ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது

Go down

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது Empty லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது

Post by சிவா Sun Feb 27, 2011 8:49 am

புதுடில்லி: லிபியாவில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிபோலிக்கு அனுப்பப்பட்டன. இதில், முதல் விமானத்தில் 300 பேர் நேற்றிரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான்கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

லிபியா தலைவர் மும்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரு வாரங்களாக, அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், அந்தந்த நாடுகளால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். கலவர பூமியாக மாறிவிட்ட லிபியாவில், தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் லிபியாவில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக இறங்கியுள்ளன.

இரண்டு சிறப்பு விமானங்கள்
: டிரிபோலி, பெங்காசி, சபா மற்றும் குப்ரா நகரங்களின் உள்ள விமான நிலையங்களில் இந்தியர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை மீட்பதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் மற்றும் ஏர்பஸ் 330 விமானம் இரண்டும், நேற்று டிரிபோலியில் தரையிறங்கின. இந்த விமானங்கள் இரண்டிலும், 640 பேர் பயணிக்க முடியும். முதல் விமானம் 300 பேருடன் நேற்று மாலை 4.10 மணிக்கு டிரிபோலியில் இருந்து புறப்பட்டு, இரவு 12 மணிக்கு டில்லி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை மத்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மீட்புப் பணியில் இந்த விமானங்கள் மார்ச் 7ம் தேதி வரை ஈடுபடுத்தப்படும்.

நான்கு கப்பல்கள்: இவை தவிர, ஐ.என்.எஸ்., ஜலஸ்வா மற்றும் ஐ.என்.எஸ்., மைசூர் என்ற இரண்டு கப்பல்கள், மும்பையில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளன. எகிப்தின் "போர்ட் சயீத்' துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல், நாளை நண்பகலில் பெங்காசி போய்ச் சேரும். இக்கப்பலில் 1,200 பேர் பயணிக்க முடியும். மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் மற்றொரு பயணிகள் கப்பல், லிபியாவுக்குத் திருப்பி விடப்பட்டு, அதன் மூலமும் இந்தியர்கள் மீட்கப்படுகின்றனர். இந்த இரண்டாவது கப்பலில் 1,600 பேர் பயணிக்க முடியும். இதுதவிர, மேலும் இரண்டு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல்கள் மூலம் லிபியாவில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள், எகிப்தின் அலெக்சாண்டிரியா நகருக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர். மீட்புப் பணியில் உதவுவதற்காக, டிரிபோலியில் உள்ள இந்திய தூதரகத்தில் மேலும் பல அதிகாரிகளை, இந்திய வெளியுறவு அமைச்சகம் பணிக்கு அமர்த்தியுள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவிப்பு:
லிபியா - டுனீசியா எல்லைக்கருகில் உள்ள ஜாவியா நகரில், கடாபி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருவதால், அங்குள்ள இந்தியர்கள், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள ஓர் இந்தியர் கூறுகையில்,"ஜாவியாவில் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பொருளும் கிடைக்கவில்லை' என்று கவலையுடன் தெரிவித்தார்.

தினமலர்


லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு
» 14,000 இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை
» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
» லிபியாவில் கடாபியின் போர் விமானம் குண்டு வீசி தகர்ப்பு; பிரான்ஸ் ராணுவம் அதிரடி தாக்குதல்
» இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum