புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
21 Posts - 64%
heezulia
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
148 Posts - 55%
heezulia
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
2 Posts - 1%
prajai
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_m10சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் - தொடர் 1


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Feb 17, 2011 12:40 am

சீமான் வைகோ சந்திப்பிற்கு பிறகு தமிழக அரசியலில் புதிய பரப்பரப்பு தொற்றி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றாத வரை தமிழனுக்கு விடிவில்லை.என்று சீமான் பரப்புரை செய்து வந்தார் . அதே நேரத்தில் தி.மு.க தமிழனத்தை அழித்த துரோகி என்றும், அ.தி.மு.க தமிழனின் எதிரி என்றும் கூறி வந்த சீமான் திடிரென்று வை. கோ சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க வை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

இவர்கள் சந்திப்பிற்கு ஒரு நாள் முன்னால் தான் தனது பலத்தை அதிமுக உணர வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்களின் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியிருந்தார். இதன் மூலம் அவர் தேர்தலில் தான் அதிக இடம் எதிர்பார்ப்பதை மறைமுகமாக ஜெயலிதாவிற்கு உணர்த்தியிருக்கிறார். அதை பற்றி சிறிது அலசி பார்ப்போம்.

ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது அதற்காக எதுவும் செய்யாமல் ஒதுங்கி நின்றவர் விஜயகாந்த். திரைப் படங்களில் வீர வசனம் பேசி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர் போல் தன்னை காட்டி கொண்டு வெளி நாடுகளில் தனது படங்களின் விறபனையை உயர்த்தி கொண்ட விஜயகாந்த் ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை எதுவும் செய்ய வில்லை.தனது திருமண மண்டபம் இடிப்பதை தடுப்பதற்காக போராடிய விஜயகாந்த் மக்கள் கொத்து கொத்தாக செத்து விழும் போது அமைதியாக இருந்தார் .

திருமாவளவன் தமிழர் இறையாண்மை காக்க தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியில் இருக்கப்போவதாக உறுதியாக கூறி விட்டார். முத்துக்குமரனின் இறப்பால் ஏற்பட்ட மிக பெரிய எழுச்சியை இவர் உட்புகுந்து அடக்கிய விதம் அனைவரும் அறிந்ததே. அதற்காக இவர் கருணாநிதியிடம் பெற்ற கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தன் சாதி மக்களுக்கு கூட செலவழிக்காமல் தமிழ்நாடு முழுக்க விளம்பரமாய் எழுதி தீர்த்து வருகிறார்.

தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது அதை காப்பாற்ற நாங்கள் பதவி விலக தயார். ஆனால் முதலில் கருணாநிதி பதவியை விட்டு விலக வேண்டும். அவர் விலகி னால்தான் நாங்கள் பதவியை விட்டு விலகுவோம் என்று கூறி தனது இனப் பற்றை தெளிவாக பறை சாற்றியவர் தலைவர் ராமதாஸ் இன்று அவர் தி.மு.க வா அ.தி.மு.க வா என்று ஆலோசித்து கொண்டிருக்கிறார் அநேகமாக அவர் தி.மு. க வில் தான் சேருவதற்கான வாய்ப்புகள் தான் ஒளி வட்டமாக தெரிகிறது.

பாலஸ்தீனத்தில் இறந்த நூறு பேருக்காக கண்டன குரல் எழுப்பிய ஜெயலலிதா, தமிழீழத்தில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கும் போது "போர் என்றால் மக்கள் இறப்பது இயல்புதானே" என்று உரக்க கூறியவர். ஈழ விடுதலைக்கு முற்றிலும் எதிராக இருந்தவர் .சிறிது நாட்களிலேயே தேர்தலுக்காக மனம் மாறி நான் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு அமைய
பாடுபடுவேன் என்று பெயரளவில் கூறியதற்கு கூட வை கோ தான் காரணம்.

தமிழ் நாட்டில் இன்று இருக்கும் கட்சிகளில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தே..மு.தி. க ஆகிய நான்கும் முதன்மை கட்சிகளாக விளங்குகிறது . உலக தமிழர்கள் ஆதரவால் இரண்டாம் கட்ட கட்சிகளுக்கு தலைமை ஏற்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி இன்று வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நிர்கதியாக நிற்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து கொண்டிருப்பது சீமானும், வை.கோ வும் மட்டுமே.

கடந்த தேர்தலில் வை.கோ வெற்றி பெற்றிருந்தால் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு குரல், உலகப் பார்வையை ஈர்க்கும் வண்ணம் ஒலித்திருக்கும். ஆனால் தி.மு.க வின் பண பலத்தின் முன்பு வை கோ வும் தோல்வியை தழுவினார்.

வை.கோ வும் தெலுங்கு வகுப்பை சேர்ந்தவராக இருந்தாலும் இனப்பற்றால் அவர் இன்று வரை தமிழனாக இருந்து வருகிறார்.ஈழப் போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அவரிடம் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து போயினர். நேற்று வந்த சீமானால் இந்த அளவிற்கு உணர்வாளர்களை திரட்டி போராட முடியும் என்றால் 18 வருடமாக கட்சி நடத்தி கொண்டி ருக்கும் வை.கோ எவ்வளவோ போராடி இருக்க முடியும். எவ்வாறு இருப்பினும் ஈழ தமிழனுக்காக இன்று வரை தொடர்ந்து குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் செயல் பட்டு கொண்டி ருப்பவர் வை.கோ மட்டும் தான்.

இந்த சூழ்நிலையில் வரும் தேர்தல் கூட்டணியில் விஜகாந்த்தை விட வை கோ விற்கு குறைவான இடம் தான் கிடைக்கும் .என்பது உறுதியாக தெரிகிறது. கிடைக்கும் இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் பலத்தை கொண்டு சிறப்பான வெற்றியை பெற முடியும் என்பது வை கோ வின் கணக்கு. தி மு கவை ஒழிக்கும் அதே நேரத்தில் ஈழ ஆதரவு கட்சியான ம தி மு கவை வெற்றி பெற வைக்க முடியும் என்பது சீமானின் கணிப்பு. ஈழத்துக்கு ஆதரவான கட்சிகளை ஒன்று சேர்க்கும் முதல் முயற்சியாக இதை பயன் படுத்தி கொள்ள சீமான் நினைக்கலாம்.இந்த தேர்தல் பரப்புரையை கொண்டு நாம் தமிழர் கட்சியை பலப்படுத்தலாம்.ஆனால் சீமானை ஊறுகாயை போல் பயன் படுத்தி கொள்ள திராவிட கட்சிகள் முனையலாம். உலக தமிழர்கள் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் விதமாகவும் இருக்கலாம். திராவிடத்திற்கு ஆதரவாக சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்.

அரசியல் ரீதியாக சீமான் செல்லும் பாதை சரியாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சியினரிடையே திராவிடத்தை எதிர்ப்பதாக கூறி விட்டு நேரடியாக ஆதரவு தருவதா என்ற கருத்தும் நிலவுகிறது.

தேசிய தலைவரின் தம்பியாக சீமான் செல்லும் பாதையில் அணி வகுத்து நிற்க உங்கள் தம்பிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம் .எங்கள் தாய் மேல் நாங்கள் வைக்கும் நம்பிக்கையை உங்கள் மேல் வைத்து உங்களை பின் தொடர்கிறோம். ஆனால் மீண்டும் ஒரு அரசியல் ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் சக்தி எங்களுக்கு கிடையாது நாங்கள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது ஒன்று தான்.

தேசிய தலைவரின் தம்பியாக செயல்பட்டு கொண்டிருக்கும் நீங்கள், அவர் சொன்ன உறுதி மொழியை போல் உலக தமிழர்களுக்கு நீங்கள் ஒரு உறுதி மொழியை பகீரங்கமாக அறிவிக்க வேண்டும் அது

"தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் பின் வாங்கினாலோ,அல்லது தமிழின விடுதலைக்கு துரோகம் செய்தாலோ, தமிழினத்திற்கு எதிராக செயல் பட்டாலோ என்னை கொன்று விடுங்கள் அல்லது நானே தற்கொலை செய்து கொல்வேன்." சொல்வீர்களா அண்ணா ?


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Feb 17, 2011 12:42 am

தமிழ் இனத்தையே அழித்த துரோகிகளான தி மு க, காங்கிரசை ஒழிக்க வேண்டுமானால் அ.தி.மு க.வை ஆதரிப்பதை தவிர சீமானுக்கு வேறு வழியில்லை என்பதில் மாற்று கருத்தில்லை. அதே நேரத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத வெளிப்படையான ஆதரவு தேவையா என்பது தான் நம்மிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு.

1987 ல் ஜெயவர்தனே ராசிவ்காந்தி ஒப்பந்தம் ஏற்பட்டு இந்திய அமைதி படை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமைதி ஏற்படுத்த சென்ற இந்திய படை விடுதலை புலிகளின் ஆயுதங்களை களைந்து, நிராயுத பாணியாக்கி, தமிழக பெண்களின் கற்பை சூறையாடி தமிழர்களை கொன்று குவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தங்கள் மக்களை காப்பாற்ற தேசிய தலைவர் தேர்ந்தெடுத்த பாதை தான் "உறவாடி அழிக்கும் துரோகியை எதிரியை கொண்டு வீழ்த்துவது." அதன் அடிப்படையில் அவர் ஜெயவர்தனே வுடன் கூட்டு சேர்ந்து, பொது எதிரியான இந்திய அமைதிப்படையை கூட்டாக சேர்ந்து விரட்டுவது என்ற குறைந்த பட்ச உடன் படிக்கையை ஏற்படுத்தி கொண்டார்.

சிங்கள இராணுவமும் விடுதலைப்புலிகளும் இணைந்து, இந்திய அமைதிப் படையை விரட்டி அடித்தனர். எதிரியை எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்த்தலாம் ஆனால் துரோகியைத்தான் உடனே வீழ்த்த வேண்டும் என்ற தேசிய தலைவரின் நுட்பமான போராளி குணமிக்க அறிவுடன், அரசியல் அறிவு சார்ந்தவர்களையும் இணைத்து தமிழினத்திற்கே வெற்றியை தேடித் தந்தார். தமிழீழ மக்களை இந்திய அமைதிப் படையிடம் இருந்து காப்பாற்றினார். பிறகு தேசிய தலைவர் எதிரியான சிங்களவனை வீழ்த்தி, தமிழீழத்தை வென்றெடுத்து சிறப்பான ஆட்சி நடத்தினார். கடைசி வரை எதிரிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

தேசிய தலைவரின் தம்பியான சீமானும், அவரது வழியையே தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது. இன துரோகியான தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதற்கு அவர் எதிரியான அ.தி.மு.கவுடன் இணைந்துள்ளார். ஆனால் இங்கே போராளி குணமிக்க அறிவுடன் அரசியல் அறிவையும் இணைத்தாரா என்பதில் தான் சிறிய ஐயப்பாடு?

என்ன செய்திருக்க வேண்டும்?

1) தமிழ் நாட்டின் மிகப் பெரிய கட்சியான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் கூட்டணிகளை அறிவிக்காத நிலையில், நாம் தமிழர் அவசர அவசரமாக வெளிப்படையாக அ.தி.மு.க வை ஆதரித்திருக்கக்கூடாது. இது அவர்களுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். திராவிட கட்சிகள் கூட்டணியை அறிவித்ததற்கு பிறகு அடுத்து சீமான் என்ன செய்ய போகிறார் என்று மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நேரத்தில் அ.தி.மு.க ஆதரவை அறிவித்திருந்தால் அவருக்கு இன்னும் சற்று கூடுதல் பலம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இப்பொழுதே அறிவித்து விட்டதால் மக்களிடையே எதிர்பார்ப்பு குறைந்து விட்டது. இதற்கு காரணமான வை.கோ வின் திராவிட அரசியல் அறிவின் முன்பு, சீமானின் தமிழினப் பற்றின் அறிவு வீழ்ந்து விட்டதா? அல்லது சீமானின் இனப்பற்று அறிவின் முன்பு திராவிட அறிவு திருந்தி கூட்டு சேர்ந்து விட்டதா? அல்லது இரு தமிழின பற்றுகளும் இணைந்து வெற்றி பெறப் போகிறதா? எதனடிப்படையில் வை.கோ வை சந்தித்தவுடன் சீமான் அறிவித்தார் என்ற இரகசியம் தேர்தலுக்கு பின்னால் தான் தெரிந்து கொள்ள முடியும்.

2) கருணாநிதியை எதிர்த்து பொது வேட்பாளராக சீமான் நிற்கப் போவதாக ஒரு வதந்தி நிலவினாலும், கருணாநிதி இந்த முறை தேர்தலில் நிற்பாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் இந்த முறை மேல் சபை அமைக்கப்படுவதால் தேர்தலில் வெற்றி பெறாமலே அவர் மேல் சபை உறுப்பினராகி பதவிக்கு வர முடியும்.

3) ஈழத்தில் தன் இன மக்கள் அழிக்கப்பட்டதில் இருந்து இன்னும் மீள முடியாத சீமான், இன அழிப்புக்கு காரணமான தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை பல தொகுதிகளில் தோற்கடிக்கும் வல்லமை நாம் தமிழர் கட்சிக்கு உள்ள நிலையில், குறைந்த பட்ச கோரிக்கைகள் கூட எதுவும் வைக்காமல் அ.தி.மு.க விற்கு ஆதரவு தெரிவித்ததிருக்கிறார். இதிலிருந்தே அவரது எண்ணம் துரோகியை தோற்கடிப்பது மட்டுமேயன்றி அதிலிருந்து ஆதாயத்தை பெறுவது அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

இது நேர்மையான போராளிகளுக்குள்ள அறிவு. ஆனால் அரசியல் ரீதியில் செயல்பட்டிருந்தால் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ள ஜெயலலிதாவிடம் குறைந்த பட்ச தமிழீழம் சார்ந்த கோரிக்கைகளை வைத்து அதனடிப் படையில் அ.தி.மு.க விற்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம்.

4) தமிழ் தேசியம் பேசக்கூடிய அனைத்து இயக்கங்களும் நாம் தமிழருடன் சேர்ந்து தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே செயல்படும். எனவே நாம் தமிழர் கட்சியின் வலிமை பல மடங்கு கூடும் என்பதை அரசியல் ஆர்வலர்கள் அறிவார்கள். எனவே நாம் தமிழர் வைக்கும் செயல் திட்டங்களை அ.தி.மு.க ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் சீமான் மீது நம்பக தன்மை கூடியிருக்கும்.

5) அ.தி.மு.க வில் உள்ள தே.மு.தி.க தவிர பிற கட்சிகளுக்கு நாம் தமிழர் தங்களது ஆதரவை வெளிப்டையாக தெரிவிக்கலாம். அவர்களுடன் ஒரே அரசியல் மேடையில் இருந்து செயல் படலாம். இவர்கள் வெற்றி பெற்றாலும் பிற்காலத்தில் நாம் தமிழருக்கு நன்றியுடன் பக்க பலமாயிருக்க வாய்ப்பு உண்டு. இதை பார்ப்பனிய ஜெயலலிதா விடமோ அல்லது தெலுங்கு விஜயகாந்திடமோ எதிர்பார்க்க முடியாது. மேலும் நாம் தமிழரின் தனித் தன்மை களங்கப்படாமல் இருக்கும்.

தமிழர் உரிமை மீட்பு மாநாட்டுக்காக 15 லட்சம் பேரை திரட்டி கூட்டம் போட்ட விஜயகாந்த் போர் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் அமைதியாக இருந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

6) காங்கிரஸ் நிற்கும் இடங்களில் மட்டும், காங்கிரசை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து செயல் படலாம் . இதன் மூலம் காங்கிரஸ்தான் நாம் தமிழரின் முதல் எதிரி. என்பதை மக்களுக்கு விளக்கலாம். மக்களிடையே நாம் தமிழரின் நம்பகத்தன்மை உறுதிப்படும்.

7) போரில் வெற்றி பெற வியூகம் அமைத்து போரிடுவது தான் சிறந்தது. போர் நடைபெறப் போகும் பகுதியை சேர்ந்த சிறந்த அறிவாளர்களை கலந்தாலோசித்து, அவர்கள் கூறும் ஆலோசனைகளில் சரியானதை தேர்ந்தெடுத்து போரிடுவதையே தேசிய தலைவர் விரும்பினார். அந்த வழி முறையை நாம் தமிழர் பின் பற்றலாம்.

பெரும்பாலும் புலிகள் எதிரிகளை ஊடுருவி தாக்குவது, அல்லது தங்கள் பகுதிக்குள் முன்னேற வைத்து, பிறகு அவர்களை சுற்றி வளைத்து தாக்குவது இதற்கு பாக்ஸ் அடிப்பது அல்லது கட்டம் கட்டுவது என்று விடுதலை புலிகள் கூறுவர். அவர்களது போர் வியூகம் உலகையே வியக்க வைத்தது.

அது போலவே விடுதலைப்புலிகள் கடைசி நிமிடம் வரை தலைவருடன் நின்று களமாடியிருக்கிறார்கள் என்றால், தேசிய தலைவருக்கும் அடித்தட்டு போராளிகளுக்கும் இருந்த உறவு முறை எவ்வளவு ஆழமானதாக இருந்திருக்க வேண்டும். அவரது அன்பு என்ற இரும்பு கோட்டையால் கட்டமைக்கப்பட்ட அந்த இயக்கத்தை இன்று வரை ஒருவராலும் அழிக்க இயலவில்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

தேசிய தலைவரிடமிருந்த அந்த உயர்ந்த பண்புகளை உள் வாங்கி கொண்ட இடத்தில் சீமானும் புலிகள் இடத்தில் நாம் தமிழர் செயல் வீரர்களும் இருந்து செயல்பட வேண்டும். புலிகளின் போர் வியூகத்தின் அடிப்படையில் திட்டமிட்டு செயல்பட்டால் நாம் தமிழர் கண்டிப்பாக வரும் தேர்தலில் துரோகிகள் கூட்டணியை தோல்வி பெற செய்ய முடியும்.

சீமானின் அரசியல் வெற்றி என்பது அவரது தனிப்பட்ட வெற்றி அல்ல. ஒட்டு மொத்த தமிழினத்தின் வெற்றியாகும். அதுபோல சீமானின் அரசியல் தோல்வி என்பது அவரை மட்டும் பாதிக்கப் போவதில்லை ஒட்டு மொத்த தமிழினத்திற்க்கே பாதிப்பை ஏற்படுத்தும். மிகப் பெரிய தோல்விக்கு பிறகு நமக்கு கிடைத்திருக்கும் அரியதொரு புதையல் சீமான் என்பதை ஒவ்வொரு இனப்பற்றுள்ள தமிழனும் மனதில் ஏந்தி நாம் தமிழரின் வெற்றிக்கு உண்மையாக உறுதியாக உழைத்திட வேண்டும்.

தமிழீழ விடுதலைக்கும் இங்குள்ள தமிழர் விடுதலைக்கும் முக்கிய பங்களிப்பாக விளங்க போவது நாம் தமிழரின் விரைவான அரசியல் வளர்ச்சி என்பதை இனப்பற்றுள்ள தமிழர்கள் யாரும் மறுக்க முடியாது.

அடுத்த கட்ட ஈழ போர் ஈழத்து தமிழர்கள் ஆதரவுடன், புலம் பெயர் தமிழர்கள் உதவியுடன், நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பில் கண்டிப்பாக நடந்தே தீரும். அதற்கு தேவை தமிழர்களிடத்தில் ஒற்றுமை, நம்பிக்கை மட்டுமே.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடில்
அனைவ ருக்கும் தாழ்வே !


அண்ணன் சீமானுக்கு ஒரு வேண்டுகோள்!

கம்பராமாயணத்தில் கம்பர் கூறியுள்ளதை போல சீதை கற்புக்கரசியாக இருந்தாலும், கயவர்களின் சந்தேக பார்வையை போக்குவதற்காக அவள் தீக்குளித்து தான் கற்புக்கரசி தான் என்று நிருபித்தது போல, தேசிய தலைவரின் தம்பியாக செயல்பட்டு கொண்டிருக்கும் நீங்கள், அவர் சொன்ன உறுதி மொழியை போல் உலக தமிழர்களுக்கு பகீரங்கமாக உறுதி மொழி அறிவிக்க வேண்டும்.

சொல்வீர்களா அண்ணா ?

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 17, 2011 10:07 am

இந்தக்கட்டுரையில் சிங்கள ராணுவத்துடன் இணைந்து விடுதலைப்புலிகள் இந்திய ராணுவத்தை கலைக்கவில்லை ?பிரேமதாச அரசுடன் சில ஒப்பந்தங்களை செய்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பெற்றனர் என்பதே உண்மை ?அதேநேரம் பிர்மதாச இந்திய எதிர்ப்பாளராகவும் விளங்கினார் ?அவரது ஆதரவாரனான கடற்படை வீரன் தான் ராஜீவை தாக்க முயன்றான் ?அந்த கடற்படை வீரன் தேர்தலிலும் பங்கு கொண்டான் "கம்பராமாயணத்தில் கம்பர் கூறியுள்ளதை போல சீதை கற்புக்கரசியாக இருந்தாலும், கயவர்களின் சந்தேக பார்வையை போக்குவதற்காக அவள் தீக்குளித்து தான் கற்புக்கரசி தான்"
"
ராமன் தன பொண்டாட்டியை நம்பினால் பிறகேன் சீதைய தீக்குளிக்க சொல்லணும் ?முதல்ல ராமன் தான் கயவன் ?சீதை ராமனுக்கு பொண்டாட்டியா ?கயவர்களுக்கு பொண்டாட்டியா ?
இதிலும் இன்னொரு விடயம் இராவணன் தமிழன் சீதை கற்புக்கரசி என நிருபித்தமையால் இராவணன் (தமிழன் )எவ்வளவு நல்லவன் ?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Feb 17, 2011 2:58 pm

சிங்கள இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது என்பது அவர்களின் ஆயுதங்களையும் உளவு செய்திகளைப் பெற்றதையுமே தெரிவிக்கிறது.
மேலும், இராமாயணம் தமிழனை சிறுமைப் படுத்துவதற்காக ஆரிய வர்க்கத்தால் எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை. அதில் இராவணன் தமிழன், வானரங்களாக வரும் கதாபாத்திரங்களை அனைவரும் தமிழர்களே. அதில் அனுமன் இராமனுக்கு அடிமையாக இருப்பது, தமிழன் என்றைக்கும் ஆரிய வர்க்கத்திற்கு அடிமை என்பதைக் குறிக்கும்.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 17, 2011 8:33 pm

ஈழத்தமிழர்களா யார் என கேட்டிருக்கிறார்கள் இத்தளத்திலே ?இவை உண்மையின் சாட்சியங்கள் எனவே சரியாக எலுதவேண்டும் .எனேன்றால் இந்த வரலாறுகள் மருவி அவங்களும் இவங்களும் தான் இந்தியாக்கு அடித்தாங்கள் எண்டு வந்திடும் ....அது தான் நிஷாந்தன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக