புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
59 Posts - 55%
heezulia
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%
kavithasankar
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
54 Posts - 55%
heezulia
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%
Guna.D
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_m10**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்**


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 03, 2011 4:43 pm

இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்.

டிஸ்க்: இது சொந்த ஊர் புராணம் மற்றும் புலம்பல். கொஞ்சம் போரடிக்கும்.

எனக்கு சிறு வயது முதலே என் சொந்த ஊர் விருதுநகர் மீது தனிப்பட்ட பிரியம் (சொந்த ஊரின் மீது யாருக்குத்தான் பாசம் இருக்காது?). எங்கள் ஊரை திரையில் காட்டிய இரண்டே படங்கள் ஒன்று வெயில்(வசந்தபாலன் விருதுநகர்காரர்), மற்றும் ரேணிகுண்டா(படத்தில் காட்டுவது ரேணிகுண்டாவே அல்ல). குறுகிய பரப்பளவு, தண்ணீர் பஞ்சம், குறுகிய தெருக்கள் என்று பல குறைகளை தாண்டி இந்த ஊருக்குள்ளே வரும்போதே தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை போல மனம் குதூகலிக்கும். படிக்கும் காலத்தில் யாராவது இந்த ஊரை குறை கூறி விட்டால் உடனே கோபம் பொத்துக்கொண்டு வரும். கல்லூரியில் படிக்கும்போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பன், "இப்படி வறண்ட பாலைவனத்தில் எப்படித்தான் இந்த மனிதர்கள் இருக்கிறார்களோ?" என்று எகத்தாளமாக கூறினான். உடனே என்னிடம் பதில் வந்தது "நாளைக்கே எங்கள் ஊர் பசுமையாக மாறினாலும், இல்லை இப்படி வறண்டு போனாலும் அதை தாங்கும் சக்தி இந்த ஊர் மனிதர்களுக்கு இருக்கிறது. ஆனால் உங்கள் ஊர் ஒரு வருடம் மழை இல்லாமல் போனால் கூட உங்களால் தாங்க முடியாது!" என்று. எந்த ஒரு கணத்திலும் இதை நான் விட்டு கொடுத்ததில்லை.

சுமார் 1 ஆண்டு சென்னையில் வேலை பார்த்துவிட்டு, ஊர் திரும்பி இருக்கிறேன். என்னுடன் படித்த நண்பர்கள் அனைவருமே பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருப்பதால் ஊருக்குள் யாருமே இல்லை. எனக்கு கொண்டாட்டம் என்றால் பண்டிகை காலம்தான். அப்போதுதான் அனைத்து நண்பர்களும் ஊர் திரும்புவார்கள். தீபாவளி அன்று வ குவாட்டர் கட்டிங் படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அந்த நண்பன் சொன்ன ஒரே வார்த்தை, "எனக்கு தெரிந்து இருபது வருடங்களாக மாறாமல் இருப்பது இந்த ஊரு ஒண்ணுதான்." அதாவது இருபது வருடங்களுக்கு முன்னால் இந்த ஊர் எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்பவும் இருக்கிறது. எந்த ஒரு வளர்ச்சியும் கிடையாது. நான் சிந்தித்து பார்த்தேன். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது இருந்த ஊர் அப்படியே தான் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் காணோம். இன்னும் சொல்லப்போனால் சீர்கெட்டுத்தான் போயிருக்கிறது.

எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் மிக அதிகம். முன்பெல்லாம் இரண்டு நாளைக்கு ஒரு தடவை முனிசிபல் குழாயில் குடிதண்ணீர் விநியோகிக்கப்படும். அதிகம் போனால் மூன்று நாளைக்கு ஒருமுறை. கடந்த சில ஆண்டுகளாக சுமார் இருபது நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க படுகிறது. இது எங்களுக்கு பழகி விட்டது. எப்படி இரண்டு மணி நேர மின்வெட்டு பழகி விட்டதோ அதுபோல. இந்த ஆண்டு விருதுநகரில் வரலாறு காணாத மழை. இப்போதும் வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்க படுகிறது. அதாவது நல்ல மழை பெய்தால் கூட சரிவர குடிநீர் விநியோகம் கிடையாது. ஊரை சுற்றி சிறு சிறு கண்மாய்கள், அணைகள் இருக்கின்றன. ஆனால் மதகுகள் தான் இல்லை. மழை பெய்தால் அனைத்து தண்ணீரும் வீணாக வெளியேறி விடும். இது குடிநீரில் உள்ள குழறுபடி.

எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு பெரிய நகரங்கள் மதுரை மற்றும் சிவகாசி. இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் விருதுநகருக்கு என்று தனியாக மொபாசல் பேருந்துகள் கிடையாது. மதுரை டு சிவகாசி, மதுரை டு கோவில்பட்டி, மதுரை டு திருநெல்வேலி ஆகிய பேருந்துகள்தான் உண்டு. இவை விருதுநகர் வழியாகத்தான் செல்லும். ஆனால் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது விருதுநகர்காரன் யாரும் பேருந்தில் ஏறிவிட கூடாது. கண்டக்டர் பேருந்து அருகில் நின்று கொண்டு, "விருதுநகர் ஏறாதே!!" என்று கூவிக்கொண்டே இருப்பார். பேருந்து நிரம்பி கிளம்பும் நேரத்தில் போனால் போகட்டும் என்று ஏற்றி கொள்வார்கள். அதாவது விருதுநகர்காரன் ஏறி உட்கார்ந்து விட்டால் சிவகாசிகாரனுக்கோ கோவில்பட்டிகாரனுக்கோ சீட் கிடைக்காமல் போய்விடும் என்று இந்த திட்டம். இது தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் கடைபிடிக்கபடுகிறது. என்னை மாதிரி ஒரு சிலர் கண்டக்டரின் பேச்சை கேட்காமல் முன்னமே ஏறி உட்கார்ந்து கொண்டு, கண்டக்டரின் நெற்றிக்கண் பார்வையை கண்டுகொள்ளாமல், இருந்து விடுவோம். ஆனால் விபரம் புரியாத சிலர் குறிப்பாக பெண்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள். இதில் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் இன்னும் மோசம். எல்லா பேருந்துகளுமே ஊருக்குள் வருவதே இல்லை. ஏனென்று அடுத்த பத்தியில் சொல்கிறேன்.

தமிழ்நாட்டின் எல்லா ஊர்களின் தலைவிதிக்கு எங்கள் ஊர் மட்டும் என்ன விதி விலக்கா? எங்கள் ஊரிலும் இரண்டு பேருந்து நிலையங்கள் உண்டு. ஜன சந்தடி நிறைந்த இடத்தில் சிறிய பழைய பேருந்து நிலையம். ஆள் அரவமே இல்லாத இடத்தில் ஒரு புதிய பேருந்து நிலையம். இந்த புதிய பேருந்து நிலையம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி அப்போதிருந்த எம்எல்எ வீம்புக்காக கட்டியது. ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் கட்டப்பட்ட அந்த பேருந்து நிலையம் தற்போது சீந்துவாரற்று கிடக்கிறது. எப்போதாவது சில சமயம் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வராமலேயே புதியபேருந்து நிலையத்துக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு செல்லும். இந்த மாதிரி பல பேருந்துகள் ஊருக்குள் வராமல் போவதற்கும் காரணம் இருக்கிறது.

நகரின் பல்வேறு சாலைகளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** ?ui=2&ik=b6e0af7360&view=att&th=12e65700b863db3b&attid=0.1**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** ?ui=2&ik=b6e0af7360&view=att&th=12e65700b863db3b&attid=0.1**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** ?ui=2&ik=b6e0af7360&view=att&th=12e65700b863db3b&attid=0.1**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** ?ui=2&ik=b6e0af7360&view=att&th=12e65700b863db3b&attid=0.1

உலகத்தரமான சாலைகளை உடையது எங்கள் ஊர். மலைப்பாங்கான ஊராக இல்லாமல் சமவெளியில்தான் எங்கள் ஊர் அமைந்துள்ளது. ஆனால் ஒரு மலை பிரதேசத்தில் பயணம் செய்த அனுபவம் கிடைக்கும். ஆங்காங்கே சர்ப்ரைஸ் குழிகளும் உண்டு. வாகனத்தில் மணிக்கு பதினைந்து கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் உங்களால் செல்ல முடியாது. மீறினால் ஒன்று டயர் பஞ்சராகும், இல்லை ஷாக் அப்சார்பரின் சீன் முடிந்து விடும். எங்கள் ஊர் பக்கம் ஒரு சொல் வழக்கு உண்டு. "விருதுநகருக்குள் வண்டி ஒட்டி பழகி விட்டால். உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் வண்டி ஒட்டி விடலாம்." ஊர் முழுக்க இதே நிலைதான். இதற்கு முக்கிய காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கபட்ட பாதாள சாக்கடை திட்டம். அதற்கு முன் மெயின் ரோடுகள் மட்டுமே குண்டும் குழியுமாக இருந்தன. தற்போது ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருக்கும் சாலையும் நாசமாகி விட்டது. ஒட்டுமொத்ததில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து விருதுநகரில் சாலை என்று ஒன்று இருந்ததாக நான் பார்த்ததே இல்லை.

இப்படி தொட்ட இடமெல்லாம் ஏதாவது ஒரு குறை இல்லை குழறுபடி. இதற்கு பாதி காரணம் அரசியல்வாதிகள் என்றால் மீதி காரணம் மக்கள். மக்கள் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள். எனக்கு விபரம் தெரிந்து எம்எல்எ வாக இருந்தவர்கள் திரு ARR சீனிவாசன் (திமுக-1996), திரு தாமோதரன்(காங்கிரஸ்-2001), திரு வரதராஜன் (மதிமுக-2006). இவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. நான் ARR சீனிவாசன் அவர்களை வோட்டு கேட்டு வரும்போது பார்த்திருக்கிறேன். மேலும் எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் ஒருதடவை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்ற இருவரையும் வோட்டு கேட்டு வரும்போது பார்த்ததோடு சரி. இப்படி அரசியல்வாதிகள் எல்லாம் ஒரு கணக்குக்காக எங்கள் ஊரை வைத்திருக்கிறார்களே ஒழிய அதன் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்ததில்லை.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

எங்கள் ஊர் வியாபார தலமாக இப்போதும் சிறந்து விளங்குகிறது. கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த ஊர். அதனால்தான் என்னவோ இருபது வருடங்களுக்கும் மேலாக பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் முதலிடம் பெற்று வருகிறது. 120 ஆண்டுகளை கடந்த காமராசர் படித்த ஆண்கள் பள்ளி, 100 ஆண்டுகளை கடந்த பெண்கள் பள்ளி இன்னும் இயங்கி வருகிறது. இத்தனை சிறப்பம்சம் கொண்ட எங்கள் ஊர் எந்த வித முன்னேற்ற பாதையிலும் செல்லாததை நினைத்து வருத்தம் அடைகிறேன்.


சொல்ல மறந்துட்டேங்க. எங்க ஊர்தான் விருதுநகர் மாவட்டத்தின் தலைநகர். ஒரு மாவட்ட தலைநகருக்கே இந்த நிலைமை.

அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 4:52 pm

///நகரின் பல்வேறு சாலைகளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்///

காணவில்லையே?



**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 03, 2011 5:19 pm

என் உங்கள் ஊர் முன்னேறவில்லை .மிக மிக்கிய காரணம் அந்த மக்கள் .மிக குறிப்பாக வியாபாரிகள் .தொன்று தொட்டு அவ்ர்கல் கையில்தான் விருது நகர் உள்ளது .உங்கள் பழைய பேருந்து நிலயத்தை விட்டு புதிய பேருந்து நிலயத்துக்கு மாறாமல் அடம்பிடிப்பதாலேயே நகரம் பெரியதாக வில்லை . சென்னை கோயம்பேடு ,மதுரை மாட்டுதாவணி இரண்டுமே ஆரம்பத்தில் நகரை விட்டு தொலைவில்தான் இருந்தது .ஆனால் சில வருடங்களில் பேருந்து நிலயத்தை சுற்றி விக வேகமான வளர்ச்சி அடைந்துவிட்டது .

2. உங்கள் ஊரில் காணப்படும் தநீர் பற்றாக்குறை
3.மதுரைக்கு அருகே இருப்பதால் வரும் பிரச்சினை (பெரிய நகருக்கு அருகே இருந்தால் இந்த மாதிரி இரச்சினைகள் வரும் (உதாரணம் - செங்கல்பட்டு )(விருதுநகர் மாதிரி இன்னும் மாறாமலே இருக்கும் நகரம் )

4.பெரிய அளவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்காதது .

5.மிக பெரிய அளவில் மக்கள் வேறு பகுதிகளுக்கு வசதி வாய்ப்புகளை தேடி சென்றுவிட்டது .

உங்கள் பகுதியில் திருநெல்வேலி ,தூதுக்குடி ,நாகர்கோவில் தவிர எந்த பகுதியுமே வளர்ச்சி அடையவில்லை நண்பரே
சாத்தூர் ,சிவகாசி ,கோவில்பட்டி ,அருப்புக்கோட்டை எல்லா இடங்களுமே இன்னும் அப்படியேதான் இருக்கின்றன

உங்களைபோன்றே எனக்கும் மிக பெரிய ஆதங்கம் உண்டு விருதுநகரின் முன்னேற்றத்தில் ( 20 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் ஊர் மாரியம்மன் திரு விழாவிற்கு வருபவன் என்ற முறையில் )

நன்றி நண்பரே

ராம்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 5:31 pm

மாமா, மதுரா கரான் நான் உங்களுக்கு (உங்க ஊருக்கு) முலு சப்போர்ட் பண்றோம் .



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 12:14 am

விருது நகரின் நிலை கேட்டு வேதனை தான் வந்தது... அரசியல் வாதிகளை முடக்கிப்போட்டு வசதி பெறத்தெரியாமல் இருப்பது உங்கள் குற்றம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Mar 04, 2011 12:53 pm

தமிழ்கத்தின் மிக சிறந்த அமைச்சரான தங்கம் தென்னரசுவும் ,ஓரளவு வேலைசெய்யும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் விருதுநகர் முன்னேறவில்லை என்றால் வருத்தம்தான் .

ராம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 04, 2011 4:21 pm

வேதனை தான்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

**இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்** 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக