ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்வு!!!

Go down

மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்வு!!! Empty மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்வு!!!

Post by அருண் Mon 28 Feb 2011 - 21:25

2011-12ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத் திய மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 6-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

மாதாந்திர சம்பளம் பெறுபவர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது. தற்போது வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1.60 லட்சமாக உள்ளது. இது ரூ.1.80 லட்சமாக உயர்த்தப்படுகிறது. முதியோர்களுக்கான ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு தற்போது ரூ.2.40 லட்சமாக உள்ளது. அது ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

இந்த வருமான வரி விலக்கு சலுகையை பெற முதியோர்களுக்கு தகுதி வயது 65 ஆக உள்ளது. அது 60 வயதாக குறைக்கப்படுகிறது. பெண்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1.90 லட்சமாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. வருமான வரி விலக்கு வரம்பில் இந்த ஆண்டு முதல் புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக இருக்கும். உணவுப் பண வீக்கம் பணவீக்கம் பிரச்சினை நமக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

உணவுப் பணவீக்கம் கடந்த ஆண்டு 20.2 சதவீதமாக இருந்தது. தற்போது 9.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றாலும் உணவுப் பணவீக்கம் பெரும் பிரச்சினையாக உரு வெடுத்துள்ளது. வெங்காயம், பருப்புவகைகளின் விலைகள் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தது. இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. அரசின் முதன்மையான பிரச்சினையாக உள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் வளர்ச்சி 5.4 சதவீதமாகவும் தொழில் வளர்ச்சி 8.1 சதவீத மாகவும் இருக்கும். பொதுக்கடன் நிர்வாகம் பற்றிய சட்டம் அடுத்த நிதியாண்டு அறிமுகம் செய்யப்படும். நேரடி வரி விதிப்பு சட்டம் பற்றி நிதிக்குழு ஆய்வு செய்து வருகிறது. நிதிக்குழு அறிக்கை கிடைத்ததும் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் அந்த சட்டம் நிறைவேற்றப்படும்.

உணவு மற்றும் சேவை வரி சட்டம் நடப்பாண்டே பாராளு மன்றத்தில் கொண்டு வரப்படும். ஊழல் முறைகேடுகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. நாம் ஒருங்கிணைந்து ஊழலை வேரோடு அறுக்க வேண்டும். வங்கி சட்ட திருத்த சட்டம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். ஊரக வீட்டு வசதி திட்டத்துக்கான நிதியை ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது வீடு கட்ட ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இது 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. நிதித்துறை சீர்திருத்தங்கள் இன்னும் கூடுதலாக செய்யப்படும். காப்பீட்டு சீர் திருத்த சட்டம், எல்.ஐ.சி. மசோதா, ஆகியவை நடப்பாண்டில் அமல்படுத்தப்படும். வெளிநாட்டு நேரடி முதலீட்டை பரவலாக்க விவாதிக்கப்பட்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இதற்காக அரசு ரூ.500 கோடி நிதியில் மகளிர் சுய உதவிக்குழு மேம்பாட்டு கழ கம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்த கடன் தொகை ரூ.3.75 லட்சம் கோடி யில் இருந்து ரூ.4.75 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். விவசாயிகள் வேளாண் உற்பத்திரியை அதிகரிக்க, விவசாய முறைகளை அதி நவீனமாக மாற்ற அரசு பரிந்துரைத்துள்ளது. குறுகிய கால வேளாண் கடனுக்கான 7 சதவீதவட்டியில் எந்த மாற்றமும் இல்லை.

நாட்டின் உள்கட்ட மைப்பை மேம்படுத்த வரி விலக்கு பத்திரங்கள் இந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு வெளியிடப்படும். ராணுவம் மற்றும் மத் திய போலீஸ் படையில் இருப்பவர்கள் பணியில் இருக்கும் போது நிரந்தரமாக ஊனமடைய நேரிட்டால் 9 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு பணியில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்படும். அலிகர் முஸ்லிம் பல் கலைக்கழக மையங்களுக்கு 50 கோடி ரூபாய் வழங்கப்படும். சுங்கவரி செலுத்துபவர்கள், எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதை தாங்களே ஆய்வு செய்து கொள்ளலாம். சென்வாட் வரி விதிப்பில் மாற்றம் இல்லை.

130 பொருட்கள் மீதான ஒரு சதவீத மத்திய சுங்கவரி விலக்கப்படுகிறது. நேரடி வரி விதிப்பு பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு ரூ.11,500 கோடி இழப்பு ஏற்படும். மொத்த திட்டச் செலவு 100 சதவீதம் அதிக ரிக்கும். நிதி பற்றாக்குறை 2010-11ல் 5.5 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2011-12ம் ஆண்டு இந்த பற்றாக்குறை 4.6 சதவீதமாக குறைக்கப்படும். சில சட்டரீதியான பணிகள் சேவை வரிக்குள் கொண்டு வரப்படுகிறது. தினசரி வாடகை ரூ.1000- துக்கும் மேல் வசதி கொண்ட ஓட்டல்கள் சேவை வரிக்குள் கொண்டு வரப்படுகிறது. ஏ.சி. வசதி ஓட்டல்கள், சில வகை மருத்துவமனைகளுக்கும் சேவை வரி விதிக்கப்படும். உள்ளூர் விமானப் பயணத்துக்கான சேவைவரி 50 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

சர்வ தேச விமான பயணத்தின் போது சாதாரண வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு 250 ரூபாய் சேவை வரி விதிக்கப்படும். உயர் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் சேவை வரியாக வசூலிக்கப்படும். சர்வதேச பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சுங்க வரி 10 சதவீத மாகவே தொடர்ந்து வசூலிக்கப்படும். வேளாண் கருவிகள் மீதான சுங்க வரி 5 சதவீதத்தில் இருந்து 4.5சதவீதமாக குறைக்கப்படுகிறது.

அதுபோல பட்டு மூலப் பொருட்கள் மீதான சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இரும்பு தாது ஏற்றுமதி மீதான வரி 20 சதவீதமாக இருக்கும். சுங்கம் மற்றும் தீர்வை வரி மூலம் கூடுதலாக ரூ.7300 கோடி கிடைக்கும். சேவை வரி மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும்.

இவ்வாறு நிதிமந்திரி பிரணாப்முகர்ஜி கூறினார்.

மாலை மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்வு!!! Empty Re: மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்வு!!!

Post by அருண் Tue 1 Mar 2011 - 12:22

புதுடெல்லி: பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.60 லட்சத்தில் இருந்து ரூ. 1.80 ஆக உயர்வு(பெண்களுக்கு வரம்பு ரூ. 1.90 லட்சம் என்பதில் மாற்றமில்லை.)
* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65ல் இருந்து 60 ஆக குறைக்கப்படுகிறது. அதேபோல், விலக்கு வரம்பு ரூ. 2.40 லட்சத்தில் இருந்து ரூ. 2.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* கம்பெனிகளுக்கு கூடுதல் வரி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* சேவை வரி 10 சதவீதமாக தொடரும். பல்வேறு பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்படும்.
* சில சட்டத் துறை சேவைகளுக்கும் சேவை வரி விதிக்கப்படும். தனியொருவர் வேறொரு தனி நபருக்கு வழங்கும் சட்ட சேவைக்கு வரி கிடையாது.
* சுங்கம் மற்றும் கலால் வரிகளால் வருவாய் எதிர்பார்ப்பு ரூ. 7,300 கோடி.
* மதிப்பு கூட்டு வரியில் (சென்வாட்) மாற்றம் இல்லை.
* 130 பொருட்களுக்கு குறைந்தப்பட்சம் ஒரு சதவீதம் கலால் வரி விதிப்பு
* பொது சுங்க வரி 10 சதவீதமாக நீடிக்கும். விவசாய கருவிகளுக்கான சுங்கவரி 5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைப்பு.
* ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் ஓட்டல் அறைகளுக்கு சேவை வரி விதிப்பு. ஏ.சி. ரெஸ்டாரண்டுகள், மது பார் உள்ள ஓட்டல்கள், குறிப்பிட்ட சில மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைகளுக்கு சேவை வரி விதிப்பு.
* உள்நாட்டு விமானங்களில் எகானமி வகுப்பில் பயணம் செய்ய சேவை வரி ஸீ50 ஆகவும், வெளிநாட்டு விமான பயணத்துக்கு ரூ. 250 ஆகவும் அதிகரிப்பு. உயர் வகுப்புகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் சேவை வரி 10 சதவீதமாக நீடிப்பு.
* கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ. 3,000 கோடியாக உயர்வு.
* வரும் 2012 முதல் கெரசின், காஸ் மற்றும் உரங்களுக்கு நேரடி ரொக்க மானியம் வழங்க முடிவு.
* உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குளிர்ப்பதன குடோன்கள் அமைக்கப்படும். முக்கிய நகரங்களில் 15 மெகா உணவுப் பூங்கா உருவாக்கப்படும்.
* பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்பது தொடரும்.
* பொதுத் துறை வங்கிகளுக்கு மேலும் ரூ. 6,000 கோடி நிதி அளிக்கப்படும்.
* வங்கிகளில் வீட்டு கடன் வட்டி சலுகை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்வு.
* கல்வித் துறைக்கு ரூ. 52,057 கோடி ஒதுக்கீடு.
* பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் மேம்பாட்டுக்கு ரூ. 500 கோடியில் தனி நிதியம் உருவாக்கப்படும்.
* பருப்பு வகைகள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ. 300 கோடி ஒதுக்கப்படும்.
* விவசாய பயிர்க்கடன் ரூ. 3.75 லட்சம் கோடியில் இருந்து ரூ. 4.75 லட்சம் கோடியாக உயர்வு.
* விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ. 300 கோடி.
* நெசவாளர்களின் கடன் பிரச்னையை தீர்க்க ரூ. 3,000 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ. 1,500ல் இருந்து ஸீ3000 ஆக உயர்வு. 80 வயது முதியோர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 200ல் இருந்து ரூ. 500 ஆக அதிகரிப்பு.
* சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, கம்பெனிகள், இன்சூரன்ஸ், ஓய்வூதிய வளர்ச்சி ஆணைய புதிய சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல்.
* அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க கூடுதல் சலுகைகள் வழங்க பரிசீலனை.
* 2011&12ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் எட்டும்.
* உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 30 ஆயிரம் கோடிக்கு வரி விலக்கு கடன் பத்திரங்கள் வெளியீடு.
* நபார்டு வங்கிக்கு குறுகிய கால கடனாக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்துக்கு நிதி ரூ. 6,755 கோடியில் இருந்து ரூ. 7,860 கோடியாக அதிகரிப்பு.
* ராணுவம், துணை ராணுவ வீரர்கள் பணி செய்ய முடியாத அளவுக்கு ஊனமடைந்தால் ரூ. 9 லட்சம் நஷ்டஈடு.
* வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்க 5 அம்ச திட்டம்.
இதுபோன்ற இன்னும் பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

கல்விக்கு ரூ. 52 ஆயிரம் கோடி

வரும் நிதியாண்டில் கல்வி திட்டத்திற்கு ரூ. 52,057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டைவிட 24 சதவீதம் அதிகம்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தற்போதைய நிதி ஆண்டின் ஒதுக்கீட்டை விட 40 சதவீதம் அதிகம். வேலை வாய்ப்புடன் கூடிய மேல்நிலை கல்வி அளிக்கும் திட்டம் 2011&12ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

வி.வி.ஐ.பி. பாதுகாப்புக்கு ரூ. 279 கோடி ஒதுக்கீடு

பிரதமர் உள்பட சில வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் ரூ. 279 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா மற்றும் முன்னாள் பிரதமர்கள் உள்பட வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு பாதுகாப்பு குழு உள்ளது. இந்த பிரிவுக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 224.40 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை நவீன கருவிகள் வாங்குதல், பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவைகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, ரூ. 279 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாணயங்களில் ரூ சின்னம்

நாணயங்களில் ரூபாய்க்கான புதிய சின்னம் விரைவில் இடம் பெறும் என்று பிரணாப் தெரிவித்தார். பட்ஜெட் உரையில் பிரணாப் கூறியதாவது: இந்திய ரூபாய்க்கு இப்போது புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள், ரூபாயை குறிக்க இப்புதிய சின்னத்தை பயன்படுத்துகின்றனர். புதிதாக வெளியிடப்படும் நாணயங்களில் ரூபாய்க்கான புதிய சின்னம் விரைவில் இடம் பெறும். சர்வதேச அளவில் ரூபாய்க்கான புதிய சின்னத்தை சேர்க்குமாறு யூனிகோட் எழுத்துரு ஆணையத்தை மத்திய அரசு கோரியுள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஏரிகள், ஆறுகளை சுத்தப்படுத்த ரூ. 200 கோடி

முக்கிய ஏரிகள், ஆறுகளை சுத்தப்படுத்த மத்திய பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கங்கை நதி ஆணையத்தின் பல்வேறு திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவுபடுத்தப்படும். வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல ஆறுகளையும், ஏரிகளையும் தூய்மைப்படுத்த ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் ஓய்வூதியம் பெற வயது வரம்பு 60 ஆக குறைப்பு

இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பலனடைகின்றனர். இது 60 வயதாக குறைக்கப்படுகிறது. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை தற்போதைய ரூ. 200 லிருந்து ரூ. 500 ஆக பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் இளைஞர் வளர்ச்சி கழகத்துக்கு ரூ.20 கோடி

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி கழகத்துக்கு ரூ. 20 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது உட்பட நாட்டிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பொருளாதார பள்ளிக்கு ஸி10 கோடி நிதி தரப்பட்டுள்ளது.

73,000 கிராமங்களில் வங்கிகள் வசதி

வரும் நிதியாண்டில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 73,000 கிராமங்களுக்கு வங்கி வசதிகளை அளிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வங்கி கணக்குகளைத் தொடங்குவதற்கு மக்களை ஊக்குவிக்கவும், வங்கி சேவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சுவாபிமான் என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரங்க தொழிலாளருக்கு மருத்துவ காப்பீடு

சுரங்கத்துறை மற்றும் அது தொடர்புடைய ஸ்லேட், டோலமைட், மைக்கா, ஆஸ்பெஸ்டாஸ் ஆகிய அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு தேசிய ஸ்வஸ்திய பீமா யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை தொழிலாளர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைக்கும். தற்போது இத்திட்டத்தின் கீழ் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கும், பீடித் தொழிலாளர்களும் பலன் பெறுகின்றனர்.

என்.ஐ.ஏ.வுக்கு ரூ. 55 கோடி

தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட குற்றங்களில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் செலவுகளுக்காக 2011-12ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ. 55.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினகரன்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum