ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கும் எனக்கும்

3 posters

Go down

உனக்கும் எனக்கும் Empty உனக்கும் எனக்கும்

Post by சிவா Wed Feb 16, 2011 2:55 pm

படகு போன்ற காரை லாவகமாக ஓட்டிக் கொண்டு வந்த கவுதம், அவனது அலுவலகம் இருக்கும் வளாகத்தின் `கார் பார்க்கிங்' பகுதியில் நிறுத்தினான். காரைப் பூட்டிய பின், தன் அலுவலகத்திற்கு போவதற்காக நடந்தான்.

அப்போது அவனது மொபைல் ஒலித்தது.

``நான் பானு பேசறேன்...''

``பானுவா?! யாரு?...''

``ம்... உங்க பாட்டி...! உங்களுக்கும், எனக்கும் கல்யாணம் பேசிக்கிட்டிருக்காங்களே... அந்த பானு...''

``என்ன விஷயம்?...''

```உங்க அம்மா, அப்பா வற்புறுத்தலுக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கீங்களா?''

``யார் சொன்னது? நான் சம்மதிச்சிருக்கேன்னு?!...''

``அப்பிடின்னா? சம்மதிக்கலியா...?!...''

``இல்லை... ஆமா...''

``இந்த பதிலுக்கு என்ன அர்த்தம்?''

``கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா... என்னோட நிபந்தனைகளுக்கு எங்க அம்மா, அப்பா சம்மதிக்கலைன்னா கல்யாணத்துக்கு சம்மதம் இல்லைன்னு சொல்லி இருக்கேன்னு அர்த்தம்...''

"நிபந்தனைகளா? அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?''

"வீட்டுப் பெரியவங்க அனுமதியோட நாம நேர்ல சந்திக்கணும். பேசணும். அதுதான் என்னோட நிபந்தனை...''

"பரவாயில்லையே... ஜென்டில்மேனாத்தான் இருக்கீங்க...''

இரவு. கவுதம் சாப்பிடுவதற்காக மேஜை மீது உணவு வகைகளை எடுத்து வைத்தாள் அம்மா மீனா.

"கவுதம், பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றது?''

"அம்மா... சூடு கண்ட பூனை நான். திரும்ப திரும்ப சூடு பட்டுக்க முடியாதும்மா...''

"நாங்க உன்னைப்பத்தின எல்ல விஷயமும் அவங்கக்கிட்ட பேசிட்டோம்டா...''

"நோ...மா. நான் பேசணும். ஏற் கெனவே ஒரு தடவை தோல்வி அடைஞ்ச வேதனை என் மனசுல முள்ளா குத்திக்கிட்டு இருக்கு.... திரும்ப ஒரு தோல்வியை தாங்கற சக்தி எனக்கு இல்லை...''

"புரியுதுப்பா... நீ அந்தப் பொண்ணுகிட்ட பேசறதுக்கு அவங்க வீட்டுப் பெரியவங்ககிட்ட கேட்டு சொல்றேன். அதுக்கு முன்னால உங்க அப்பா வந்தப்புறம் அவர்கிட்டயும் சொல்லிடலாம்...''

"உங்க எல்லாருக்கும் முன்னால அந்தப் பொண்ணே என்கிட்ட என்னோட மொபைல்ல பேசிச்சும்மா... என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்க அம்மா, அப்பா வற்புறுத்தறாங்களான்னு கேட்டாம்மா. சரியான வாயாடி. அவ பேரு `பானு'ங்கறது எனக்கு மனசுல பதியல. அதனால யார்ன்னு கேட்டேன். `உங்க பாட்டி'ன்னு சொன்னாம்மா..''

"நல்ல பொண்ணுடா. கொஞ்சம் குறும்பு. அதனாலதான் உனக்கு நேரடியா பேசி இருக்கா...''

டபாராவில் ஆவிபறக்க கொண்டு வரப்பட்ட காபி ஆறிக் கொண்டிருந்தது.

"காபி சாப்பிடுங்க...'' வற்புறுத்தினார் பெண்ணின் அப்பா சவுந்தர்.

"இல்லைங்க. இதான் பொண்ணு... இதான் மாப்பிள்ளைன்னு உறுதி பேசாம நான் கை நனைக்க மாட் டேன்.'' கவுதமின் அப்பா வெங்கட் சொல்ல...

"உங்க பையன்... பொண்ணை நேர்ல பார்த்து பேசணும்னு சொன்னானாமே? ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு எங்க பொண்ணு கூட வர்றோம். உங்க மகனை நீங்க அழைச்சுட்டு வாங்க. அவங்க ரெண்டு பேரும் அங்கே தனியா உட்கார்ந்து பேசட்டும்.''

ரெஸ்டாரண்ட் ஒன்றில் பானுவும், கவுதமும் தனி அறையில்.

பானு `ஹாய்' சொன்னதும், கவுதம் லேசாக சிரித்தான்.

``ஏதாவது சாப்பிட்டபடி பேசுவோமா?''- பானு கேட்டாள்.

``ஓ...'' ஒற்றை வரியில் பதில் கூறும் அவனை வியப்புடன் பார்த்தாள் பானு.

பானு... அழகிய பெண். உயரம் சற்று குறைவு என்றாலும், முகம் லட்சுமிகரமாக இருந்தது. கண்களில் குறும்புத்தனம் மின்னியது.

இருவரும் அவரவருக்கு விரும்பிய உணவு வகைகளை வரவழைத்து சாப்பிட ஆரம்பித்தனர்.

சில நிமிடங்களில் கவுதம் ஆரம்பித்தான்.

``உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதல முழுமையான சம்மதமா?''

``ஆமா. அதில என்ன சந்தேகம்?''

``கேள்வி கேட்டா... கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றியா ப்ளீஸ்?''

``சரி... சம்மதம். அடுத்த கேள்வி?'' அவளது இயல்பான குறும்புத்தனம் உருவாக்கிய கேள்வி அவளது வாய்மொழியாய் வெளி வந்தது.

``எங்க அம்மா, அப்பாவுக்காகத்தான் மறுபடியும் இந்தப் பொண்ணு பார்க்கற படலமெல்லாம். ஒருத்தி கூட வாழ்ந்து, அதுக்கப்புறம் விலகி... சட்டப்படி பிரிஞ்சப்புறம் இன்னொருத்தி கூட ஒரு வாழ்க்கை சரிப்பட்டு வருமான்னு ஒரு கேள்வி என்னோட மனசுல ஒரு ஓரத்தில உறுத்திக்கிட்டே இருக்கு. அது மட்டுமல்ல இது உனக்கு முதல் வாழ்க்கை. ஆனா எனக்கு?...'' குறுக்கிட்டு பேசினாள் பானு.

``உங்களுக்கு புதிய வாழ்க்கை...''

பானு இவ்விதம் கூறியதும் சிலிர்த்துப் போனான் கவுதம்.

தொடர்ந்து பேசினாள் பானு.

``இளம் விதவைகள், விவாகரத்தான பெண்கள் இவங்கல்லாம் மறுமணம் செஞ்சுக்கலையா? கையில குழந்தையோட கல்யாணம் பண்ணிக்கறாங்க. அந்தப் பொண்ணுங்களை உண்மையா, நேசிச்சு ஆண்களே வாழும் போது, பெண்ணான நான் தோல்வி கண்ட ஒரு ஆணான உங்க கூட வாழ முடியாதா?

`எனக்கென்ன... நான் ஆம்பளை... எத்தனை கல்யாணம் வேனாலும் கட்டிக்குவேன்' அப்படின்னு திமிரா திரியற ஆண்கள் மத்தியில ஒரு பெண்ணை இரண்டாம் தாரமா கட்டிக்க இவ்வளவு தயங்கி, நிறைய யோசிச்சு, நிதானமா பேசற உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா... அது உங்களோடதான்...'' என்று கூறிய பானு, இனிப்பு வகைகளை எடுத்து வந்து கவுதமுக்கும் கொடுத்து, தானும் வாய் நிறைய போட்டுக் கொண்டாள்.

``அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே பானு... நல்ல யோசி... நான் இன்னும் உன்கிட்ட என்னோட தோல்வி அடைஞ்ச வாழ்க்கையைப்பத்தி எதுவுமே பேசலை...''

``அதைப்பத்தி நீங்க எதுவுமே பேச வேண்டாம். கல்யாணம் ஆனவங்க சேர்ந்து வாழறதுல ஒரு அர்த்தம் இருக்கணும். புரிந்து கொள்ளுதல் இருக்கணும். பிடிக்காம போறதுக்கு நிச்சயமா நீங்க ஒரு காரணமா இருந்திருக்க மாட்டீங்க. மனசுக்குள்ள உங்களை வேதனைப்படுத்தற அந்த பழைய நிகழ்வுகள் பத்தி எனக்கு எதுவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

உங்களோட அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு ஏகப்பட்ட பணம்... சொத்துக்கள்... இதை வச்சு நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேனோன்னு தப்புக் கணக்கு போட்டுடாதீங்க. எங்க குடும்பமும் வசதியான குடும்பம் தான். பணம் இங்கே ஒரு பொருட்டே இல்லை. மனம் தான் முக்கியம். நானும் மனம் விட்டு ஒப்பனா எல்லாமே பேசிட்டேன். இந்த நிமிஷத்தோட உங்க மனசுல இருக்கிற அந்த பழைய குப்பையைத் தூக்கிப் போடுங்க...''

``நான் சொல்றது...''

``இனி நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் மாமா கிட்ட பேசிக்கிறேன்..''

``மாமாவா?...''

``உங்க அப்பா... எனக்கு மாமாதானே?''

அந்த உரிமை வார்த்தையில் அவன் சுருண்டான். ``எனக்கு இனி கல்யாணம் நடந்தா அது உன் கூடத் தான்...''

பானு கூறிய அதே வார்த்தைகளை கவுதம் கூறிய போது பானு ஆனந்த அதிர்வு கொண்டாள்.

அவளுடன் சேர்ந்து கவுதமும் சிரித்தான். இரு இதயங்கள் அங்கே இணைந்து திருமணத்தை நிச்சயித்தன.

- சித்ரலேகா


உனக்கும் எனக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்கும் எனக்கும் Empty Re: உனக்கும் எனக்கும்

Post by SK Wed Feb 16, 2011 3:22 pm

இது மிகவும் அருமையான கதை அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உனக்கும் எனக்கும் Empty Re: உனக்கும் எனக்கும்

Post by உதயசுதா Wed Feb 16, 2011 5:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உனக்கும் எனக்கும் Uஉனக்கும் எனக்கும் Dஉனக்கும் எனக்கும் Aஉனக்கும் எனக்கும் Yஉனக்கும் எனக்கும் Aஉனக்கும் எனக்கும் Sஉனக்கும் எனக்கும் Uஉனக்கும் எனக்கும் Dஉனக்கும் எனக்கும் Hஉனக்கும் எனக்கும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உனக்கும் எனக்கும் Empty Re: உனக்கும் எனக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum