புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_c10மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_m10மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_c10 
42 Posts - 63%
heezulia
மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_c10மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_m10மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_c10மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_m10மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_c10மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_m10மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 17, 2011 10:41 am

இறுக்கக் கட்டியிருக்கும் அவரது மண்டைக்குள் இருப்பதில் கொஞ்சம் வெளிவந்திருக்கிறது. பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டு கள்ளமௌனம் சாதித்துக் கொண்டும், அவ்வப்போது, ‘எனக்குத் தெரியாது’, ‘விரைவில் சரி செய்யப்படும்’, ‘பரிசீலனை செய்கிறது அரசு’ என்று இரண்டொரு வார்த்தைகளால் முனகிக்கொண்டும் இருந்த இந்தியப் பிரதமர் நேற்று காலை 11 மணிக்கு , அவரது இல்லத்தில் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர்களுக்கு பேட்டியளித்து இருக்கிறார்.


ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவகாரங்கள் தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லையென்றும், தனக்கும் அதற்கும் எப்போதும் சம்பந்தமில்லை என்றும் சொல்லி இருக்கிறார். சம்பந்தப்பட்ட முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு தனது அரசு சித்தமாக இருப்பதை தெரிவித்திருக்கிறார். ஆ.ராசாவை திரும்பவும் அமைச்சராக்கியதற்கு கூட்டணி அரசுக்காக செய்துகொண்ட சமரசமே காரணம் என்றிருக்கிறார். தான் ஒன்றும் நொண்டி வாத்து அல்ல என மறுத்திருக்கிறார். சிறு சிறு தவறுகள் தன்னிடம் இருந்திருக்கலாம், ஆனால் மற்றவர்கள் சொல்வது போல குற்றவாளி அல்லவென்று சொல்லி சீசரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே இருக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். தன் மீது எந்த களங்கமுமில்லை என்பதை அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் செய்துகொண்டு இருந்தன. ஆனால், அவரது முகம் கிழிந்து தொங்கியதையும், வார்த்தைகள் நாற்றமெடுத்ததையுமே பார்க்க முடிந்தது.

ஊழலும், விலைவாசி உயர்வும் நாட்டில் முன்னுக்கு வந்துள்ள இரு வேறு பிரச்சினைகள் என்று சொல்லிய அவர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழலைத் தடுக்க முடியாது எனவும் ஒருக் கட்டத்தில் சொல்கிறார். நான் மட்டுமல்ல, யார் வந்தாலும் இதுதான் கதி என்பதே அதன் அர்த்தமாயிருக்கிறது. சுனாமியைப் போல, புயலைப் போல அவையெல்லாம் இனி இயற்கைச் சீற்றங்கள் என்னும் லேபிள்களில் அடங்கும் என்று சொல்லிவிட்டார். ஜான் பெர்கின்ஸ் எழுதிய ‘அமெரிக்கப் பேரரசு’ புத்தகத்தின் பக்கங்களும், அதில் வந்த சில முகங்களுமே இந்த நேரத்தில் உள்ளுக்குள் ஓடுகிறது.

அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மானியங்களால் இந்த அரசுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றதுதான் இந்த ஊழலும் என்று விளக்கம் அளிக்கிறார். அதாவது, உணவுதானியம், உரம், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தையும், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டையும் ஒரு தராசில் நிறுத்திவைத்து தேசத்தின் முன்னே காட்டுகிறார். அதாவது, 2ஜீ அலைவரிசையை, தாங்கள் விருப்பப்பட்ட பெரும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததும் மானியம் என்கிறார். என்ன புத்தி இது?

மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. பிரதமர் மன்மோகனன்சிங்கிற்கு இப்போதும் நெருடலாகவும், உறுத்தலாகவும் இருப்பது, கோடி கோடியாய் ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. இந்த நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு, அன்றாடங்காய்ச்சிகளுக்கு மானியமாய் கொடுப்பதன் மூலம் ஏற்படும் வருமான இழப்புத்தான். இந்த ஒரு ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட 1.76 லட்சம் கோடியைக்கொண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் இரண்டு முழு ஆண்டுகளுக்கு முழுமையான உணவு மானியம் வழங்க முடியும் என்கிறார் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாரம் யெச்சூரி.

இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார நிபுணர்?
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார மேதை?
பெரும் ஊழல்களால் தேசத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிற- பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கிற- ஒரு ஆபத்தான் பொருளாதார அடியாள்.

மாதவராஜ்.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 17, 2011 11:27 am

ஒவ்வொரு இந்தியனும் விளித்துக்கொள்ள வேண்டும்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 17, 2011 1:19 pm

இந்த அடியாள் தான் 15 பில்லியன் கோடி வர்த்தகம் செய்த இந்தியாவை இன்று 250 பில்லியன் கோடி வர்த்கம் செய செய்தவர் .இவரால்தான் என்றாவது ஒருநாள் அரிசி சாதம் பார்த்த இந்தியன் இப்போது எப்போதும் அரிசி சாதம் பார்க்க மிக மிக்கிய காரணம் .இவர்தான் மொத்த பொருளாதார தாரலாமய மாக்கலுக்கு முக்கிய காரணம் .இந்தியாவின் வறுமை குறைய இவரின் பங்கு மிக அதிகம் .

ராம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 1:28 pm

மானியங்களால் இந்த அரசுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றதுதான் இந்த ஊழலும் என்று விளக்கம் அளிக்கிறார்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 17, 2011 1:42 pm

மன்மோகனால் இந்தியா வறுமை ஒழிந்ததா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 17, 2011 2:07 pm

rarara wrote:இந்த அடியாள் தான் 15 பில்லியன் கோடி வர்த்தகம் செய்த இந்தியாவை இன்று 250 பில்லியன் கோடி வர்த்கம் செய செய்தவர் .இவரால்தான் என்றாவது ஒருநாள் அரிசி சாதம் பார்த்த இந்தியன் இப்போது எப்போதும் அரிசி சாதம் பார்க்க மிக மிக்கிய காரணம் .இவர்தான் மொத்த பொருளாதார தாரலாமய மாக்கலுக்கு முக்கிய காரணம் .இந்தியாவின் வறுமை குறைய இவரின் பங்கு மிக அதிகம் .

ராம்
இவர் வரமுதல் இந்தியாவில் எல்லோரும் பட்டினியால் செத்துக்கொண்டு இருந்தார்களா ????இவர் வந்தபின்னர் பட்டினிச்சாவு ஒழிந்துவிட்டதா????இந்தியாவினது உலகமயமாக்கலை செய்தது இவரா?உலகமயமாக்கலுக்கு பின்னர் இந்தியாவில் எத்தனை தொழிலதிபர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என்று தெரியுமா ?இந்தியாவில் வறுமை குறையவில்லை .எல்லோரும் சோறு சாப்பிடுகிறார்கள் என்றால் மதுரையில் ஒருவர் (பெயர் நினைவில்லை )உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறார் கேள்விப்பட்டதில்லையா ?டெல்லியில் வீதி வீதியாக படுத்திருக்கிரார்களே ?
இங்கே சோத்தைப்போட்டு மக்களை சொம்பேறிகளாகவே வைத்திருக்கிறார்களே தவிர வறுமை குறையவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 5:45 pm

பயனுள்ள விவாதங்கள்! மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! 677196

தொடரட்டும்!
படிப்பவர்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும்!



மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்! !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக