புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
85 Posts - 79%
heezulia
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
250 Posts - 77%
heezulia
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
8 Posts - 2%
prajai
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமையல் அரிச்சுவடி  Poll_c10சமையல் அரிச்சுவடி  Poll_m10சமையல் அரிச்சுவடி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் அரிச்சுவடி


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 1:18 pm

ஆரம்பகால சமையல் (For Beginners)

நன்கு சமைக்கத் தெரிந்தவர்களுக்கு குறிப்புகளைக் கேட்டோ, பார்த்தோ
சமைப்பது பெரிய விஷயமே இல்லை. இப்போதெல்லாம் திருமணமாகாத ஆண்களும்,
பெண்களும் வெளியூர்களில் வேலை பார்க்கும் அவசியம் ஏற்படும் போது, சாப்பாடு
பெரும் பிரச்னையாக இருப்பதால், அவர்களே சமைக்கவும் வேண்டிய தேவை உள்ளது.
அவர்களிடம் உள்ள அத்தியாவசியமான சில பொருட்களையும், பாத்திரங்களையும்
கொண்டு என்ன சமைப்பது என்ற சந்தேகம் நிறைய வரும். அவர்களுடைய அடிப்படை
சந்தேகங்கங்களை போக்குவதற்கு இந்த பகுதி உதவியாய் இருக்கும்.
சமைக்கும் போது ரொம்ப கவனமாக கைகளை சுட்டுக் கொள்ளாமல் சமைக்க
முடிந்தாலே சமையலை ஓரளவு கற்றுக் கொண்டதாக அர்த்தம். கொஞ்சம்
பாத்திரங்களையும், கொஞ்சம் பொருட்களையும் வைத்துக் கொண்டே சுவையாக சமைக்க
முடியும். காய்கறிகளை நறுக்க சின்ன பலகையும், பதமான நல்ல உறுதியான
கத்தியும் போதும். சமைக்க ஆரம்பிக்கும் போது தேவையான எல்லாவற்றையும்
நறுக்கி வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் தான் புதிதாக சமைப்பவர்களுக்கு
தடுமாற்றமில்லாமல் சமைக்க முடியும். சமைக்க நன்றாக பழகியவர்களால் மட்டுமே
ஒரே சமயத்தில் 2, 3 வேலைகளை செய்ய முடியும். ஓரளவு சமைக்கத்
தெரிந்தவர்களுக்கு பிரச்சனையில்லை. எதுவுமே தெரியாமல் சமைக்க
ஆரம்பித்தவர்களுக்காகவே இந்த தொடர்.
சமைக்கத் தெரியாதவர்களைப் பார்த்து, முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஒரு
வெந்நீராவது ஒழுங்கா வைக்கத் தெரியுமா?' ஆனாலும் அதுவும் முக்கியம் தான்.
வாட்டர் பில்டர் இருந்தால் கவலையில்லை. அது இல்லையென்றால் தண்ணீரை கொதிக்க
வைத்து ஆற வைத்து குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அடுப்பில் வைத்தோமா, லேசாக சூடு
ஏறியதும் நிறுத்தினோமான்னு இருக்கக் கூடாது. தண்ணீரை வைக்கும்
பாத்திரத்தில் வழிய வழிய தண்ணீர் பிடித்து வைக்காமல் ஓரங்குல அளவு குறைவாக
வைத்தால் தான் தண்ணீர் கொதிக்கும் போது பாத்திரத்தை விட்டு வெளியே தெறித்து
அடுப்பை அணைக்காமலிருக்கும்.
சமையல் அரிச்சுவடி  Cook_1
அடுப்பை சீராக வைத்து, தண்ணீருள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க
விடவும். தண்ணீர் நன்கு சூடேறி சின்ன சின்ன பப்பிள்ஸ் மறைந்து, பெரிய
பப்பிள்ஸ் வந்து தளதளவென்று கொதிக்கும் போது நிறுத்த வேண்டும். மூடி
வைக்கும் போது டைட்டாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு மூட வேண்டும்.
வேர்த்து ஒழுகும் தண்ணீர் வெந்நீருக்குள் சொட்டுவது நல்லதல்ல. இது தான்
வெந்நீர் வைக்கும் முறை. இப்படி வைக்கும் வெந்நீரை குடிப்பது தான் நல்லது.
அடுத்ததொரு முக்கியமான விஷயம். பால் காய்ச்சுவது :-)
எப்பொழுதுமே பாலின் அளவை விட கொள்ளளவு அதிகம் பிடிக்கும் பாத்திரத்தில்
பால் காய்ச்சினால்தான் சட்டென பொங்கி அடுப்பில் வழிந்து விடாமல் தடுக்க
முடியும்.
பால் வாங்கி வந்ததும் பாலை கவரோடு கழுவி விட்டு, ஒரு மூலையில் சின்ன
கத்தரிக் கோலால் ஓரங்குல அளவிற்கு நறுக்கி விட்டு, பாத்திரத்தில் ஊற்ற
வேண்டும். நறுக்கிய மூலையின் எதிர் மூலையை கையால் பிடித்து ஊற்றினால்
எல்லா பாலும் பாத்திரத்தில் கொட்டி விடும்.
சமையல் அரிச்சுவடி  Cook_2
அடுப்பை மிதமாக வைத்து பாலை காய்ச்ச வேண்டும். பொங்கி வரும் போது 2, 3
முறை பாத்திரத்தை கலக்கி வைத்து திரும்ப பொங்க விட வேண்டும். கலக்கி
வைப்பது சிரமமாக இருந்தால் கால் தம்ளர் தண்ணீரை பக்கத்தில் வைத்துக் கொண்டு
பொங்கி வரும் போதெல்லாம், சிறிது சிறிதாக ஊற்றினால் பொங்குவது அடங்கி,
திரும்பவும் பால் காய்ந்து பொங்கும். இதுபோல் 2, 3 முறை செய்த பின் அடுப்பை
அணைக்கவும்.
வெந்நீர் போட கத்துக்கிட்டாச்சு, பால் காய்ச்ச கத்துக்கிட்டாச்சு.
காலையில் எழுந்தவுடனேயோ, ஆஃபீஸிலிருந்து டயர்டாக வந்தாலோ முக்கியமாக
தேவைப்படும் ஒன்று டீ (தேநீர்). டீ எப்படி போடுவது என்று தெரிஞ்சுக்கலாமா?
எப்பொழுதுமே டீ போடும் பாத்திரம் தண்ணீர், பால், டீத்தூள் எல்லாம்
போட்டு கொதிப்பதற்கு இடம் இருப்பது போல் தாராளமாக இருக்க வேண்டும்,
கைப்பிடியுள்ள, கெட்டிலானால் டீயை கலக்கும் போதோ, எடுக்கும் போதோ
கைப்பிடியை மட்டும் பிடிக்காமல், இன்னொரு கையில் இடுக்கியாலோ, துணியாலோ
பிடித்து எடுப்பது நல்லது. எதிர்பாராத விதமாக கைப்பிடி உடைந்தாலோ, ஸ்க்ரூ
ஏதும் கழண்டிருந்தாலோ மேலே கொட்டிக் கொள்ளாமல் தப்பிக்கலாம். பால்
காய்ச்சுவதற்கு, டீ போடுவதற்கு என தனிப் பாத்திரமொன்றை எப்போதும் வைத்துக்
கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் புளி கரைப்பதற்கோ, குழம்பு வைப்பதற்கோ
பயன்படுத்தினால் பால் திரிந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். (அப்படி
திரிந்து போன பாலையும் கீழே கொட்டாமல் என்ன செய்யலாமென பிறகு பார்க்கலாம்.)
சமையல் அரிச்சுவடி  Cook_3
அரை லிட்டர் பாலில் டீ போடும் முறை
நிறைய பேருக்கு எவ்வளவு பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்து, எப்படி டீ
போடுவது என்றே தெரியாது. நல்ல திக்கான பாலாக இருந்தால், 1/2 லிட்டர்
பாலுக்கு 200 மிலி டம்ளரில், 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். மொத்தமாக 5
டம்ளர் அளவு வரும். கால் டம்ளர் சேர்த்து ஊற்றினால் கொதித்து குறைவதற்கு
சரியாக இருக்கும்.
தேவையான பாத்திரங்கள்:
கெட்டில், டீ வடிகட்டி, டீ வடிக்க ஒரு பாத்திரம், டம்ளர்கள்.
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்,
தண்ணீர் - 2 டம்ளர் + 1/4 டம்ளர்,
டீத்தூள் - 5 தேக்கரண்டி,
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி.
செய்முறை:
பாலுடன் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
பொங்கி வரும் போதெல்லாம் கலக்கி, கலக்கி, திரும்ப வைக்க வேண்டும். பொங்கி வழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
நன்கு கொதித்ததும், வடித்தால் டீ ரெடி. (ஒரு ஏலக்காயும், சிறிது தோல்
சீவிய இஞ்சியையும் சின்ன இடிப்பானில் நசுக்கி, டீ கொதிக்கும் போது போட்டால்
டீயின் சுவை இன்னும் கூடும்.)
டீயை சரியாக கொதிக்க விடலைன்னா, பால் வாசம் அடிக்கும். டீத்தூள் குறைவாக
போட்டாலும் டீ நன்றாக இருக்காது. எப்போதுமே டீ போட்டதுமே, வடித்து,
டம்ளர்களில் ஊற்றி விட வேண்டும். அப்போது தான் சூடு ஆறாமலிருக்கும்.
இந்த அளவுகள் 5 பேருக்கானது. அவ்வளவு பேர் இல்லையே, ஒருத்தருக்கு மட்டும் தான் போடணுமானால் என்ன செய்யணும்னு கேட்கறீங்களா? சொல்றேனே.
எப்படியும் 1/2 லிட்டர் பால் வாங்குவீர்கள். பாலை காய்ச்சி தனியே
வைத்துக் கொள்ளவும். 3/4 டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு
தேக்கரண்டி டீத்தூள், 3/4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2,3 முறை நன்கு
பொங்கி வர வர கொதிக்க விட்டு, இறக்கி உடனே வடிக்கட்டினால் டீ ரெடி.
ரொம்ப தலைவலியாக இருந்தால், ஒரு சிறு துண்டு இஞ்சி நசுக்கி டீ
கொதிக்கும் பொழுது போட்டு, கொதித்ததும் வடிகட்டி அருந்தினால் தலைவலி
குறையும். ஃப்ரிஜ் இல்லாதவர்கள், மீதியுள்ள பாலை ஒரு பெரிய பாத்திரத்தில்
தண்ணீர் வைத்து, அதனுள் பால் பாத்திரத்தை (ஆறியதும்) வைத்து மூடி வைத்தால்
பால் கெடாமலிருக்கும்.
மாலையில் டீ போடவும், இரவு குடிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாலையில்
டீ தேவையில்லையெனில் தயிர் போட்டுக் கொள்ளலாம். பால் பாக்கெட்டை வாங்குவதை
விட ஸ்கிம்டு மில்க் பவுடரை வாங்கி வைத்து கொண்டால், தேவையான அளவிற்கு
எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். கொழுப்பும் அதில் குறைவென்பதால் உடல்
ஆரோக்கியதிற்கு நல்லது.
தயிர் தயாரிக்கும் முறை
பாலை வெதுவெதுப்பான நிலையில் வைத்து (ரொம்ப சூடாக இருக்கக் கூடாது), ஒரு
தேக்கரண்டி தயிரை சேர்த்து நன்கு கலக்கி, மூடி வைக்கவும். பால் தயிராகும்
வரை பாத்திரத்தை அசைக்காமலிருப்பது நல்லது.



சமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Yசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Sசமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Hசமையல் அரிச்சுவடி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 1:24 pm

பாகம் 2

பாலில் டீ போடும் முறையைப் பார்த்தோம். பால் பவுடர் உபயோகித்து டீ போடுவது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
பாலுக்கும், தயிருக்கும் தேவை என்றால் 1 மேசைக்கரண்டி பால் பவுடரை 200
மில்லி தண்ணீரில் கட்டியின்றி கரைத்து, பொங்கி வரும் வரை காய்ச்சி
இறக்கினால் பால் ரெடி.
டீ போட வேண்டுமென்றால், 3/4 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மிலி
தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். லேசாக சூடேறியதும் 1
தேக்கரண்டி டீத்தூள், 2 தேக்கரண்டி (பாலிலேயே கொஞ்சம் இனிப்புத் தன்மை
இருக்கும்) சர்க்கரை சேர்த்து டீத்தூள் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி
வடிகட்டினால் டீ குடிப்பதற்கு தயார். இதிலும் தூளாக்கிய ஏலக்காயையும்,
நசுக்கிய இஞ்சியையும் சேர்த்து டீ போடலாம். பால் சூடாகாமல் டீத்தூள்,
சர்க்கரை சேர்த்தால் சில நேரங்களில் பால் திரிந்து விடும்.
பால் திரிந்தால் என்ன செய்வதுன்னு சொல்றேன்னு சொல்லி இருந்தேனல்லவா?
திரிந்து போன பாலை கொஞ்சம் தயிர் அல்லது சில துளிகள் எலுமிச்சை சாறு
சேர்த்து நன்கு கலக்கி இன்னும் நன்றாக திரிய வைக்கவும். நன்கு திரிந்ததும்
வடிகட்டி, கட்டியாக நிற்கும் பனீரை ஒரு சுத்தமான துணியில் கட்டி, மேலே
ஏதாவது வெயிட் வைத்தால் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து கெட்டியான பனீர்
கிடைக்கும். இந்தப் பனீரை வைத்து பனீர் மசாலா, பட்டர் மசாலா இன்னும்
எவ்வளவோ செய்யலாம். ரசகுல்லா கூட செய்யலாம்!
திரிந்த பாலில் ரசகுல்லா !
கெட்டியான பனீரை கைகளால் நன்கு தேய்த்து உதிர்த்து விட்டு நீள ஷேப்பில்
உருட்டி வைத்துக் கொள்ளவும். 1/2 டம்ளர் சர்க்கரையில் 1/2 டம்ளர் தண்ணீர்
சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து, கொதிக்க விடவும். தளதளன்னு
நன்கு கொதிக்கும் போது உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு மேலே
மிதந்து வந்தபின் அடுத்தது சேர்க்க வேண்டும். எல்லா உருண்டைகளையும்
சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ரசகுல்லா சாப்பிட தயார்
தான். அளவு ரொம்ப கம்மியாக இருக்குன்னு பார்க்கறீங்களா? அரை லிட்டர் பால்
திரிந்தால் இவ்வளவு தாங்க வரும். இதுக்காக வேண்டுமென்றே அடுத்த முறை பாலைத்
திரிய விடக் கூடாது :-)
ஹை, பார்த்தீங்களா? இப்ப ஒரு இனிப்பும் செய்ய கத்துக் கொண்டாச்சு.
இன்னொரு கொசுறு டிப்ஸ்: வடிகட்டிய பின் கிடைக்கும் தண்ணீர்தான் வே
வாட்டர் எனப்படுவது. சூப் வைக்க பயன்படுத்தலாம். வயிற்றுப்போக்கு
இருப்பவர்களுக்கு வே வாட்டருடன் சர்க்கரை சேர்த்து குடிக்க வயிற்றுப்போக்கு
மட்டுப்படும். இந்த வே வாட்டரை 2, 3 நாட்கள் புளிக்க விட்டு, அந்த வே
வாட்டரை பாலில் ஊற்றி திரிய வைத்து பனீராக்கி ரசகுல்லா செய்வது தான் பெரிய
அளவில் செய்யும் சரியான முறை.
பால் பவுடர் ஸ்கிம்டு மில்க் பவுடராக (SKIMMED MILK POWDER) கொழுப்பு அதிகமில்லாமல் உடம்புக்கு நன்மை பயக்கும்.
காஃபி போட வேண்டுமென நினைப்பவர்களுக்கும் சொல்லித் தர வேண்டுமல்லவா?
ஆனால் காஃபியை விட டீ தான் உடம்புக்கு நல்லது. காஃபியை அதிகம் குடிப்பது
கெடுதலை உண்டாக்கும்.
காஃபி போடுவதில் 2 வகைகள் உள்ளன.
1. இன்ஸ்டன்ட் தூள் சேர்த்து காஃபி போடுவது,
2. சாதாரண காஃபித்தூளில் டிக்காஷன் போட்டு காஃபி போடுவது.
டிக்காஷன் போட்டு காஃபி போடுவதிலும் 2 வகைகள் உண்டு.
1. ஃபில்டர் காஃபி,
2. சாதாரண வகையில் போடுவது.
இன்ஸ்டன்ட் காஃபிக்கு பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் சூடாக
இருக்க வேண்டும், பாலில் அதிக தண்ணீர் இருந்தாலும் காஃபி நன்றாக
இருக்காது. 1 டம்ளர் காஃபிக்கு 2 1/2 தேக்கரண்டி சர்க்கரையும், ஒரு
தேக்கரண்டி இன்ஸ்டன்ட் காஃபித்தூளும் தேவைப்படும். காஃபித்தூளின் அளவு
அதனதன் கம்பெனி ப்ராண்டை பொறுத்து மாறுபடும். மிகவும் நைசாக இருக்கும்
காஃபித்தூளும் குறைவாகவும், குருணைகாளாக (granules) இருக்கும் காஃபித்தூள்
அதிகமாகவும் தேவைப்படும். நல்ல உலர்ந்த தம்ளரில் சர்க்கரையையும்
காஃபித்தூளையும் போட்டு சூடான ஆடையின்றி வடிகட்டிய பாலை அதில் ஊற்றி, உடனே
ஆற்றவும். நுரை பொங்க ஆற்றி, கோப்பைகளில் ஊற்றி தர வேண்டியது தான்.
எப்போதுமே காஃபியானாலும் டீயானாலும் சூடாக கொடுப்பதுதான் நல்லது. சூடு
குறைவாக குடிப்பவர்கள் சிறிது நேரம் ஆற விட்டு குடிக்க முடியும். நாமே
சூடின்றி கொடுத்தால் சூடாக குடிப்பவர்களுக்கு குடித்தது போலவே இருக்காது.
அதேபோல் பாலாடையும் நிறைய பேருக்கு பிடிக்காது. அதனால் எப்போதும்
விருந்தினர்களுக்கு கொடுக்கும் போது சூடாக, பாலாடையின்றி, நுரை பொங்க
கொடுத்தால் பார்க்கும் போதே குடிக்க வேண்டுமென தோன்றும்.
.



சமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Yசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Sசமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Hசமையல் அரிச்சுவடி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 1:25 pm

பாகம் 3
இன்ஸ்டன்ட் காஃபியை அடுத்து ஃபில்டர் காஃபி போடுவது எப்படியென பார்ப்போம்.
4 பேருக்கு போடுவதென்றால் ஃபில்டரில் மேலேயுள்ள அடுக்கில் ஒன்றரை
மேசைக்கரண்டியளவு காஃபித்தூள் போட்டு லேசாக அழுத்தி விடவும். ஒரு டம்ளர்
நன்கு கொதிக்கும் நீரை காஃபித்தூள் உள்ள அடுக்கில் ஊற்றி, கலக்குவதற்காக
உள்ள தகட்டால் லேசாக கலக்கி மூடி வைக்கவும்.
சமையல் அரிச்சுவடி  Filter_coffee1/2
மணி நேரத்திற்குள் டிக்காஷன் கீழேயுள்ள அடுக்கில் இறங்கி இருக்கும்.
(ரொம்ப ஸ்ட்ராங்காக வேண்டுமென்றால் 2 மேசைக்கரண்டியளவு காஃபித்தூள்
போடலாம்). 1/4 டம்ளர் டிக்காஷனுடன் 3/4 டம்ளர் கொதிக்கும் பாலும், 2
தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை மட்டும் ஆற்றி,
நுரை பொங்க கோப்பையில் ஊற்றி கொடுக்கவும். ஃபில்டர் காஃபிக்கு பால்
எப்போதும் திக்காக இருக்க வேண்டும், தண்ணியாக இருந்தால் காஃபி ருசிக்காது.
இரண்டாவது காஃபி சுமாராக இருந்தால் பரவாயில்லையென்றால் எல்லா
டிக்காஷனும் எடுத்த பிறகு இன்னுமொரு 1/2 டம்ளர் கொதிக்கும் நீரை
காஃபித்தூளின் மேல் ஊற்றினால் சிறிதுநேரத்தில் டிக்காஷன் கிடைக்கும். இதில்
சுமாரான காஃபி கலக்கலாம். (விளம்பரத்தில் வரும் மாமியார் போல் இல்லாமல்
நம் வீட்டு ஆட்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள்.)
ஃபில்டரை கழுவும் போது துளைகளில் காஃபித்தூள் இல்லாமல் கழுவி வைத்தால் தான், அடுத்த முறை டிக்காஷன் சுலபமாக இறங்கும்.
எப்போதும் டிக்காஷனை நேரடியாக அடுப்பில் வைத்து சூடு பண்ண கூடாது.
அவ்வாறு செய்தால் காஃபியின் சுவை மாறி விடும். காஃபி கலந்த பிறகும்
அடுப்பில் வைத்து சூடு செய்தால் காஃபியின் சுவை மாறி விடும். அதனால்
கலக்கும் பால் எப்போதும் கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். அப்படியும்
டிக்காஷனை சூடு செய்தே ஆக வேண்டுமென்றிருந்தால் கொதிக்கும் தண்ணீரில்
டிக்காஷன் உள்ள டம்ளரை சிறிது நேரம் வைத்திருந்து எடுக்கவும்.
சாதா காஃபி:
2 டம்ளர் காஃபிக்கு ஒரு மேசைக்கரண்டி தேவைப்படும். ஒரு பாத்திரத்தில்
காஃபித்தூளை போட்டு, ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரை அதில் ஊற்றி, ஒரு
ஸ்பூனால் நன்கு கலக்கி, மேலாக சிறிது தண்ணீரை தெளித்து மூடி வைக்க
வேண்டும்.
5 நிமிடத்தில் தூள் கீழே இறங்கி விடும். கலக்காமல் மேலாக டிக்காஷனை
வடித்து, (வடிகட்டியால் ஒரு முறை வடிப்பது நல்லது) ஒரு டம்ளர் பால், 4
தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கினால் காஃபி ரெடி.
கொடுத்துள்ள அளவுக்கும் குறைவாக காஃபித்தூள் போட்டால், காஃபி தண்ணீரைப்
போல் ருசியே இருக்காது. இது எல்லாமே சிக்கிரி கலந்த காஃபித்தூளுக்கு தான்.
சிக்கிரி கலக்காத காஃபித்தூளில் காஃபி போட்டால் ருசி இருக்கும், திக்னெஸ்
கிடைக்காது. சிக்கிரி கலந்த காஃபித்தூளில் தான் மணமும் ருசியும்
அதிகமிருக்கும். 30 % சிக்கிரி, 70 % காஃபித்தூள் ஓரளவுக்கு சரியான
காம்பினேஷன். அதற்கும் குறைவாக சிக்கிரி கலந்தால் காஃபியின் திக்னெஸ்
குறைந்து கொண்டே போகும்.
பால் பவுடரில் காஃபி போடும் முறை:
ஏற்கனவே நான் கூறியது போல் பவுடரை கரைத்து பால் காய்ச்சி வைத்துக்கொண்டு மேலே சொன்ன முறைகளில் அந்தந்த காஃபியை போடலாம்.



சமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Yசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Sசமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Hசமையல் அரிச்சுவடி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 1:26 pm

பாகம் 4



டீயைப் பற்றி சொல்லும் போது புத்துணர்ச்சி தரும் புதினா டீ பற்றியும்,
உடலுக்கு நன்மை பயக்கும் கிரீன் டீ பற்றியும் சொல்லாமல் விட்டு விட்டேன்.
அதே போல் காஃபியிலும் பித்தம் போக்கும் கொத்தமல்லி காஃபி, கடுங்காப்பி என கிராமத்தில் அழைக்கப்படும் காஃபியையும் சொல்ல வேண்டும்.
புதினா டீ
சமையல் அரிச்சுவடி  Black_teaவழக்கமாக
5 பேருக்கு டீ போடுவது போல் போட்டு, டீ நன்கு கொதித்து, அதை இறக்கப்
போகும் போது, அதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலை ஒரு கைப்பிடி,
சிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டு, ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு
இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால்
களைப்பெல்லாம் பறந்து, புத்துணர்வு வரும். ஒருவருக்கு மட்டும் என்றால்,
ஆறேழு புதினா இலைகள், கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும்.
புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால், நிறைய கிடைக்கும் போது
வாங்கி சுத்தம் செய்து கழுவி, காயவைக்கவும். நன்கு காய்ந்தபின் பொடியாக்கி
ஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும். ஒருவருக்கான டீ போடுவது என்றால்
கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால், ஒரு தேக்கரண்டி அளவும்
புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
கிரீன் டீ
கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை
அதிகப்படுத்துகிறது. கான்சர், ஆர்த்தரைடீஸ், இரத்தக் கொதிப்பு
போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்ட்ரோக்,
ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது. தினமும்
காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை ரொம்ப சூடாகவோ,
ரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது
நல்லது. எந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. கிட்னி
ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும். அளவுக்கு
மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக்
கூடாது. ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாது. அல்சர் தொந்திரவு
உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். உணவின் இடையிலும்
குடிக்கக் கூடாது.
கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரை
கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு
கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால்,
குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிரு
சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே
குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க
கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம்.
ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால், தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
பிளாக் டீ
சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்து, பால் சேர்க்காமல் வைப்பது தான்
பிளாக் டீ. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு
கொதிக்க விட்டு (சுமாராக 5 நிமிடம்) இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடி.
இதனுடன் கால் மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு,
வயிற்றுக்கடுப்பு கட்டுப்படும். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல்
துவர்ப்பாக இருப்பது நல்லது. குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால், சிறிதளவு
தேன் அல்லது சர்க்கரை சேர்க்கலாம். சீனாக்காரர்கள், ஜப்பானியர்கள் பிளாக்
டீயைத்தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள்.
கொத்தமல்லி காஃபி
ஒரு டம்ளர் காஃபிக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு
மேசைக்கரண்டி அளவு கொத்தமல்லி (தனியா) எடுத்து ஒன்றிரண்டாக நசுக்கி
கொதிக்கும் தண்ணீரில் போடவும். கால் தேக்கரண்டி அளவு காஃபித்தூள்
சேர்க்கவும். கொத்தமல்லி காஃபிக்கு வெல்லம் தான் நன்றாக இருக்கும். ஒரு
எலுமிச்சை அளவு வெல்லத்தை தட்டிப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி
வடிகட்டினால், கொத்தமல்லி காஃபி ரெடி.
விரும்பினால் சிறிதளவு இஞ்சியோ, சுக்கோ தட்டிப் போடலாம். தலைவலிக்கு,
பித்தத்திற்கு இந்தக் காஃபி நல்லது. இந்தக் காஃபி குடித்தால் சுறுசுறுப்பாக
இருக்கும். பால் சேர்க்கத் தேவையில்லை. பால் வேண்டும் என நினைப்பவர்கள்
சிறிதளவு சேர்க்கலாம். அதிகம் பால் தேவையில்லை.
கடுங்காப்பி
சமையல் அரிச்சுவடி  Black_coffeeகிராமத்துப் பக்கம் கடுங்காப்பி என்பார்கள். புதியதாக ஒன்றும் இல்லை. பால் சேர்க்காத கருப்பு காஃபி தான் கடுங்காப்பி!
ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து, ஒரு தேக்கரண்டி சாதாரண
காஃபித்தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லம்
சேர்த்து கரைந்ததும் இறக்கி, வடிகட்டினால் கடுங்காப்பி தயார்.
வெல்லம் சேர்த்தால் தான் சுவை அதிகம். சர்க்கரையும் சேர்க்கலாம்.
காஃபித்தூள் குறைவாகப் போட்டால் தான் காஃபி நன்றாக இருக்கும். இதுவும்
தலைவலிக்கு நல்ல மருந்து தான்.

நன்றி திருமதி செல்வி
அறுசுவை தளம்



சமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Yசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Sசமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Hசமையல் அரிச்சுவடி  A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 5:46 pm

அருமை.. வித்தியாசமா ஏதாவது சொல்லுக அக்கா. நாளைக்கு நாங்க ட்ரை panrom



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சமையல் அரிச்சுவடி  812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 5:48 pm

[quote="பிரகாசம்"]அருமை.. வித்தியாசமா ஏதாவது சொல்லுக அக்கா. நாளைக்கு நாங்க ட்ரை panrom[/குஓட்
சரி நீ அசைவமா,சைவமான்னு எனக்கு தெரியாது.அதனாளா சைவத்துல ஒண்ணு அசைவத்துல ஒண்ணு போட்டுடறேன் சரியா



சமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Yசமையல் அரிச்சுவடி  Aசமையல் அரிச்சுவடி  Sசமையல் அரிச்சுவடி  Uசமையல் அரிச்சுவடி  Dசமையல் அரிச்சுவடி  Hசமையல் அரிச்சுவடி  A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 5:52 pm

நன்றி .. ஆவலுடன் சமையல் அரிச்சுவடி  95051



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சமையல் அரிச்சுவடி  812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 12:29 am

அட ... சுதா கொடுத்த ரெசிப்பி எல்லாம் அருமையா இருக்கே... இதைப்பாத்தா நானே கத்துக்கிடுவேன் போலிருக்கு சமையல்...நான் இந்தபக்கமே வரலைங்கோ.. அய்யோ, நான் இல்லை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri Mar 04, 2011 1:15 pm

தொடருங்கள் சகோதரி ,பாராட்டுக்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 04, 2011 2:19 pm

சுதா எல்லாருக்கும் பயன் தரும்படி பகிர்வது அருமை.... அன்பு நன்றிகள் சுதா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமையல் அரிச்சுவடி  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக