புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
284 Posts - 45%
heezulia
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
19 Posts - 3%
prajai
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_m10ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 11:05 pm

ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை - தமிழில்: கானகன்

முதலாளித்துவ நாடுகளைப் பார்த்துச் சூடு போட்டுக்கொண்டு இன்று அவதிப்படும் நாடு ரஷ்யா என்கிறார் குறிப்படித்தகுந்த இடதுசாரிச் சிந்தனையாளர் போரிஸ் ககார்லிட்ஸ்கி.

மாஸ்கோவிலுள்ள Institute of Globalistation Studies and Social Movements என்ற அமைப்பின் இயக்குநரான ககார்லிட்ஸ்கி அண்மையில் சுற்றுச் சூழல் ஆர்வலர் லாரன்ஸ் சுரேந்திராவுக்குப் புதுதில்லியில் அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்: (பேட்டி ஃப்ரண்ட்லைன் (ஜனவரி 28, 2011) ஆங்கில இதழில் வெளியாகியிருக்கிறது.)


லாரன்ஸ்: சோஷலிசக் கட்டமைப்பு தகர்த்ததன் விளைவாய் ரஷ்யாவில் பாரதூரமான சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, சுற்றுசூழல்கூடக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாகக் கடந்த ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட காட்டுத்தீ. ஆகஸ்ட் மாதத்தில் நான்கு லட்சத்து அறுபதாயிரம் ஏக்கர் பரப்பில் 554 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. வன வளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொள்ளும் தாராளமய அணுகுமுறையின் விளைவே அத்தகைய விபத்துகள். சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக நடைபோடும் இந்தியாவுக்குங்கூட இத்தகைய நிகழ்வுகள் ஓர் எச்சரிக்கை என்கிறார்களே?

ககார்லிட்ஸ்கி: ஒருக்கரீதியாவும் பண்பாட்டுரீதியாகவும் இந்தக் காட்டுத்தீ விபத்துகள் ஒரு திருப்புமுனை எனலாம். கடந்த 17-20 ஆண்டுகளில் ரஷ்யச் சமூகம் எப்படி நிரந்தர அழிவுச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இத்தீவிபத்துகள் எடுத்துக்காட்டுகின்றன என்றுக்கூட சொல்லலாம். ஒரு கட்டத்தில் அரசு இவ்விபத்துகளை இயற்கைப் பேரிடர்களாகச் சித்தரிக்க முயன்றது. ஆனால் எங்கள் நாட்டில் யாருமே அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. இறுதியில் மனிதத் தவறுகளின் விளைவே அவை என அரசும் ஏற்றக்கொண்டது. புவி வெப்பமாதல் சார்ந்த பிரச்சினை அல்ல அது. காட்டுத்தீ என்பது சகஜமானதுதான் என்றாலும் அவ்வளவு அதிகமாகப் பரவிப்பெரும் இழப்புகள் ஏற்பட்டதற்குக் காரணம் தாராளமயவாதம்தான். எப்படியெனில் வன வளங்கள் அனைத்தும் தனியாருக்குத் தாரை வார்த்துக்கொடுக்கப்பட்டதன் விளைவாய் இவ்வாறு ஏற்படும் தீ விபத்துகளைச் சமாளிப்பதற்கான நிர்வாகக் கட்டமைப்பும் கருவிகளும் அருகிவிட்டன. அது மட்டுமல்ல காட்டுத்தீ ஏற்படும்போது அதை அணைக்கும் பொருட்டு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டுமானால் சம்பந்தப்பட்ட வனப்பகுதியின் உரிமையாளரது அனுமதியைப் பெற வேண்டும். அனுமதி கிடைக்கத் தாமதமாகும்போது தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது. இரண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குத் தீ பரவி ஒட்டு மொத்தக் கிராமங்களே அழிந்திருக்கின்றன. அண்டை நாடான பெலாரூஸுக்குத் தப்பி ஓடியவர்கள் அங்கே தீ விபத்தைக் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைக் கண்டனர். அங்கே சோவியத் காலக் கட்டுப்பாடுகள் தொடர்வதால் காட்டுத்தீ விபத்துகளால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இவையெல்லாம் மேற்கத்திய ஊடகங்களில் விவாதிக்கப்படவே இல்லை.

பெலாரூஸ் அமைந்திருக்கும் கிழக்குப் பகுதியில் தீயே இல்லாமல் இருப்பதையும் மேற்கே எங்கள் ரஷ்யாவில் தீப்பிழம்புகள் வானத்தைத் தொடுமளவுக்கு மூண்டெழுந்ததையும் செய்ற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. பெரும் பரபரப்டை ஏற்படுத்திய அப்படங்கள் ரஷ்யாவின் அனைத்து மட்டங்களிலும் ஆளும் பொறுப்பிலிருக்கும் அரசு இயந்திரத்தின், பெரும்புள்ளிகளின் கையாலாகாத்தனத்தையே சுட்டிக்காட்டுகின்றன. மத்திய அரசுக்கே தீயின் வீச்சுப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தீயைக் கட்டுப்படுத்துவது குளித்த உத்தரவுகளைக் கீழ்மட்ட அதிகாரிகள் அலட்சியம் செய்தது பாதிப்புகளை அதிகப்படுத்தியது என்றால் இன்னொருபுறம் மறுவாழ்வுப் பணிகளில் ஊழலோ ஊழல். பிரதமர் புதின் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று மறுவாழ்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின் பணிகள் சீராக நடக்க வேண்டும் என்பதற்காகக் கண்காணிப்புக் காமிராக்களையும் வெப்காமிராக்களையும் நிறுவ வேண்டுமென ஆணையிட்டுவிட்டு மாஸ்கோ திரும்பினார். ஆனால் நடந்ததென்ன தெரியுமா? அக்காமிராக்களே திருடப்பட்டன, அவ்வளவுதான்!

லாரன்ஸ்: சோஷலிசக் கட்டமைப்பு முற்றிலுமாகத் தகர்க்கப்படத் தொடங்கியது 1991ஆம் ஆண்டில்தான். அனைத்து மட்டங்களிலும் ஊதியத்தில் பெரும் சரிவு. அதைப் பற்றிச் சற்று விரிவாகக் கூறுங்கள்.

ககார்லிட்ஸ்கி: பொருளாதாரம் சந்தைமயமானபோது உலகச் சந்தைக்குத் தேவைப்படாத எந்த பொருளும் இருக்கவே தேவையில்லை என ஆள்வோர் நினைக்கத் தொடங்கினர். சற்றுக் கடுமையாகச் சொல்ல வேண்டுமானால் சந்தைக்குத் தேவைப்படாத மக்கள்கூட உயிருடன் இருக்கத் தேவையில்லை என அவர்கள் நினைத்தனர். அரசு நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களும் சரி, தனியார் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களும் சரி, பணமுதலைகளும் சரி, அனைவருமே இவ்விஷயத்தில் ஒரே மாதிரிதான் சிந்தித்தனர். நான் ஏதோ மிகைப்படுத்திக் கூறுவதாக நினைக்க வேண்டாம், அதுதான் உண்மை.

உலகச் சந்தைக்கு வேண்டாமென்றால் எம்மக்களுக்கும் வேண்டாமா என்ன? அவர்களின் பயன்பாட்டிற்கெனப் பொருட்கள் உற்பத்திசெய்யப் பட வேண்டாமா என்ன? அவ்வாறு உற்பத்திசெய்வதன் விளைவாக வேலைவாய்ப்புப் பெருகுகிறது, உள்நாட்டுப் பொருளாதாரமும் வளர்ச்சியடைகிறது. ஆனால் இவற்றில் எதையும் கணக்கில் கொள்ளாமல் எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்னும் நிலை உருவானது. விளைவு அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட தொழில்கள் நசிந்தன. பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பணவீக்கம் உச்சத்தை எட்டப் பொதுமக்களின் சேமிப்பெல்லாம் காற்றில் கரைந்து போகலாயிற்று. இன்னொருபுறம் ஆள்வோர் தங்களுக்குள் சோவியத் கால அரசுச் சொத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

தங்கள் வசதிக்காக, ஆள்வோர் ரூபிளின் டாலர் மதிப்பை அதிகமாக வைத்திருந்தனர். விளைவு உலகச் சந்தைக்கெனத் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலை அதிகம், எனவே வாங்க ஆளில்லை. பெட்ரோலியம் போன்ற மூலப்பொருட்களைத்தான் எந்த விலையிலும் விற்க முடிந்தது.

நிலக்கரியை அப்படி அதிக விலையில் ஏற்றுமதி செய்ய முடியாததால் சுரங்கங்களை மூட வேண்டிய சூழலும் எற்பட்டது. இக்கொடுமையையும் கவனியுங்கள் - நஷ்டத்தில் இயங்கிய சைபீரியச் சுரங்கங்களை மூடி, தொழிலாளர்களுக்கு ஒப்புக்கு நஷ்டஈடாக வழங்கவென உலக வங்கி 500 மில்லியன் டாலர் கடன் வழங்கியது. அதே நேரம் ஆஸ்திரேலிய நிலக்கரி விலை குறைவாக இருப்பதால் அங்கிருந்து இறக்குமதி செய்யுமாறு ரஷ்யாவை உலக வங்கி வற்புறுத்தியது. ஆனால் சைபீரியத் தொழிலாளர்களின் அதிர்ஷ்டம், அந்த 500 மில்லியன் டாலரை யாரோ கையாடிவிட்டார்கள், அது சைபீரியாவைச் சென்றடையவே இல்லை.

சில மாதங்கள் கழித்து அரசு மேலும் கடன் கோரியபோது, முதலில் கொடுத்த 500 மில்லியன் டாலர் என்னவாயிற்றென்று வங்கி கேட்டபோது, அரசிடம் பதிலில்லை, வங்கியும் மீண்டும் கடன்தர மறுத்துவிட்டது.

இந்நேரம் பார்த்து ரூபிளின் டாலர் மதிப்பு அசுரவேகத்தில் விழத் தொடங்கியது. விளைவு ரஷ்ய நிலக்கரியின் உலகச் சந்தை விலை குறைந்தது. எனவே பலரும் போட்டிபோட்டுக் கொண்டு இறக்குமதி செய்ய முன்வந்தனர். மீண்டும் சைபீரியச் சுரங்கங்கள் லாபகரமாக ஆகிவிட்டதாகக் கருதப்பட்டது.

1990களில் எங்கள் உற்பத்தி சக்தியில் 40 சகவிகிதத்தை இழந்து விட்டோம். அமைதிக்காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. அந்த இழப்பு பிறகு சரிசெய்யப்படவே இல்லை.

லாரன்ஸ்: மூலையில் ஒரு பேரரசு, ரஷ்யாவும் உலக அமைப்பும் என்ற நூலில் சோவியத் அமைப்புச் சரிவதற்கு முன்பாகவே "பெரிஸ்ட் ராய்கா' எனப்படும் மறுசீரமைப்பின் விளைவாக ரஷ்யா மூலப்பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யும் பொருளாதாரமாக மாறியிருந்ததாகவும் ஆனால் அதற்கு முன்பே கடன் சுமை கடுமையாக ஏறியிருந்ததாகவும் கூறியிருக்கிறீர்கள்.

ககார்லிட்ஸ்கி: ஆம், கோர்பசேவ் காலத்தின் பெரிஸ்ட்ராய்காவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே 1960களின் பிற்பகுதியில், 70களின் தொடக்கத்தில் கடன்சுமை அதிகரிக்கத் தொடங்கியது.

விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த வளர்ச்சியடையாத நாடாக இருந்த சோவியத் யூனியன் இரண்டு தலைமுறைகளுக்குள்ளாகவே பெரும் தொழில் சக்தியாகவும் உருவெடுத்தது. குறிப்பாகப் புவியியல் விஞ்ஞானம் வியத்தகு வளர்ச்சி பெற்றது. மூலப்பொருள் வளத்தைக் கண்டறிவதில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. 1960களில்தாம் மற்றவகைத் தொழில் வளர்ச்சி குறித்தும் அரசு சிந்திக்கத் தொடங்கியது. ஆனால் 1973இல் ஏற்பட்ட பெட்ரோல் சிக்கல் எண்ணெய் வளத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த சோவியத் யூனியனின் ஆட்சியாளர்களைத் தவறான பாதையில் திருப்பிவிட்டது எனலாம். எண்ணெய் வழியே அந்நியச் செலாவணி குவிந்ததால் நாம் எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம், அது தொழில் நுட்பமாயினும் சரி, நுகர் பொருட்களாயினும் சரி என்றரீதியில் செயல்படத் தொடங்கினர். தொழிற் துறையில் அதுவரை சோவியத் யூனியன் கண்ட சாதனைகளெல்லாம் மறக்கப்பட்டன.

ஒரு நாட்டை வேறொரு நாடுதான் காலனியாக்க வேண்டுமென்பதல்ல. அந்நாட்டின் மேல்தட்டினரே நாட்டு வளங்களைத் தங்கள் நலனுக்கு மட்டும் பயன்படுத்தி, பரந்துபட்ட மக்களைத் தவிக்கவிடுவதும் ஒருவகைக் காலனியாதிக்கம் தான். அதுதான் சோவியத் யூனிய னிலும் நடந்தது. அது வலிமை பெற்றுத் திகழத் தொடங்கிய நேரத்தில் ஆளும் பொறுப்பில் இருந்தவர்கள் உலகை ஆட்டிப் படைத்த சக்திகளில் ஒன்றாகவும் மாறிவிடத் துடித்தார்கள். அதாவது உலகம் என்னும் நிறுவனத்தின் இயக்குநர்களாக அவர்கள் விரும்பினர்.

கோர்பஷாவ் வேண்டுமென்றே அப்படிச் செய்ததாகச் சொல்ல முடியாது, ஆனால் அவருடன் இருந்தவர்கள் அனைவரும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தே செயல்பட்டிருக்கிறார்கள். அவரது புரிதல் பற்றி உடனிருந்தவர்களுக்கு ஐயம் இருந்திருக்க வேண்டும். எனவே அவர்கள் கோர்பசேவுக்குப் பதிலாக யல்ட்சினைக் கொண்டுவந்தார்கள். யெல்ட்சினும் அவர்கள் எதிர்பார்த்ததை மனமுவந்து செய்தார்.

கொடுமை என்னவென்றால் உலகின் ஆளும் வர்க்கத்தில் இடம்பிடிக்க விரும்பியவர்களின் செயல் பாடுகள் காரணமாகவே சோவியத் யூனியன் சூப்பர் பவர், அதிவல்லமை படைத்த சக்தி என்ற தகுதியை இழந்தது. சோவியத் காலச் சாதனைகள் நாசமாயின. நாடே நொறுங்கிப்போனது.

லாரன்ஸ்: உலகப் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, சீனாதான் இன்று அமெரிக்காவைத் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறது எனச் சொல்லலாமா?

ககார்லிட்ஸ்கி: ஏற்றுமதி மூலம் தங்களை வளப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கும் இந்தியாவும் சீனாவும் குறைந்த விலையில் பொருட்களை அமெரிக்காவிற்கு விற்றுத் தங்களை வளப்படுத்திக்கொள்ள நினைக்கின்றனர் என்கிறார் இந்திய நிபுணர் ஜயாதிகோஷ். உற்பத்திச் செலவைவிடக் குறைந்த விலையில்கூட இந்நாடுகள் விற்கத் துணிகின்றன. பெரிய இடத்துப் பெண்ணை மணந்த ஒரு நபர், சோம்பேறியான அப்பெண் அவரது தகுதிக்கேற்ப வாழ வேண்டுமென்பதற்காகக் கடுமையாக உழைப்பதுபோலச் சீனா நடந்து கொள்கிறது என்கிறார் ஒரு வரலாற்றாசிரியர். ஆனாலும் அமெரிக்கா தன் பொருளாதாரத்தைச் சரிப்படுத்திக் கொள்ள முன்வரவில்லையெனில் இந்நிலை எத்தனை நாள்களுக்கு நீடிக்க முடியும் என்பது சந்தேகமே.

லாரன்ஸ்: சீனா தன் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி உலகப் பொருளாதார அமைப்பையே மாற்ற முயலும் என நினைக்கிறீர்களா?

ககார்லிட்ஸ்கி: அப்படி ஒன்றும் அது செய்ய முயல்வதாகவோ அப்படி ஆக வேண்டுமென விரும்புவதாககூடவோ நான் நினைக்கவில்லை. அமெரிக்காவுக்குப் போட்டியாகத் தான் ஒரு வல்லரசாக வேண்டும் என்ற நோக்கில் அது செயல்படுவதாகத் தெரியவில்லை. இன்றைய நிலையில் மேலும் மேலும் வலிமை பெற, அதன் விளைவாக அதற்குத் தலைவலிதான் மிச்சம். அவ்வாறு பிரச்சனைகளை நிலை கொடுத்து வாங்கச் சீனாவை இன்று ஆள்வோர் முன்வரமாட்டார்கள். பிராந்திய அளவில் தங்கள் ஆதிக்கத்தை மற்ற நாடுகள் ஏற்றுக் கொண்டுவிட்டால் அது ஒன்று மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்குமென எனக்குத் தோன்றுகிறது.

அதேநேரம் சரிந்துகொண்டிருக்கும் இன்றைய உலக அமைப்பில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவும் சீனா முயல்கிறது என்பதும் உண்மையே. அப்படிச் செய்யும்போது தேவையில்லாத பல முனைகளில் அதன் வளங்களை அது செலவிடவும் வேண்டியிருக்கிறது. அதன் விளைவாக அந்நாடு ஒரு கட்டத்தில் பாதிக்கப்படும் என்றே நினைக்கிறேன்.

காலச்சுவடு




ரஷ்யா - சூடுபோட்டுக்கொண்ட பூனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக