புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
3 Posts - 6%
heezulia
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_m10கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Feb 27, 2011 10:55 am



“உலகே அண்ணாந்து பார் , உற்றுக்கேள்
எதிரியின் படை வருகிறது
எங்களை அழிக்க விழைகிறது,
உண்மையுடனும் எனது துப்பாக்கியுடனும்
நான் அவனை புறமுதுகிடச் செய்வேன்
நான் கொல்லப்படுவேனேயானால்,
என்னோடு அவனையும் கொல்வேன்:”

(லிபியாவின் தேசிய கீதத்தின் ஒரு பகுதி)

ஒரு உணர்ச்சி கொப்பளிக்கும் போர்க்கால கவிதை வரிகள் போல் தோன்றும் லிபியாவின் தேசிய கீதத்தின் ஒரு பகுதி இது. அடக்குமுறையிலும் இத்தாலிய பாசிச ஆட்சியின் கீழும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ ஆட்சியின் பொருளாதார சுரண்டலுக்கும் ஆளாகிப்போன லிபியாவின் இந்த தேசிய கீதத்தின் வரிகள் உண்மையில் லிபியாவின் சுதந்திர தேசிய கீதமல்ல, மாறாக 1956 ஆம் ஆண்டு சுயெஸ் யுத்தத்தில் எகிப்திய யுத்த படையணியினரின் படை அணிவகுப்பு பாடல். அதனை அராபிய நாடுகளை இணைக்கும் தமது பரந்து பட்ட கொள்கை கண்ணோட்டத்தில் கடாபி தனது நாட்டின் சுதந்திர கீதத்தையே நீக்கி விட்டு இந்த படை அணிவகுப்பு பாடலை தனது தேசிய கீதமாக்கினார். கடாபி லிபிய சுதந்திர கொடியையும் மாற்றி அரசியலமைப்பும் மாற்றி தனக்கு முந்திய லிபியாவினை விட தமது கால கட்ட லிபியாவினை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றினார். இவர் எப்போதுமே தன்னை ஒரு விசித்திர, ஏனைய அரபு தலைவர்களிலிருந்து வேறுபட்ட தலைவராக தனித்துவ மனிதராக காட்டுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தார்ர். இப்போதும் லிபியாவில் நடக்கும் சம்பவங்களும் அதையே உறுதி செய்கின்றன.

இப்போது கடாபி தான் கொல்லப்பட்டாலும் தனது எதிரியையும் அழிப்பேன் என்று கூறும் லிபியாவை உலகம் அண்ணாந்து பார்க்கிறது ஆனால் எதிரிகள் எங்கிருந்து வருகிறார்கள் என்று உற்றுக் கேட்டால் அவர்களும் லிபியர்கள்தான். அதுவும் கடாபி பிறந்த வளந்த அந்த பென்காசியில் தான் அவரை அழித்துவிட முனையும் "எதிரிகளும்" முனைப்பு கொண்டார்கள். அவர்களும் இப்போது கடாபியை எதிரியாக கண்டு அவரை அழித்து தாமும் அழிந்து போக தயாராக ஒரு நாட்டின் தேசிய கீதத்தை பாடியே அணிவகுக்கிறார்கள். இந்த யுத்த அணிவகுப்பை நாம் அண்ணாந்து பார்த்து யாருக்கு யார் எதிரி , இவர்களை எதிரியாக்கியது யார் , தங்களை தாங்களே எதிரியாக்கினார்களா, ஏகாதிபத்திய எதிர்ப்பினை செய்வதை தமது அரசியல் கோட்பாடாக கொண்ட அரச தலைவர்களும் ஏகாதிபத்திய அனுசரையாளர்களான தலைவர்களும் தமது சொந்த மக்களின் விரோதிகளாக ஜனநாயக விரோதிகளாக அடையாளம் காணப்பட்டு அரபுலகின் ஆட்சி பீடங்களிலிருந்து அகற்றப்படும் நிகழ்வுகள் இனிமேல் நடுச்சந்தி விவகாரங்களாகி வருகின்றன. உலக அரசியலில் சோவியத் சார்பு நாடுகளின் உடைவுகள் மிகத்துரிதமாக அடுத்தடுத்து நடந்த வரலாறும் எமக்கு முன்னாள் நினைவில் நிற்கிறது. இப்போது அரபுலகின் அடக்கு முறை ஆட்சியாளர்களை மக்கள் கிளர்ந்து ஆட்டுவிக்கும் சகாப்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆதரவாளர்களிடம் ஆயதங்கள் ஆட்சி செய்கின்றன. "பொருத்தமான நேரத்தில் நாங்கள் ஆயுதக் களஞ்சியங்களை திறந்துவிடுவோம் , அப்போது எல்லா லிபியர்கள் கோத்திரங்களும் ஆயுதபாணியாவார்கள் , அதனால் லிபியா நெருப்பில் சிவக்கும் ( எரியும் ) என்ற கடாபியின் எச்சரிக்கை அவரின் சதி மூலம் ஆட்சியை பின்னர் மேற்பட்ட அபு சலீம் சிறைச்சாலை அரசியல் கைதிகளை 1996ல் கொன்றது என்ற பின்னணிகளை ஆராயவேண்டிய தேவையை உணர்த்துகின்றன.

தனது அரசியல் ஆசானாக திகழ்ந்த முன்னாள் எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசரின் மறைவுக்கு பின்னர் தன்னை முஸ்லிம் உலகின் தனித்துவமிக்க தலைவராக கடாபி கனவு கண்டார். இராணுவ புரட்சிமூலம் இத்ரீஸ் அரசரை கவிழ்த்து ஆட்சிக்கு வந்த இராணுவ கேர்ணலான கடாபியின் செல்வாக்கு குறிப்பாக எழுபதுகளில் ஆரம்பகால சோவியத் அமெரிக்க முகாம்களிற்கு அப்பால் மூன்றாம் உலக அரசியல் சக்தியாக ஆசிய ஆபிரிக்க லாடின் அமெரிக்க நாடுகளின் ஐக்கியம் அணிசேரா நாடுகளின் இணைப்பாக பரிணமித்தபோது கேர்னல் கடாபி முஸ்லிம் உலகின் கவனத்தை ஈர்ப்பவராக காணப்பட்டார். முதன் முதலில் அவர் அணிசேரா நாடுகளின் கொழும்பு மாநாட்டுக்கு (1976) வருகை தந்த போது அவரை பார்க்க மக்கள் பெரும் ஆர்வமாகவிருந்தார்கள்.

இவர் எழுபதுகளில் இஸ்லாத்தினடிப்படியில் தேசியவாதத்தினை முன்னெடுத்து அராபிய இஸ்லாமிய பாரம்பரியத்தை மீள் நிலை நிறுத்த தீவிர ஈடுபாடு காட்டினார். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சிவில் சட்டங்களை அமுல்படுத்துவதில் அக்கறை கொள்ளாது இஸ்லாமிய தண்டனை சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மட்டும் கூடிய அக்கறை காட்டினார்.

இஸ்லாமிய புரட்சிகர பொது உடைமைக் கோட்பாடு என்று தனது அரசியல் கருத்தியலுக்கு கடாபி பெயரிட்டார். இஸ்லாமிய அடிப்படையில் தூண்டப்படாவிட்டாலும் முஸ்லிம் தேசங்கள் விடுதலை இயக்கங்களை , அவை எங்கு இருந்தாலும் ஆதரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி உலகின் பல முஸ்லிம் , முஸ்லிமல்லாத நாடுகளின் விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு கடாபி உதவி புரிந்தார், அந்த கொள்கையின் அடிப்படையில் கடாபி வட அயர்லாந்து குடியரசு இராணுவத்துக்கும் நிதி வழங்கி ஆதரவளித்தார் என்ற குற்றச்சாட்டு ஒரு சில சம்பவங்களின் பின்னணிகளை ஆதாரமாகக் கொண்டும் அவர் மீது பிரித்தானிய அரசால் சுமத்தப்பட்டது. கடாபி தனது கோட்பாடுகளை சுமந்த கிரீன் புக் எனும் பச்சை புத்தகத்தின் மூலம் நாடுகளிலும் முஸ்லிம் நாடுகள் அல்லாத இலங்கை போன்ற நாடுகளிலும் தனது கருத்த்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதில் தனது பொருளாதார செல்வாக்கினையும் பயன்படுத்தினார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை.

இஸ்லாம் அடிப்படியில் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது என்பதுடன் உலகின் பிரதான சோஷலிச முதலாளித்துவ முகாம்களின் கோட்பாடுகளுக்கு மாற்றீடாக தனது அரசியல் சிந்தனைகளை வடிவைத்து அவற்றினை பச்சை புத்தகம் என்ற பெயரில் மூன்று பதிப்புக்களாக வெளியிட்டார். பச்சை புத்தகத்தின் முதல் பாகம் ஜனநாயகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் -மக்கள் அதிகாரம் என்ற பெயரிலும்; பாகம் இரண்டு பொதுவுடமைக் கோட்பாட்டின் பொருளியல் பிரச்சினைகள் என்ற பெயரிலும்; மூன்றாவது பாகம் மூன்றாம் பிரபஞ்ச கோட்பாட்டின் சமூக அடித்தளங்கள் என்ற பெயரிலும் வெளியிடப்பட்டன.

இவரின் கோட்பாடுகளை உலகின் பல முஸ்லிம் நாடுகளிலும் மட்டுமல்ல முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் லிபிய தூதுவராலயங்கள் மூலமும் அவர்களுடன் தொடர்புகள் கொண்ட சமூக ஸ்தாபனங்கள் மூலமும் அங்கு வாழும் முஸ்லிம்களின் தாய்மொழியில் பிரசுரித்து விநியோகமும் செய்ய ஒழுங்க செய்தார், அந்த வகையில் இலங்கையிலும் இவரின் பச்சை புத்தகம் பச்சை வண்ண அட்டையுடன் சிறிய கையடக்கமான ( மாவோவின் கோட்பாடுகள் என்று சீனா வெளியிட்ட சிவப்பு புத்தக அளவில் ) புத்தகமாக பிரசுரிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இஸ்லாமிய மதத்தினடிப்படியில் தனது அதிகாரத்தினை தக்க வைக்கும் வியூகங்களை வகுத்து பாரமரிய இஸ்லாமிய சமயத்துக்கும் தீவிர புதிய அரசியல் விளக்கமளிக்கும் கைங்கரியத்தினூடாக முஸ்லிம் மத நிறுவனங்கள் மதப பெரியார்களின் எதிப்பினையும் கடாபி சம்பாதிக்க நேரிட்டது. இதன் காராணமாக ஏற்பட்ட எதிர்ப்பினை முறியடிக்க லிபிய இஸ்லாமிய சகோதரத்துவ இயக்க தலைவரையும் கடாபி தூக்கிலிட்டார்.

அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு சவால் விட்ட கடாபி இறுதியில் சதாம் ஹுசைன் தோல்வியுற்றதும் ஈராக் மீதான அமரிக்க பிரித்தானிய ஆக்கிரமிப்பின் பின்னர் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி ப்ளைர் மூலம் மேற்குலகுடன் லோக்கர்பீயுடன் சிதைந்துபோன உறவை மீளக் கட்டி எழுப்பினார் , என்றாலும் தமது சொந்த நாட்டில் எழுந்துள்ள சவால்களை முறியடிக்க பலாத்காரத்தை பிரயோகிக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளார் கடாபி, பாவம் பின் லேடன் இப்போது அவருக்கும் கைகொடுக்க தேவைப்படுகிறார். ஆனால் அமெரிக்கா பிரித்தானிய ஜெர்மனி இத்தாலி என்பன கடாபியின் ஆட்சி மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதை அவர்களின் கூட்டு முன்வரைவுகள் வெளிப்படுத்துகின்றன. வழக்கம் போல் பேராசிரியர் சொம்ஸ்கி (Noam Chomsky) சொல்வதுபோல் அமெரிக்கா வழக்கம்போல் இறுதியில் கட்சி மாறியிருக்கிறார்கள்.

இலங்கைக்கும் லிபியாவுக்கு மிடைலான தொடர்புகள் பற்றிய விடயங்களும் சுவாரசியமானவை , மேலும் அராபிய கோத்திரங்களின் அரசியல் செல்வாக்குகள் ஆளுமைகள், இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் எதிர்கால அரசியல் ஆரூடங்கள் பற்றி 1954 தொடக்கம் 1957 வரையான காலப்பகுதியில் லிபிய பிரதம மந்திரியாகவிருந்து கடாபியின் லிபியாவில் வாழ விரும்பாமல் அல்லது முடியாமல் இலண்டனில் நான்கு தசாப்தங்களுக்கு அஞ்சாதவாசம் புரிந்த அமீர் முஸ்தபா பென் ஹலீமை (Amir Mustafa Ben Halim) தொடர்பு கொள்ள முயன்ற போது; அவர் இப்போது துபாயில் இருப்பதால் விரைவில் அவரை நேர்கண்டு உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்வரை ..

எஸ்.எம்.எம் பஷீர்

sbazeer@yahoo.co.uk


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக