புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_vote_lcapஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_voting_barஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
இப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_vote_lcapஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_voting_barஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_vote_lcapஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_voting_barஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 1:11 pm

தன்னை ரகசியமாக பார்க்க வந்த மகேந்திராவை நினைத்து உள்ளுக்குள் பூரித்துக் கொண்டாள் பிரியங்கா. ஏனெனில் மகேந்திராவுக்குத்தான் அவள் மணமகளாக நிச்சயிக்கப்பட்டிருந்தாள்.

கட்டிக்கொள்ளப் போகும் கணவன் மகேந்திராவுக்கு தன் மீது எவ்வளவு பிரியம் என்று சந்தோஷப்பட்ட அவள், "என்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா?'' என்று ஆசையுடன் கேட்டாள்.

"நீ எனக்குத்தான் என்று நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் ரகசியமாக சந்தித்துக் கொள்வதில் உள்ள சந்தோஷமே தனிதான். வா... கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்'' என்றான் மகேந்திரா.

அவளுக்குள்ளும் ஆசை இருந்தது. ஆனால் இது வீட்டுக்குச் செல்லும் நேரமல்லவா? "நான் வீட்டுக்கு ஒரு போன் செய்து உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதாக சொல்லிவிடுகிறேன். அப்புறம் நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம்'' என்றாள் பிரியங்கா.

"சொல்லிவிட்டு சந்திப்பதென்றால் நான் உன்னை வீட்டில் வந்து அழைத்து வந்திருக்க மாட்டேனா? ரகசியமாக சந்தித்துக் கொள்வதற்காகத்தானே இங்கே காத்திருக்கிறேன். வீட்டில் ஏதாவது காரணம் சொல். கொஞ்ச நேரம் பேசிவிட்டு போய் விடலாம்'' என்றான்.

"இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப ஆசைதான்'' என்று அவன் காதலில் நெகிழ்ந்தவள், வீட்டுக்குபோன் செய்தாள். "அம்மா நான் முக்கியமான பாடங்களை குறிப்பெடுப்பதற்காக லைப்ரரிக்கு வந்திருக்கிறேன். வீட்டிற்கு வர ஒரு மணி நேரத்திற்குமேல் ஆகும்'' என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு மகேந்திராவின் அழைப்புக்கு சம்மதம் கொடுத்தாள்.

"அப்பாடா இனி நிம்மதியா பேசலாம்'' என்று பெருமூச்சுவிட்டுக் கொண்ட மகேந்திரா "இந்தா கூல்டிரிங்ஸ் குடி. அப்படியே ஒரு படத்திற்கு சென்றுவிட்டு வந்துவிடலாமா?'' என்று பீடிகை போட்டான்.

"ஆசையப் பாருங்க. எல்லாத்தையும் கல்யாணத்துக்கு அப்புறம் வச்சுக்கலாம். இப்போ என்னவோ பேச வேண்டியது இருக்குன்னு சொன்னீங்களே. அதை சொல்லுங்க...'' என்றவள் மூர்ச்சையாகி காருக்குள் மயங்கி விழுந்தாள்.

"பிரியங்கா... என்னாச்சு...'' என்றவன், காரை அவசரமாக கிளப்பினான்.

இரவு 10 மணியாகியும் மகள் வீடு திரும்பாததால் தந்தை சந்திரகாந்த் பதற்றம் அடைந்தார். நிச்சயமான பொண்ணு அங்கே இங்கே சுத்திபுட்டு வந்தா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க? போன் போட்டால் எடுக்கவில்லை. மாப்பிள்ளைக்கு போனைப் போடு? ரெண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது போயிருக்கலாம்?'' என்று அலுத்துக் கொண்டார்.

மகேந்திராவுக்கு போன் செய்தபோது "இல்லை மாமா, பிரியங்காவை நான் பார்க்கவில்லை. எனக்கும் சாயந்திரம் தான் போன் செய்தாள். அதற்கு பிறகு நாங்கள் பேசவில்லை'' என்று பொய் சொல்லி விட்டான்.

பதட்டம் அதிகரிக்க சம்பந்தியிடம் தகவல் சொன்னார் சந்திரகாந்த். சம்பந்தியான சந்துபாய் கோடீசுவரர். "பதட்டப்படாதீங்க சம்பந்தி... போலீஸ் டி.ஐ.ஜி. எனக்கு வேண்டப்பட்டவர்தான். அவரிடம் சொன்னால் வழக்கு இல்லாமல் சீக்கிரமே கண்டுபிடித்துத் தந்துவிடுவார். ரகசியமாக பிரச்சினையில்லாமல் முடித்துவிடலாம். வருத்தப்படாதீங்க?'' என்று சமாதானம் சொன்னார்.

புகாரின்பேரில் அகமதாபாத் டி.ஐ.ஜி. நேரடி பார்வையில் ரகசிய விசாரணை தொடங்கியது. 3 தனிப்படை போலீசார் பிரியங்காவைத் தேடினார்கள்.

சந்துபாய் கட்டுமானப் பணித்துறையில் பிரபலமான தொழில் அதிபர். அவரது நிறுவனத்தில் தொழிலாளியாக இருந்தவர்தான் சந்திரகாந்த். பணியில் நீண்டகால அனுபவம் உள்ளவர். அவரது ஒரே மகள் பிரியங்கா. அழகு தேவதையாக வலம் வந்த அவளை சந்துபாய் சிலமுறை பார்த்துள்ளார். அவள் எம்.பி.ஏ. படிப்பதையும், அவளது ஒழுக்கம் குணாதிசயங்கள் பிடித்துப் போனதால் அவரே விரும்பிச் சென்று தன் மகனுக்காக சந்திரகாந்த்துடன் சம்பந்தம் பேசினார்.

தான் வேலை பார்க்கும் நிறுவன முதலாளியே வந்து கேட்டதால் தனது மகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துவிட்டதாகவும், சந்தோஷமான வாழ்வு அமையப்போவதாகவும் எண்ணி பூரித்துப்போனார் சந்திரகாந்த். உடனே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

மகேந்திராவுக்கும் பிரியங்காவுக்கும் நிச்சயம் நடந்தபிறகுதான் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. அத்தனையும் தெரிந்தும் அம்மிக் கல் போல அருகிலேயே இருந்தான் மகேந்திரா.

போலீசார் ஒவ்வொருவரையாக விசாரித்து வந்தனர். பிரியங்காவின் செல்போனை ஆய்வு செய்தபோது கடைசி அழைப்பு வீட்டுக்கு பேசப்பட்டிருந்தது. கடைசியாக மகேந்திராவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. மகேந்திராவின் செல்போனில் இருந்து பிரியங்காவுக்கு சென்ற அழைப்பு, அவள் பைக் நிறுத்தப்பட்டிருந்த அதே இடத்தில் இருந்து பேசப்பட்டிருந்தது. எனவே பிரியங்கா காணாமல் போன நேரத்தில் சம்பந்தப்பட்ட அந்த இடத்தில்தான் மகேந்திராவும் இருந்துள்ளான் என்பது உறுதியானது.

உடனே போலீசார் மகேந்திராவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவன் சொன்னவை அதிர்ச்சி தரும் விஷயங்கள்...

"நான் என்னுடன் படிக்கும் திஷா என்ற பெண்ணை விரும்பினேன். அவள் துபாயைச் சேர்ந்தவள். பிரியங்கா எங்கள் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளியின் மகள். எனவே அவளை திருமணம் செய்து கொள்வது என் அந்தஸ்தை பாதிக்கும் என்று எண்ணினேன். மேலும் பிரியங்கா என்னைவிட 14 மாதம் மூத்தவள். அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.

அப்பாவின் வற்புறுத்தலின்பேரில்தான் திருமணத்திற்கு சம்மதித்திருந்தேன். திஷாவும் என்னை விரும்புவதாக சொல்லியிருந்தாள். எங்கள் திருமணத்திற்கு பிரியங்கா தடையாகத் தெரிந்தாள். எனவே அவளை கொன்றுவிடுவதென்று தீர்மானித்தேன். கல்லூரி நண்பன் கார்த்திக் கோகுலுடன் இணைந்து அதற்காக திட்டம் தீட்டினேன்.

அன்று கல்லூரிக்கு சென்று திரும்பிய பிரியங்காவை தனியாக அழைத்து மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து காரில் வைத்து தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். அவளது உடலை சாக்கடைக்குள் வீசிவிட்டோம்'' என்று வாக்குமூலம் அளித்தான்.

3 நாட்களுக்குப் பிறகு பிரியங்காவின் உடல் சாக்கடை குழாயில் இருந்து மீட்கப்பட்டது. மணமகளாக வேண்டிய அப்பாவிப் பெண் பிரியங்கா, அந்தஸ்து தடையாக இருந்ததால் நிச்சயம் செய்யப்பட்ட மணமகனான மகேந்திராவால் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினதந்தி



இப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 2:10 pm

அட நாசமா போராவனே.பெத்தவங்ககிட்ட தைரியமா எதிர்த்து பேசாம
அந்த அப்பாவி பொண்ணை கொன்னு இருக்கானே.இவனையும் அதே மாதிரி கொன்னு சாக்கடை ல போடணும்



இப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Uஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Dஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Aஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Yஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Aஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Sஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Uஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Dஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Hஇப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... A
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Mar 01, 2011 3:52 pm

சிவா அண்ணா ஏதோ கதைனு படிச்சா கடைசியில் இது உண்மை கதை கண்ணு கலங்கிடுச்சு பாவம் அந்த பெண்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 3:58 pm

sshanthi wrote:சிவா அண்ணா ஏதோ கதைனு படிச்சா கடைசியில் இது உண்மை கதை கண்ணு கலங்கிடுச்சு பாவம் அந்த பெண்

நானும் கலங்கியதால்தான் இங்கு பதிவிட்டேன் சாந்தி!



இப்படி எல்லாம்கூட கொலை நடக்கிறது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக