ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

Top posting users this week
ayyasamy ram
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
கண்ணன்
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களைத் திறந்து காதலிக்கவும்

4 posters

Go down

கண்களைத் திறந்து காதலிக்கவும் Empty கண்களைத் திறந்து காதலிக்கவும்

Post by enganeshan Mon Feb 14, 2011 3:04 pm

காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஒரு அழகான நிரந்தர பந்தம். கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல. மனங்க¨ளைக் கோர்த்து இணைவது காதல். ஆசைப்பார்வைகள் காதல் அல்ல. மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்.

ஆனால் இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது. காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற ·பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம்.

பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல்,
இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும்
திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத
ஒரு இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால்
உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத்
தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க
வைத்துக் கொள்வது தான்.

திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது. இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில்
இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான
அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக்
கொண்டு காதலியுங்கள்.

முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள்.
நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள்.
காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியா விட்டால் நாம்
கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது
மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக்
குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள
முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக்
கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும்
சந்திக்கக்கூடியவை அவை.

உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம்.
ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில்
மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும்
பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால் அவை சகித்துக் கொள்ள
முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.
வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும்
உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது.

சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர
முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும்
அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ
கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து
விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால்
கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல்
உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி
மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.

-என்.கணேசன்
enganeshan
enganeshan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010

http://enganeshan.blogspot.in/

Back to top Go down

கண்களைத் திறந்து காதலிக்கவும் Empty Re: கண்களைத் திறந்து காதலிக்கவும்

Post by sshanthi Mon Feb 14, 2011 3:15 pm

காதலர்தினத்தில் அருமையான காதலர்களுக்கு பயனுள்ள பகிர்வுகண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கண்களைத் திறந்து காதலிக்கவும் Empty Re: கண்களைத் திறந்து காதலிக்கவும்

Post by ஸ்ரீஜா Mon Feb 14, 2011 4:21 pm

அண்ணா இது மிகவும் பயனுள்ள பதிவு.................... உண்மையாக காதலிக்க விரும்புபவர்களுக்கு ...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண்களைத் திறந்து காதலிக்கவும் Empty Re: கண்களைத் திறந்து காதலிக்கவும்

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 4:37 pm

திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக
மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல
சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும்
விடுகிறது. இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால்
'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில்
இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான
அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக்
கொண்டு காதலியுங்கள்.

கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கண்களைத் திறந்து காதலிக்கவும் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கண்களைத் திறந்து காதலிக்கவும் Empty Re: கண்களைத் திறந்து காதலிக்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum