முன்னாள் மனைவி ஹெலி-ஐ பற்றி நல்லவிதமாகவே பேசுகிறார். ``அதுவொரு காதல் கல்யாணம். நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒரே ஒரு மகள் கிருத்திகா(13). ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறாள். மற்றொரு திருமணம் செய்யுமாறு உறவினர்கள் வற்புறுத்துகின்றனர். தற்போது என்னுடன் பயணம் செய்யும் இத்தாலி பெண்ணான காத்ரீனை திருமணம் செய்யலாம் என்று எண்ணுகிறேன்'' - கொஞ்சம் வெட்கத்துடன் கூறுகிறார் ரவி.
இவர் உடல்தானம், கண்தானம், ரத்ததானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இளமைக் காலம் குறித்து பேசும் ரவி, ``சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்து, வளர்ந்தேன். அங்குள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பனிரெண்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அப்பா நிர்வகித்துக் கொண்டிருந்த வீடியோ லைப்ரரியில் பணிபுரிந்தேன். அப்போது தனியாக தொலைதூரக் கல்வியில் பி.ஏ.வரலாறு படித்து முடித்தேன். அப்புறம் ஹார்ட்வேர் படித்தேன். யோகா கற்றுக் கொண்டேன். தற்போது கூந்தல் முடியை ஏற்றுமதி செய்து வருகிறேன்'' என்கிறார்.
அவரிடம், முதன் முதலில் எங்கே, எப்போது, எதற்காக பயணம் செய்தீர்கள்? என்று கேட்டோம்,
``எனக்கு சத்தியநாராயணா என்ற ராஜஸ்தான் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஆந்திராவில் விஜயவாடாவில் வியாபாரம் செய்து வந்தார். அவரை பார்ப்பதற்காக செல்ல நினைத்தேன். கையில் ரெயில் டிக்கெட் எடுக்க பணம் போதவில்லை. உடனே என்னிடமிருந்த சைக்கிளில் கிளம்பிவிட்டேன்.
சென்னையிலிருந்து 433 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்றேன்.
வழியில் கிராமங்கள், காடுகள் என மனதுக்கு ரம்மியமாக இருந்தது. வித்தியாசமான மனிதர்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் குணங்கள் எல்லாம் என்னை கவர்ந்தன என்றாலும், அவர்களிடம் படிப்பு மற்றும் உலகார்ந்த விஷயங்கள் இல்லை. இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணம் உருவானது. அந்த பயணம்தான் எனது வாழ்க்கையை புரட்டி போட்டது.
இனி எனது வாழ்வு முழுவதும் உலகம் முழுக்க பயணம் செல்ல திட்டமிட்டேன். அடுத்து அப்போதைய போலீஸ் கமிஷனர் தேவாரத்தின் அறிவுரையின்படி, சென்னையிலிருந்து பெங்களூருக்கு சைக்கிளில் பயணம் சென்றேன். 87-ம் ஆண்டில் சென்னையிலிருந்து மதுரைக்கு சைக்கிளில் சென்று வந்தேன்.
92-ம் ஆண்டில் சென்னையிலிருந்து டெல்லிக்கு(4620 கி.மீ) சைக்கிளிலேயே பயணம் சென்று வந்தேன். அப்போது நாக்பூரில் நடந்த விபத்தில் இடது முழங்கை முறிந்து போனது. ஆனாலும் ஒரு கையால் சைக்கிள் ஓட்டி, மீதியிருந்த நூறு கிலோமீட்டர் தூர பயணத்தை முடித்தேன்.
அந்த பயணத்தை அனைவரும் பாராட்டியதை மறக்க முடியாது. அடுத்து சென்னையிலிருந்து லண்டனுக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளேன்'' என்று பெருமிதப்படும் ரவிக்கு, இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசத் தெரியும். அதுமட்டுமின்றி டென்னிஸ், யோகா, சமையல் ஆகியவையும் தெரியும்.
தன்னுடைய பயணத்தின்போது ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து பேசுகையில், ``கார்கில் போர் அமைதியை வலியுறுத்தி பைக்கில் பயணம் மேற்கொண்டேன். அப்போது என்னுடன் ஜப்பானை சேர்ந்த தோழியும் வந்தார். இருவரும் மத்திய பிரதேசத்தில் காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தோம்.
எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும் என்பதால் வண்டியை ரோட்டின் ஓரம் நிறுத்தி விட்டு, சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தேன்.
எதார்த்தமாக நிமிர்ந்து பார்த்தபோது, கருப்பு நிறத்தில் ஒரு பெரிய வால் ஆடிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியான நான் அப்படியே கொஞ்சம் நிமிர்ந்து, கூர்ந்து பார்த்தால் கருஞ்சிறுத்தை மரத்தில் படுத்தபடி என்னை பார்த்துக் கொண்டிருந்தது. பயத்தில், அதிர்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
திரும்பினால் சிறுத்தை என்னை தாக்கி விடும் என்ற எச்சரிக்கையில் அதை பார்த்தபடி அப்படியே மெதுவாக பின்னாடி நகர்ந்து, வண்டியை ஸ்டார்ட் செய்தபடி, தோழியிடம் நடந்த விவரத்தை கூறினேன். விரைவாக அவர் வண்டியில் ஏறி உட்கார வேகமாக வண்டியை கிளப்பினேன். அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் முழுவதும் சிலிர்த்துவிடும்.
அதேபோல் வழியில் கிராமங்களில் படிக்காத குழந்தைகள், தொழிலாளர்களாக செங்கல் சூளை மற்றும் கடைகளில் வேலை செய்வதை பார்ப்பதற்கு, மனதுக்கு கஷ்டமாக இருக்கும். அவர்களிடம் படிப்பு குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தி, குழந்தைகளை படிக்க வைக்குமாறு அவர்களது பெற்றோரிடம் வலியுறுத்துவேன்.
வட இந்தியாவில் அவ்வப்போது ரவுடிகள் வழிப்பறிக்காக என்னை மறிப்பார்கள். அவர்களிடம் எனது நோக்கத்தை கூறியவுடன் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
ஒரே ஒரு முறை மட்டும் மும்பை, ஜுகு பீச்சில் நாலு ரவுடிகள் என்னை யார் என்று தெரியாமல், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, என்னிடமிருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டார்கள். மற்றபடி எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை'' என்கிறார்.
பெற்றோர்: அப்பா ஆறுமுகம் வியாபாரம் செய்தவர். அம்மா அமிர்தவள்ளி. ஒரு அண்ணன் சேகர் என்னுடன் ஏற்றுமதி பிசினஸில் உதவியாக இருக்கிறார்.
பிடித்த நிறம்: மஞ்சள்
பிடித்த நாடு: இந்தியா
ரோல்மாடல்: ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி.
சந்திக்க விரும்பும் நபர்: முதல்வர் கலைஞர்.
பயம்: ஏதாவது தவறு செய்துவிட்டால் வருவது.
பலம்: தன்னம்பிக்கை
பலவீனம்: புகைபிடிப்பது.
எதிர்கால லட்சியம்: உலகம் முழுவதும் நடந்தே பயணம் செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பத்தில் மருத்துவமனை தொடங்கி, மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும். அனைத்து நாட்டு தலைவர்களையும் சந்தித்து, `அணு ஆயுதம் கூடாது' என்பதை வலியுறுத்த வேண்டும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்!
சந்தோஷமா இருக்கு, நாடு எனக்கு என்ன செய்ததுன்னு கேட்காம என்னால முடிந்தது இதுன்னு சொல்லி தொடர்ந்த இந்த பயணம் வெற்றிகரமாக தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும்.
சிறுத்தைக்கிட்ட இருந்து தப்பினது நிஜமாவே சிலிர்க்கவைக்கும் அனுபவம் தான்...
இத்தனை ஓட்டத்திலும் யோகா சமையல் கற்றது பெருமைப்படும் விஷயம்....
பாம்பே ஜுஹு பீச்சுல நல்லவேளை இவரை உயிருடன் விட்டார்கள் வழிப்பறி கொள்ளையர்...
அன்பு நன்றிகள் சிவா அருமையான பகிர்வுக்கு....
சிறுத்தைக்கிட்ட இருந்து தப்பினது நிஜமாவே சிலிர்க்கவைக்கும் அனுபவம் தான்...
இத்தனை ஓட்டத்திலும் யோகா சமையல் கற்றது பெருமைப்படும் விஷயம்....
பாம்பே ஜுஹு பீச்சுல நல்லவேளை இவரை உயிருடன் விட்டார்கள் வழிப்பறி கொள்ளையர்...
அன்பு நன்றிகள் சிவா அருமையான பகிர்வுக்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்!
அட இப்படியும் ஒரு மனிதர் அதுவும் தமிழர் என்னும் போது பெருமிதமாக உள்ளது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» உலகம் சுற்றும் சிங்
» உலகம் சுற்றும் கவிதை!!!
» உலகம் சுற்றும் வாலிபன்
» வாழ்ந்துப்பாரு உலகம் சுற்றும் உன்னைக்கண்டு!
» உலகம் சுற்றும் சிங்
» உலகம் சுற்றும் கவிதை!!!
» உலகம் சுற்றும் வாலிபன்
» வாழ்ந்துப்பாரு உலகம் சுற்றும் உன்னைக்கண்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum