ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள்

3 posters

Go down

அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் Empty அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள்

Post by dsudhanandan Tue Mar 01, 2011 1:24 pm

(குறிப்பு : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!)


மேஷம் : மேஷராசிக் கட்சிக்காரர்களே, சித்திரையில் சூரியன் உங்கள் ராசியில் உச்சமாக உதயமாவதால் இத்தேர்தல் உங்களுக்கு களைகட்டுவதாக அமையும். ஆம்! களைகளைக் களைய நினைக்கும் மக்களின் எண்ணங்கள், சுட்டெரிக்கும் சூரியனை கலைய வைத்துவிடு்ம். "கை-கள்" தொந்தரவு கொடுக்கும். கடவுளுக்கும் உங்களுக்கு ஆகாது என்பதால் அவருடன் கூட்டணி என்பது சாத்தியமில்லாமல் போனது ஒருவகையில் துரதிர்ஷ்டமே! சனி வேறு மனோகாரகன் சந்திரனுடன் சேர்ந்துகொண்டு மூன்றில் இருந்து சூரியனை ஒரு கேவலமான லுக் விடுவது பாதகமாகும். அவ்வப்போது உண்ணாவிரதம் இருப்பது வெயிலுக்கு இதம் தரும். உங்கள் ராசியான நிறம் கருப்பு மற்றும் சிவப்பு.


ரிஷபம் : ரிஷபராசிக் கட்சிக்காரர்களே, வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் வெள்ளை மனம் படைத்த உங்களுக்கு இத்தேர்தல் சாவுமணி அடித்து சங்கு ஊதிவிடும். எதற்கும் எச்சரிக்கையாக கூட்டணி அறிவித்து விடுங்கள். மிச்சத்தை அவர் பார்த்துக் கொள்வார். நவகிரகங்கள் அனைத்தும் ஆளாளுக்கு ஒரு பக்கம் திரும்பிக் கொண்டு நின்றாலும், உங்களைக் காப்பாற்றுவதற்காகவே சந்திராயன் ஆறில் நின்றும், இன்சாட் 2சி பதிமூணில் நின்றும் உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள்! உங்கள் ராசியான நிறம் சிவப்பு, கருப்பு; மறுபடியும் சிவப்பு! ராசியான சின்னம் பம்பரம். ஆனால் சாட்டை உங்கள் கையில் இல்லை, அதையும் ஞாபகம் வைத்து செயலாற்றுங்கள்.


மிதுனம் : மிதுனராசிக் கட்சிக்காரர்களே, கூடு விட்டு கூடு பாயும் கலையில் வல்லவர் நீங்கள். சித்தர்களே தோற்றுப் போகுமளவிற்கு தேர்ந்த வித்தைக்காரரான உங்களைப் பார்த்து மேஷராசிக் காரர்கள் அலறுவர். பாசக்கார தங்கச்சியுடன் ‘மலர்ந்தும் மலராத’ பாட நினைப்பீர். பின்னர் மேஷராசிக் காரர்களுடன் ராசியாகிவிடுவீர். தேர்தலுக்குப் பின், அன்பு மனம் படைத்த மணி, நொந்த மனம் படைத்த மணியாவார். எதற்கும் சனி பகவானிடமும் ஒரு துண்டு போட்டு வையுங்கள்! அவர் அருகிருக்க சகல துன்பங்களும் விலகியோடும். காடுவெட்டிகளும், மேடுவெட்டிகளும் உங்கள் பக்கத்திலிருக்க பயமேன்! உங்கள் ராசியான நிறம் பச்சோந்தியின் நிறம்!


கடகம் : கடகராசிக் கட்சிக்காரர்களே, இதுநாள் வரை கோடநாடு எஸ்டேட்டுகளில் தங்கி மக்கள் பணியாற்றிய நீங்கள் கோட்டையில் தங்கி பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பம் வந்து விட்டது. மடகாஸ்கர் தீவுகளையும், பிலிப்பைன்ஸ் தீவுகளையும் விலைக்கு வாங்கிவிட்டால் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற தங்களின் அறிவிப்பால் ஓட்டு மழை கொட்டப் போகிறது. பிலிப்பைன்ஸ் தீவுகளில் திராட்சைத் தோட்டங்களை வளர்த்து பசுமைப் புரட்சி ஏற்படுத்துவீர்கள். உங்கள் ராசியான நிறம் பச்சையாக இருந்தாலும், இது தேர்தல் நேரமாக இருப்பதால் கருப்பு, வெள்ளை, சிவப்பு மட்டுமே உதவும்!


சிம்மம் : சிம்மராசிக் கட்சிக்காரர்களே, ராஜராஜ சோழன் ஆட்சியமைப்போம் என்று முழங்கி வந்த தாங்கள், சின்ன ஜமீன் அளவுக்குக் கூட ஆட்சியமைப்பதில் திறமையற்றவர்கள் என்பதை உணர்வதே உங்களுடைய மிகப்பெரிய வெற்றியாகும். நாற்காலியில் எந்தப் பக்க ஸ்க்ரூ எப்போது கழன்று கீழே விழும் என்று தெரியாமல் சகட்டுமேனிக்கு அத்தனை ஸ்க்ரூவையும் டைட் செய்து கொண்டிருப்பீர்கள்! ஏழில் ராகு நாண்டுக்கிட்டு நிற்பதாலும், பத்தில் பத்தியும் பத்தாமலும் ஒரு ஓரத்தில் செருகிக் கொண்டிருக்கும் கேதுவாலும், உங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். சூரியனின் உக்கிரத்தில் இருந்து முரசு கொட்டும் இடத்திற்கு உங்கள் ஜாகையை விரைவில் மாற்றுவீர்கள். உங்கள் ராசியான நிறம் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை. உங்களுக்கு ‘கை’ராசியும் கொஞ்சம் உள்ளது!


கன்னி : கன்னிராசிக் கட்சிக்காரர்களே, இது உங்களுக்கு முதல் பெரிய தேர்தலாக அமைந்தாலும், கடவுளையும், மக்களையும் முதலிலேயே ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டதால் வெற்றி உங்களுக்கே! புதன் ராசியதிபதி ஆகி, அரச குரு எட்டாம் இடத்தில் இருந்து கஷ்டப்பட்டு கோணிக்கொண்டு உங்கள் அதிபதியைப் பார்ப்பதால் அரசாட்சி அமைப்பதில் சிறிது சிரமப்பட நேரிடும். எனினும் சுக்கிரனும், செவ்வாயும் கூடிக்கொண்டு பதினொன்றில் கும்மியடிப்பது மற்றவர்களுக்குக் கலக்கத்தைத் தரும். ஒபாமாவுக்கே எஸ்.எம்.எஸ் அனுப்பிய உங்கள் நிர்வாகத்திறனை இந்த நாடே போற்றும். உங்கள் ராசியான நிறம் சிவப்பு, மஞ்சள், கருப்பு.


துலாம் : துலாம்ராசிக் கட்சிக்காரர்களே, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என உங்களை ஓடச் செய்ய, ‘மங்கலத்திலேயே’ உங்களுக்கு மங்களம் பாடி விடத் துணிந்தனரே எதிர்க்கட்சிகள்! இருந்தாலும் மனம் தளரா விக்கிரமாதித்தனைப் போல காவிப்படையின் துணையுடன் களமிறங்கி விட்டீர். சுக்கிரன் லக்கினத்திலேயே இருந்து உங்களுக்கு வசீகரத்தைக் கொடுத்தாலும், நேரெதிரில் நின்று சூரியனும், சனியும் கட்டையைக் கொடுப்பதால் முன்னேற முடியாமல் தவிப்பீர். நமீதா, நயன்தாரா வகையறாக்களை களமிறக்கி கொஞ்சம் ஷோ காட்டினால், டிவியில் உங்களைப் பற்றி ஷோ எடுக்க கொஞ்சம் வாய்ப்பாக அமையும். உங்கள் ராசியான நிறம் மஞ்சளும் வெள்ளையும்.


விருச்சிகம் : விருச்சிகராசிக் கட்சிக்காரர்களே, ‘அய்யோ தீ’ என அடிக்கடி அலறும் உங்களுக்கு இந்தத் தேர்தல் நன்றாகப் பத்திக் கொள்ளும். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேற்று கிரகவாசிகள் என பழைய பஞ்சாங்கத்தையே வாசித்துக் கொண்டிராமல் புதிதாக ஏதாவது சிந்தனை செய்வது நல்லது. சிந்தனை என்பது உங்களுக்கு கை வராத கலை என்பது உண்மையானாலும், ரெண்டில் சேரைப் போட்டு பக்குவமாக உட்கார்ந்திருக்கும் புதன் அதற்கு உதவுவார். செவ்வாயும் சந்திரனும் சற்றே கனிவுடன் ராசியைக் கவனிப்பதால் வாய்ப்பை நழுவவிடாமல் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். காங்கோ நாட்டில் ராமனுடைய சித்தப்பனுடைய மச்சான் மகன் சிறிது காலம் தங்கியிருந்ததை நம்பி அவருக்கு அங்கு கோயில் கட்டும் முடிவை மட்டும் எடுத்துவிடாதீர்கள்! உங்கள் ராசியான நிறம் இந்த ஜென்மத்துக்கும் காவி, காவியைத் தவிர வேறில்லை.


தனுசு முதல் மீனம் வரையிலான ராசிகள் : இந்த ராசிகளின் கட்சிக்காரர்களே, திருவிழாவில் சிக்கிய குழந்தையைப் போல திரு திருவென முழிக்கப் போகிறீர்கள். சூரியன் முதலான ஒன்பது கிரகங்களும், லட்சோப லட்சம் விண்மீன்களும் உங்கள் ராசியைப் பார்த்தாலும், படுத்துப் புரண்டாலும் உங்கள் வெற்றி என்பது கானல் நீர்தான்.

வாழ்க வளமுடன்!

இராசிபலன்களில் மாற்றமோ தவறுகளோ இருப்பின் பெரிய ஜோதிடர்களின் விளக்கத்தை கேட்டுப் பெற்றுக் கொள்க!!!!!!!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் Empty Re: அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள்

Post by சிவா Tue Mar 01, 2011 1:26 pm

என்னுடைய மகர ராசியைக் காணவில்லையே?


அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் Empty Re: அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள்

Post by dsudhanandan Tue Mar 01, 2011 1:32 pm

சிவா wrote:என்னுடைய மகர ராசியைக் காணவில்லையே?
மீதமுள்ள அனைத்து இராசிக்காரர்களுக்கும்: திருவிழாவில் சிக்கிய குழந்தையைப் போல திரு திருவென முழிக்கப் போகிறீர்கள். சூரியன் முதலான ஒன்பது கிரகங்களும், லட்சோப லட்சம் விண்மீன்களும் உங்கள் ராசியைப் பார்த்தாலும், படுத்துப் புரண்டாலும் உங்கள் வெற்றி என்பது கானல் நீர்தான்.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் Empty Re: அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள்

Post by janani123 Tue Mar 01, 2011 1:32 pm

அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் 56667 அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் 502589 அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் 128872 அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் 128872


அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் Arul110
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள் Empty Re: அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஸ்பெஷல் ராசிபலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011)
» அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி
» தறிகெட்டு ஓடும் தேர்தல் பிரச்சாரம்; தமிழகத் தலைவர்களின் அநாகரிக அரசியல்!
» சூடுபிடிக்கிறது தமிழக அரசியல் களம் : தேர்தல் கூட்டணிக்கு கட்சிகள் மாறுமா...
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum