புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
72 Posts - 77%
heezulia
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
238 Posts - 76%
heezulia
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_m10பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed 2 Mar 2011 - 18:50


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7752:2011-02-28-124914&catid=75:2008-05-01-11-45-16

பதிவேற்றியது தமிழரங்கம் Monday, 28 February 2011


பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!
” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “
23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச் செய்தியாக பெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?
மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.
இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு(preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத்தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.
ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது,ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.
தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.
அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.
இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
>காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.
இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.
ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.
————————————————————————————————————————————————
ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் “
எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.
பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.
பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.
இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.
அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.
காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?
ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.
உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.
அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.

இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.
NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.
மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.
நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.
மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.
இதோ !!!!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம்
நாம் ?
பு.மா.இ.மு(புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 2 Mar 2011 - 18:53

நீங்க சொல்றத மட்டும் எப்படி நம்புறது?



பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Uபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Dபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Aபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Yபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Aபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Sபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Uபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Dபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Hபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! A
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed 2 Mar 2011 - 18:59

சென்னை : கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சமீப காலமாக பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். வழியெங்கும் பெண்களைக் கேலி செய்வது, தட்டிக் கேட்கும் போலீஸாரைத் தாக்குவது என்று சட்டவிரோதமாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.

பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் நடத்திய பஸ் தினக் கொண்டாட்டத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. பெண் போலீஸ் துணைக் கமிஷனர் லட்சுமியை ஆபாசமாகத் திட்டி கல் வீசித் தாக்கினர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கடும் காயமடைந்தார்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகன் என்பவர் பஸ் தினக் கொண்டாட்டங்களை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்று உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கை வருகிற 14ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்ட கோர்ட், பஸ் தினக் கொண்டாட்டங்களுக்கு அன்று வரை இடைக்காலத் தடையும் விதித்தது.

தடை குறித்த உத்தரவை அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed 2 Mar 2011 - 19:16

உலகின் மிக பெரிய ரவுடி பய கூட்டம் இது .இன்னும் ஒரு அரசு கல்லூரி அண்ணா சாலை நந்தனத்தில் உள்ளது .ஒரு பஸ் டாய் காக பயணிகளை 3 மணி நேரம் காக்க வைத்தால் அவனுகளை மாடு அடி அடிப்பாகில் என்ன தவறு .

போலீசும் எத்தனை நாள் தான் சும்மா இருப்பார்கள் .இதே போல் இந்த சட்ட கல்லூரி மாணவர்களையும் செம்ம மாத்து மாத்தூனா நல்லா இருக்கும் .அவனுங்க ரவுசு தாங்கல ,வருஷத்துக்கு 50 முறை போராட்டம் என்று படுத்துராணுக .

இதுக்காகவே சென்னை செல்ல யோசிக்க வேண்டி இருக்கிறது

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 2 Mar 2011 - 19:19

அன்னிக்கு இவங்க நடத்துன பஸ் டே ல பாதிக்க பாட்டவங்க எத்தனை பேரு?எத்தனை பேருக்கு அவசர வேலை இருந்துச்சோ?எத்தனை பேருக்கு மருத்துவமனை போக வேண்டி இருந்துச்சோ?பஸ் டே ன்னு இவனுகா பண்ற அலும்பு
மொத்த சென்னையவே முகம் சுளிக்க வைக்குது
இவனுகா படிக்க வராணுகலா,பஸ் டே கொண்டாட வர்ரணுகலா.
பெத்தவங்க கஷ்பட்டு படிக்க வைச்சா இவனுக இந்த மாதிரி கொழுப்பெடுத்து போய் அலையாராணுக.இந்த வருஷம் இவனுகளை போட்டது சரி.அப்பதான் அடுத்த வருஷம் எவனும் பஸ் டே கொண்டாடானும்ன்னு நினைச்சாலே பயப்படுவான்.



பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Uபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Dபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Aபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Yபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Aபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Sபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Uபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Dபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! Hபச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 2 Mar 2011 - 20:51

மெட்ரோவை சொகுசு என்று குறிப்பிடும் போதும் காஷ்மீர் தீவிரவாதிகளை போராளிகள் என்று சொல்லும் போதும் உங்க வண்டவாளம் தெரிய வருது மாணவ முனிகளே... !




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக