புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
8 Posts - 18%
heezulia
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
194 Posts - 74%

33 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_m10இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை மருத்துவம்.............. இங்கே வாருங்கள் ........

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Feb 17, 2011 3:35 pm

வே‌ர்‌‌க்கடலை‌யி‌ன் மக‌த்துவ‌ம்

உய‌ர்‌ந்த புரத ச‌த்து ‌நிறை‌ந்த உண‌வி‌ல் சோயா ‌பீ‌ன்‌சி‌‌ற்கு அடு‌த்தபடியாக வே‌ர்‌க்கடலை இட‌ம்பெறு‌ம். அ‌தி‌ல்லாம‌ல், பா‌ஸ்பர‌ஸ், கால‌்‌சி‌ம், இரு‌ம்பு‌ச்ச‌த்து, வை‌ட்ட‌மி‌ன் ஈ, ‌நியா‌‌ஸி‌ன் போ‌ன்ற வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் அ‌திக‌ப்படியாக வே‌ர்‌க்கடலை‌யி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது. எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வே‌ர்‌க்கடலை‌க்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது. வ‌யி‌‌ற்‌றி‌ல் பிரச்சினை உள்ளவர்கள், உட‌ல் எடையை‌க் குறைக்க விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடலா‌ம். வே‌ர்‌க்கடலை சா‌ப்‌‌பி‌ட்டது‌ம், ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்காத கா‌பி அ‌ல்லது டீ அரு‌ந்தவு‌ம். ப‌சி‌த்த ‌பிறகு சா‌ப்‌பிட‌ச் செ‌ன்றா‌ல் குறைவான அளவே சா‌ப்‌பிட முடியு‌ம். இதனா‌ல் உட‌ல் எடை குறையு‌ம். வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்

பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம். வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது

‌வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள்

கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது. உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும். ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்.

துள‌சி‌த் தே‌நீ‌ர் ஆரோ‌க்‌கிய‌ம் தரு‌ம்

து‌ளி‌சி‌யை‌க் கொ‌‌ண்டு தே‌நீ‌ர் தயா‌ரி‌த்து‌க் குடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் பலரு‌க்கு‌ம் உ‌ண்டு. இ‌ந்த துள‌சி தே‌நீ‌ர் வெறு‌ம் உ‌‌ற்சாக‌த்‌தையு‌ம், ந‌ல்ல வாசனையையு‌ம் ம‌ட்டு‌ம் அ‌ளி‌க்க ‌வி‌ல்லை. உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம், நோ‌யி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவத‌ற்கான ச‌க்‌தியையு‌ம் அ‌ளி‌க்‌கிறது. துள‌சி‌யை எ‌ந்த முறை‌யி‌ல் உ‌ட்கொ‌ண்டா‌லு‌ம் அது உட‌லி‌ன் ஆரோ‌க்‌‌கிய‌த்தை‌க் கா‌க்‌கிறது. ச‌க்‌தியை அ‌ளி‌க்‌கிறது. நோயை எ‌தி‌ர்‌க்கு‌ம் ஆ‌ற்றலையு‌ம், நோயை குண‌ப்படு‌த்து‌ம் ஆ‌ற்றலையு‌ம், நோ‌யி‌ல் இரு‌‌ந்து கா‌க்கு‌ம் ஆ‌ற்றலையு‌ம் து‌ள‌சி‌த் தே‌நீ‌ர் தரு‌கிறது. துள‌சி இலைகளை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி எடு‌த்து அவ‌ற்றை ‌நீ‌ங்க‌ள் போடு‌ம் தே‌நீ‌ரி‌‌ல் கூட சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது கடை‌க‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌க்‌ரீ‌ன் டீ போ‌ன்றவ‌ற்‌றி‌ல் துள‌சி சே‌ர்‌த்ததை வா‌ங்‌கி வ‌ந்து அரு‌ந்தலா‌ம்.

‌சீரக‌த்‌தி‌ன் மரு‌த்துவ குண‌ங்க‌ள்

‌சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை. வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 4:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக