புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
366 Posts - 49%
heezulia
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 27, 2011 3:03 pm

கணமும் உன்னை நினயாதுள்ளம்
இருந்தேனே யாயின்
பிணமாய் வாழ்ந்தே னென்றே எண்ணும்
பித்தம் கொண்டேனே
மணமாய் வீசும் மலர்கள் தூவி
மனதால் நிதம்போற்றி
குணமாய் வாழக் கும்பிட்டே உன்
கோவில் வந்தேனே

இறைவா நீயோ தணலாய் நாமும்
எரியும் வேளைதான்
நிறைவாய் உறையும் பனியாய் நிற்கும்
நிலையைக் கொண்டாயோ
உறைவாய் எங்கும் உள்ளாய் ஈசா
உமையின் பாகோனே
விரைவாய் எம்மை காப்பாய் என்று
வேண்டிக்கொண்டோமே

முறையாய் கல்லுள் காணும் தேரைக்
கொருவாய் யுணவைத்தான்
தருவாய் நீயும் என்றே பகர்வார்
தரணிக் கறிஞோரே
உருவாய் அருவாய் நின்றாய் நீயோ
ஈழத்தோர் மட்டும்
திரிவாய் பிணமாய் எரிவாய் கரியாய்
தெருவில் என்றாயே

உருகாய் என்றே உருகிக் கேட்டும்
உருகா நின்றாயே
பெருவாய் கொண்டே பேயாய் சிங்கப்
பிறவிக் குரியோனாம்
கருவாய் உள்ளோர் தொட்டு, கூனிக்
கிழமாய் போனோரும்
திருவாய் மொழியிற்தமிழர் என்றால்
தலையைக் கொய்தானே

உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே
இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

பிழையாய் கவியை குற்றம்
கண்டபுலவர் நக்கீரன்
அழலாய் எரியச் செய்தே நீயும்
அவனைக் கொன்றாயே
பிழையாய் தமிழர் கோரக்கொலையை
பெரிதாய் செய்தோனும்
குளமா யுதிரம் கொட்டக் கொல்ல
குளிரக் கிடந்தாயே

எதுநாம் செய்தோ மிறைவா உன்னை
இதயம் நம்பித்தான்
கதியாய் கைகள் கூப்பித் தொழுதோம்
கதறிக் கேட்டோமே
சதியா செய்தாள் கங்கை உந்தன்
சடையில் கொண்டாயே
நதியாய் கண்ணை மூடிபாய்ந்து
நாட்டுக் குழைத்தாளோ

விதியோ நாமும் வீரம்கொண்டு
வேங்கை போலத்தான்
எதிரிக் கிணையாய் இன்னும் மேலா
யேற்றம் கண்டோமே
புதிதாய் முழுதாய் படைகள் மூன்றும்
கொண்டே தமிழீழம்
மதியும் மறமும் கொண்டோர் தலைவன்
முடிகொண் டாண்டானே

வெல்லக் கிடையா வீரமென்றே
வியந்தே அஞ்சித்தான்
கொல்லக்கூடா நஞ்சைபோட்டுக்
கொன்றார் புவியோரே
மெல்லக் கடலை அமுதம் வேண்டி
மேலோர் கடையத்தான்
கொல்லும் நஞ்சு திரளத் தின்றே
குலமே காத்தாயே

எம்மை தமிழைக் கொல்லநச்சுக்
குண்டைபோட்டாரே
அம்மை மடிமேல் கொண்டோன்
கண்டும் அசையாதிருந்தாயே
வெம்மைக் குரிய நஞ்சை வாயில்
கொள்ளக் கேட்டோமா
நம்மைக் கொல்லும் நஞ்சுகுண்டை
பஞ்சுசென் றாக்காதேன்

வஞ்சங் கொண்டு யாகம்செய்து
வாழ்வில் உன்னைத்தான்
அஞ்சும்புலியை ஆக்கிச் சிவனே
அழியென்றதை ஏவ
மிஞ்சும் கோபம் கொண்டே தோலை
மேனிக் குடுத்தாயோ
வஞ்சம் மாறா தின்றும் வேங்கை
கொன்றே நின்றாயோ

அஞ்சும் அறிவும் கெட்டே ஈசா
அழிவைச் செய்தாயே
பஞ்சம் என்றால் ஆக்கும்காக்கும்
பிரம்மன் திருமாலும்
மஞ்சம்கண்டு தூக்கம்கொண்டார்
மதுவாம் அமுதுண்டோ
கொஞ்சம்கூட காவாதெம்மை
கொல்லக் கிடந்தாரே!

சிவனே நீயோ எம்மைக் காவல்
செய்யும் மனதின்றி
சிவனே என்று இருந்தாலென்ன
சிறிதாய் மனம்கொண்டு
அவனேஒருவன் அகிலம் அஞ்ச
அவனிக் கொளியாக
பவனி வந்தான் பகலின்வெம்மைக்
கதிரோன் வாரானோ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 4:01 pm

ஆழ்மன சிந்தனையில் சிவனுக்கொரு பாடல் கவிதை வடிவில்..சிவனையே மெய்மறக்க செய்யும் விதமாய் அன்று இராவணனின் இசையில் சிவன் தன்னையே மறந்தார்...
இன்றோ ஐயாவின் வரிகளில் மனம் உருகி கரையும் விதமாய் ....

கவிதை வடிவில் பாடலை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஐயா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 27, 2011 9:23 pm

சிவராத்திரிக்கான கவிதை அருமை சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196 சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196

சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 9:40 pm

சிவனுக்கு இயற்றிய பாடல் (கவிதை) மனதை மகிழ்வித்தது அண்ணா!

சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 27, 2011 10:33 pm

நன்றி என்னருமை ஈகரை உறவுகளே, தோழர்களே

சில நாட்களாக என்னுடைய activity இங்கே குறைந்துள்ளது. தவிக்கமுடியாத சில வேலைகள் (கம்யூட்டரோடுதான்) காரணமாக
ஒன்றிரண்டு நாளில் திரும்பவும் கலந்து சிறப்பிப்பேன்.

பாராட்டுக்களை தலை தாழ்த்தி அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்!

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Feb 28, 2011 6:32 am

ஈசனடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 678642

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 28, 2011 6:48 am

varsha wrote:ஈசனடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 678642

நன்றிகள் கோடி தங்களின் அன்பான வாழ்த்துக்கு!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Feb 28, 2011 12:12 pm

ஈகரையில் நான் மனம் ஒன்றிப் படிக்கும் கவிதை சகோதரர் கிரிகாசன் அவர்கள் கவிதைகள் தாம்.

சட சடவென்று கொட்டும் மழைபோல அவர்கவிதையில் வந்து விழும் வார்த்தைகள் கண்டு ஆச்சரியப் படுகிறேன்.
உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து சில வார்த்தைகளால் இதயத்தில் கீறல் விழச் செய்வார், சில நேரங்களில் கண்ணீர் திரளச்செய்வார்.

இக்கவிதையில் என் இதயம் வலிக்கச் செய்த வரிகள் இது: (வலியின் உச்சம் இது)
[/quote]
உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே

இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

[/quote]

வாழ்த்துக்கள் சகோதரர் கிரிகாசன். தங்கள் தமிழுள்ளம் வாழ்க. நற்றமிழாள் தங்கள் நலம் காப்பாள்.

மிக்க அன்புடன்,
யாதுமானவள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Mon Feb 28, 2011 6:06 pm

அருமை சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 10:41 pm

யாதுமானவள் wrote:ஈகரையில் நான் மனம் ஒன்றிப் படிக்கும் கவிதை சகோதரர் கிரிகாசன் அவர்கள் கவிதைகள் தாம்.

சட சடவென்று கொட்டும் மழைபோல அவர்கவிதையில் வந்து விழும் வார்த்தைகள் கண்டு ஆச்சரியப் படுகிறேன்.
உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து சில வார்த்தைகளால் இதயத்தில் கீறல் விழச் செய்வார், சில நேரங்களில் கண்ணீர் திரளச்செய்வார்.

இக்கவிதையில் என் இதயம் வலிக்கச் செய்த வரிகள் இது: (வலியின் உச்சம் இது)

உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே

இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

சகோதரிக்கு,
தங்கள் வாழ்த்துக்கள் மார்கழிப்பனியில் மலர் தூவும் மரத்தின் கீழ் நின்றதுபோல் உள்ள சிலிர்ப்பைத் தந்தது.
என் கவிதைகள் வாசிப்போரின் இதயத்தில் ஈழமக்கள் படும் துயரத்தை எடுத்துக்கூறும் விதமாக இருக்கவேண்டும். அதாவது ஒரு சின்ன கீறல் விழவேண்டுமே என்று நினைப்பேன். தங்கள் கூற்று எனக்கு வெற்றி என்பதை கூறுகிறது. நன்றிகள் தங்கள் கருத்துக்கு!

அன்புடன்
கிரிகாசன்

நண்பர் ஆனந்தரவி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக