ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by dsudhanandan Tue Mar 01, 2011 6:13 pm

திருவிளையாடல் படத்தில் இருந்து சில பல சீன்களை சுட்டு வரைந்துள்ளதே சென்னை தமிழில் திருவிளையாடல்.. இதில் முழுக்க முழுக்க சென்னை தமிழே உரையாடல்களில் பிரயோகிக்கப் படும்.. ஆபாசம் எனது மூளைக்கு எட்டியவரை சிறிதளவும் இருக்காது..

இது மறுபதிப்பெனில் மன்னிக்கவும்!!!!!!!!!!!!!******************************************************************************************************************************

சிவ சபை:



நாரதர் - (ஈஸ்வரனை நோக்கி) இன்னா, தல எப்டிக்கிற??

சிவன் - நான் நல்லாக்குரம்பா!! ஆனா இன்னா, மன்ஷங்க அவங்களுக்குல்லாரையே அச்சிக்கிரத நென்ச்சா தான் சம காண்டாக்குது.. அப்றோம், ஒன்னோட கலாய் வேலலாம் எப்டி போய்க்கினுக்குது??

நாரதர் - இன்னா தல நம்மாண்ட இப்டி கேட்டுக்குன?? நல்துகோசம் பண்றத அல்லாம் கலாய்னு நென்ச்சிகினா நாம இன்னா பண்றது சொல்லு?? இப்போ நல்து செய்ய எவனும் சிக்கலன்றது தான் கடுப்பாகுது!!

பார்வதி -("காண்டா" அதாவது கோபமா) எவனும் சிக்கலன்றதுகாட்டியுந்தான் நாத்தி இங்க வந்துட்டுக்குராறு போல.. யோவ் நாத்தி இந்த கலாய் வேலலாம் வேற யாரண்டையாவது வச்சிக்கோ, புர்தா??.. நம்மாண்ட வச்சிக்கின "சும்மா பங்கு சீனாய்டும்"..

நாரதர் - எம்மோவ், உன்னான்டலாம் வச்சிக்கிவனா நானு, சொல்லு??

சிவன்- சர்சரி, இன்னா மேட்ரா வந்துக்குற??

நாரதர்- என்னாண்ட ஒரு நானப் பயம் (ஞானப் பழம்) கெச்சிக்கிது, அத்த ஒன்னாண்ட குத்துட்டு போலான்னு வந்துக்குறேன்..

சிவன்- கண்டுக்குனியா?? நாத்தி கலாய் வேலைய நானப் பயத்தோட ஸ்டார்ட் பண்ணுது.. சரி குத்துட்டு கெளம்பு காத்து வரட்டும்..

பிள்ளையாரும், முருகரும் - நைனா, ஆத்தா, ஆத்தா, நைனா, நைனா, ஆத்தா, ஆத்தா, நைனா.. ("சிவாஜி" மன்னிக்கவும், சிவன் பார்வதி உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கி படிகளில் ஏறி தாய் தந்தையரை கூப்பிட்ட படியே ஓடி செல்கின்றனர்)

பார்வதி- கொட்ச்சலு குடுக்காம சும்மா குந்துங்க..

முருகர் - உன் கய்த்துலக்குற (கழுத்தில்) பாம்பு என்னியே மொர்ச்சிக்கினுக்குது நைனா.. எனக்கு மெர்சலாருக்குது நைனா..

பிள்ளையார் - டேய் தம்பே, நீ எதுக்கு நைனா கய்த்துல சுத்தினுக்குற பாம்ப பாத்து மெர்சலாவுற?? நாந்தான் அப்பாவாண்ட ஒக்கார போறேன்.. நம்ம பக்தன் முனி கும்ட்டுக்குனுக்குற "நம்ம பேமிலி போட்டாவ பாரு".. (உடனே சிவ குடும்ப படத்தை "முனி" கும்புடுகிற காட்சி எல்லோரும் முன் தோன்றுகிறது)

முருகர்- ஆமாண்டா தடியா..

பிள்ளையார்- டேய் என்ன "டா" போட்டு கூப்டாதன்னு உன்னாண்ட எத்தன தாட்டி சொல்லிக்கிறேன்..

நாரதர் - இவுரு தடியான்னு சொன்னதுக்கு காண்டாவுலையாம்.. "டா" ன்னு சொன்னது இவுருக்கு பெர்சா பூட்ச்சி.. (முருகர் நக்கலா சிரிக்கிறாரு, பிள்ளையாருக்கு இன்னும் சூடாவுது)

பிள்ளையார்- யோவ் நாத்தி சப்ப சோறு.. இன்னா சும்மா இருந்தா சப்பனு நென்ச்சினுக்குரியா?? , நான் சிரிச்சிக்கிற்றுக்கும்போதே ஓடி புடு.. இல்ல கண்டம் ஆயி வேர்க்கடலைய சப்பி சாப்டுவ.. டேய் முருகா, நீ கண்டி இன்னொரு தாட்டி "டா" போட்டு கூப்ட்டு பாரேன் "டாங்கு டிங்காயி, டங்கு டனாராயிடும்"..

முருகர்- டேய் போடா டொம்ம.. "உனக்கு காது கபா கபா ன்னும்"..

(நாரதரால் இரண்டு பேருக்கிடையில் வாக்குவாதம் முத்தி எதிர்பாரதவிதமாக சண்டைக்கு தயாராகிறார்கள்.. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தி நாரதரை பார்த்து "இதெல்லாம் ஒருப் பொயப்பு" என்று சலித்துக் கொள்கிறது)

------- தொடரவா? அன்பர்களே...............


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by உதயசுதா Tue Mar 01, 2011 6:16 pm

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! 168300 சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! 168300 சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! 168300 சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! 168300 சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! 168300 சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! 168300
அசத்திட்டீங்க போங்க.பாராட்டுகள்


சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Uசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Dசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Aசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Yசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Aசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Sசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Uசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Dசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Hசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by உதயசுதா Tue Mar 01, 2011 6:17 pm

தொடருங்கள் சுதானந்தன்


சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Uசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Dசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Aசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Yசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Aசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Sசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Uசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Dசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Hசென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by கோவை ராம் Tue Mar 01, 2011 6:30 pm

மெய்யாளுமே தலை கிர்ருனு இருக்குபா.சூப்பருபா !இதேமாதிரி எழுதிக்கினீனா உன்ன்க்கு ஒரு டாமா கோலி பர்சு,சரியா ,கண்டுகினியா

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by dsudhanandan Tue Mar 01, 2011 6:54 pm

1. கைலாயம்.

சிவனும் பார்வதியும் டி.வி தொடர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நாரதர் வருகிறார்...

“நாராயணா... ஓம் நமோ நாராயணா...”

“பாருக்கண்ணூ... வெளிய பிச்சக்காரனாட்டம் கொரலு கேக்குது... கொஞ்சம் பாரு சாமி...”

“ஏன் நீங்க போயி பாக்கிறதுதான... நானே சோடி நெம்பர் 1 ல யாரு செயிப்பாங்களோன்னு டெஞ்சனா இருக்கன்...”

“ம்... நீயி டிவி பாக்க ஒக்காந்தா ஒலகமே அழிஞ்சாலும் அசரமாட்ட... நானே போயி பாக்கறேன்... யாருப்பா அது...”

”நாராயணா... நமோ நாராயணா...”

“ அட... நாரதனா... நாங்கூட பிச்சக்காரனோன்னு நெனச்சிட்டனப்பா... வா... வா...உள்ள வா... சவுக்கியமா...”

“சிவபெருமானுக்கு குசும்பு சொல்லியா தரோனும்... பகவானே சவுக்கியமா... “

“ஒங் காலு எம்பட ஊட்டுல படற வரைக்கும் சவுக்கியமாத்தான் இருக்கோம்... இனிதான் என்ன ஆவப்போவுதோன்னு வெசனமா இருக்கு..”

“சேச்சே... இப்பல்லாம் நாந் திருந்திட்டேனுங்க... கோளு மூட்டறது கொழப்பஞ் செய்யிறது எல்லாத்தையும் உட்டுட்டு வேற பிசினசு ஆரம்பிச்ச்ட்டேனுங்க... ஆமா அம்மா ஊட்ல இல்லீங்களா... எப்பவும் வந்தா ஒரு வாயி காப்பித்தண்ணி போட்டு தருவாங்க..”

“இருக்காங்க... ஆனா இன்னம் ஒரு மணி நேரத்துக்கு பச்ச தண்ணீ கூட கெடைக்காது... அவுங்க சோடி நெம்பர் 1 பாத்துகிட்டு இருக்காங்கப்பா... முடிஞ்சாத்தான் அசையுவாங்க அம்மினி... பாரும்மா... பாரும்மா... நம்ப நாரதன் வந்திருக்காரு...”

“ம்... அப்பிடியா... அங்க செத்த நேரம் ஒன்னா உக்காந்து பேசிக்கிட்டிருங்க...”

”நாரதா.. நாஞ் சொல்லல.. எனக்கு கொஞ்சம் கஞ்சி ஊத்துண்ணு எத்தன வாட்டி கேட்டுட்டேன்... ம்.. ஒன்னும் நடக்குல... ஈரத்துணிய வயித்தில கட்டிகிட்டு இருக்கேன்... எலவசமா கெடக்கிதேன்னு இந்த பொட்டிய வாங்கின நாள்ளேர்ந்து இதே பொழப்புதானப்பா... இந்த தொடர்ல முடிவு தெரியற வர இந்த பாட்ட பட்டுத்தானாவனும்...”

“சிவனே கவலப்படாதிங்க... ஒங்க கவலய தீர்க்க எங்கிட்ட வழி இருக்கு...”

“ அப்பிடியா... என்ன வழி... புண்ணியமாப் போவும்... சொல்லு ராசா...”

“இந்த சோடி நெம்பர் 1 ல எந்த சோடி செயிக்கப்போவுதின்னு எனக்கு தெரியும்...”

“நாரதா... நெசமாவே ஒனக்குத் தெரியுமா... சொல்லுப்பா... ரொமப டெஞ்சனா இருக்கு...”

“ஆத்தா... முடிவு எனக்கு தெரியும். ஆனா இப்ப தெரியாது...”

“ஆரம்பிச்சிட்டாண்டா இவன் வேலய...”

“ இல்லை ஈசனே... சத்தியமா முடிவு எங்கையிலதான் இருக்கு... ஆனா முடிவு என்னன்னு எனக்கு தெரியாது..”

“என்ன கொலகாரியாக்கப்போற நாரதா... பேசாம டிவிய பாக்க உடு... ஒன்ர பழமய காது குடுத்து கேட்டன் பாரு.. என்னச்சொல்லோனும்...”

“தாயி... ஒன்ர கையால உப்பு போட்டு சோறு தின்னவன் நானு... ஒங்கிட்ட பொய்யி சொல்லுவேணா...”

“அப்பறம் ஏம்ப்பா தெரியும் தெரியாதுன்னு கொழப்பற...”

“அம்மையப்பனே.... நாந்தான் மின்னாடியே சொல்லிப்போட்டேனில்ல... பொய்யி பொரட்ட விட்டுப்போட்டு நான் வேற புது பிசினசு ஆரம்பிச்சிட்டேன்னு சொன்னேனில்ல...”

“ ஆமா சொன்ன... அது என்னா புது பிசினசு... ஏர்வாடி, குணசீலத்துக்கு ஆளு புடிக்கிற வேலயா... ஏன்னா ஒன்ர பழமய காது குடுத்து கேட்டா... நேரா அங்கதான் போய்ச்சேரோனும்...”

“அது இல்ல அய்யனே... புது டிவிடி விக்கிற கட வெச்சிருக்கேன்... நல்லா போவுது...”

“எது திருட்டு டிவிடின்னு டிவியில சொல்றானே அதுவா...”

“அவுங்க என்னமோ பேரு வெக்கிட்டும்... எம்பட பிசினசு அதான்... “

“ஆமா... ஒன்ர பிசினசுக்கும் சோடி நெம்பர் 1 முடிவுக்கும் என்னா சம்பந்தம்...”

“இருக்கே... எங்கிட்ட புதுப்பட டிவிடி தயாரிச்சி விக்கிறவனுங்க சாதாரண ஆளுங்க இல்ல சாமீ... எமகாதகனுங்க... படத்துக்கு பூச போட்ட அன்னிக்கே எல்லா ஏரியாவுக்கும் வித்துஅட்வான்சு வாங்கிப் போடுவானுங்கன்னா பாத்துக்குங்களேன்... ”

“அடேங்கப்பா...”

“இதுக்கே வாயப் பொளந்தா எப்பிடி... இன்னும் எக்கச்சக்கமான வேல செய்யிறானுங்க... அதுல ஒன்னுதான் இந்த தொடரோட முடிவு ஒளிபரப்பாவுற டிவிடி...”

“ சூட்டிங் முடிஞ்சி டிவியில காட்டற நாளு வரைக்கும் அத டிவி டேசன்ல பத்தரமா வெச்சிருப்பாங்களே... இவுனுங்களுக்கு எப்பிடி கெடைக்கும்...”

“அதான் தொழிலுங்கறது... அது தெரிஞ்சா நான் ஏஞ்சாமீ ஊடு ஊடா போயி விக்கிறன்... நானும் அவிங்களாட்டம் ஹோல்சேலு வேவாரியாயிருவனே... அவுனுங்களுக்கு எல்லாத்திருட்டு வேலயும் அத்துபடி.. இன்னிக்கித்தான் அந்த டிவிடிய வெளிய வுட்டானுங்க... அத நானே இன்னும் பாக்கல... பத்து பாஞ்சி வாங்கியாந்திருக்கேன்... ஆத்தா ஒங்களுக்கு வேணுமா... அட ஆத்தாள எங்க காணோம்...”

“இதோ வந்திட்டன் நாரதருகண்ணூ... ஒனக்கு காப்பித்தண்ணி போட்டாறலான்னு அடுப்படிக்கு போயிருந்தேன்.. நீ சொன்னதெல்லாத்தயும் கேட்டன்... எங்க அந்த டிவிடியில ஒன்னக்குடு... இந்தா இதக் கொஞ்சம் குடி... பாவம் வெயில்ல அலஞ்சி ரொம்ப கருத்து போயிட்டானில்ல... ஏனுங்க நாஞ் சொல்றது சரிதான..”

“க்கும்... ஒரு மணி நேரமா பசிக்குது.. சோறு போடுன்னு கெஞ்சிப்பாத்தேன்... ஒன்னும் நடக்கல...இப்ப இவங்கிட்ட டிவிடி கெடக்கிமின்னதும் காப்பி என்னா... கரிசனமென்னா...”

“அட எப்பவும் உங்களுக்கு நக்கலுதாங்க... ஏங்க... ஏங்க... நாரதங்கிட்ட எத்தன டிவிடி இருக்குன்னு கேளுங்களேன்...”

“எதுக்கு...”

“அத மொத்தத்தையும் நாம்பளே வாங்கிப்போடலாம்... இல்லேண்ணா இவம்போயி லட்சுமிகிட்ட சரசுகிட்ட... இன்னம் ஊருல இருக்க எல்லாருகிட்டயும் வித்துப்போட்டா அவிங்களுக்கும் முடிவு தெரிஞ்சிபோயிடும்...”

“வித்தா விக்கிட்டும்... நமக்கென்ன... நமக்கு ஒன்னு மட்டும் வாங்கினா போதும்...”

“அதென்ன அப்பிடி சொல்லிப்போட்டீங்க... ஈசன் பொண்டாட்டியும் மத்தவங்களும் ஒன்னா... நமக்குன்னு ஒரு இது..இது இல்ல... வேற எவளுக்குந் தெரியாத முடிவு எனக்கு மட்டும்... யாருக்கு... சிவனோட பொண்டாட்டிக்கு மட்டுந்தான் தெரியுமின்னா ஒங்க கவுரவம் எவ்வளோ ஒசரமாவும்... அதுக்குத்தாஞ் சொல்றன்... எல்லாத்தையும் நாம்பளே வாங்கிக்கலாங்க...”

“அய்யனே... ஆத்தா சொல்றது எனக்கும் சரியாத்தான் படுது... ஒம்பட மருவாதிக்கு ஒங்களுக்கு சரிசமானமா எவனுமிருக்கக்கூடாது... ஆமா... மொத்தமா வாங்கினா ஆடித்தள்ளுபடி கா..வாசி இருக்கு... எம்பட ஆத்தாளுக்காவ அர..வாசி தள்ளுபடியில குடுக்கிறனுங்க..”

“எப்பிடியோ மொத்தமா எந்தலயில அரக்கினுமின்னு முடிவோட வந்திட்ட... மாத்தவா முடியும்... குடுத்துட்டு தொக எவ்வளவுன்னு சொல்லு... என்ன சந்தோசந்தான பாரும்ம்மா... இப்பவாச்சிம் சோறு போடறயா... பசி உசிறு போவுது...”

“எம்பட ஈசன்னா... ஈசந்தான்... ஸ்க்கூலு பஸ்ஸு வர நேரமாயிருச்சி... நம்ப பசங்கள போயி கூட்டியாங்க... அதுக்குள்ள எல்லாருக்கும் சோறு போட்டு வெக்கிறேன்... ”

“ம்ம்ம்.... நல்லா கல்யாணத்த பண்ணி புள்ளங்க பெத்தேன் பாரு... ஒரு வாயி சோத்துக்கு எத்தன வேல பாக்க வேண்டியிருக்கு... அட நாரதா... வாடா... ரெண்டு பேருமா போயி பசங்கள கூட்டியாறுவோம்...”


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by dsudhanandan Tue Mar 01, 2011 6:55 pm

2.

ஸ்கூல் பஸ்ஸிலிருந்து முருகனும் விநாயகனும் இறங்கி வருகிறார்கள்.

“டாடி... “

“டாடி...”

“வாங்கடா என்ர கண்ணுக்குட்டீங்களா... அந்த புஸ்தக மூட்டய எங்ககிட்ட குடுங்க... நாரதா நீ ஒன்ன வாங்கிக்கோ...”

“குடு கண்ணூ... அங்கிள்கிட்ட குடு... அடேங்கப்பா... என்னா கனம்... என்னா கனம்... ஏங்க ஈசனே இந்த மூட்ட இந்த கனங்கனக்குதே... உள்ள என்னா இருக்கு...”

“அட எல்லாம் இவுனுங்க படிக்கிற நோட்டு புஸ்தவம்... ரொம்ப பெரிசா சொல்லித்தரோமின்னு பிலிம் காட்டறதுக்காக இத்தனய குடுத்திருக்கானுங்க... எல்லாமும் எதுக்குங்கிற... எம்பட பணத்த புடுங்கறதுக்கு...

“அடக் கொடுமையே... ஏண்டா பச்சப் புள்ளங்கல மூட்ட தூக்க வெக்கிறீங்கன்னு போயி கேக்கலாமில்ல...”

” க்கூம். போயி அந்த வாத்திங்கள கேட்டாக்கா அவுனுங்க சொல்றாங்க... எங்க ஸ்க்கூலு சிலபஸு ஒசத்தி... இத்தனய படிச்சாத்தான் பெரிய ஆளாவ முடியும்... ஒங்களுக்கு முடியிலேண்ணா காட்ல ஓசியில பாடஞ் சொல்லித்தாராங்க... அங்க இருக்க குருகுலமொன்னுல வேணுண்ணா கொண்டு போயி வுடுங்கன்னு சொல்றானுங்கப்பா... நம்ப பயலுங்க எதிர்காலம் முக்கியமா பணம் முக்கியமா... அதான் ஆனது ஆவட்டுமின்னு இந்த ஸ்க்கூல்லயே சேத்துட்டோம்...”

“டாடி... யாரு இந்த அங்கிள்... எங்கள ஸ்கூல் கூட்டி போயி வர வேலைக்கி சேத்திருக்கீங்களா...”

“என்ர ராசா... பாத்தியா நாரதா... எவ்வளோ வெவரமா கேக்கரான்னு... இல்லடா கண்ணுங்களா... இது நாரதர் அங்கிள்... நம்ப ஊட்டுக்கு விருந்தாளியா வந்திருக்காரு... வணக்கஞ் சொல்லுங்க பாக்கலாம்...”

“குட் ஈவினிங் அங்கிள்...”

“என்ன ஈசனே... இங்கிலீசுல வணக்கஞ் சொல்றாங்க... தமிழு தெரியாதா...”

“சும்மாவா பின்ன... கான்வெண்ட்டுடா... இங்கிலீசுலதான் சொல்லுவாங்க...”

“தப்பு அய்யனே... ஒம்பட பெரியாளு வேண்ணா எதுல வேணுமிண்ணாலும் படிக்கலாம்... நீங்க வடக்க டூட்டியில இருந்தப்ப பொறந்தவரு... ஆனா... சின்னவரு... இந்த தமிழ்நாட்ல பொறந்த தமிழ் மண்ணு... பேரே முருகன்... முருகன்னா அழகு... தமிழ்-ன்னாலும் அழகு... அவரயாச்சிம் தமிழு படிக்க வெச்சிருக்கணுமில்ல...

” அட நீ வேற... நடப்பு ஒலகத்த தெரியாதவனா இருக்க... தமிழ் படிச்சா வேலயும் கெடைக்காது... மரியாதயும் இல்ல... ”

” ஆமாமா... ஆனாலும் தமிழ் படிக்காம பசங்க வளர்ரத நெனச்சா வெசனமாத்தான் இருக்குது... என்னா செய்யிறது... எல்லாம் கலிகாலம்...”

வீடு வந்து சேர்ந்த அனைவரும் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டுள்ளனர்.

“மம்மீ... மம்மீ... டிவி போடுங்க... மானாட மயிலாட பாக்கோனும்... நம்மீ டமில் பேசறத கேக்கோணும்...”

“ அம்மையப்பனே... அது யாருங்க நம்மீ...”

“நம்மீன்னா நமீதா... மம்மீ... இந்த அங்கிளுக்கு ஒன்னுமே தெரியில பாவம்....”

“ஆமா மம்மீ... டாடிய பாத்து அம்மையப்பனேன்னு கூப்பிடறாங்க... அம்மான்னா மம்மீ... அப்பான்னா டாடி.. ரெண்டுஞ் சேந்தா... டாடிமம்மீ... ஹைய்யா... அங்கிள் இத வெச்சி ஒரு சாங் இருக்குது... உங்களுக்கு தெரியுமா... எங்க பாடுங்க பாக்கலாம்...”

“அம்மையப்பனை வெச்சி ஒரு பாட்டா... தெரியிலியே... நான் எங்கிட்ட இருக்க எல்லா டிவிடியையும் பாத்திருக்கனே... தெரியிலயே... சிவபெருமானே... நீங்களாவது ஒதவி செய்யக்கூடாதா...”

“எனக்கும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வருலயே நாரதா... ம்... அம்மையப்பனை வெச்சி பாடுன பாட்டு எது...ம்..ம்ம்... ஞாபகம் வந்திருச்சிப்பா... கேட்டுக்கோ..

என்னுயர் தவப் பயன் அம்மையே அப்பா!
இம்மையில் எனது கண்கண்ட என் அருட்கடவுள்
அம்மையே அப்பா! எனக்கொரு நற்கதியுண்டோ?... ஹரிதாஸ் படத்துல நம்ப பாகவதரு பாடுனது..”

“பாகவதரு படமா... அதான் எனக்கு தெரியில... அந்த டிவிடி எங்கிட்ட வரல... நானும் பாக்கல... அதான்... என்ன கண்ணுங்களா அப்பா சரியா சொல்லிப்போட்டாரில்ல...”

“ஊகூம்... மம்மி... பாரேன்... டாடிக்கும் தெரியில... இந்த அங்கிளுக்கும் தெரியில... நான் பாடட்டா...
டாடிமம்மி வீட்டில் இல்லை தடைபோட யாரும் இல்லை...
வெளயாடுவோமா புள்ள தில்லானா...”

”எஞ் செல்லம்... ஏனுங்க... பாத்தீங்களா நம்ப புள்ளங்கல... எவ்வளவு அழகா பாடுதுங்க...”

“ஆமாமா... ரொம்பதான் அழகு... கணக்கு பாடத்துல ஒன்னு கேட்டு பாரு... அப்ப தெரியும் இவுனுங்க லட்சணம்..”

“எப்பப் பாத்தாலும் புள்ளங்கள கொற சொல்லிக்கிட்டு... வாங்கடா என்ர முத்து குட்டீங்களா...”

“பாரப்பா நாரதா... இதெல்லாம் என்ர பேர காப்பத்தப்போவுதுன்னு நெனக்கிர...”

“மம்மீ... டிவிய போடு...”

“மம்மிடாடி..ம்... ச்சே.. அம்மையப்பா... மானாட மயிலாட நிகழ்ச்சின்னா இவுங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா.. முருகா... ஏன் ஒனக்கு அது புடிக்கும்...”

“அதுலதான் நம்மீ நல்லா பேசுவாங்க... அவுங்க அழகா இருப்பாங்க... கெமிஸ்ட்ரி ,பிஸிக்ஸ் , எனர்ஜி பத்தி சூப்பரா சொல்லுவாங்க... எங்க கெமிஸ்ட்ரி மிஸ்ஸுக்கு கூட அவ்வளோ தெரியாது... “

“முருகா... இரு... நாஞ் சொல்றேன்.. அவுங்க மச்சான், மச்சான்னு கூப்புடறது எனக்கு ரொம்ப புடிக்கும்... நான் பெரியவனா ஆனபின்னாடி அவுங்களதான் கட்டிக்குவேன்... என்னயும் மச்சான்... மச்சான்னு கூப்புடுவாங்க... டாடி எனக்கு நமீதாவத்தான கலியாணஞ் செஞ்சி தருவீங்க... இல்லண்ணா நான் யாரயும் கலியாணஞ் செஞ்சிக்காம ஆத்தோரமா போயி உக்காந்துக்குவேன்... சொல்லுங்க டாடி...”

“ம்... எல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா... இப்ப போயி ஹோம் ஒர்க் பண்ணுங்க...”

“ம்... இன்னிக்கி நமீதாவோட ஸ்பெஷல் புரோகிறாம்ப்பா... மானாட மயிலாட சிறப்பு தொகுப்பு... அதப் பாக்கோனும்...ம்ம்ம்... மம்மீ... நீங்க சொல்லுங்க டாடிகிட்ட...”

“போட்டனா பாரு நாலு போடு... நாளக்கி பரிச்சய வெச்சிக்கிட்டு படிக்காம டிவி பாத்தா... நமீதாவ எப்ப வேணுமின்னாலும் பாத்துக்கலாம்... நாளக்கி பரிட்ச்சக்கி படிங்க... நீயே கொஞ்சம் சொல்லு நாரதா...”

“ஆமாங் கண்ணுங்களா... ஒங்களுக்கு மானாட மயிலாட நமீதா சிறப்பு நிகழ்ச்சியத்தான பாக்கோனும்... எங்கிட்ட அந்த மொத்த புரோகிராமோட டிவிடி இருக்கு... அதத் தாரன்... போயி படிங்க...”

“ஹை... நல்ல அங்கிள்... அந்த டிவிடிய எனக்கு குடுங்க அங்கிள்...”

“அங்கிள் அது எனக்குத்தான் தரனும்... நாந்தான் சின்ன பையன்... செல்ல பையன்...”

“நாரதா... நல்ல வேல செஞ்சடா... ரெண்டா குடுத்திடு... ஆளுக்கொன்னா தந்திடுரேன்... அப்பயாச்சிம் ஒழுங்கா படிக்கிறானுங்களான்னு பாக்கலாம்...”

“இல்லீங்க அய்யனே... எங்கிட்ட ஒன்னுதான் இருக்கு. வாங்கினதெல்லாம் வித்துப்போச்சி. ரொம்ப டிமாண்டான டிவிடி. எனக்குன்னு எடுத்து வெச்ச ஒன்னு மட்டுந்தான் இருக்கு...”

“அப்ப அத எனக்குதான் தரோனும்...”

“இல்ல... எனக்குதான் தரோனும்...”

“இதென்னடா வம்பாப் போச்சி... இப்ப யாருக்கின்னு தரது. நாரதா ஆரம்பிச்சது நீயி. நீதான் இதுக்கு விடை சொல்லோனும்...”

“ஒன்னு செய்யலாம் அய்யனே... நாளைக்கி நடக்கிற பரிட்சயில அதிகமா மார்க் யாரு வாங்கறாங்களோ அவுங்களுக்கு தந்துறலாம்...”

‘அருமையான யோசன... பாருங்கடா கண்ணுங்களா... ஒங்கள்ள யாரு நல்லாப் படிச்சி நெறய மார்க் வாங்கறீங்களோ அவிங்களுக்கு அங்கிள் நமீதா டிவிடி தருவார்... போங்க போயி நல்லா படிங்க...ம்ம்... காப்பாத்திட்டடா நாரதா என்ன... இப்பிடியாச்சிம் இவுனுங்க ஒழுங்கா படிச்சா சரி... அது சரி... அந்த டிவிடி கைவசமிருக்கா... அவுனுங்களுக்கு தர வரயிலும் சும்மா நான் போட்டு பாத்துகிட்டிருன்னேன்... நமீதான்னா... நமீதாதான்...”

“வாயத்தொடயிங்க... ஆத்தா பாத்துர போவுது...வெவஸ்த்த கெட்ட குடும்பஞ்சாமீ ஒங்களுது... டிவிடி வீட்ல இருக்கு... நாளைக்கி கொண்டுவாரன்.. அப்ப நான் கெளம்பட்டுங்களா... ஆத்தா நான் போயிட்டு நாளைக்கி வாரனுங்க...”


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by dsudhanandan Tue Mar 01, 2011 6:56 pm

3.

மறுநாள் மாலை. கைலாயம். நாரதர் பதட்டத்தோடு வருகிறார்.

“எம் பெருமானே... உங்க எமர்ஜென்சி எஸ்.எம்.எஸ் படிச்சிட்டு பதறிப்போயி ஓடியாறேன்... என்ன ஆச்சுதுங்க..”

” என்னன்னு சொல்ல நாரதா... எப்பிடியோ டிவிடி பழமய ஆரம்பிச்சி எனக்கு செலவு வெச்ச.. அட பணஞ்செலவானா பரவாயில்ல... சம்பாதிச்சரலாம்... எம்பட பசங்களுக்குள்ள அடிதடி வர அளவுக்கு பண்ணிபோட்டீயே... விட்டா கொல உழுந்துரும்போல.... எல்லாத்துக்கும் நீயும் ஒன்ர டிவிடியுந்தான் காரணம்... ஒழுங்கா இவுனுங்க பிரச்சனைய தீர்த்து போட்டு போ... இல்ல.... மவனே ஒங் கதய நான் தீர்த்துபோடுவேன் ஆமா...”

“பொறுங்க கடவுளே... என்ன நடந்திச்சி... ஆமா யாரு இந்த பெரியவரு.... ஏம்ப்பா பெருசு... யாரு நீ... எதுக்கு ஒன்ன தூண்ல கட்டி வெச்சிருக்காங்க... சொல்லு... அட அழுகாச்சிய நிறுத்திட்டு சொல்லுப்பா...”

“நாந்தானுங்க இவிங்களுக்கு கணக்கு வாத்தியாரு...”

“என்ன ஈசனே... என்ன கொடும இது...”

“அடேய் நாரதா... எதுடா கொடும... சந்தோசமா ஓடிக்கிட்டிருந்த எம்பட குடும்ப பொழப்புல மண்ணு அள்ளி போட்ட பாவி... என்ன எதுவும் கேக்காத... நீயே வெசாரி...”

“சரி..சரி... நான் பாத்துக்குறேன். ஏ பெருசு... வாத்தியாரான ஒன்ன எதுக்கு கட்டி வெச்சிருக்காங்க... நீ என்ன குத்தம் பண்ணுன...”

“சாமீ... வாத்தி வேலக்கி வந்தம் பாருங்க அதான் குத்தம்... அத விட பெரிய குத்தம் இவிங்களுக்கு கணக்கு வாத்தியான மாட்டுனம் பாருங்க.. அதான்...”

“சரி... அழுவாத... இரு கட்ட அவுத்து உட்டறன்... இப்ப வெலாவாரியாச் சொல்லு... என்ன நடந்திச்சி..”

” சாமீ... இன்னிக்கி ஸ்கூல்ல கணக்கு பரிட்ச்சங்க... இந்த முருகனும் விநாயகனும் எழுதுனாங்க... அவிங்க பேப்பர திருத்தி முடிச்சி அவிங்க கையில குடுத்தனுங்க...”

“சரி... அதுல ஒன்னும் தப்பு இல்லியே... ஆமா ரெண்டு பேரும் எத்தன மார்க்கு வாங்கினாங்க...”

“ம்.. சின்னவரு நூத்துக்கு நூறுங்க.. அப்பறம்... அப்பறம்... பெரியவரு... வந்து.. வந்து...”

“ம். சொல்லுங்க... ஏன் விநாயகன பாத்து நடுங்குறீங்க... அவுரு எத்தன வாங்கினாரு...”

“நாஞ் சொல்றேன் அங்கிள். நான் செண்ட்டம் வாங்கினனா... அண்ணன் சைபரு...”

“சைபரா... ஏன் வாத்தி நெசமா...”

“ஆமாங்க... இல்லீங்க... தெரியலீங்க...”

“ அட என்னடா... இவனோட ரோதனயாப் போயிருச்சி... விநாயகா... நீயே சொல்லு... எத்தன மார்க் வாங்கின...”

“நானும் நூத்துக்கு நூறுதான்...”

“அய்யோ... ஆத்தா என்ன ஆத்தா... எல்லாரையும் சுத்தல்ல வுடற எனக்கே தலய சுத்துதே...”

“என்ன ஒன்னும் கேக்காத நாரதா... கணக்குல என்ர ஊட்டுக்காரரு போலயே நானும் வீக்கு...”

“இது வேறயா... சரி... யாரும் எடயில பேசக்கூடாது... வாத்தி நீ தெகிரியமா நடந்தத சொல்லு... ஒனக்கு ஒன்னும் ஆவாது... நானிருக்கேன்...”

“ஐயா... முருகரு எல்லா கேள்விக்கும் வரிசயா ஸ்டெப் எழுதி கணக்கு போட்டு சரியா விட கண்டு பிடிச்சி எழுதினாரு... நானும் திருத்தி நூறு மார்க் போட்டுட்டேன்... விநாயகரு சரியான விடயமட்டும் எழுதி இருந்தாரு... கணக்கு பாடத்துல ஸ்டெப் முக்கியமில்லோ... வெறும் விடைய எழுதினா யாரும் மார்க் போடுவாங்களா... தப்புன்னு போட்டு சைபரு போட்டேன்... அதுக்கு விநாயகரு எப்பிடி எழுதுனா என்ன கேள்விக்கி விடதான முக்கியமுன்னு கேட்டு வெவாதம் செஞ்சாரு... நான் அப்பிடியில்லன்னு சொன்னம் பாருங்க... அப்பிடியே கோழிய அமுக்குறாப்புல அமுக்கி, வந்து எங்கப்பாருகிட்ட பேசிக்கோன்னு இழுத்து வந்துட்டாரு.. இவிங்க அப்பாருக்கு வெளக்கஞ் சொல்லி புரிய வைக்க முடியிலீங்க... இதுக்கு நீங்க வந்து முடிவு சொல்றவர போவக்கூடாதுன்னு இங்க கட்டிப்போட்டுட்டாரு...”

“ம்... விநாயகா... வாத்தி சொல்றது நியாந்தானப்பா...”

“அதெப்பிடி அங்கிள்... கணக்கு கேள்வின்னா.. அதுக்கு சரியான விடை கண்டுபிடிக்கோணும்... எப்பிடி கண்டுபிடிச்சோமின்னு எழுதறது வெட்டி வேல... விடை சரியா இருந்தா மார்க்கப்போடு... இல்லேண்ணா தப்புன்னு அடிச்சிப்போடு... “

“ம்... நீ சொல்றது ஒருவகயில நியாந்தான்... வாத்தி எல்லா விடையும் சரியா எழுதி இருந்தாரா இவுரு...”

“ஆமாங்க சாமீ...”

“அப்ப இவுரும் நூறு மார்க்கு வாங்கிட்டதா வெச்சிக்கலாமா..”

“ஒங்க சவுரியமுங்க... ஆனா எல்லாத்துக்கும் விடையை மட்டும் சரியாத்தான் எழுதி இருந்தாரு... இப்ப என்ன உட்டுருவீங்களா... நான் என்ர வீட்டுக்கு போலாமுங்களா...”

“இரு... இரு... இன்னும் வேல இருக்கு...”

“அங்கிள்... தப்பாட்டம் ஆடாதீங்க... நாந்தான் நூத்துக்கு நூறு... அண்ணனுக்கு கோழிமுட்டதான்... ”

“முருகுசெல்லம் அண்ணன அப்பியெல்லாஞ் சொல்லக்கூடாது.... பாவமில்ல... ரெண்டு பேருமே நூத்துக்கு நூறுதான்... என்ர பசங்க என்னாட்டமே அறிவாளிபசங்க... ஏனுங்க நாஞ் சொல்றது...”

“ஆமாண்டா கண்ணுங்களா... நாரதா பிரச்சன முடிஞ்சிருச்சில்ல... ரெண்டு பேரும் ஒரே மார்க் எடுத்திட்டாங்க... அதனால அந்த டிவிடி ரெண்டு பேருக்குஞ் சொந்தம்... ஒங்க ரெண்டுபேர்ல யாரு கேட்டாலும் அப்பத்திக்கி குடுத்திட்டு வாங்கிக்கிறேன்... என்ன... நாரதா அத எங்கிட்ட குடு... பத்தரமா வெச்சிருக்கேன்...”

“டாடி... இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்... எல்லாருஞ் சேர்ந்து அண்ணனுக்கு சப்போர்ட்டு செஞ்சி என்ன ஏமாத்தறீங்க... நியாயப்படி எனக்குத்தாஞ் சேரோனும்... குடுங்க...”

“மம்மீ... நானும் யாரயும் கூட்டு சேத்திக்க மாட்டேன்... அந்த டிவிடி எனக்குமட்டுந்தான்...”

“நாரதா... இப்ப என்னடா செய்யிறது... தலவலிடா...”

“ம்... ரெண்டு பேருக்குள்ள ஒரு பந்தியம் வெச்சா ஒருத்தருதான் செயிக்கமுடியும்... ரெண்டு பேருக்கும் பிரிச்சி தந்தா அது பந்தயமே இல்ல.... ம்... என்ன செய்ய்லாம்...ம்.. வாத்தி... ரெண்டு பேர்ல யாரு மொத பரிட்ச எழுதி முடிச்சது...”

“வெறும் விடையை மட்டும் எழுதுனதால விநாயகருதான் முடிச்சாரு... ஆனா மொறப்படி ஸ்டெப் போட்டு எழுதுனதால முருகருக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சி... அதால என்ர மனசுக்கு என்ன படுதுன்னா...”

“யோவ் வாத்தி... அங்கிள் கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்... ஓவரா பேசாத.. இதுக்குத்தான் டாடி கட்டு அவுக்காதீங்கன்னு சொன்னன்... தெகிரியத்த பாத்தீங்களா... ஐடியாத்தாராரு...”

“வேணாம்ப்பா வினாயகா ... ஒங்க பஞ்சாயத்தே எனக்கு வேணாம்.. ஐயா.. நான் வீட்டுக்கு போலாவுமுங்களா...”

“ம்... நீ போ... நாரதா முடிவா நீ என்னதான் சொல்ற... “


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by dsudhanandan Tue Mar 01, 2011 6:59 pm

4.

“ஈசனே... இவிங்க ரெண்டு பேருமே நூறு மார்க் எடுத்து சமமா இருக்காங்க... ஆனா பரிட்சய மொத எழுதி முடிச்சதால விநாயகனுக்குதான் இந்த டிவிடிய பரிசா தரோனும்... அதான் தர்மம் நாயம்...”

‘ம்ம்ம்... எல்லாருமா சேந்து என்ன ஏமாத்தறீங்க... இனிமே நான் இங்க இருக்க மாட்டேன்... வீட்ட உட்டு போறேன்.. இனிமே அந்த வாத்தியிருக்க ஸ்கூலுக்கும் படிக்க போவமாட்டேன்... ம்ம்ம்... மம்மீ... டாடி... “

“ அழுவாதரா என் ராசா இல்ல... அப்பறமா அங்கிள்கிட்ட சொல்லி ஒரு பிரிண்டு போட்டு தரச்சொல்லறன்... நாரதா... இந்த டிவிடிக்கு இன்னோரு காப்பி எடுத்து தந்திருப்பா...”

“திருட்டு டிவிடி தயார் பண்றது மகாதப்பு அய்யனே...”

“ரொம்ப யோக்கியக்காரனாட்டம் பேசற... அப்ப வித்தா தப்பில்லயா... யாரு காதுல பூவு சுத்துற...”

“எம்பெருமானுக்கு தெரியாத பழமொழியில்ல.... கொன்னா பாவம்... தின்னா போச்சிங்கற பழமய கேட்டதில்லீங்கலா... “

“அவந்தராட்டி போறாங் கண்ணூ... எங்கிட்ட மும்தாஜு குத்துபாட்டு டிவிடி ஒன்னு இருக்கு... அத ஒனக்கு தரேங் கண்ணூ..”

“மும்தாஜும் வேண்டாம்... கும்தாஜும் வேண்டாம்... அந்த ஓல்டுங்கள நீங்களே பாருங்க டாடி... மம்மீ... இப்பயே நான் கோடம்பாக்கம் போயி ஒரு சினிமாப் படமெடுக்கறேன்... அதுல நாந்தான் கதாநாயகன்... சோடியா நமீதாவப்போட்டு சவுரியத்துக்கும் குத்துபாட்டு ஆடச் சொல்லி பாத்துக்கிறேன்... என்ர பங்கு சொத்த பிரிச்சி தாங்க...”

“ முருகா... வேணாங்கண்ணூ... போவாத...”

“இல்ல மம்மீ... இனி நான் இங்க இருக்க மாட்டேன்..”

“எம்பட செல்லமில்ல... வேணாண்டா...”

“டாடி.. எங்கிட்ட பேசாதீங்க... நாளைக்கி என்ர வக்கீலு வருவாரு... எம் பங்கு சொத்த ஏமாத்தாம பிரிச்சி குடுத்து அனுப்புங்க... பை..பை..”

“ஏனுங்க... என்னங்க பாத்திக்கிட்டே இருக்கீங்க.. நம்ம முருகன் கோவிச்சுக்கிட்டு போயிட்டானுங்க... ஏதாச்சிம் செஞ்சி கூட்டியாங்க...”

“இரு அதுக்குமின்ன ஒரு வேல பாக்கி இருக்கு... எங்க அந்த நாரதப் பய... அட... எஸ்ஸாயிட்டானா... அவன வுடமாட்டன்... இப்பியே திருட்டு டிவிடி புடிக்கிற போலீசுக்கு ஒரு மொட்ட கடுதாசி போட்டு அவன மாட்ட வக்கில... நான் ஈசனில்ல...”

“அம்மையே... அப்பனே...”

“அடுத்தது ஆர்ராது... அட அவ்வையாரா... வாம்மா... நீ என்ன செய்யப்போறயோ...”

“ஈசனே... என் அப்பனே... எல்லாத்தையுங் கேட்டஞ்சாமீ... முருகனை சமாதானப்படுத்தி நான் கூட்டியாறனுங்க... நீங்க தெகிரியமா இருங்க..”

முருகனை அவ்வையார் வழி மறித்து...

“அப்பனே... முருகா..”

“யாரது... பாட்டி நீயா... “

“ஆமா முருகா... அம்மையப்பனை விட்டு போட்டு நீ வந்தது அழகா முருகா...”

“ஒரு சாதாரண டிவிடி... அதும் ஒரிஜினலில்ல... திருட்டு டிவிடி... அது கெடைக்க எனக்கு உரிமயில்லயா... வேண்டாம்... நாஞ் சொந்தமா சினிமா எடுத்து பாத்துக்கிறேன்... ஒனக்கு தெரிஞ்சி நல்ல கதையோட டைரக்டரு ஆரும் இருக்காங்களா பாட்டி...”

“முருகா... வேறெங்கியாச்சிம் சுட்ட கதை வேணுமா... சுடாதா கதை வேணுமான்னு அன்னிக்கொரு நாள் என்ன கேட்டு கேலி செஞ்ச குமரா...
உனக்குத்தெரியாதா... நானுஞ் சினிமாவுல நடிச்சிருக்கேன்... அவ்வையாருன்னு படத்து பேரு... அந்த படத்த ஒனக்கே ஒலக உரிமயோட குடுத்திடறேன் அப்பா... பாத்துக்கோ...”

“வேண்டாம் பாட்டி... அதுக்கு நான் வீட்டுக்கே திரும்பி போயிடறேன்... போயி டாடி மம்மிகிட்ட சாரி சொல்லிடறேன்... அதோ அவுங்களே வந்திட்டாங்க... டாடி... சாரி.. டாடி... மம்மி... சாரி... வாங்க... நம்ப வீட்டுக்கே போலாம்...”

“ஆஹா... அவ்வையே ஒம்பட தெறமயே தெறம... என்ர பையனுக்கு நல்லபுத்திய எடுத்து சொல்லி திருத்திட்டீங்க... கேள் அவ்வையே... ஒனக்கு என்ன வேணும்... எது கேட்டாலும் தரேன்...”

“எனக்கு என்ன அப்பனே பெருசா வேணும்... ஒம்பட மவன திருப்பி கெடக்கவெச்சதுக்கு ஒபகாரமா, அந்த முருகனுக்கு பிரிச்சிதரவேண்டிய சொத்தமட்டும் எம் பேருக்கு மாத்தி குடுத்தா போதும்... சினிமாவுல நடிக்க இப்பல்லாம் என்ன யாரும் கூப்பிடறதில்ல... அந்த சொத்த வித்து பைனான்சு பண்ணுணா எவனாச்சிம் என்ன கதாநாயகியா போட்டு படமெடுப்பான்... அவ்வளவுதான் அய்யனே...”

மொத்த சிவபெருமான் குடும்பமும் அதிர்ச்சியில் மயங்கி விழுகின்றனர்.

முற்றும்.

பி.கு: இந்த புராணத்தை படித்ததே தண்டனையாதலால் , பொறுமையாக படிப்பவர்களுக்கும், படிக்கச் சொல்லி கேட்பவர்களுக்கும் அவர்கள் ஏழேழு பிறவிகளில் செய்த பாவமும் கர்மவினைகளும் தீர்ந்து போகும். அவர்களது தினப்படி கனவில் டாப்சி / அமலா பால் உடன் பாரின் லொகேஷனில் ஒரு குத்துப் பாட்டு கன்பர்ம்டு.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by dsudhanandan Tue Mar 01, 2011 7:01 pm

இப்படியும் ஒரு முடிவிருந்தால் எப்படி?
(விநாயகரும் முருகரும் ஆக்ரோஷமாக சண்டைக்கு தயாராகிறார்கள்)

(சிவ குடும்பத்தில் சண்டையை விரும்பாத நந்தி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது திருவேற்காடு சிவன் கோயிலில் யாரோ நந்தியின் காதுகளில் முணு முணுப்பது தெரிகிறது)

சிவ பக்த்தச்சி - நந்தி, நான் சிவன குய்பாட்ட சொம்புல பால் வச்சிக்கிறேன், அத்த இந்த ஐரு லவ்ட்ராம பாத்துக்கோ சரியா??

(ஆனா அந்த பால் சொம்ப நந்தி லூட் உட்டு சண்டையை நிறுத்தும் நோக்கில், பாலோடு சொம்ப தூக்கி நாரதர் மண்டையில நச்சினு போட்டுது நந்தி, நாரதர் முகத்தில் பால் வழிகிறது.. சுதாரித்துக் கொண்ட நாரதர் பிளேட்டை மாத்த முர் படுகிறார்)

நாரதர் - "எப்பாஅஅஅஅஅ" மண்ட உச்சில போட்டாண்டா.. ஆனா நந்தி பால்ல சக்ர இல்ல போலக்குது.. எங்குர்ந்து சூளுட்ட??..

நந்தி - யோவ் நாத்தி சீன மாத்தாத.. இவன்த்தான் அல்லாஅஅஅஅஅஅஅஅஅஅத்துக்கும் கார்ணம்..

நாரதர் - நந்திஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

நந்தி - என்னயா "ஈ" ஒட்னுக்குற??

நாரதர் - இல்ல நந்தி இல்ல..எத்தார்ந்தாலும் இந்த பால் வயிஞ்சினுக்குற மொவத்த பாத்துட்டு சொல்லு.. இந்த சண்டிக்கி நாந்தான் கார்ணமா?? சொல்லு நந்தி சொல்லு!! (சிவனை நோக்கி) தல நீ சொல்லு தல, இந்த கொயப்பத்துக்கு நானா கார்ணோம்??

(நான் தான் காரணமா?? நான் தான் காரணமா?? என்று நாரதர் அவர் பால் வடிந்துக் கொண்டிருக்குற முகத்தை சிவ சபையில் இருக்கும் அனைவரிடமும் க்ளோசப்பில் காண்பித்து ஞாயம் கேட்க்கிறார்)

பிள்ளையார் - ஆமாண்டா நாத்தி அல்லாத்துக்கும் நீ தான் கார்ணம்.. (நாரதர தாளிச்சி ஊறுகா போடற ரேஞ்சுக்கு குமுறு கஞ்சி காசுராறு)

(அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த இந்திரன்)

இந்திரன் - அமாம் புள்ள, இந்த நாத்திக்கு இதே தான் பொயப்பு..போன தபா எனுக்கும் ரம்பாவுக்கும் நடுவுல ரம்பம் போட்டாம்பா.. மூஞ்சி சைடு வாக்குல வீங்கிச்சி போலக்குது.. நாத்தி தேவையா இது?? நல்லா குத்தாங்களா உண்ட மசாலா??
இன்னா புள்ள கப்புன்னு நம்ம துண்ட புட்ச்சி முறுக்குற.. எத்தார்ந்தாலும் துண்ட உட்டு பேசு.. அல்லாம் கலீஜா லுக் உட்றாங்க பாரு..
இன்னா, நந்தி எப்டிக்கிற??

நந்தி - "இத்து" கண்டமாவாம போவ மாட்டான் போலக்குது..

இந்திரன் - "புள்ள" துண்ட உடு புள்ள.. இல்ல துண்ட ஆட்டாம பேசு "கய்த்து வலிக்குது"..

பிள்ளையார் - இத்துப் போன இந்ரா!! எனுக்கும் நாத்திக்குந்தான் மேட்ரு ஓடினுக்குது.. நீ யாரு குறுக்கால.. இன்னா சீனு ஓடினுக்குதுன்னு கூட தெரியாம "ஆ"ன்ற "ஊ"ன்ற.. இன்னா சொம்பு தூக்ரியா?? இல்ல ச்சிங்ச்சாக் போட்றியா?? சீனு மார்றது குள்ள எட்த்த காலி பண்ணு.. இல்ல ஒனுக்கும் வேணுமா உண்ட மசாலா??

இந்திரன் - புள்ள நானும் சப்ப கடியாது.. கைல இன்னாக்குதுன்னு பாத்யா?? வச்சிராயுதம்.. வச்சேன், டப்பா டேன்ஸ் ஆடும்..

பிள்ளையார் - இங்க பார்ரா!! என்னாண்ட ஜப்று உட்னுக்குது "இத்து"..

இந்திரன் - மூஞ்ல அடிக்காத புள்ள, டேமேஜ் ஆய்ச்சினா ஊர்வசியாண்ட உதார் உட முடியாது..

பிள்ளையார் - பெர்சா சீன் உட்ட வச்சு குச்சின்னு.. இன்னா, பட்னு ஜகா வாங்குற??..

இந்திரன் - நான் சும்மாகாச்சியும் சொன்னத மேயாலுமேனு நென்சிக்கினியா??.. அப்றோம். ஊட்ல அல்லாம் எப்டிக்கிறாங்க?? அல்லாத்தியும் விசார்ச்சதா சொல்லு.. வர்ட்டா..
சொல்ல சொல்ல கேக்காம மூஞ்சிலயே உட்டாண்டா..

நந்தி - தேவியா இது?? இத்தான் வம்ப காசு குத்து வாங்கர்துன்னுவாங்க போல.. போட்ட போட்ல ரோலிங்க்லியே போது பாரு "இத்து"

நாரதர் - யோவ் இத்து வேற எங்கியாவுது போய் மல்லார வேண்டியதான.. கரீட்டா என் காலாண்ட தான் மல்லார்னுமா??

(பிள்ளையார் கவனம் நாரதர் பக்கம் திரும்புகிறது.. நாரதர் என்ன செய்வதென்றறியாமல் நினைவுக்கு வந்த ஒரு பாட்டை பிள்ளையாரை சுற்றி சுற்றி பாடுகிறார்)

நாரதர் - ஒரே ஒரு கிராமத்துல
ஒரே ஒரு கள்ளு கடை

ஒரே ஒரு கடையில தான்
ஒரே ஒரு கீற வட

ஒரே ஒரு கீற வடைக்கு "9" பேர் போட்டி
"9" பேர் போட்டி போட்டதுல அவுந்து போச்சி வெட்டி..

நந்தி - இன்னாபா இது, சூடா தண்ணி வந்துனுக்குது.. யோவ் நாறிப் போன நாத்தி, சுத்தி சுத்தி எட்த்த கலீஜ் பன்ட்டியேயா!!! மெயாலுமே அவுந்துட்சியா வேட்டி..

சிவன் - யோவ் நாத்தி நானும் அப்பால புட்ச்சி பாத்துனுக்குரன், நானப் பயம் தரன்ட்டு அங்க என்னையா வெட்டியா பேஸ்னுக்குற??

நாரதர் - தல, நீ அல்லாத்தியும் சைலென்ட்டா பாத்துந்தாக்குரியா?? கடைய மூட்டு எஸ் ஆயிட்டியோனு நென்ச்சேன்.. எத்தன்னாளு காண்டுன்னு தேர்லியேப்பா??.. ஒரு வார்த்த ஒன் புள்ளியாண்ட சொல்லக் கூடாதா ??

சிவன் - அது எனுக்கு தேவை இல்லாத மேட்ரு.. நானப் பயம் தரியா இல்லியா??

நாரதர் - இங்க ரத்த ஆறே ஓட்னுக்குது நீ நானப் பயத்த பத்தி பேஸ்ற.. இது உனுக்கே நாயமாக்குதா??

பார்வதி - நாத்தி கிட்ட இன்னாங்க பேஸ்னுக்குறீங்க, கைத்தாமட்லியே அட்சி புடுங்கினு வருவீங்களா.. அத்த வுட்டு??

நாரதர் - எம்மோவ் நீயுமா?? ஒன் புள்ள அட்ச்ச அடில என் ஒடம்போட நானப் பயமும் ஜூஸாய்ட்ச்சி..

முருகர் - எப்பா, நா வோனுன்னா நாரதர புயிஞ்சி ஜூசெத்துர்ட்டுமா??

சிவன் - சர்றா நைனா..

நாரதர் - புஞ்சி போச்சி எனுக்கு புஞ்சி போச்சி, டிங்கிரி டிக்காலே ஹே ஹே டிங்கிரி டிக்காலே.. டோட்டல் பேமிலியே சேந்து தான் படம் ஒட்னுக்குரீங்ளா?? பயத்த வச்சி நம்ம படம் ஒட்லான்னு நென்ச்சா, நம்மள வச்சி இவுங்க படம் ஒட்டாங்க.. நல்ல பாடோன்டா எப்பா.. இத்தோட உங்களுக்கு ஒரு கும்டு, நம்ம கலாய் வேலிக்கு ஒரு கும்டு.. இத்தோட இந்த சைடு வரனா பாருங்க..

சிவ சபை சிரிப்பால் அதிருகிறது..

முற்றும்..


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 01, 2011 9:03 pm

அப்பனே என்னையும் பார்வதியையும் என் மக்கள் கணபதி முருகனை ஆகமொத்தம் யாரையும் விட்டுவைக்கவில்லையே.....

பக்தா சுதானந்தா எப்போதும் ஒரே சிவாஜி சாவித்ரி திருவிளையாடல் பார்த்து போரடித்த எனக்கு இந்த சென்னை திருவிளையாடல் நல்லா செம த்ரில்லிங்காக்குதுப்பா.... எப்டிப்பா இப்டி?? சொம்மா நச்னு சொல்லிக்கினியே.... இன்னா இத்த நீயா போட்டுக்க்கினியா இல்ல சுட்டு போட்டியா நைனா? சர்த்தான் உடுப்பா... நல்லாதான் கீது....

பார்வதி: ஐயோ ஸ்வாமி நாதா என்ன இது தாங்களுமா......

மிக அருமையா எல்லோரையும் சிரிக்க வைத்ததற்கு அன்பு நன்றிகள் சுதானந்தா


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!! Empty Re: சென்னை தமிழில் திருவிளையாடல்!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum