ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை

Go down

மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Empty மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை

Post by சிவா Thu Mar 03, 2011 9:04 am

மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Fore02


இஸ்லாமாபாத், மார்ச்.3- பாகிஸ்தானில் மதத்துவேஷ சட்டத்துக்கு எதிராக பேசி வந்த சிறுபான்மை இன மக்கள் நல மந்திரி ஷபாஸ் பட்டி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சட்டத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட 2-வது கொலை ஆகும் இது. ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து பேசிய பஞ்சாப் மாநில கவர்னர் கொல்லப்பட்டார்.

தவறாக பயன்படுத்தப்பட்ட சட்டம்

பாகிஸ்தானில், `மதத்துவேஷ சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டம் உள்ளது. தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்க பலர் இந்த சட்டத்தை பயன்படுத்தி வந்தனர். இஸ்லாம் மதத்தை அவமதித்தார் என்று கூறி பொய்யாக பலர் இந்த சட்டத்தின் கீழ் தூக்கிலிடப்பட்டனர்.

இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை தான் விதிக்கப்படும்.

ஆசியா பீவி

சமீபத்தில் ஆசியா பீவீ என்ற விவசாய கூலியான கிறிஸ்தவ பெண் இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டார் என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு போப் ஆண்டவர் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக இதில் சில திருத்தங்களை கொண்டு வர அந்த நாட்டு அரசு திட்டமிட்டது. இதற்கு பாகிஸ்தானில் உள்ள மத வெறியர்களும், இஸ்லாமிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பேரணிகள், கண்டனக்கூட்டங்கள் நடத்தின. இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் சட்டத்தை திருத்துவதை கைவிட்டது.

மந்திரி சுட்டுக்கொலை

இந்தநிலையில், பாகிஸ்தான் சிறுபான்மை இன மக்கள் நலத் துறை மந்திரி ஷபாஸ் பட்டி நேற்று இஸ்லாமாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தான் மந்திரிசபையில் இருந்த ஒரே கிறிஸ்தவர் இவர் மட்டும் தான். அவர் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அவரை கொல்ல தீர்மானித்தனர். அவருக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்தன.

நேற்று அவர் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு புறப்பட்டார். காரில் அவர் சென்றபோது ஆயுதம் தாங்கிய சிலர் அந்த காரை வழிமறித்தனர். கார் நின்றதும் காரில் இருந்த அடையாளம் தெரியாத பெண் கீழே இறக்கி விடப்பட்டார். அதன்பிறகு மந்திரியை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கிட்டத்தட்ட 20 நொடிகளுக்கு அவர்கள் சுட்டனர். அதன் பிறகு அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் மந்திரி பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். அவர் உடலில் பல குண்டுகள் பாய்ந்து இருந்ததாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

துண்டு பிரசுரங்கள்

இதுதொடர்பாக போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பின்யாமின் நிருபர்களிடம் கூறுகையில், `பல்வேறு திசைகளில் இருந்து 4 பேர் மந்திரியின் காரை நோக்கி சுட்டனர்' என்று குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த துண்டு பிரசுரங்களில் மதத்துவேஷ சட்டத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த துண்டு பிரசுரம் உருது மொழியில் இருந்தது. இந்த துண்டு பிரசுரங்களை `தன்ஜிம் அல் கொய்தா தெக்ரிக் தலீபான் பஞ்சாப்' என்ற அமைப்பு வெளியிட்டு இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் தசீர் அவரது பாதுகாவலராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அவரும் இந்த மதத்துவேஷ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் கொல்லப்பட்டார்.

மதத்துவேஷி

ஷபாஸ் பட்டி கொலைக்கு தலீபான் இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. மதத்துவேஷ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஷபாஸ் முயற்சி செய்தார். அதனால்தான் அவர் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் தலீபான் கூறி உள்ளது.

தலீபான் செய்தி தொடர்பாளர் சஜ்ஜத் முகமன்ட் டெலிபோன் மூலம் நிருபர்களிடம் கூறுகையில், "சல்மான் தசீர் மாதிரி ஷபாஸ் பட்டியும் ஒரு மதத்துவேஷி. அவர் இஸ்லாமிய மதத்தை அவமதித்தார். அதனால் தான் கொல்லப்பட்டார்'' என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு இல்லாமல்...

பட்டி போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் காரில் பயணம் செய்தார். அரசாங்கம் அவருக்கு கொடுத்த 2 பாதுகாவலர்களையும் அவர் தன் வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு காரில் பயணம் செய்தார். தீவிரவாதிகள் சுட்டதில் காரின் கண்ணாடியில் 4 அல்லது 5 குண்டுகள் பாய்ந்து ஓட்டைகள் விழுந்து உள்ளன. காரின் பின் இருக்கை முழுவதும் ரத்தம் சிந்தி கிடந்தது.

பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பாகிஸ்தானியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தீவிரவாதிகள் சுட்டபோது கார் டிரைவர் இருக்கைக்கு அடியில் தலையை குனிந்து கொண்டார். இதனால் அவர் தப்பினார். அதோடு தீவிரவாதிகள் மந்திரியை மட்டும் குறிபார்த்து சுட்டனர். பட்டி கொலைக்கு ஜனாதிபதி சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

தினதந்தி


மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மந்திரி சபையில் இடம்பிடித்த இளம் மந்திரி என்ற பெருமையை ஆதித்ய தாக்கரே பெற்றுள்ளார்.
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது
» அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» திருத்துங்கள் சட்டத்தை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum