புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_c10சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_m10சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_c10 
5 Posts - 63%
heezulia
சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_c10சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_m10சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_c10சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_m10சுந்தரி அக்கா சொல்லுச்சு! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுந்தரி அக்கா சொல்லுச்சு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 11:42 pm


ஆர்.எஸ்.அந்தணன்

வேலியில் படுத்துக் கொண்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்து வாயைக் கொதப்பலாக வைத்துக் கொண்டு என்னவோ பண்ணிக் கொண்டிருந்தது ஓணான். சரக்கென்று பிரேக் போட்டு நிறுத்தினேன். அந்த சத்தத்தில் லேசாய் என்னை திரும்பி பார்த்து விட்டு அட போடா என்பது போல் மறுபடியும் வானத்தைப் பார்த்து கொதப்ப ஆரம்பிக்க.... உடனே ஒரு கல் வேண்டும். இதுவரை எந்த ஓணானும் என் கண்ணிலிருந்து தப்பித்ததில்லை. கல் தேடினேன். இந்த கல் சின்னதாய் இருக்கிறது....குறி தப்பும். இன்னும் கொஞ்சம் பெரிசாய்.......

தேடிக் கொண்டிருக்கும் போதுதான் நான் நிற்கிற இடம் எவ்வளவு ஆபத்தானது என்பது நினைவுக்கு வந்தது. கூடவே சுந்தரி அக்கா சொன்னதெல்லாம் நினைவுக்கு வர, உயரமான அந்த பனை மரத்தை நிமிர்ந்து பார்க்கவும் தைரியம் இல்லாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டேன்.

நல்லவேளை, வேகமாய்க் கிளம்பி விட்டேன். இல்லையென்றால்.....நினைத்துபார்க்கவே அச்சமாக இருந்தது. மதியம் ஒரு மணிக்குக் கூட அது வருமாமே...... அப்புறம் விளக்கு வச்சிட்டா சாயங்காலம் கூட வருமாம். அது கருப்பாயிருக்குமா? சுந்தரி அக்கா சொல்லும்போது அத கேக்கலியே!

அக்கா நீ பாத்திருக்கியா?

ஆமாண்டா......சாயங்காலம் ஏழு மணியிருக்கும். லேசா மல்லிக பூ வாசனை அடிச்சிச்சா, சரி..... வேலி மல்லிகதான், நிலா வெளிச்சம் வேற இருக்கேன்னு போயிட்டேன். ஆனா அங்க போனா வாசன மட்டும் இருந்துச்சு, கொடிய காணோம். என்னடான்னு யோசிச்சிட்டு இருக்கும்போதுதான் அத பாத்தேன். உயரமா அந்த பனமரத்துக்குக் கீழே கிட்டத்தட்ட பாதி பனைமரம் உசரத்துக்கு நின்னுச்சு. கையை நீட்டி வா, வான்னு வேற கூப்பிட்டுச்சா, நான் மகமாயி காப்பாத்துன்னு கத்திக்கிட்டே ஓடியாந்துட்டேன். நான் கையில கட்டியிருந்த முடிக் கயிறுதான் காப்பாத்திச்சு. இல்லேன்னா......

சுந்தரி அக்கா கையை நீட்டி கருப்பு முடிகயிரை காமிச்சிச்சு. சொல்லும்போதே வெளரி போயிருந்துச்சு, அதுக்கப்புறம் நான் அந்த பக்கம் போகும்போதெல்லாம் அந்த ஞாபகம் வர ஆரம்பித்தது. இப்போது கூட!

அம்மா ஒரு நாள், ரொம்ப சுத்தாதடா, விளக்குவச்சா வீட்ல ஒக்காந்து படி, சுந்தரி பாத்துட்டு இன்னும் உயிரோட இருக்கான்னா அவ நல்ல நேரந்தான். எப்படி இருந்த புள்ள எப்படி ஆயிட்டா தெரியுமா? என்றாள்.

அதுக்கப்புறம் இந்த விஷயத்த நான் மூக்கொழுவி ஆறுமத்துகிட்ட சொன்னதை அப்படியே கடைக்கார செட்டியார்க்கிட்ட சொன்னானாம். அவரும், உனக்கு இப்பத்தான் தெரியுமா? எனக்கு நாலு மாசத்துக்கு முன்னாலேயே தெரியும். அந்த கடைசி வூட்டு சுந்தரி கூட பாத்துச்சாமேன்னு கேட்டாராம். கொஞ்ச நாளில் இந்த விஷயம் ஊருக்கே தெரிய, விளக்கு வச்ச பிறகு ரொம்ப பேர் அந்த பக்கம் போறதேயில்லை. ஆனா இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கனும்னு நெனச்சது மேல வூட்டு செல்வம் இரத்தம் கக்கி செத்தப்பிறகுதான். ஒரு நாள் வயலுக்கு தண்ணி பாச்சிட்டு வரேன்னு போனவரு ராத்திரியெல்லாம் வரவேயில்லை. சரி, உடம்பு அசதியில கள்ளுக்கடையில தான் கெடக்குறாரு, காலையில வந்துருவாருன்னு பார்த்தா, மறுநாள் வரப்புல செத்துக் கெடக்குறாரு, வாயிலேர்ந்து ரத்தம் வழிஞ்சு சாஞ்சு போயி கெடந்துச்சாம். இனிமேலும் அந்த முனீஸ்வரனைக் காவு வாங்க வுடக்கூடாதுன்னு ஊர் பெரிசுங்க பேசிகிச்சு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 11:42 pm

கெடா அறுத்து பூச போட்டா ஐயா கோவம் தணியும். வேற ஒண்ணும் வழியில்லை.- இது வேலாயுதம் தாத்தா. அதுக்கு இருக்கிற பசிக்கு ஒண்ணு பத்தாதுண்ணே, கொறஞ்சது பத்தாவது அறுத்துப் போடணும். இது தலையாரி வைரக்கண்ணு. ஊர் பெரியவங்கள்லாம் பத்து பேரு ஆளுக்கொரு கெடா செலவ ஏத்துக்கிட்டாங்க. ஆளாளுக்கு பேசி கடைசியிலே பூஜையை பௌர்ணமி அன்னிக்கு வச்சுக்கறதா முடிவு பண்ணிட்டாங்க......பூசாரி செலவ அண்ணே கொடுத்துடுவாரு என்று தலையாரி அப்பா பக்கம் கை நீட்ட, அதென்ன பெரிய விஷயம் நான் பாத்துக்கிறேன் என்று அப்பாவும் சொல்லி விட்டார்.

ஒரு குயர் நோட்டுக்கு பதினைஞ்சு நாளா டிமிக்கு கொடுக்கிறாரு அப்பா. ஆனா பூசாரி செலவ ஒண்ணுமே சொல்லாம செய்யறேன்னுட்டாரேன்னு எனக்கும் ஆத்திரம்தான். இருந்தாலும் என்ன செய்யறது. முனீஸ்வரன் கோவம் தணிஞ்சா சரி! ஊரே பழையபடி ஆவணும். அது போதும். மறுபடியும் ஏழு மணிவரைக்கும் மாடு மேய்க்கனும். நிலா வெளிச்சத்துல நிழலா? வெயிலா? விளையாடனும். பாக்கற எடத்துலெல்லாம் ஓணான் அடிக்கனும். ராத்திரில நாய் கொலச்சா காத மூடிக்காம தைரியமா இருக்கனும். எல்லாத்துக்கும் ஒரே வழி...... முனீஸ்வரன் சாமிக்கு காவு கொடுக்கறதுதான். அவர சாந்தப்படுத்தறதுதான்.

பௌர்ணமிக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் டேய் இந்த ரூவாய பூசாரிக்கிட்ட கொடுத்துட்டு வா, ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்க. வெளக்கு வைக்கறதுக்கு முன்னால சீக்கிரம் ஓடியா என்றார் அப்பா. பூசாரி வீடு இங்கிருந்து நாலு கிலோ மீட்டர் போவணும். சைக்கிள்ள வேகமா மிதிச்சிட்டு போனா வந்துடலாம். பணத்தை வாங்கிக் கொண்டு உலகநாதன் கடையில் சைக்கிள் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். இந்த ஊர்லேயே அவன் ஒருத்தன்தான் சைக்கிள் கம்பெனி வைத்திருக்கிறான்,

போட்டிக்கு இன்னொண்ணு இருந்தால் கொஞ்சம் நல்ல சைக்கிளாய் இருந்திருக்குமோ என்னவோ? வேகமாய்ப் போனதால் செயின் கழன்றுக் கொண்டது. இருட்டுவதற்குள் திரும்பி வரவேண்டும். அப்பா இவ்ளதான் குடுத்துச்சா என்று எண்ணி முடித்ததும் கேட்டார் பூசாரி. நான் பாக்கெட்டில் கையை விட்டு அவ்வளதான் என்பதுபோல் சொல்லிவிட்டு கிளம்பும்போது பூசாரியின் மனைவி, கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு போப்பா, வேத்திருக்கு பாரு என்றாள். அவசரமாய் தண்ணீர் குடித்துவிட்டு புறப்பட்டபோது சைக்கிள் செயின் பழிவாங்கியது. இப்போதே லேசாய் இருட்ட அரம்பித்திருந்தது. இங்கிருந்து நாலே கிலோ மீட்டர்தான். தைரியம் சொல்லிக் கொண்டு வேகமாய் மிதிக்க, மறுபடியும் செயின் கழன்று கொண்டது. துணைக்கு யாராவது வந்தால் சேர்ந்தாவது மெதுவாய் போய் விடலாம். கொஞ்சநேரம் வெயிட் பண்ணி பிறகு போகலாமா? கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒருத்தரும் வரவில்லை. வெயிட் பண்ணிய நேரமும் வேஸ்ட்டாய் போக.......

அப்பவே போயிந்திருக்கலாமே என்று தோன்றியது. அந்த ஒத்த பனமரம் வழியாத்தான் போவனும். முனீஸ்வரன் இருப்பாரோ....... அந்த எடத்துக்கு முன்னாலேயே கண்ண இறுக்க மூடிக்கிட்டு வேகமா சைக்கிளை ஓட்டிடலாம். குறுக்கே முனீஸ்வரன் நின்னாலும் ஏத்திட வேண்டியதுதான். வேகவேகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்திருந்தேன்.. இந்த நேரத்தில் சைக்கிள் செயின் வேறு கழண்டுவிடாமல் இருக்கணும். கடவுளே, மாரியாத்தா காப்பாத்து......அதோ அடுத்த டர்னிங் ஒத்த பனமரம்தான்!

முனை திரும்பியதும் கண்ணை மூடிக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டே மிதித்தேன். இன்னும் இரண்டு அடி துரமாவது போய்விடலாம். அப்புறம் கண்ணை மூடிக்கொள்ளலாம் என்று யோசித்தபோதுதான் அந்த உருவம் ரோட்டிலிருந்து குதித்து ஒத்த பனமரம் பக்கமாய் நடக்க ஆரம்பித்தது. அந்த உருவத்தை அதற்கு முன் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே......அது நம்ம வெங்கடேசன் அண்ணன். லேசான நிலா வெளிச்சத்திலும் துல்லியமாய் அடையாளம் தெரிந்தது.

இந்த நேரத்துல எங்க போறாரு. ஐயோ, இவருக்கு முனீஸ்வரன் பயமெல்லாம் கிடையாதா. சுந்தரி அக்கா, மேல வூட்டு செல்வம் கதையெல்லாம் தெரியாதா? சரி, அண்ணேன்னு அவர கூப்பிட்டு காப்பாத்திடலாமா? ஒரு வேளை முனீஸ்வரனே அவரு வேஷத்துல போனா....? நான் யோசித்துக்கொண்டே அதே நேரத்தில் பயந்தபடி சைக்கிளை மிதிக்க, கொஞ்சமும் எதிர்பார்க்காமல், மரத்திற்கு பின்னாலிருந்து அந்த உருவம் இவரிடம் கையை நீட்டி வா, வா என்றழைத்தது. அந்த நிசப்தத்தில் வளையல் சப்தம் மனதைப் பிசைய, அது யாருன்னு உற்றுப் பார்த்தேன்.

அட......... நம்ப சுந்தரி அக்கா!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக