புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_lcap  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_voting_bar  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_lcap  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_voting_bar  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_lcap  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_voting_bar  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_lcap  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_voting_bar  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_lcap  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_voting_bar  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்! மு.க


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Feb 2011 - 15:47

பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்! பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு மாத்திரமல்லாமல் ஏழை எளியோருக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ அதுதான் பொற்காலமாகும்!

கலைமாமணி - பாரதி - எம்.எஸ்.சுப்புலட்சுமி - பாலசரசுவதி - சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலைஞர் உரை!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை தமிழ்நாடு இயல்இசை நாடகமன்றம் - கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கலைமாமணி , பாரதி - எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசுவதி மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றுகையில் பொற்காலம் என்பது கலைஞர்களு க்கு என்று மாத்திரம் இல்லாமல் ஏழை, எளியோருக்கும் என்றைக்கு நற்காலம் பிறக் கிறதோ அதுதான் பொற்காலமாகும் என்று உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கலை மாமணி - பாரதி, எம்.எஸ். சுப்புலட்சுமி, பால சரசுவதி மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:


தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் பாரதியார் பெயரால் விருது - எம்.எஸ். சுப்புலெட்சுமி பெயரால் விருது - பாலசரஸ்வதியின் பெயரால் விருது - மற்றும் கலை மாமணி விருதுகள் - சின்னத்திரை விருதுகள் ஆகியவற்றை வழங்குகின்ற இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்புக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்து, விருது பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பாரதி விருது பெற்ற அன்புக்குரிய நண்பரும், புரட்சி எழுத்தாளருமான நண்பர் ஜெய காந்தன் அவர்கள், "இது ஒரு பொற்காலம்" என்று இந்த விழாவிலே குறிப் பிட்டார்கள். பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு - நடிகர்களுக்கு - என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ - என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கின்ற நிலைமை ஏற்படுகிறதோ - அதுதான் பொற்காலமாகும்.

ஜெயகாந்தன் ‘இது பொற்காலம்’ என்றது எனக்கு அவர் வழங்கிய சிறந்த பரிசு


இதைப் பொற்காலம் என்று நான் சொன்னால் - "நீ அப்படித்தான் சொல்லிக் கொள்வாய்; ஏனென்றால், ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், இந்த ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று நீ கூறுவதிலே ஆச்சரியமில்லை" என்று நீங்கள் எண்ணக் கூடும் அல்லது சொல்லக் கூடும். ஆனால், நண்பர் ஜெயகாந்தன் அவர்கள் எதையும் விமர் சிக்கக் கூடியவர்; நாணயமாக விமர்சிக்கக் கூடியவர்; நேர்மையாக விமர்சிக்கக் கூடிய வர்; அச்சத்திற்கு ஆட்படாமல் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பாராமல், பட்டதை "பட்" என்று சொல்லக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர் என்னுடைய நண்பர் - எழுத்து வேந்தராகத் திகழ்கின்ற ஜெயகாந்தன் அவர்கள். அவர்கள் இதைப் பொற்கால ஆட்சி என்று சொன்னதை - தமிழகத்திற்கு இது பொற்காலம் என்று கூறியதை - இன்றைக்கு உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட பொன்னாலான பதக்கத்தை விட - அழகாக வரைந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பட்டயங்களை விட - சிறந்த பரிசாக (கைதட்டல்) எனக்கு அவர் வழங்கிய பரிசாக நான் நன்றியோடு அதை எடுத்துக் கொள்கிறேன். (கைதட்டல்) நல்லவர்களுடைய வாழ்த்து - ஜெயகாந் தனைப் போன்ற தமிழ் வல்லுநர்களுடைய வாழ்த்து - இந்த ஆட்சிக்கு - எங்களுக்கு என்றென்றும் தேவை.

இங்கே நம்முடைய இளையராஜா அவர்களுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெயரால் அமைந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. பாரதியாருடைய பெயரால் அமைந்த விருது ஜெயகாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலசரஸ்வதியின் பெயரால் அமைந்த விருது பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்குரியவர் களுடைய பெயர்களை மாத்திரமல்ல; அவர்களையே நான் நேரடியாக அறிந்தவன். அவர்களோடு பழகியவன், அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தவன். அவர்களால் பாராட்டப்பட்டவன். இதிலிருந்து எத்தனை தலைமுறை நான் கடந்து வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட தலைமுறைக் கலைஞனாக - தலைமுறைகள் பலவற்றைக் கண்ட கலைஞனாக - வாழ்கிற நான் - பாரதி விருது பெற்ற ஜெயகாந்தனை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். பாரதியைப் பற்றி விவரித்து, அவருடைய சிறப்புகளைச் சொல்லி, அவருடைய எழுச்சிமிக்க பாடல்களை எடுத்துக் காட்டி வர்ணிக்கத் தேவையில்லை. பாரதி என்றாலே பாரதி தான். அந்தப் பாரதியின் பெயர் - இந்திய நாட்டினுடைய விடுதலையை நினைக்கும் போதெல்லாம் தமிழகத்திலே ஒவ்வொரு தமிழனுக்கும் நினைவிலே வரக்கூடிய பெயர். அந்தப் பாரதியின் பெயரால் அமைந்த விருதை என்னுடைய அருமை நண்பர் ஜெயகாந்தனுக்கு அளித்ததில் - கொடுத்த வர்களுக்குத் தான் பெருமையே தவிர, பெற்றவர்களுக்குப் பெருமையல்ல என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட (கைதட்டல்) விரும்புகிறேன்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரால் அமைந்த விருது இசைஞானி இளையராஜா அவர்களு க்கு வழங்கப்பட்டி ருக்கிறது. இங்கே உரையாற்றியவர்களுக்குச் சிறப்புப் பெயர்கள், பட்டப் பெயர்கள் - இவைகள் எல்லாம் அவர்களுடைய பெயர்களோடு இணைத்துக் கூறப்பட்டன.

நம்முடைய தம்பி வைரமுத்துவை உரையாற்ற அழைத்த போது, "கவிப்பேரரசு" வைர முத்து உரையாற்றுவார் என்று இங்கே அழைக்கப்பட்டு, அவர் உரையாற்றினார். அந்தக் கவிப் பேரரசு என்ற சிறப்பு பட்டத்தை, அவருடைய கவிதை நூல்களை, அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்ட நூல்களை, நான் படித்துப் பார்த்து மெய்மறந்து நான் பாராட்டிய வாசகம் தான் "கவிப்பேரரசு" என்பதாகும். கவியரசுகள் இருக்கிறார்கள் - தமிழ்நாட்டில். அந்தக் கவியரசுகளுக் கெல்லாம் பேரரசாக வைரமுத்து விளங்குகிறார் என்று "கவிப்பேரரசு" என்று நான் அன்றைக்கு வாழ்த்தினேன்.

அதைப்போலத்தான், நான் பட்டம் சூட்டி - அது நிலைத்து, புகழ் பெற்றவர்கள் பலர் உண்டு தமிழகத்தில். அதிலே ஒருவர்தான் இசைஞானி இளையராஜா அவர்கள் என்று சொன்னால், அது மிகையாது. காரைக் குடியில் நடைபெற்ற ஒரு விழாவில் இளையராஜா விற்கு - "இசைஞானி" என்று இந்தப் பட்டத்தை வழங்குவதற் காக, சென்னையிலே யிருந்து, 300 கி.மீ. தூரத்திற்கும் அதிகமாக நான் காரிலே பயணம் செய்து, காரைக்குடி யில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் - "இசைஞானி" என்ற இந்த விருதினை - பட்டத்தை அவருக்கு வழங்கினேன். அது இன்றும் நிலைத்து நின்று - வளர்ந்து வருகிற பட்டமாக ஆகியிருக்கின்றது.

பாலசரசுவதி அம்மையார் அவர்கள் நாட்டியக் கலையை எந்தளவிற்குச் சிறப்புற இந்தியத் திருநாட்டில் முத்திரைப் பதிக்கின்ற வகையில் நிலைநாட்டினார் என்பதையும், அவர் மறைந்த பிறகு - அவருக்கு ஈடாக ஒருவர் தோன்றக்கூடுமோ தமிழகத்தில் என்று எண்ணியிருந்த எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் - எங்களது எண்ணத்தை மாற்றி - "இதோ, பாலசரசு வதியினுடைய உருவத்தில் நான் இருக்கிறேன்" என்று நம்முடைய பத்மா சுப்பிரமணியம் அவர்கள் அந்தக் கவலையைப் போக்கியிருக்கிறார்கள். எனவே தான், அந்த விருது இன்றையதினம் பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டி ருக்கிறது.

இசை ஞானத்தை அப்பழுக்கில்லாமல் பெற்றவர் நம்முடைய இளையராஜா


எனவே, பாரதி விருதானாலும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருதானாலும், பாலசரசுவதி விருதா னாலும் - எதை ஒப்பிட்டு நீங்கள் அவருக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது வழங்கினீர்கள் என்று கேட்டால், சங்கீத ஞானத்தை ஒப்பிட்டு; குரலை ஒப்பிட்டு அல்ல. இசைஞானியினு டைய குரலுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமியினுடைய குரலுக்கும் உள்ள வேறுபாட்டை நானும் அறிவேன் - நீங்களும் அறிவீர்கள் - ஏன், அவரும்கூட அறிவார். ஆனால், எம்.எஸ். சுப்பு லட்சுமியினுடைய இசைஞானம் - அந்த இசை ஞானத்தை அப்பழுக்கில்லாமல் அப்படியே பெற்றவர் நம்முடைய இளையராஜா என்பதிலே (கைதட்டல்) எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. அவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது கொடுத்ததிலே நான் பெருமையடைகின் றேன் - மகிழ்ச்சியடைகின்றேன். அவருடைய தொண்டு மேலும் சிறக்க, இசை மேலும் புகழ் பெற, இந்த நாள் - விருது வழங்கிய இந்த நாள் - பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

ஜெயகாந்தன் அவர்களுக்கு - இனிமேல் அவர் எழுதி - அவர் எழுத்தாளர் என்று யாரும் ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஜெயகாந்தன் என்றாலே, அவர் எழுத்தாளர் தான்; புரட்சிகரமான எழுத்தாளர் தான் என்று நாடு நன்கறியும். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு காலத்தில் எங்களைப் போன்றவர்கள் எழுதத் தொடங்கி - அவைக ளெல்லாம் எங்கள் இயக்கத் தோழர்களால் படிக்கப் பெற்றபோது, ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக் கொண்டவரல்ல; எங்களை ஏற்றுக் கொள்ளாதவர்; எங்களுடைய எழுத்துக்களை அன்றையதினம் பாராட்டாதவர்; இன்றைக்குப் பாராட்டுகிறார் என்றால், நாங்கள் அப்படிப் பட்ட பாராட்டைப் பெறுவதற்கு குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்கின்ற அளவிற்கு அவர் எங்களைத் தாக்கி, மறுத்து எழுதியபோதெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றோம். ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் பொருள் இருக்கும். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். அவருடைய விமர்சனத்தில் தேவையற்ற வெறுப்பு இருக்காது, உண்மையை உள்ளவாறு எடுத்துக்காட்டி அதை விளக்கக் கூடியவர். இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் எழுத வேண்டுமே என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக் கொள்கிற அளவுக்கு என்னுடைய எழுத்து இருக்கிறதென்றால், நான் கொடுத்து வைத்தவன் - நான் என்னையே பாராட்டிக் கொள்ளக் கூடிய அளவிற்கு அவர் இன்றைக்கு இந்த விழாவிலே இது பொற்காலம் என்று குறிப்பிட்டார். பொற்காலத்தைக் கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகின்ற சில பேர் இன்று நாட்டிலே இருக்கிறார்கள். இதைப் பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தனைப் போன்றவர்களுடைய எழுத்து பயன்படு மேயானால், இது பொற்காலமாகவும் இருக்க வேண்டாம்; கற்காலமாகவும் இருக்க வேண்டாம்; இது தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும் (கைதட்டல்) என்பதைச் சொல்லி, அதற்கு ஜெயகாந்தன் அவர்களுடைய தமிழ்ப் பணி பயன்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பத்மா சுப்பிரமணியம் அவர்கள் கலை மேதை - நாட்டிய மேதை - அவர்களுடைய நடன பாவங்களை - நாட்டிய பாவங்களை நான் பல மேடைகளில் கண்டு ரசித்திருக்கிறேன்; நீங்களும் ரசித்திருக்கின்றீர்கள். அப்படிப்பட்டவருடைய அருமையான புகழுக்கும் - அவருடைய பெருமைக்கும் ஏற்றவாறு இந்த இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பாக விருது வழங்கப் பட்டுள்ளது.

விருது பெறுகிறவர்களுக்கும் மகிழ்ச்சி -வழங்கிய எனக்கும் மகிழ்ச்சி!


இன்றைக்கு ஏறத்தாழ 120 விருதுகள் - சின்னத்திரை கலைஞர்கள் உட்பட அத்தனை பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் கலைமாமணி விருது கள் 75 பேருக்கு மேல் வழங்கப்பட்டிருக்கின்றன. காலை யிலே ஒரு பத்திரிகையிலே பார்த்தேன். "இலவசங்களை வாரி இறைப்பதைப் போல் கருணாநிதி விருதுகளை வாரி இறைத்திருக் கிறார்" என்று ஒரு பத்திரிகையிலே கிண்டலாகப் போட்டிருந்தார்கள். இது ஒரு ஆண்டிற் கான விருதுகள் அல்ல; இரண்டு மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன. இலவசங்கள் என்று சொல்வதின் மூலமாக இந்த விருதுகளை அவர்கள் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆனால், இலவசம் ஒரு ஏழைக்குக் கிடைத்தால், பசி யோடு இருப்பவனுக்குக் கிடைத்தால், இல்லாதவனுக்குக் கிடைத்தால் என்ன மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை இந்த விருதுகளைப் பெறுகிறவர்கள் அடைவதை விட - இந்த விருதுகளை வழங்கிய நான் பெறுகிறேன் என்று நான் அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்கிறேன்.

நான் அவர்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு 125 விருதுகள் தரப் பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகையின் கேலி, கிண்டலுக்குப் பிறகு - நான் அறிவிக் கிறேன் - நீங்கள் எல்லாம் அனுமதித்து, ஆறா வது முறை நான் பொறுப்புக்கு வந்தால் - 125 அல்ல, 225 விருதுகள் (கைதட்டல்) வழங்கப்படும்.

இந்த இனிய தருணத்தில் உங்களையெல்லாம் இந்த விழா மேடையிலே சந்திக்கவும், விழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளவும், நம்முடைய தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தினுடைய நண்பர்களும், கலைஞர் களும் உதவியதற்காக அவர்களுக்கெல்லாம் என்னு டைய வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய விழாவிலே இது யாரோ புதியவர்களுக்குத் தரப்படுகின்ற விருதுகள் தானே, நமக்கென்ன வேலை என்றில்லாமல் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்றவர்கள் எல்லாம் கூட - இவர்களுக்கு வாழ்த்து வழங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இங்கே வந்திருப்பதற்காக அவர்களுக்கும் நான் என்னுடைய நன்றியையும், பாராட்டு களையும் தெரிவித்து இது மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய முறை என்பதையும் எடுத்துச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.



  பொற்காலத்தை கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகிற சிலபேர் நாட்டிலே இருக்கிறார்கள்!  மு.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 18 Feb 2011 - 17:12

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக