புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
நீயா?  நானா? - Page 2 I_vote_lcapநீயா?  நானா? - Page 2 I_voting_barநீயா?  நானா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா? நானா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 16, 2011 6:00 pm

First topic message reminder :




நீயா நானா?
நீயா?  நானா? - Page 2 Images?q=tbn:ANd9GcT73xLOwSDCfZvR4_hjJoXzTiZf9yv2VCK9gckj--HTxyBt2hecPQ&t=1



.எங்க வீட்ல ஏசி இல்லாததால இவர்களுக்கு வசதிப்படலையோ என்னவோ. எங்க வீட்டைப் பொறுத்த வரையில சம்மர்ல் இந்த விருந்தாளிங்கல்லாம் வரதே இல்லை. அப்ப விடுமுறைக்கு எங்கே போவார்களோ என்னவோ தெரியாது. மழை நாளான இவங்களோட ஒரே வாசஸ்தலம் எங்க வீடு தான். கோடைக்காலம் முடிஞ்சு குளிர்க்காலம் ஆரம்பிச்சவுடனே குளிருக்கு இதமா எங்க வீட்ல வந்து அடைக்கலம் புகுந்து இவங்க அடிக்கிற லூட்டிகளை
ஒரு புத்தகமே எழுதலாம். மழைக்காலத்தில் ஒண்ட வந்த இவர்கள் ஒரு குட்டி
சாம்ராஜ்ஜியத்தையே அமைத்திருப்பார்கள். இவங்கல்லாம் வருவதால் எங்க வீட்ட என்னவோ ஓட்டு வீடுன்னு நெனைச்சா அது தப்புக்கணக்கு. பிளாட்ல ஒரு அழகான ஒற்றைப் படுக்கையறை வீடு எங்களது.

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுசனக் கடிக்கறது மாதிரி சமச்சு வச்ச சாப்பாடு, காய்கறிகள், சாமி படத்துல போட்டிருக்கிற பூ, அரிசி,
பருப்பு, பத்தாக்குறைக்கு அரிசி பருப்பு வச்சிருக்கற டப்பா என்று எல்லாத்தையும் கடிச்சுப் புளிச்சுப் போய் இப்ப கொஞ்சம் கண்ணை அசந்தா மனுசங்க காலைக் கடிக்கிற அளவுக்கு வளந்திருச்சு எங்க வீட்டு எலிங்க. ஆரம்பத்தில ஒரு எலிதான் ஓடியாடிட்டு இருந்துச்சு. இப்ப ஒரு குடும்பமே இருக்கு. நம்ம குடும்பம் மாதிரி சின்ன குடும்பம் இல்ல. ஒரு ஏழெட்டுப் புள்ளகுட்டிகளோட அம்மா அப்பா சேர்ந்த பெரிய எலிக்குடும்பம்.

வெள்ளை மாளிகையில எலித்தொல்லை அதிகமாக இருக்கிறதாம். எலிகளை வேட்டையாட லேரி என்ற பூனையை அழைத்து வந்திருப்பது போல பூனையை வளர்க்கலாம் என்றால், லேரியைவிட பெரிய லாரியெல்லாம் இங்கே இருக்கு. அதுங்க கத்தற கத்தலில் இராத்திரி ஓமன் படம் பார்த்த மாதிரி அடிக்கடி தூக்கிவாரி போட்டு எழுந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார வேண்டியுள்ளது.

இந்த எலிகளை நினைத்தா ஒரு சமயம் கோபமா வரும். ஒரு சமயம் அழுகையா வரும். சில சமயம் கொலைவெறி வந்துரும். ஆனா வெத்துக் கையாலத்தனம்தான் மிஞ்சும். கோபம் கோபமா வந்தாலும் ஒரு சமயம் பார்த்தா அதுங்க செய்யறதை ரசிக்காமல் இருக்க முடியாது. அன்னக்கி அப்படித்தான் குட்டி குட்டி சமோசா வாங்கிட்டு வந்து ஃபிரிஜ் மேல
வச்சுட்டு ராத்திரி படுக்கும் முன்னாடி அதை எலிப்பொறி உள்ளே வக்கலாம்னு வந்தேன். வச்சப்பறம் கையைக் கழுவனுமேன்னு சோம்பேறித்தனம் அவ்வளவுதான். எல்லா வேலையும் முடிச்சுட்டு எலிப்பொறியை எடுத்துட்டு வந்து பார்த்தா ஃபிரிஜ் மேல வச்சிருந்த சமோசா சுவாஹா ஆகிவிட்டிருந்தது. அடக்கடவுளே என்ன இந்த எலி படுத்தற பாடுன்னு வருத்தப் பட்டாலும், மனதுக்குள்ள இதுக்கு இவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும். இருடி உனக்கு நாளைக்கு வக்கிறேன் ஆப்பு..ன்னு சொல்லி பொலம்பிட்டு சரி நாளைக்கு வச்சுக்கலாம்னு வந்துட்டேன்.

மறுநாள் சமோசா வாங்கிட்டு வர மறந்தாச்சு. அதனால என்ன? தோசைதான் ஊத்தப்போறோமே அதுல ஒரு பீசு வச்சுடலாம்னு பிளான் பண்ணி குட்டியா கெட்டியா ஒரு ஊத்தப்பம் அதுக்குன்னு ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியளவுக்குப் போட்டேன். அது ஆறினவுடனே வக்கலாம்னு வந்து
கம்ப்யூட்டரை ஆன் பண்ணினேன். கம்பூட்டரில் வேலை பார்த்தாலும் நினைவு எல்லாம் தோசை, எலிப்பொறி, எலிகள்தான். பத்து நிமிடம் வேலை செய்த பிறகு சரி ஆறி இருக்கும் போயி வச்சுட்டு வந்திடலாம்னு எழுந்து போய் பார்த்தா தோசைக்கல்லு சூடு ஆறலை. ஆனா லாவகமா அந்தக். குட்டி தோசையை எடுத்துட்டு விறு விறுன்னு மிக்ஸி ஒயர்ல தாவி டியூப் லைட் மேல ஏறி லாஃப்ட்டுக்கு ஓடிடுச்சு எத்தனுக்கு எத்தனான எமன். எங்க எலியார்.

அது எல்லாத்தையும் கடிச்சு வக்கிறதை நெனைக்கும்போது கோபம் கோபமா வந்தாலும் அதனோட சாமர்த்தியத்தைப்பார்த்து மனசுக்குள்ள ரசிக்காம இருக்க முடியல.. இந்த நீயா நானா விளையாட்டுல இன்னைக்கு நான் ஜெயிச்சே ஆகனும்னு, முடிவு பண்ணி மறுபடியும் கவணமா அதுக்குப் பிடிச்ச மாதிரி
குட்டித் தோசை தயாரானது. பக்கத்துல என்னம்மா மறுபடியும் தோசையா... இன்னக்கும் எலிகிட்ட ஏமாந்துட்டீங்களா? எனக்குக் குட்டி இட்லியும் சாம்பாரும் செஞ்சு கொடுங்கன்னா செய்து தர மாட்டேன்னீங்களே... அதுதான் எலி உங்கள வேலை வாங்குது செய்ங்க.. செய்ங்க ன்னு எங்க வீட்டுப் புலியோட கமெண்ட் வேற. அதுதான் என்னோட சீமந்தப் புத்திரன்..

எலி மருந்து வச்சு கொல்லலாம்னா என்னோட அகிம்சை மனசு இடம் கொடுக்க மாட்டேங்குதுசரி எலிப்பொறியில ஒவ்வொன்னா பிடிச்சு அதைக் கொண்டு போய் வெளியில் எங்கேயாவது விட்டுட்டு வர.லாம்னு பிடிச்சு வச்சு ஒரு நாள் எங்க குப்பைக் காரருகிட்ட கொடுத்தா அவரு என் கண் முன்னாடியே அதைக் கழுத்தை சடக்குன்னு ஒடச்சத நெனச்சுப் பாத்தால் இப்பவும் என்னோட முதுகுத் தண்டு வடத்தில ஐஸ் கட்டிய வச்ச மாதிரி
இருக்குது அடுத்த முறையில் இருந்து எப்ப கொடுத்தாலும் அதைக் கொன்னுடாதீங்க எங்கேயாவது கொண்டு போயி விட்டுட்டு வாங்கன்னு சொல்லிக் கொடுப்பது வழக்கமாகப் போனது

எங்க தெரு குப்பைக்காரருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.. அவர்
அடிக்கடி வேலைக்கு மட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.. அந்த நேரம் பார்த்து முதலில் வீரர்கள், படைத்தளபதி என்று எல்லாரையும் அனுப்பி விட்டு கடைசியில் போருக்குச் செல்லும் மன்னரைப்போல நான் விரித்த
வலையில் கடைசியாக வந்து மாட்டிக்கொண்டவர் குடும்பத்தலைவர் மொறட்டு எலியார். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் குப்பைக்காரர் வரவே இல்லை. நானும் எனக்கு லஞ்ச் பேக் செய்யும் போது அதற்கும் சிற்றுண்டி, லஞ்ச் எல்லாம் செய்து கொடுத்துக் காத்து வந்தேன். முதல் நாள் இரவு எலிப்பொறியில் இருந்து டொக் டொக் கம்பி சத்தம் அதிகமாகக்
கேட்டது. அடுத்த நாள் குறைந்து போயிற்று.. அது பட்டினியில இருக்கே. எங்கேயாவது செத்துப் போயிடப்போகுதேன்னு தோசைத்துண்டு, கேரட் துண்டு இப்படி எல்லாம் போட்டுட்டுப் போனா அது கொஞ்சம் கூடத் தொட்டுப் பாககலே. சரி அதுக்குப் பிடிக்குமேன்னு கடையிலே இருந்து குட்டி சமோசா வாங்கிட்டு வந்து போட்டா அதையும் அது மோந்து கூட பாக்கல. அப்பரம்தான் புரிஞ்சது அது உண்ணா விரதம் தொடங்கிருக்குன்னு. எலியைப் பிடிச்சு அடச்சு வச்சுட்டு சாகாம இருக்கனும்னு அதுக்குத் தீனி போடறவ நீயாத்தான் இருப்பே” னு எனக்குத் திட்டு வேற குடும்பத்தலைவர்கிட்டே இருந்து.. அம்மா அதுக்குப் புத்திர சோகம்னு ஒரு கமெண்ட் என் புத்திரன்கிட்டே இருந்து.

இதை விடப் பெரிய கொடுமை என்னன்னா, ராத்திரியெல்லாம் ஒரே மொற மொறன்னு சத்தம். என்னன்னு எழுந்திருச்சுப் பார்த்தா ஒரு பெரிய பூனை எலிக்கூண்டையே இழுத்துட்டு போகுது. கம்பைக் காட்டி வெறட்டினாலும் அது போகலை. அதால கூண்டைத் திறக்க முடியலங்கற கோபத்தை என் மேல காட்டி அது மொறச்சதைப் பார்க்கனுமே., அசப்புல பசியோடத் திரியர ஒரு சிங்கக்குட்டி மாதிரியே இருந்தது. எப்பவும் கூண்டுக்குள்ள இருந்து கம்பியை டொக் டொக்குனு ஆட்டிகிட்டே தன் முயற்சியைக் கைவிடாது எப்போதும் சத்தம் செய்து கொண்டு இருக்கும் எலிக்கு அப்பொழுது சப்த நாடியும் ஒடுங்கி போய்விட்டது. ஆடிய ஆட்டமெல்லாம் ஓடிப்போய். எலிப்பொறியின் ஒரு மூலையில் ஒடுங்கிச் சுருங்கி இருந்தது. எனக்குச் சந்தேகம். அது மண்டையைப் போட்டுடுச்சோன்னு. பூனையை விரட்டிட்டு எலிப்பொறியை எடுத்து தலைகீழா பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டிப் பார்த்தா அது
கொஞ்சம் கூட அசையலை. ஐயோ செத்துப் போயிடுச்சேன்னு நெஞ்சு திக் திக்குன்னு அடிச்சிக்க ஆரம்பிக்க, அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பூனை இல்லை நமக்கு தின்மும் சமோசா கொடுக்கறவங்கன்னு தெரிஞ்சு லேசா கண்ணை மட்டும் கொஞ்சமா முழிச்சு பார்த்ததது. அப்பா இது உயிரோடதான் இருக்குன்னு நிம்மதி வந்தது. அன்னக்கி வீட்டுக்கு வராத நித்ய விருந்தாளியான குப்பைக்காரரை அடுத்தத் தெருவுக்குப் போய் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து வந்து இரண்டு நாளா அடைப்பட்டிருந்த இந்த விருந்தாளியை வழியனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றானது.

இன்னொரு சுவையான இப்ப நினைத்தாலும் வயிற்றைக் கலக்கும் சம்பவம். துணியெல்லாம் ரொம்ப சேர்ந்து போயிற்று என்று வாஷிங் மெஷினைப் போட்டேன். வாஷிங் மெஷின் தன் வேலையை எப்போதும் போல விரைவாக ஒரு முக்கால் மணி நேரத்தில் செய்து முடித்தது. அடிக்காமல் துவைத்து, முறுக்கிப் பிழிந்து பாதி காயவைத்துத் துணியை தூசு துப்பின்றி கொடுத்துவிட்டு என் வேலையை முடித்து விட்டேன் என்று மூன்று முறை குரல் கொடுத்து அமைதியடைந்தது.

இனி என் வேலைதான் மிச்சம். என்ன எடுத்து ஒரு தட்டு தட்டி கொடியில் உலர்த்த வேண்டியதுதான். அதற்கு நேரமின்மையால் அதைச் செய்ய ஒரு இரண்டு மணிநேரம் தாமதம் வேறு. இதற்கு தலைவர்கிட்ட வசவு வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் போதே அது இன்னும் வலுப்பதைக் குறைக்க மெஷினைத் திறந்து துணியை எடுக்க கையை உள்ளே விட்டால் கேபில் ஒயர் போன்ற ஒன்று என் கையில் மாட்டியது. என்ன என்று எடுத்துப் பார்த்தால் கையில் வால். வீல் என்ற அலறலுடன் கையை உதற “உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் தெரியாது. பிளக்கை எடுத்துவிட்டு துணியை எடு என்று சொன்னால் கேட்டால் தானே. ஒரு நாள் நான் இல்லாது இருக்கும்போது செத்துக் கிடக்கப்போறேஎன்று ஆசிர்வாதத்துடன் அருகில் வந்தவர் என் கையைப் பிடித்தும் என் கைகளின் தந்தி அடிக்கும் வேலை நிற்கவில்லை.

என்ன ஆச்சு என்று கத்திக்கொண்டே வாஷிங் மெஷினுக்குள் எட்டிப் பார்த்தால் பெரிய எலி உள்ளே. மயக்கம் எனக்கும் எலிக்கும். இருவருக்கும் தண்ணீர் தெளித்ததில் எனக்குத் தெளிந்த மயக்கம். அதற்கு தெளியவில்லை. பிழிஞ்சு போட்ட துணியாய்க் கிடந்தது அது. “ப்ளீஸ்
கொஞ்ச நேரம் பாக்கலாம்பா என்ற என் கெஞ்சலுக்குச் செவி சாய்த்து எலியை எடுத்து வராண்டாவில் போட்டார். அது லேசாக அசைவது போல இருந்தது. அதற்குள் எங்களுக்குள் பட்டிமண்டபம். அது செத்துப் போய்விட்டதா? இல்லையா? முடிவில் வழக்கம் போல நான் தான் வெற்றி பெற்றேன். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் அந்த எலி எழுந்து உடலை ஒரு முறை முறித்து விட்டு மெதுவாக நகர்ந்து நகர்ந்து பின் ஓடிப்போனது. அப்பாடா......எனக்கோ ஆச்சரியம்..... மெஷின் துவைத்த துவையலில் அது எப்படி தப்பியது என்று. அதற்கு ஆயுள் கெட்டி. அதைவிட சந்தோஷம்... அது பிழைத்ததில்.ந்தத் துணிகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பல முறை அலசி இடுப்பு ஒடிந்தது ஒருபுறம்.. இருக்கு......

சங்க காலத்துல ஒரு புலவருக்கு அணிலாடு முன்றிலார்னு பெயர். அவர் முற்றத்தில அணில்கள் விளையாடுவதைப் பற்றி பாடல் ஒன்று புனைந்ததால். அவரு இங்கே எலிகள் போடுற ஆட்டத்தைப் பார்த்திருந்தால் எலிகளைப் பற்றி பாடல் எழுதி எலியாடு முன்றிலார்னு பெயர் வாங்கியிருப்பாரு. ஒருவேளை எதிர்காலத்திலே எனக்கு எலியாடு முன்றிலார்னு பெயர் வருதோ என்னவோ? யார் கண்டது!!!!!!!!!!


ஆதிரா..




நீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Tநீயா?  நானா? - Page 2 Hநீயா?  நானா? - Page 2 Iநீயா?  நானா? - Page 2 Rநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 19, 2011 11:11 pm

இசையன்பன் wrote:சங்க காலத்துல ஒரு புலவருக்கு அணிலாடு முன்றிலார்னு பெயர். அவர் முற்றத்தில அணில்கள் விளையாடுவதைப் பற்றி பாடல் ஒன்று
புனைந்ததால். அவரு இங்கே எலிகள் போடுற ஆட்டத்தைப் பார்த்திருந்தால்
எலிகளைப் பற்றி பாடல் எழுதி எலியாடு முன்றிலார்னு பெயர் வாங்கியிருப்பாரு.
ஒருவேளை எதிர்காலத்திலே எனக்கு எலியாடு முன்றிலார்னு பெயர் வருதோ என்னவோ?
யார் கண்டது!!!!!!!!!!/////////////

அக்காக்கு இல்லாத பட்டமா?!!! உங்களுக்கு இப்பவே பட்டம் கொடுத்துட்டா போச்சு... ”””எலியாடு ஆதிரா””” எப்படி பட்டம் கொடுத்தாச்சு நல்லா இருக்கா...
நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300
நல்லா இருக்கு சகோ.. அழகான பட்டம் கொடுத்த பல்கலைக்கழகத்திற்கு நன்றி. நீயா?  நானா? - Page 2 154550 நன்றி. நீயா?  நானா? - Page 2 154550



நீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Tநீயா?  நானா? - Page 2 Hநீயா?  நானா? - Page 2 Iநீயா?  நானா? - Page 2 Rநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Empty
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sat Feb 19, 2011 11:42 pm

Aathira wrote:
இசையன்பன் wrote:சங்க காலத்துல ஒரு புலவருக்கு அணிலாடு முன்றிலார்னு பெயர். அவர் முற்றத்தில அணில்கள் விளையாடுவதைப் பற்றி பாடல் ஒன்று
புனைந்ததால். அவரு இங்கே எலிகள் போடுற ஆட்டத்தைப் பார்த்திருந்தால்
எலிகளைப் பற்றி பாடல் எழுதி எலியாடு முன்றிலார்னு பெயர் வாங்கியிருப்பாரு.
ஒருவேளை எதிர்காலத்திலே எனக்கு எலியாடு முன்றிலார்னு பெயர் வருதோ என்னவோ?
யார் கண்டது!!!!!!!!!!/////////////

அக்காக்கு இல்லாத பட்டமா?!!! உங்களுக்கு இப்பவே பட்டம் கொடுத்துட்டா போச்சு... ”””எலியாடு ஆதிரா””” எப்படி பட்டம் கொடுத்தாச்சு நல்லா இருக்கா...
நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300 நீயா?  நானா? - Page 2 168300
நல்லா இருக்கு சகோ.. அழகான பட்டம் கொடுத்த பல்கலைக்கழகத்திற்கு நன்றி. நீயா?  நானா? - Page 2 154550 நன்றி. நீயா?  நானா? - Page 2 154550

நீயா?  நானா? - Page 2 755837 நீயா?  நானா? - Page 2 755837 நீயா?  நானா? - Page 2 755837 நீயா?  நானா? - Page 2 755837 நீயா?  நானா? - Page 2 755837



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

நீயா?  நானா? - Page 2 806360
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 20, 2011 11:02 pm

உதயசுதா wrote:அந்த எலிகளுக்கு என் மனமார்ந்த நன்றி.அவைகள் இல்லையென்றால் உங்களில் இருந்த இந்த நகைசுவை உணர்வு யாருக்கும் தெரியாமலே போய் இருக்குமே. உண்மையிலுமே படித்துவிட்டு நான் வாய் விட்டு சிரித்துவிட்டேன் அக்கா. என்னை எல்லாரும் அலுவலகத்தில் ஒரு மாதிரி பார்த்தார்கள்.
தொடரட்டும் எலிகள் அட்டகாசம்
நன்றி சுதா. கொஞ்ச நேரம் உங்கள சிரிக்க வைக்க முடிந்ததுக்கு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது...அதுங்களோட ரொம்ப விளையாடி இருக்கேன் சுதா..



நீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Tநீயா?  நானா? - Page 2 Hநீயா?  நானா? - Page 2 Iநீயா?  நானா? - Page 2 Rநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 20, 2011 11:57 pm

இப்போது தான் வாசிக்க நேர்ந்தது ஆதிரா... இத்தனை அழகான நகைச்சுவை நயம்பட விவரித்த விதத்திற்காகவே உங்களுக்கு எலில் மிகு கட்டுரையாளர் எலிவேட்டையார் எலிமுன்றிலாடு தகையார் என்ற பட்டம் வழங்கலாம்...!

வாழ்க உங்கள் எலிகாக்கும் பணி..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 12:08 pm

பானுக்கா பானுக்கா எலிகளை வெச்சு ஒரு கமர்ஷியல் படம் எடுத்து பார்த்த திருப்தி எனக்கு... கிட்டதட்ட விசு கணக்கா அத்தனை தொல்லையும் அனுபவிச்சிட்டு அதன் சரித்திரம் இங்கே செம்ம நகைச்சுவையா படைத்து இருங்க இருங்க எலிகள் செய்த தொல்லைன்னு போட்டுட்டு அந்த எலிகள் பட்ட அவஸ்தைகளை இங்கே விலாவாரியா போட்டு எங்க தங்கம் பானுவோட மென்மையான மனசையும் அறியமுடிந்தது. சோ ஸ்வீட் அதெப்படி ம்ச்ச் நான் எலியாவே பொறந்திருக்கலாம்பா பானுக்கிட்ட கேரட் துண்டு சமோசா குட்டி தோசை எல்லாம் சாப்பிட்டு வாஷிங் மெஷின்ல போய் ஒரு ரவுண்ட் ஆடிட்டு வந்து ஜாலியா பானு கால் சுண்டு விரல் கடிச்சிட்டு பானு மடியிலயே தூங்கி இருப்பேனாக்கும்.... சோ ஸ்வீட் கதை பானு... நான் கற்பனை செய்து மகிழ்ந்தேன் நீங்க எலிகூட மல்லாடுவதை....

அருமையான நகைச்சுவை உணர்வோடு வரிகள் அழகழகாய் இங்கே கதையாய் தந்ததுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் பானு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயா?  நானா? - Page 2 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 21, 2011 9:07 pm

கலை wrote:இப்போது தான் வாசிக்க நேர்ந்தது ஆதிரா... இத்தனை அழகான நகைச்சுவை நயம்பட விவரித்த விதத்திற்காகவே உங்களுக்கு எலில் மிகு கட்டுரையாளர் எலிவேட்டையார் எலிமுன்றிலாடு தகையார் என்ற பட்டம் வழங்கலாம்...!

வாழ்க உங்கள் எலிகாக்கும் பணி..! புன்னகை
சிரிச்சீங்களா?? எலிக்குத் திண்டாட்டம்.. அந்தப் பூனைக்குத் கொண்டாட்டம்..ம்ம்ம்ம்ம்ம்..
பட்டம் கொடுக்க பரிந்துரை செய்த பண்பாளருக்கு மனமார்ந்த நன்றி.... நல்லா இருக்கு பட்டம்.



நீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Tநீயா?  நானா? - Page 2 Hநீயா?  நானா? - Page 2 Iநீயா?  நானா? - Page 2 Rநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 1:22 am

எலிகதை நல்லா இருக்கு... நீயா?  நானா? - Page 2 154550 நீயா?  நானா? - Page 2 154550
கடைசி வரைக்கும் எலி தான் ஜெயிச்சது ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயா?  நானா? - Page 2 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 26, 2011 2:42 am

ஏற்கனனே நேரில் பார்த்த சம்பவம் போன்ற உணர்வு படிக்கும் போது.... நீயா?  நானா? - Page 2 102564



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 7:03 pm

இளமாறன் wrote:எலிகதை நல்லா இருக்கு... நீயா?  நானா? - Page 2 154550 நீயா?  நானா? - Page 2 154550
கடைசி வரைக்கும் எலி தான் ஜெயிச்சது ...
நன்றி இளமாறன். நான் அந்த எலியை விட அப்பாவி.. ஜெயிக்கறது எங்கே? நீயா?  நானா? - Page 2 440806



நீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Tநீயா?  நானா? - Page 2 Hநீயா?  நானா? - Page 2 Iநீயா?  நானா? - Page 2 Rநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 7:08 pm

மஞ்சுபாஷிணி wrote:பானுக்கா பானுக்கா எலிகளை வெச்சு ஒரு கமர்ஷியல் படம் எடுத்து பார்த்த திருப்தி எனக்கு... கிட்டதட்ட விசு கணக்கா அத்தனை தொல்லையும் அனுபவிச்சிட்டு அதன் சரித்திரம் இங்கே செம்ம நகைச்சுவையா படைத்து இருங்க இருங்க எலிகள் செய்த தொல்லைன்னு போட்டுட்டு அந்த எலிகள் பட்ட அவஸ்தைகளை இங்கே விலாவாரியா போட்டு எங்க தங்கம் பானுவோட மென்மையான மனசையும் அறியமுடிந்தது. சோ ஸ்வீட் அதெப்படி ம்ச்ச் நான் எலியாவே பொறந்திருக்கலாம்பா பானுக்கிட்ட கேரட் துண்டு சமோசா குட்டி தோசை எல்லாம் சாப்பிட்டு வாஷிங் மெஷின்ல போய் ஒரு ரவுண்ட் ஆடிட்டு வந்து ஜாலியா பானு கால் சுண்டு விரல் கடிச்சிட்டு பானு மடியிலயே தூங்கி இருப்பேனாக்கும்.... சோ ஸ்வீட் கதை பானு... நான் கற்பனை செய்து மகிழ்ந்தேன் நீங்க எலிகூட மல்லாடுவதை....

அருமையான நகைச்சுவை உணர்வோடு வரிகள் அழகழகாய் இங்கே கதையாய் தந்ததுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் பானு...
ஏய்ய்ய் மஞ்சு இது எப்ப போட்டீங்க? நீங்க எலி இல்ல.. மூஞ்சுரு.. சரியா.. உங்களுக்கு எல்லாம் தருவேனாக்கும். ஆனா வாஷிங் மெஷின் விளையாட்டு எல்லாம் வேணாம். உங்களை ஜெயிண்ட் வீல்ல ஏத்தி விடிறேன் அதுக்குப் பதிலா.. சரியா.. சும்மா சும்மா சுண்டு விரலைக் கடிக்கக் கூடாது....சரியா.. நீயா?  நானா? - Page 2 755837 நீயா?  நானா? - Page 2 755837



நீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Tநீயா?  நானா? - Page 2 Hநீயா?  நானா? - Page 2 Iநீயா?  நானா? - Page 2 Rநீயா?  நானா? - Page 2 Aநீயா?  நானா? - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக