ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_c10மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_m10மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_c10 
heezulia
மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_c10மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_m10மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_c10 
mohamed nizamudeen
மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_c10மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_m10மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி

Go down

மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Empty மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி

Post by சிவா Wed Mar 02, 2011 9:40 am

மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Sp1

கொழும்பு, மார்ச்.2- உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி எளிதாக வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா `ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

உலக கோப்பை கிரிக்கெட்


14 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கலந்து கொண்டுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி `ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகளும், `பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை, கென்யா அணிகள் (ஏ பிரிவு) மோதின.

முதுகு வலி காரணமாக முதல் 2 ஆட்டத்தில் ஓய்வு எடுத்து வந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இலங்கை அணிக்கு திரும்பினார். இதில் தனது உடல்தகுதியை நிரூபித்தது மட்டுமின்றி, எதிரணியை துல்லியமான `யார்க்கர்' பந்து வீச்சு மூலம் சின்னாபின்னப்படுத்தி விட்டார்.

மலிங்கா மிரட்டல்

டாஸ் ஜெயித்த கென்யா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மவுரிஸ் ஒபுமா (1 ரன்), வாட்டர்ஸ் (3 ரன்) இருவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினாலும் சகோதரர்கள் காலின்ஸ் ஒபுயா, டேவிட் ஒபுயா இருவரும் 3-வது விக்கெட்டுக்கு இணைந்து இலங்கையின் சுழல் மற்றும் வேக தாக்குதலை சமாளிக்க, தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். `டெஸ்ட்' போன்று விளையாடினாலும், அந்த சமயத்தில் அவர்களின் தேவை அதுவாகத் தான் இருந்தது. இந்த `பொறுமை கூட்டணி'க்கு கடைசியில் மலிங்கா வேட்டு வைத்தார். அவரது பந்தில் காலின்ஸ் ஒபுயா (52 ரன், 100 பந்து, 4 பவுண்டரி) ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அதன் பிறகு ஆட்டத்தின் நிலைமை தலைகீழானது. `யார்க்கர்' வீசுவதில் கெட்டிக்காரரான மலிங்கா, அப்படிப்பட்ட பந்துகளை வீசி, கென்யாவை மிரள வைத்தார். அதில் `ஹாட்ரிக்' விக்கெட்டை சாதனையும் அடங்கும். அவரது பந்து வீச்சில் முற்றிலும் சீர்குலைந்த கென்யா முடிவில் 43.4 ஓவர்களில் 142 ரன்களில் சுருண்டது. கடைசி 40 ரன்களுக்கு மட்டும் கென்யா 8 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. டேவிட் ஒபுயா 51 ரன்கள் (106 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார். ஒபுயா சகோதரர்கள் தவிர அந்த அணியில் வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.

இலங்கை தரப்பில் மலிங்கா 38 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு நாள் போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.



இலங்கை வெற்றி


அடுத்து விளையாடிய இலங்கை அணி 188 பந்துகள் மீதம் வைத்து எளிதில் இலக்கை எட்டியது. இலங்கை அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 146 ரன்கள் விளாசி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. தில்ஷன் 44 ரன்களில் (30 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். தரங்கா 67 ரன்களுடனும் (59 பந்து, 12 பவுண்டரி), கேப்டன் சங்கக்கரா 27 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தார்கள்.

2003-ம் ஆண்டு உலக கோப்பையில் கென்யாவிடம் அடைந்த தோல்விக்கும் இலங்கை பழிதீர்த்து கொண்டது. மலிங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

3-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய இலங்கைக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே கனடாவை தோற்கடித்து இருந்தது. ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

கென்யா தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும். நியூசிலாந்து, பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி கண்டு இருந்தது.

ஸ்கோர் போர்டு

கென்யா


ஒபுமா எல்.பி.டபிள்யூ (பி) குலசேகரா 1
வாட்டர்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) மலிங்கா 3
காலின்ஸ் ஒபுயா (பி) மலிங்கா 52
டேவிட் ஒபுயா (சி) சமரவீரா (பி) முரளிதரன் 51
டிகோலோ (பி) தில்ஷன் (பி) மேத்யூஸ் 7
தன்மய் மிஸ்ரா எல்.பி.டபிள்யூ (பி) மலிங்கா 0
கமாண்டே (ரன்-அவுட்) 1
ஒடியம்போ (நாட்-அவுட்) 0
ஓங்காண்டோ (பி) மலிங்கா 0
ஷெம் கோச்சே (பி) மலிங்கா 0
ஒட்டியானோ (பி) மலிங்கா 0

எக்ஸ்டிரா 19
மொத்தம் (43.4 ஓவர்களில் ஆல்-அவுட்) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-4, 2-8, 3-102, 4-120, 5-127, 6-128, 7-137, 8-137, 9-137

பந்து வீச்சு விவரம்

மலிங்கா 7.4-0-38-6
குலசேகரா 9-1-18-1
மேத்யூஸ் 7-0-20-1
மென்டிஸ் 9-2-23-0
முரளிதரன் 8-0-24-1
சமரசில்வா 3-0-12-0

இலங்கை

தரங்கா (நாட்-அவுட்) 67
தில்ஷன் (சி) ஒபுமா (பி) ஒட்டியானோ 44
சங்கக்கரா (நாட்-அவுட்) 27

எக்ஸ்டிரா 8

மொத்தம் (18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு) 146

விக்கெட் வீழ்ச்சி: 1-72

பந்து வீச்சு விவரம்


ஓங்காண்டோ 3-0-28-0
ஒடியம்போ 5-0-26-0
ஷெம் கோச்சே 4-0-39-0
கமான்டே 1-0-14-0
ஒட்டியானோ 4-0-26-1
காலின்ஸ் ஒபுயா 1.4-0-13-0


`ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தி மலிங்கா புதிய சாதனை


உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை `ஹாட்ரிக்' விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை 27 வயதான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா நிகழ்த்தியுள்ளார்.

கென்யாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் தனது 7-வது ஓவரின் கடைசி பந்தில் தன்மய் மிஸ்ராவை (0) எல்.பி.டபிள்யூ. ஆக்கினார். அதன் பிறகு தனது 8-வது ஓவரின் முதல் பந்தை யார்க்கராக வீசி பீட்டர் ஓங்காண்டோவை கிளீன் போல்டாக்கினார். 2-வது பந்தில் ஷெம் கோச்சேவும் (0) போல்டு ஆனார். தொடர்ந்து 3 பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்ததால் `ஹாட்ரிக்' சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். உலக கோப்பையில் மலிங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு உலககோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் `ஹாட்ரிக்' சாதனை மட்டுமின்றி தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சிறப்பும் அவரது வசம் உள்ளது.

மலிங்கா தவிர இந்தியாவின் சேத்தன் ஷர்மா (நியூசிலாந்துக்கு எதிராக, 1987), பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 1999), இலங்கையின் சமிந்தா வாஸ் (வங்காளதேசத்திற்கு எதிராக, 2003), ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ (கென்யாவுக்கு எதிராக, 2003), வெஸ்ட் இண்டீசின் கெமார் ரோச் (நெதர்லாந்துக்கு எதிராக, 2011) ஆகியோரும் உலக கோப்பையில் `ஹாட்ரிக்' பெற்றவர்கள் ஆவர்.

தினதந்தி


மலிங்காவின் `ஹாட்ரிக்'கில் சிதைந்தது கென்யா: இலங்கைக்கு எளிதான வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» டுவென்டி20: இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வெற்றி பயணம் இன்றும் தொடருமா?
» இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா வாக்களிக்கவில்லை!
» இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவாக ஓட்டளிப்பு
»  இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum