ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள்

2 posters

Go down

உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள் Empty உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள்

Post by தாமு Fri Feb 18, 2011 8:26 am

உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள் 06-10 Food-1
‘காலாவதியான மருந்துப் பொருட்கள்’ என்ற புயல் ஓய்ந்து, இப்போது உணவுப் பொருட்களுக்கும் அதே கதிதான் என்ற பூகம்பம் கிளம்பி இருக்கிறது. தமிழகம் முழுக்க சூப்பர் மார்க்கெட்களில் சோதனை.. பல ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்.. என்று செய்தித் தாள்கள் திகிலூட்டிக் கொண்டிருந்த நேரத்தில்தான், நம் அலுவலகத்துக்கு வந்தது அந்தத் தொலைபேசி அழைப்பு!

“சூப்பர் மார்க்கெட்டுக்கெல்லாம் ரெயிடு வர்றாங்கனு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம்” என்று முதலில் தன் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொண்ட அந்த வாசகி மெல்ல மெல்ல விஷயத்துக்கு வந்தார்.

“நான் சென்னையில.. சூளை மேடு ஏரியாவுல இருக்கேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, எங்க ஏரியாவுல இருக்குற ஒரு சூப்பர் மார்க்கெட்ல ஒரு பாக்கெட் பேரீச்சம் பழம் வாங்கினேன். பிரபலமான பிராண்ட்தான் அது. ஆனா, வீட்ல வந்து பிரிச்சுப் பார்த்தா, ஒரே புழுவா இருக்கு. அதே கடையில போய்க் கேட்டேன். ‘அந்த கம்பெனியில போய்க் கேளும்மா’னு சொல்லிட்டாங்க. அன்னில இருந்து அந்த மாதிரி பெரிய கடைகளுக்குப் போறதை விட்டுட்டேன். ‘இப்படிப்பட்ட பெரிய கடைகள்ல வாங்கினா நல்லா இருக்கும்’னு நாம நினைக்கிறது தப்பு. இங்கெல்லாம்தான் பெரிய அநியாயம் நடக்குது. எல்லா சூப்பர் மார்க்கெட்டையும் ரெய்டு பண்ணச் சொல்லுங்க!” என்று பொரிந்து தள்ளினார் அவர்.
உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள் 06-10 Food-3உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள் 06-10 Food-4
உண்மையை அலசி ஆராயாமல் நாம் இப்படி உணர்ச்சிவசப்பட முடியாதல்லவா.. எனவேதான் ‘இதெல்லாம் நிஜம்தானா?’ என்ற கேள்வியோடு சென்னையில் உள்ள சில சூப்பர் மார்க்கெட்டுகளில் ஏறி, இறங்கினோம்.

“இதெல்லாம் சும்மா”

“தரம்தான் எங்களுக்கு உயிர் மூச்சு!”

“தப்பான பொருட்களை விற்றால் எங்க கஸ்டமர்ஸ் சும்மா விட மாட்டாங்க. சுப்ரீம் கோர்ட் வரை இழுப்பாங்க. நீங்கள் கேக்குறதுல லாஜிக்கே இல்லையே!” என்று ஆளாளுக்கு எகிறினார்கள். ஆனால், ஒருவரும் பெயரைத் தரவோ, புகைப்படத்துக்கோ சம்மதிக்கவில்லை.

“அந்த மாதிரி கடைக்காரங்ககிட்ட நேரடியா கேட்டா இப்படித்தான் பேசுவாங்க.. அங்க வேலை பார்க்கிற-வங்களைக் கேட்டுப் பாருங்க.. உண்மை தெரியும்!” என்றார்கள் நம் நட்பு வட்டாரத்து சட்ட நிபுணர்கள். அப்படி ஒருவரைத் தேடிப் பிடித்தோம்.. பெயர், புகைப்படம் மறுத்தவர் மிகவும் நடுநிலையாகவே பேசினார்..

“இது பெரிய கடைகள்ல அதிகமா? சின்ன கடைகள்ல அதிகமானு பட்டிமென்றமெல்லாம் வேண்டாம்ங்க. ரெண்டு இடத்துலயும் உடம்புக்குக் கெடுதலான பொருட்கள் இருக்க வாய்ப்பிருக்கு. அவ்வளவுதான். இப்ப பெரிய கடைகள்னு எடுத்துக்கிட்டீங்கன்னா, அவங்க லோக்கல் ஐட்டங்களை வாங்கி விக்கிறதில்ல. நல்ல கம்பெனி பொருட்களைத்தான் விக்கிறாங்க. லோக்கல் கடைகள்லதான் ஊர், பேர் தெரியாத தோசை மாவு பாக்கெட், ரஸ்னா பாக்கெட்.. இதெல்லாம் வச்சிருப்பாங்க.
உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள் 06-10 Food-5
ஆனா, பெரிய கடைகள்ல சீக்கிரமாவே கெட்டுப் போற மாமிசங்கள், காய்கறிகள், பழங்கள்.. இதெல்லாம் இருக்கு. ஏ.சி இருக்குறதுனால சீக்கிரம் கெடாதுனு நினைச்சு கொஞ்சம் அசட்டையா வச்சிருப்பாங்க. அதெல்லாம் ஆபத்தானதுதான். சில பெரிய கடைகள்ல கூட, வேர்க்கடலை பர்ஃபி, முறுக்கு பாக்கெட், பாப்கார்ன் இதெல்லாம் விக்கிறாங்க. இதெல்லாம் லோக்கல் வெண்டர்ஸ்கிட்ட இருந்துதான் வாங்கியாகணும். அதெல்லாம் எப்போ கெட்டுப் போகுதுனு யாருக்குமே தெரியாது. கஸ்டமர்ஸ் யாராவது வாங்கிப் பார்த்துட்டு சொன்னப்புறம்தான், ஒரு ‘ஸாரி’ சொல்லிட்டு அதையெல்லாம் தனியா எடுத்து வைப்போம்” என்று அசட்டையாக அவர் பேசப் பேச பகீர் என்றது நமக்கு!

இதில் சிறு கடைகளின் நிலைமை என்ன என்பதை அறிய, தமிழக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபனிடம் பேசினோம்..

“கண்கூடாவே நிறைய கடைகள்ல ரெயிடு நடத்தி, நிறைய பொருட்களை அதிகாரிகள் பிடிச்சிருக்காங்க. அதனால நாங்க எதையும் சொல்லி வாதாட விரும்பலை. மளிகைக் கடைக்காரங்க காலாவதி தேதி இல்லாத மாவு பாக்கெட், குளிர்பானம் இதெல்லாம் வாங்கி வச்சிருக்காங்கன்னா, அதுக்கு அவங்க அறியாமைதான் காரணமே தவிர, மக்களை ஏமாத்தணும்ங்கிற எண்ணம் இல்லை. அதையெல்லாம் அகற்ற நாங்க ரெடி. அதுக்கு இப்ப அரசாங்கத்துக்கிட்ட கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கோம். ஆனா, எங்களை மாதிரி வியாபாரிகள்கிட்ட வந்து இந்தப் பொருட்களை பறிமுதல் செய்யிறதை விட, இதையெல்லாம் குடிசைத் தொழிலா பண்றவங்களை அரசாங்கம் நேரடியாவே போய்ப் பிடிக்கலாமேங்கறதுதான் எங்க ஆதங்கம்!” என்றார் அவர் சுருக்கமாக!

ஆனால், வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்னும் கொஞ்சம் துணிச்சலோடு தன் கருத்துக்களை எடுத்து வைத்தார்..

“சின்னச் சின்ன மளிகைக் கடைகளை நடத்துறவங்க, அதிகமா படிப்பறிவில்லாதவங்க. அதனாலதான் அரசாங்கத்துல ஆரம்பிச்சு எல்லாருக்கும் இவங்கன்னா இளக்காரமா போயிடுது. பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள்ல ‘ஆஃபர் விலை’னு சொல்லி கம்பெனிக்காரங்க போட்டிருக்கற விலைக்கு மேல இன்னொரு லேபிளை ஒட்டி விக்கிறதை நீங்களே பார்த்திருப்பீங்க. அந்த லேபிள்ல பல சமயம் காலாவதி தேதி கூட மறைஞ்சு போயிடும். அப்படி லேபிள் ஒட்டுறது சட்ட விரோதம்தான். ஆனா செய்றாங்களே!

பெரிய பெரிய நிறுவனங்கள்.. சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒரு விலை.. சின்ன கடைகளுக்கு ஒரு விலை..னு நடந்துக்குறாங்க. அதனால பல பிரச்னைகள் வருது. அப்படிப்பட்ட ஆஃபர்கள் கிடைக்கும்போது சூப்பர் மார்க்கெட்காரங்க எக்கச்சக்கமா பொருட்கள் வாங்கி அடுக்கி வச்சுடறாங்க. அது வித்துத் தீர்றதுக்குள்ள காலாவதி தேதி நெருங்கிடுச்சுன்னா, உடனே ஆஃபர் ஸேல் போட்டுடறாங்க. அது வாங்கி ரெண்டே நாள்ல கெட்டுப் போனாலும் அதைப் பத்தி அவங்க கவலைப்படுறதில்ல. அந்த ஸேல்லயும் விற்காததைத்தான் மறைமுகமா சில்லரை வியாபாரிகள்கிட்ட தள்ளி விட்டுடறாங்க. எல்லா வியாபாரிகளுக்கும் ஒரே விலைனு இருந்தா, சின்ன வியாபாரிகள் ஏன் அவங்ககிட்ட போய் வாங்கப் போறாங்க?

இதுல இன்னொரு முக்கியமான விஷயத்தை யோசிக்கணும். அவங்களை மாதிரி காலாவதி ஆகப் போற பொருட்களை மக்கள் தலையில கட்டுற வேலையை, எந்த சின்ன வியாபாரியும் செய்ய மாட்டான். ஏன்னா, வீட்டுப் பக்கத்துல இருக்குற ரெகுலர் கஸ்டமர்ஸை நம்பிப் பிழைக்கிறவன் அவன்!” என்று ஆணித்தரமாகப் பேசி முடித்தார் அவர்.

இவர்களின் கருத்துக்களைக் கேட்ட பிறகு ஒரு முக்கியமான சந்தேகம் நம் மனதைக் குடைந்தது.. “அப்படியென்றால், குடிசைத் தொழில் மூலம் உருவாகும் இட்லி, தோசை மாவு, வேர்க்கடலை பர்ஃபி, முறுக்கு, ஊறுகாய்.. இதெல்லாமே உடலுக்கு ஊறு விளைவிப்பவையா?” குலை நடுங்க வைக்கும் இந்தக் கேள்வியோடு, இந்திய நுகர்வோர் சங்கத்தின் நிறுவனரான தேசிகனை சந்தித்தோம்..

“இன்னைக்கு சென்னையில விக்கற அறுபது சதவிகிதம் உணவுப் பொருட்கள் கலப்படமாவும் காலாவதியாகியும்தான் இருக்கு. மனிதாபிமானம்ங்கிறது யாருக்கும் கொஞ்சம் கூட இல்லை. அவங்களுக்கு ரெண்டு ரூபா லாபம் கிடைச்சா போதும்.. அதனால பத்துப் பேரு செத்துப் போனாலும் கவலை இல்லை. இதுதான் இன்னிக்கு வியாபார தருமம்!” என்று எடுத்த எடுப்பில் அதிர்ச்சி தந்தவர், மேலும் தொடர்ந்தார்..

“இப்ப துவரம்பருப்போட விலை அதிகமா இருக்கறதால அதுல கேசரி பருப்பை கலப்படம் பண்ணி விக்கிறாங்க. வெளி மாநிலங்கள்ல விளையுற இந்தப் பயிர் முப்பது ரூபாதான்ங்கிறதால, பல கடைகள்ல இதக் கலக்குறாங்க. இந்தப் பருப்பை ஒருத்தர் மூணு மாசம் சாப்பிட்டா, பக்கவாதமே வரும்னு சொல்றாங்க. அதைப் பத்தி யாருக்கு என்ன கவலை?

மஞ்சளே ஒரு கிருமிநாசினி. ஆனா இப்ப மஞ்சப் பொடியில சுதான் 3-னு ஒரு சாயத்தைக் கலந்து அதையும் விஷமாக்கிடறாங்க. அதனால புற்றுநோயே வரலாம்.

சாதாரண உணவுப் பொருட்களையே ஃப்ரிட்ஜ்ல வச்சு சாப்பிட்டா உடம்புக்குக் கெடுதல்னு சொல்றாங்க. ஆனா, பெரிய பெரிய கடைகள்ல எல்லாப் பொருட்களையும் ஐஸ்ல வச்சு பதப்படுத்திதான் விக்கிறாங்க. மீன்காரங்ககிட்ட மீன் வாங்கினா, ‘எப்போ புடிச்சது? ஐஸ்ல வைக்காத மீனா?’னு தொட்டுத் தொட்டுப் பார்த்து வாங்குறோம். ஆனா, அதே மீனை பதினைஞ்சு நாள் கழிச்சு வாங்கி, சூப்பர் மார்க்கெட்க்காரன் ஃப்ரீஸர்ல வச்சு கெட்டியாக்கித் தர்றான்.. பேரம் பேசாம வாங்கிட்டு வர்றோம். அப்படிப்பட்ட கெட்டுப் போன மாமிசங்களை சமீபத்துலதான் பறிமுதல் பண்ணியிருக்காங்க. அதெல்லாம் வயித்துக்குள்ள போனா பரலோகம் பக்கத்துலதான். ஆனா, அதைக்கூட இவ்வளவு நாளா நாம தாங்கிட்டு இருக்கோம் பாருங்க.. அது பெரிய சாதனை!

கவர்மென்ட் இப்போதான் இதைப் பத்திக் கவலைப்படுது. எப்பவுமே கவலைப்படும்னு சொல்ல முடியாது. இப்படித்தான் 2002-ல குட்கா பாக்குகளை விக்கக் கூடாதுனு தடை போட்டாங்க. ஊரெல்லாம் ரெய்டு போயி டன் டன்னா பறிமுதல் பண்ணினாங்க. இப்ப என்னாச்சு.. உங்க வீட்டுக்கு எதிர்க் கடையில பான், குட்கா விக்கலையா? இப்ப மட்டும் அது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கலையா?

இப்ப வாட்டரு பாக்கட் சுகாதாரமில்லனு அழிச்சாங்க. ஆனா இன்னிக்கும் மெரினா பீச்சோரம் மண்ணத் தோண்டி தண்ணி வித்துட்டுத்தான் இருக்காங்க. அதெல்லாம் சுகாதாரமானதா? இன்னிக்கு ரோட்டோரக் கடைகள்ல விக்கிற பண்டங்கள்ல அவங்க யூஸ் பண்ற எண்ணெய், கண்டிப்பா ஸ்டார் ஹோட்டல்ல நாலஞ்சு முறை பயன்படுத்தப்பட்டதாகத்தான் இருக்கு. அதுல உணவு சமைச்சா கன்ஃபார்மா கேன்ஸர் வரும்னு சொல்றாங்க. அதையெல்லாம் ஏன் ரெய்டு பண்ணி அழிக்கலை?

கவர்மென்ட்டைப் பொறுத்தவரைக்கும், இது காலாவதி உணவுப் பொருட்களுக்கான சீஸன். அதான் பறிமுதல் பண்றாங்க. எல்லாக் காலத்துலயும் கடைக்காரங்ககிட்ட உணவுப் பொருட்களை வாங்கி உபயோகிக்கப் போறவங்க மக்கள்தான். அவங்கதான் இந்த விஷயத்துல விழிப்பா இருக்கணும். ஒரு உணவுப் பொருள் கொட்டுப் போயிருக்குமோனு சந்தேகம் வந்தா, உடனே அதைப் பரிசோதிச்சுப் பார்த்து ஆக்ஷன் எடுக்குற அரசாங்கமா ஒவ்வொரு நுகர்வோரும் மாறணும்!” என்றவர், தங்கள் அமைப்பின் இயக்குனரான சந்தானராஜனை அறிமுகப்படுத்தி வைத்தார்.. அரசு உணவுப் பகுப்பாய்வாளராக 36 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், உணவுப் பொருட்களைப் பரிசோதித்துப் பார்ப்பதைப் பற்றி சற்று விரிவாகப் பேசினார்..

“இன்னிக்கு ஒரு உணவுப் பொருளை ஒரு நுகர்வோர் வாங்கி சோதனை பண்ணி அதை நிரூபிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். அம்பது ரூபாய்ப் பொருளை டெஸ்ட் பண்ண கட்டணமே 1500 ரூபாய் ஆகும். முடிவுகளை அவங்க தர்றதுக்கு முழுசா 30 நாள் ஆயிடும்.



அது மட்டுமில்ல.. சென்னையில இப்படிப்பட்ட பரிசோதனை மையங்களே மொத்தம் ரெண்டுதான் இருக்கு. தமிழ்நாடு முழுக்க மொத்தம் ஏழுதான் இருக்கு. கன்யாகுமரியில ஒருத்தர் தான் வாங்கின உணவுப் பொருளை சோதிக்கணும்னா, அந்த ஊர்ல அது முடியாதுங்கறதுதான் பதில்.

மத்திய அரசு அடிக்கடி டி.வியில ‘விழித்திடுவீர் நுகர்வோரே.. விழித்திடுவீர்!’னு விளம்பரம் கொடுத்தா மட்டும் போதாது. இந்த மாதிரி வசதிகளை அதிகப்படுத்தணும். கட்டணத்தையும் சாமானிய மக்களுக்கு ஏத்த மாதிரி குறைக்கணும். தன்னை ஏமாத்தின கடை மேல ஒரு நுகர்வோர் கேஸ் போட்டா, கோர்ட் அதை பத்து வருஷமா இழுக்காம உடனடியா தீர்ப்பு சொல்லணும். இதெல்லாம் நடந்தா இந்த நிலைமையை மாத்தலாம். இல்லைன்னா, தினம் தினம் உணவுங்கற பேர்ல விஷத்தை சாப்பிட்டுட்டு, உடம்பு அதைத் தாங்குற வரைக்கும் வாழ்ந்துட்டுப் போக வேண்டியதுதான்” என்றார் அவர்.

இத்தனை காசு கொடுத்து வருடத்துக்கு ஒன்றிரண்டு பேராவது உணவுப் பொருட்களைப் பரிசோதிக்கிறார்களா என்று அரசுத் தரப்பில் விசாரித்தோம். இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன..

“நீங்க வேற.. சுகாதாரத் துறை அதிகாரி அதைப் பரிசோதிக்கணும்னாலே நிறைய சிக்கல் வரும். உணவுப் பொருளை சாம்ப்பிள் கொடுக்கும்போதே, ‘நீங்க யாரு? எதுக்காக இதை சோதிக்கிறீங்க? இது எந்தக் கடையில வாங்கினது?’னு பரிசோதனை மையத்துல கேட்பாங்க. அந்தத் தகவல் எல்லாம் ‘எப்படியோ’ சம்பந்தப்பட்ட கடைக்குப் போயிடும். அரசியல்ரீதியாவும் வேற மாதிரியும் எக்கச்சக்க பிரச்னைகள் வரும். அதனால பொதுமக்கள் எல்லாம் பரிசோதனை பண்றதுங்கற பேச்சுக்கே இடமில்ல!” என்றார்கள் முகம் மறைத்த சில அரசுப் பணியாளர்கள்.

இப்போது நடக்கும் ரெய்டுகள், ஏதோ ‘பெரிய உத்தரவின்’ பேரில்தான் நடக்கிறதாம். ஏற்கெனவே மீடியாக்களில் அடிபட்ட காலாவதி மருந்துப் பொருள் விஷயத்தை திசைதிருப்பத்தான் இந்த உணவுப் பொருள் ரெய்டு நடத்தப்படுவதாகக் கூட அரசுத் தரப்பில் சிலர் பேசிக் கொள்கிறார்கள். ‘விரைவிலேயே இதை திசைதிருப்ப இன்னொரு விஷயம் வந்து விடும்’ என்று சிரித்துக் கொண்டே கமென்ட் அடிக்கிறார்கள் இந்த ஸ்டன்ட்டுக்கெல்லாம் பழகிப் போன அனுபவசாலிகள்.

யப்பா.. இது உயிர் போற விஷயம்ப்பா!
- பாஸ்கர் படங்கள்: த.சங்கரன், சுந்தரம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள் Empty Re: உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள்

Post by சிவா Fri Feb 18, 2011 8:29 am

கண் துடைப்பிற்காக மட்டுமல்லாமல் மக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சியே!


உயிருக்கே உலை வைக்கும் உணவுப் பொருட்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்மார்களின் உணவுப் பழக்கம் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்!
» ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை
» பள்ளி மாணவர்களிடம் ரூ. 3 கோடி பொருட்கள் பறிமுதல்
»  அத்யாவசிய பொருட்கள், விலை உயர்வு, லோக்சபா, ராம்விலாஸ் பஸ்வான்,
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum