ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி

Go down

லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி Empty லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி

Post by சிவா Thu Mar 03, 2011 8:58 am

லண்டன் : லிபியாவில் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது, விமான தாக்குதல் நடத்தப்படுவதால், ஐ.நா.,மனித உரிமை கவுன்சிலில் இருந்து அந்நாடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் லிபியா மீது நடவடிக்கை எடுக்க வசதியாக, மத்தியதரைக் கடல் பகுதியில் அமெரிக்க கப்பற்படை முன்னேறத் துவங்கி விட்டது.

லிபியாவில் அதன் தலைவர் கடாபியை பதவி விலக கோரி, மக்கள் போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்கள் மீது, போர் விமானங்கள் மூலம் குண்டு வீசப்பட்டதால், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாயினர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் லிபியா மீது, ஆயுத தடை விதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் லிபியா மீது பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளன. கடாபி பதவி விலகும் படி, உலக நாடுகள் வற்புறுத்துகின்றன. "சொந்த மக்களை கொன்று குவிக்கும் கடாபி, பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை, அது மனித உரிமை மீறலாக தான் கருதப்படும். அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம்' என, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே 2 ஆயிரம் வீரர்களை கொண்ட, அமெரிக்க போர் கப்பல்கள் லிபியா நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.இது குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சர் கேட்ஸ் கூறியதாவது:

மத்திய தரைக்கடல் பகுதியில், அமெரிக்க கப்பல்படை அதிகளவில் நிறுத்த வசதியாக பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன. இவை அங்கு மக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை முதலில் மீட்க உதவிடும். மத்திய கிழக்கு நாடு ஒன்றில், நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதா என்பது குறித்து யோசனை செய்கிறோம். மிகவும் பதற்றமான விஷயத்தைக் கையாளத் தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

லிபியாவில் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதால், அந்நாட்டை மனித உரிமை கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்ய ஐ.நா.,வில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதையடுத்து, 47 உறுப்பு நாடுகளை கொண்ட மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா நீக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு வெனிசுலா நாடு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விமானதாக்குதல் மூலம் கடாபி அரசு இன்னும் பலரை கொல்லக்கூடிய அபாயம் உள்ளதாக பெங்காசி நகர, எதிர்கட்சி தலைவர்கள் ஐ.நா.,வின் உதவியை கோரியுள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளில் லிபிய அரசின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், லிபியாவில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும், என அமெரிக்க செனட், ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலிடம் வற்புறுத்தியுள்ளது.

இது குறித்து கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் குறிப்பிடுகையில், "மேற்கத்திய நாடுகள் லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இறங்கினால் அதை லிபியா எதிர்க்க தயாராக உள்ளது' என எச்சரித்துள்ளார்.

கடாபி அரசு எந்த நேரமும் தங்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லலாம் என்ற பயத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான லிபிய மக்கள் எகிப்து மற்றும் துனிசியாவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

கடாபி மகன் செய்த தில்லு முல்லு : கடாபியின் 38 வயது மகன் சயீப் அல் இஸ்லாம் கடந்த 2003ல் லண்டன் பொருளாதார பள்ளியில் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்தார். கடந்த 2008ல் இவருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆனால், மற்றவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து சயீப் டாக்டர் பட்டம் பெற்றுள்ள விஷயம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என லண்டன் பொருளாதாரப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்: ஐ.நா.,கவுன்சில் லிபியாவின் வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க செனட்டில் வலியுறுத்தப்பட்டது. லிபியாவின் அதிபர் கடாபியை இனி ஆளவிடாமல், எதிர்க்கட்சியை ஆள அனுமதிக்கும் போக்கு வலுத்து வருவதின் அடையாளமாக, செனட்டார் ராபர்ட் மெனன்டஸ் கொண்டுவந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கடாபி இன்று தனிமைப் படுத்தப்பட்டு விட்டார். அவருக்கு எதிராக உலகம் ஒன்றுகூடி நிற்கிறது. லிபியமக்கள் புதிய அரசைத் தேர்வு செய்ய நாம் உதவ வேண்டும். மனித சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசு அமைவதுடன் கடாபி தூக்கி எறியப்பட வேண்டும். தற்போது கடாபிக்கு எதிராக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அங்கு ஆயுதங்கள் பரிமாற்றத் தடை, கடாபி மற்றும் அவர் உறவினர் சொத்துக்கள் முடக்கம், அக்குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு பறக்கத் தடை ஆகியவை வரவேற்கப்படும் முடிவுகள். இவ்வாறு அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

எதிர்ப்பாளர்களுக்கு வெற்றி : கெய்ரோ: லிபியாவில் கடாபி ஆதரவு படையினர், எண்ணெய் ஏற்றுமதி முனைய நகரை கைப்பற்ற முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் திரண்டு மீண்டும் அந்த நகரை மீட்டனர். லிபியாவின் பல பகுதிகள், கடாபியின் செல்வாக்கை இழந்துவிட்டன. இந்நிலையில், வெளிநாட்டு கூலிப்படையினர் மற்றும் சொற்ப ராணுவ வீரர்களை கொண்டு, ப்ரிகா என்ற எண்ணெய் ஏற்றுமதியாகும் நகரை கடாபி ஆதரவாளர்கள் கைப்பற்ற முயன்றனர். ஆனால், கடாபி எதிர்ப்பாளர்கள் பெருமளவில் ஒன்று திரண்டு இந்த நகரை மீட்டனர்.

எனினும், ப்ரிகா நகரின் மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த, கடாபி திட்டமிட்டுள்ளார். இதற்காக எண்ணெய் வளம் மிக்க நகரான அஜிதாபியா என்ற இடத்தில், போர் விமானங்கள் மூலம் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு கூலிப்படையினரும் நூற்றுக்கணக்கான கார்கள் மூலம் இங்கு வந்து இறங்குகின்றனர்.

தினமலர்


லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை
» லிபியா கலவரத்தில் மேலும் ஒரு தமிழர் பலி
» அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடி
» ``ஈராக், லிபியா மீது அமெரிக்கா குண்டுவீசியதை பென்டகன் மறந்துவிட்டது போல"- ரஷ்ய தூதர் தாக்கு
» அமெரிக்கா: மேலும் 138 வங்கிகள் மூடப்பட்டன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum