Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்கேற்றத் தலைமை எது? ஞாநி
5 posters
Page 1 of 1
நமக்கேற்றத் தலைமை எது? ஞாநி
ஒரு மாநில முதலமைச்சர் காரில் போகிறார். சாலையில் சென்று கொண்டிருக்கும் அவசர உதவி வண்டி ஒன்றின் மீது மோதுவது போல அவர் கார் நெருக்கமாகப் போகிறது. உடனே காவல் துறை அதிகாரி, முதல்வர் காரை நிறுத்தி அபராதச் சீட்டு தருகிறார். கோர்ட்டில் வந்து ஆஜராகி பணத்தைக் கட்டாவிட்டால், சம்மன் அனுப்பப்படும் என்று முதலமைச்சரை எச்சரிக்கிறார்.
முதலமைச்சருக்கு எரிச்சலாக இருக்கிறது. தம் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசி, அந்தக் காவல் துறை அதிகாரி ஒரு இடியட் என்று திட்டுகிறார். கூட்டத்தைப் படம்பிடித்த ஒரு டி.வி.சேனல் இதை ஒளிபரப்பி விடுகிறது. முதலமைச்சருக்குப் பெரும் கண்டனங்கள் குவிகின்றன.
முதல்வர் உடனே காவல் அதிகாரியைச் சந்தித்து தாம் இடியட் என்று கூறியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார். தாம் செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார். கோர்ட்டிலும் போய் அபராதத் தொகையைக் கட்டுகிறார்.
இதெல்லாம் சென்ற வாரம் நிஜ வாழ்க்கையில் நடந்தவை என்றால் நமக்கு நிச்சயம் பிரமிப்பாகவும் நம்ப முடியாமலும் தான் இருக்கும். ஆனால் அத்தனையும் நடந்தன. அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் (அங்கே கவர்னர் என்று பெயர்) ஜான் காசிச், காவல் அதிகாரி ராப் பாரெட்டிடம் மன்னிப்புக் கேட்டிருக் கிறார். அபராதமாக 85 டாலர் கட்டியிருக்கிறார். இதுபோல ஒரு நிகழ்ச்சி எந்த நாளிலாவது நம் ஊரில் நடக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று யோசிக்கும்போது ஏக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
இன்று காலையில் வாக்கிங் சென்ற போது குப்பை லாரி டிரைவருடன் ஒரு பள்ளிக்கூடத்தின் ஊழியர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பள்ளிக்கு மாணவர்களை இறக்கிவிட நிறைய கார்கள் வருவதால், குப்பை லாரி அந்தச் சாலை வழியே அப்போது வந்திருக்கக்கூடாது என்று சொல்லி அவமரியாதையான வார்த்தைகளால் லாரி டிரைவரைத் திட்டினார்கள். அவரும் திட்டினார். கார்களில் வந்த சில படித்த பொதுமக்களும் பள்ளி ஊழியர் சார்பாக குப்பை லாரி டிரைவருடன் சண்டையிட்டார்கள். அசல் பிரச்னை குப்பை லாரி அல்ல. அந்தப் பள்ளிக்கூடம்தான் என்பது அந்தப் பகுதியில் வசிக்கும் எனக்குத் தெரியும். எங்கள் தெரு முழுக்க எல்லாப் பக்கங்களிலும் கார்களை நிறுத்தி வைத்து குடியிருப்போருக்குத் தொல்லை ஏற்படுத்துவதை தினமும் இரு வேளையிலும் அனுபவிக்கிறோம்.
பள்ளியின் மைதானத்துக்குள் கார்கள் சென்று மாணவர்களை இறக்கிவிட்டு வர அந்தப் பள்ளி நிர்வாகம் அனுமதிப்பதில்லை. நடுச்சாலையிலேயே கார்கள் நின்று மாணவர்களை இறக்கிவிடுகின்றன. ஒரு காருக்கு அதற்கு எவ்வளவு நேரம் ஆகிறதோ அதே நேரம்தான் குப்பை லாரிக்கும் ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியை எடுத்துத் தமக்குள் கவிழ்த்துக் கொண்டு போவதற்கும் ஆகப் போகிறது. குப்பையில் பெரும் குப்பை அந்தப் பள்ளி உற்பத்தி செய்திருப்பதுதான்.
பள்ளிக்கு கார்கள் வரும் நேரத்தில் குப்பை லாரி வரக்கூடாது என்று வாதிடும் சிலருக்கு, முதலில் ஏன் மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிள்களிலும், பஸ்களிலும் வராமல், கார்களில் கொண்டு வந்துவிடப்பட வேண்டும் என்ற கேள்வி உறைப்பதே இல்லை.
கார்களுக்கு முன்னுரிமை தரும் மனப்பான்மை, குப்பை லாரியைச் சகிக்காத மனோபாவம், பள்ளிக்கு எதிரில் இருக்கும் மொத்த சாலையும் தங்கள் தனிச் சொத்து என்பது போன்ற திமிரான கண்ணோட்டம் எல்லாம் கோலோச்சுகின்றன. சில ஊழல் முறைகேடுகளில் சிக்கினாலும் அவை செய்திகளாகாமல் தடுக்கும் அளவுக்குப் பள்ளி நிர்வாகத்துக்கு உயர் மட்டங்களில் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இந்த மமதை மனோநிலைக்குப் பின்னால் இருக்கிறது.
சாதாரண, நடுத்தர வகுப்பினர் மட்டத்திலேயே இருக்கும் இப்படிப்பட்ட அதிகார மனோநிலையின் பிரம்மாண்ட வடிவங்களாகவே நம் தலைவர்களும் இருக்கிறார்கள். அதிகாரம் செலுத்தினால்தான் நாம் அவர்களை மதிக்கிறோம். பெரும் பதவியில் இருந்துகொண்டு அதிகாரம் செய்யாமல், எளிமையாகவும் இயல்பாகவும் ஒருவர் நடந்துகொண்டால், அவரை இளிச்சவாயனாகக் கருதுகிறோம். நம்முடைய இந்த மனநிலைகளுக்கேற்ற தலைவர்கள்தான் நமக்குக் கிட்டுவார்கள். அதனால்தான் மோசமான ஒரு தலைவருக்குப் பதிலாக நமக்குக் கிடைக்கக்கூடிய மாற்றுத் தலைவர்களும் அதே போல மோசமான தரத்திலேயே இருக்கிறார்கள்.
இந்த அரசியல் எந்த அளவுக்கு நம்மை சீரழித்துவிட்டதென்றால், அண்மையில் ஒரு லயன்ஸ் சங்க மாநாடு நடந்தபோது பார்த்தேன். அதன் பிரமுகர்கள் படம் போட்ட ஃப்ளெக்ஸ் போர்டு கள் ஸ்டாலினுக்கும் திருமா வளவனுக்கும் தெரு நெடுக வைக்கப்படுவது போல் வைக்கப்பட்டன. அரங்கத்தில் வாழ்த்தப்பட்ட பிரமுகருக்கு மலர்க் கிரீடம் சூட்டப்பட்டது. ரத்த தானம், கண் தானம் போன்ற சமூக சேவைகளில் ஈடுபடும் அமைப்புகளும் இதே சீரழிவுக் கலாசாரத்தைப் பின்பற்றக்கூடியவையாக மாற்றப்படுவதுதான் நம் முடைய மோசமான அரசியல்; நம் மீது செலுத்தும் பலமான பாதிப்பின் அடையாளம்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி மட்டுமே நம் கவனத்துக்கு வருகிறது. அவரை இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதித்திருக்க வேண்டும். அவர் அதில் பங்கேற்பதால் யாருக்கும் எந்தத் தீமையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தடுத்தது ராஜ பக்ஷே அரசின் முட்டாள் தனம் என்பதுதான் என் கருத்து.
அதே சமயம் கொழும்புவுக்கு விமானம் ஏறும் முன்னால் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி நம் கவனத்துக்குக் கொண்டு வரப்படுவதில்லை. திருமாவளவன் தன் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை தொடர்பாக இலங்கை புறப்படுவதற்குச் சில மணி நேரங்கள் முன்னர் சாஸ்திரி பவன் பாஸ் போர்ட் அலுவலகத்துக்கு அவர் ஆதரவாளர்கள் புடைசூழ ஏராளமான கார்களில் சென்று இறங்கினார். அலுவலக நேரம் முடிந்து விட்டது. ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட சலுகை ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு போதும் எந்த அரசு அலுவலகத்திலும் கிடைக்கவே கிடைக்காது. பத்துப் பதினைந்து கார்களில் கொடி பறக்க ஆதரவாளர்களின் முழக்கங்கள் ஒலிக்க வரும் செல்வாக்கு இருந்தால் மட்டுமே இத்தகைய விதி மீறல்கள் சாத்தியம். ஒரு திருமா அல்ல, ஒவ்வொரு அரசியல் பிரமுகரும் அப்படிப்பட்டவர்களாகவே இங்கே வார்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவிலோ, வேறு மேலை ஜனநாயக நாட்டிலோ இதெல்லாம் நடக்கவே நடக்காது. நடக்கவிடமாட்டார்கள். சின்ன அத்துமீறல்களை ஜான் காசிச் போன்றவர்கள் செய்தால் கூட உடனடியாக எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மக்கள் சக்திக்கும் நியாயத்துக்கும் அடிபணியவேண்டியிருக்கிறது.
இங்கே படித்த வர்க்கம் எல்லா முறைகேடுகளுக்கும் உடந்தையாகத் துணை போகிறது. மயிரைப் பிளக்கும் வாதங்கள் மூலம் ஊழல்களை நியாயப்படுத்த இங்கே அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். பள்ளிக் கூட நிர்வாகத்தின் ஆணவம் பற்றியோ, பாஸ்போர்ட் அலுவலகச் சம்பவம் பற்றியோ படித்த வர்க்கம் முணுமுணுப்பது கூட கிடையாது. வாய்ப்புக் கிடைத்தால் நீரா ராடியாவாக ஆவதற்குத் தயாரான மனநிலையிலேயே மெத்த படித்த பலரும் இருக்கிறார்கள். மாட்டினால் ராசாக்கள் மட்டும்தானே மாட்டுவார்கள்.
இதையெல்லாம் ஏன் எழுதுகிறீர்கள், வேண்டாமே. கருணாநிதி, ஜெயலலிதா பற்றிப் பிளந்து கட்டுங்க போதும். இதெல்லாம் எதுக்கு என்று சொல்கிற படித்த மேதாவிகளைச் சந்திக்கும்போது மிகுந்த அயர்வுதான் ஏற்படுகிறது.
நமக்குத் தலைமையேற்க காமராஜ்களும் கக்கன்களும் கிடைக்கமாட்டார்கள். காவலன் விஜய்தான் நம் தகுதிக்கேற்றத் தலைமை.
இந்த வாரத் திட்டு!
ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்க இப்போது ஒப்புக்கொள்கிற கூட்டுப் பாராளுமன்றக் குழு நியமனத்துக்கு இரண்டு மாதங்கள் முன்பே ஒப்புக்கொண்டிருந்தால் அவை யின் நேரமும், பணச் செலவும் எவ்வளவு மிச்சமாகியிருக்கும்? வறட்டுப் பிடிவாதம் காட்டிய மன்மோகன் - சோனியா - காங்கிரஸ் அரசுக்கு இ.வா.தி.
படித்ததில் பிடித்தது!
தேர்தல் கூட்டணி என்பது எங்கள் வாக்குகள் உங்களுக்கு; உங்கள் வாக்குகள் எங்களுக்கு என்பதாகும். எங்கள் கொள்கைகள் உங்களுக்கு, உங்கள் கொள்கைகள் எங்களுக்கு என்பதல்ல.
நன்றி: கல்கி
Re: நமக்கேற்றத் தலைமை எது? ஞாநி
கெட்டாலும் ( குமுதம் ,விகடன் என துரத்தி அடிக்கபட்டாலும் ) மென் மக்கள் மேன் மக்களே !
ஞானி என்றுமே மாத்தி (நல்லதாக ) யோசிப்பவர் .
ராம்
ஞானி என்றுமே மாத்தி (நல்லதாக ) யோசிப்பவர் .
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: நமக்கேற்றத் தலைமை எது? ஞாநி
சிறந்த சிந்தனை... நன்றி கண்ணன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நமக்கேற்றத் தலைமை எது? ஞாநி
கொஞ்சம் சிந்தித்துப்பார்க்க வேண்டிய விஷயம் தான்..
பகிர்வுக்கு நன்றி..
பகிர்வுக்கு நன்றி..
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: நமக்கேற்றத் தலைமை எது? ஞாநி
மாற்றங்கள் அருமையா வரவேற்கவும் படுகிறது...
அங்க நடந்தது போல இங்க நடந்தால் அரசியல்வாதி தன் ஆள் பலம் வெச்சு எல்லாரையும் ஒரு வழி பன்ணி இருப்பார்....
அங்க நடந்தது போல இங்க நடந்தால் அரசியல்வாதி தன் ஆள் பலம் வெச்சு எல்லாரையும் ஒரு வழி பன்ணி இருப்பார்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» இரண்டு பெண்கள்!- ஞாநி
» இளம் குற்றவாளிகள் - ஞாநி
» ஓ பக்கங்கள் , சில நேரங்களில் சில உறுத்தல்கள்!! - ஞாநி
» கனிமொழியை கல்கியில் காய்ச்சி எடுத்த ஓ பக்கங்கள் திமுக அதிர்ச்சி
» ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா? - ஞாநி
» இளம் குற்றவாளிகள் - ஞாநி
» ஓ பக்கங்கள் , சில நேரங்களில் சில உறுத்தல்கள்!! - ஞாநி
» கனிமொழியை கல்கியில் காய்ச்சி எடுத்த ஓ பக்கங்கள் திமுக அதிர்ச்சி
» ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா? - ஞாநி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum