ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_c10ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_m10ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_c10 
VENKUSADAS
ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_c10ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_m10ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_c10ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_m10ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_c10 
VENKUSADAS
ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_c10ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_m10ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது

Go down

ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Empty ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது

Post by சிவா Sat Feb 26, 2011 8:36 am

நாக்பூர், பிப்.26- உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 16 ஓவர்கள் மீதம் வைத்து எளிதில் வென்றது.

உலக கோப்பை

10-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று ஆசிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. `ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகளும், `பி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

திணறிய நியூசிலாந்து


போட்டியின் 7-வது நாளான நேற்று `ஏ' பிரிவில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் நாக்பூரில் சந்தித்தன. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு இரு அணி வீரர்களும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். ஆஸ்திரேலிய வீரர்கள் கையில் கறுப்பு பட்டையும் கட்டியிருந்தனர்.

இதை தொடர்ந்து போடப்பட்ட டாஸில் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிபாண்டிங் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முந்தைய நாள் பெய்த மழையால் ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது. அத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் துவக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் கைகொடுக்கலாம் என்று கருதி, பாண்டிங் பந்து வீச முடிவு செய்தார். அவரது கணிப்பு துளியும் மாறவில்லை.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஷான் டெய்ட், மிட்செல் ஜான்சன், பிரெட்லீ, வாட்சன் ஆகியோர் மிக துல்லியமாக பந்து வீசி, நியூசிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இவர்களின் புயல்வேக தாக்குதலில் ரன்கள் சேகரிக்க முடியாமல் தடுமாறிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், பந்தை சரியாக கணிக்காமல் விக்கெட்டுகளை சீக்கிரம் தாரை வார்த்தனர். 17 ஓவரில் 73 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் பிரன்டன் மெக்கல்லம் (16 ரன்), ஜெஸ்ஸி ரைடர் (25 ரன்), மார்ட்டின் கப்தில் (10 ரன்) ஆகியோரும் அடங்கும். துணை கேப்டன் ராஸ் டெய்லருக்கு (7), ஷான் டெய்ட் வீசிய மின்னல் வேக யார்க்கர் பந்து வீச்சில் ஸ்டம்பு தகர்ந்தது.

206 ரன்னில் வீழ்ந்தது


இதனால் நியூசிலாந்து அணி 100 ரன்களை கடக்குமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. நல்லவேளையாக நாதன் மெக்கல்லம் அணிக்கு புத்துயிர் கொடுத்தார். அவரும், ஜேமி ஹாவும் (22 ரன்) 7-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர். இதன் பின்னர் நாதன் மெக்கல்லத்துடன், கேப்டன் வெட்டோரி ஜோடி சேர்ந்தார். இவர்களும் அணியை ஓரளவு மீட்டனர். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிரமமின்றி அடித்து விளையாடினார்கள். இவர்களின் சிறப்பான ஆட்டம் நியூசிலாந்து அணி 200 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை தாண்ட உதவியது. இருப்பினும் 50 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியவில்லை.

நாதன் மெக்கல்லம் 52 ரன்கள் (76 பந்து, 3 பவுண்டரி) எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டேனியல் வெட்டோரி 44 ரன்களில் (43 பந்து, 5 பவுண்டரி) விக்கெட் கீப்பர் ஹேடினிடம் கேட்ச் ஆனார். முடிவில் நியூசிலாந்து 45.1 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டுகளும், டெய்ட் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா அபாரம்

பின்னர் 207 ரன்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன்-பிராட் ஹேடின் ஜோடியின் ஆட்டமே வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. நியூசிலாந்து பீல்டர்களை அடிக்கடி எல்லைக்கோட்டிற்கு ஓட விட்ட இருவரும் அணிக்கு வலுவான அடித்தளமிட்டனர். 18 ஓவர்களில் 133 ரன்கள் விளாசிய பின்னரே இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது. அதற்குள் இருவரும் தத்தமது அரைசதங்களை பூர்த்தி செய்தனர். ஹேடின் 55 ரன்களிலும் (50 பந்து, 8 பவுண்டரி), வாட்சன் 62 ரன்களிலும் (61 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹாமிஸ் பென்னட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ரிக்கிபாண்டிங் (12 ரன்) ஸ்டம்பிங் ஆனாலும், துணை கேப்டன் மைக்கேல் கிளார்க், கேமரூன் ஒயிட் இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிளார்க் 24 ரன்களுடனும் (37 பந்து, 4 பவுண்டரி), கேமரூன் ஒயிட் 22 ரன்களுடனும் (28 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர். நியூசிலாந்து பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் மட்டும் 29 வைடு உள்பட 32 ரன்களை விட்டுகொடுத்தனர். இது ஆஸ்திரேலியாவின் வெற்றியை மேலும் சுலபமாக்கியது. 4 விக்கெட்டுகள் சாய்த்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2-வது வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தனது தொடக்க ஆட்டத்தை ஜிம்பாப்வேயை 91 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அதே சமயம் தனது தொடக்க லீக்கில் கென்யாவை பந்தாடிய நியூசிலாந்துக்கு இது முதல் தோல்வியாகும்.

ஆஸ்திரேலியா

ஸ்கோர் போர்டு

நியூசிலாந்து

கப்தில் (பி) வாட்சன் 10
பிரன்டன் மெக்கல்லம் (சி) கிரெஜ்சா (பி) டெய்ட் 16
ரைடர் (சி) ஹேடின் (பி) ஜான்சன் 25
டெய்லர்(பி) டெய்ட் 7
பிராங்ளின் (சி) ஹேடின் (பி) ஜான்சன் 0
ஸ்டைரிஸ் (சி) ஹேடின் (பி) டெய்ட் 0
ஜேமி ஹாவ் எல்.பி.டபிள்யூ (பி) சுமித் 22
நாதன் மெக்கல்லம் எல்.பி.டபிள்யூ (பி) ஜான்சன் 52
வெட்டோரி (சி) ஹேடின் (பி) பிரெட்லீ 44
டிம் சவுதி (சி) பாண்டிங் (பி) ஜான்சன் 6
பென்னட் (நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 24

மொத்தம் (45.1 ஓவர்களில் ஆல்-அவுட்) 206

விக்கெட் வீழ்ச்சி: 1-20, 2-40, 3-66, 4-66, 5-67, 6-73, 7-121, 8-175, 9-206

பந்து வீச்சு விவரம்

பிரெட்லீ 8-2-29-1
ஷான் டெய்ட் 7-0-35-3
ஜான்சன் 9.1-3-33-4
வாட்சன் 3-1-9-1
கிரெஜ்சா 9-0-47-0
ஸ்டீவ் சுமித் 9-0-44-1

ஆஸ்திரேலியா

வாட்சன் (பி) பென்னட் 62
ஹேடின் (சி) பிராங்ளின் (பி) பென்னட் 55
பாண்டிங்(ஸ்டம்பிங்) பிரன்டன் மெக்கல்லம் (பி) சவுதி 12
மைக்கேல் கிளார்க் (நாட்-அவுட்) 24
ஒயிட் (நாட்-அவுட்) 22
எக்ஸ்டிரா 32

மொத்தம் (34 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 207

விக்கெட் வீழ்ச்சி: 1-133, 2-136, 3-167

பந்து வீச்சு விவரம்

டிம் சவுதி 10-2-45-1
வெட்டோரி 7-0-39-0
பென்னட் 7-0-63-2
நாதன் மெக்கல்லம் 3-0-22-0
ரைடர் 5-0-24-0
பிராங்ளின் 2-0-11-0


ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Empty Re: ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது

Post by சிவா Sat Feb 26, 2011 8:37 am


ஆஸ்திரேலியாவின் வெற்றிப்பயணம் தொடருகிறது


உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த அணி கடைசியாக 1999-ம் ஆண்டு உலக கோப்பையில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. அதன் பிறகு இதுவரை அந்த அணி தோல்வியை நெருங்கியதில்லை.

உலக கோப்பை கிரிக்கெட்டில் 25 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்திருக்கிறது. அது மட்டுமின்றி 1999-ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதி சமனில் (டை) முடிந்ததையும் கணக்கில் கொண்டால், உலக கோப்பையில் தொடர்ச்சியாக 31 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை.

இதே போல் ரிக்கிபாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கிய 24 ஆட்டங்களிலும் வெற்றியே கிடைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினதந்தி


ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
»  சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி 2-வது வெற்றி
» ஐ.பி.எல் -2018 !!
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum