ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

3 posters

Go down

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Empty கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

Post by அருண் Sat Feb 12, 2011 10:59 am

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பொன் விழா கண்ட தி.மு.க, எத்தனையோ முறை ஊழலை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கியது உண்டு. ஆனால், அதே தி.மு.க., இப்போது ஊழலில் கைதாகியிருக்கும் தங்களது கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாகப் போர்க் கொடி தூக்கியதற்குப் பின்னணி ஏதும் உண்டா என்பதே டெல்லி வட்டாரங்களை இப்போது குடையும் கேள்வி!

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதான முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஐந்து நாள் கஸ்டடியில் இருக்கிறார்! முறைகேட்டில் கைமாறிய பணம் எங்கெல்​லாம் போனது என்பதைப் பல்வேறு கேள்வி​களாக்கி, ஆ.ராசா மற்றும் அவரோடு கைதான இருவரையும் துளைத்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Raja1

வெளி​நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள், தூரத்து நாடு​களின் ரகசிய வங்கிக் கணக்குகள் இவற்றோடு... இந்தியாவுக்குள் தலையெடுத்த திடீர் புது நிறுவனங்கள், அவற்றின் குறுகிய கால அபார நிதி வளர்ச்சி ஆகியவை பற்றியும் சி.பி.ஐ. பல தகவல்களைத் திரட்டி வருகிறது. அம​லாக்கப் பிரிவு அதிகாரிகளும், சி.பி.ஐ.யுடன் இணைந்து ராசாவையும் மற்றவர்களும் விசாரித்து வருகிறார்கள்.

''மும்பையில் உள்ள ஒரு 'லிங்க்'குடன் சென்னை தி.மு.கழக வி.ஐ.பி-க்குத் தொடர்பு இருக்கிறது. யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு முறைகேடுகள் இதில் நடந்துள்ளன. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுப் புரோக்கர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று பெரிய பட்டாளமே இந்த ஊழல் சுழலில் மாட்டி உள்ளனர். சென்னை தி.மு.கழக வி.ஐ.பி. சம்பந்தப்பட்ட ஆதாரத்தை தகுந்த நேரத்தில் கோர்ட்டில் சொல்வேன்'' என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜூ.வி-யில் பேட்டி அளித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில், டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் மீடியாக்கள் மூலமாகக் கசியவிட்டிருக்கும் புதிய தகவல்கள் மேலும் பல அரசியல் பரபரப்புகளுக்கு அடிபோடுகிறது!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டிவிக்கு பணம் கை மாறியுள்ளது என்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்பதே அந்தச் செய்தி..!

இனி விரிவாகப் பார்ப்போம்.

2008-ல் ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 2-ஜி ஸ்பெக்ட்​ரம் உரிமங்களை சுமார் எட்டு நிறுவனங்கள்வரை வாங்கியிருந்தன. அனைத்து உரிமங்களும் மிகக் குறை​வான விலைக்கு கொடுக்கப்பட்டதாலேயே, அரசாங்கத்துக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பது​தான் கணக்குத் தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு. இதில் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவை இரண்டு நிறுவனங்கள். ஒன்று - ஸ்வான் டெலிகாம்... மற்றொன்று - யுனிடெக் நிறுவனம். இதில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம்தான் கலைஞர் டிவியோடு பணத் தொடர்பு வைத்திருந்தது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மும்பையிலும், ஹரியானாவில் உள்ள குர்கானிலும் தன்னுடைய அலுவலகங்கள் இருப்பதாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை கேட்டு விண்ணப்பிக்கும்போது தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது. தன்னுடைய லெட்டர் பேடுகளிலும் காண்பித்திருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட அந்த இடங்களில் அப்படியொரு நிறுவனம் செயல்பட்டதற்கான எந்தச் சுவடும் தற்போது இல்லை என்பதுதான் உண்மை. அதோடு, அந்த லெட்டர்பேடிலும், உரிமம் கோரிய விண்ணப்பத்திலும் கம்பெனியின் தொலைபேசி எண் கூட இல்லை என்று சி.பி.ஐ. சொல்கிறது..! இந்த கூத்தை எங்கே போய் சொல்வது.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Empty Re: கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

Post by அருண் Sat Feb 12, 2011 11:00 am

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Rasacagreport

ஆனால், இந்த லெட்டர்பேடு அண்ட் மன்னார் அண்ட் மன்னார் கம்பெனி சுமார் 1,537 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமத்தை எப்படி பெற்றது என்பதுதான் தற்போது கேள்வி. தொலைத் தொடர்புத் துறையில் சக்திமிக்கவர்களாக இருந்தவர்களின் உதவியில்லாமல் இது நடந்திருக்கவே முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அடிப்படையில்தான் ஆ.ராசா, பகுரா, சொந்தாலியா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிரமாகக் கிளறுவதே - டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோரின் பின்னணிகளைப் பற்றித்தான். ''மேலோட்டமாகப் பார்க்கும்போது, இவர்கள் சாதாரண நபர்கள்தான். ஆனால், மகாராஷ்டிர அரசிய​லிலும் மத்திய அரசிலும் தொடர்ந்து 'பவர்' காட்டி வரும் சரத்பவார், இந்த பால்வா குரூப்புக்கு மிக நெருக்கமானவர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்தவுடனேயே உரிமம் கிடைக்காதவர்கள் இது பற்றிய முறைகேடுகளை வெளியில் சொல்லத் தொடங்கியபோது, ஸ்வான் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தால் அது அப்பட்டமாகத் தெரிந்துவிடும் என்று நினைத்து இந்த நிறுவனத்தின் பங்குகளையெல்லாம் வேறு கம்பெனிகளுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

இதற்காகவே சில பினாமி கம்பெனிகளையும் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பிரதான பினாமி நிறுவனமாக காட்டப்பட்டதுதான் டி.பி.ரியாலிட்டீஸ் என்கிற நிறுவனம்.

இந்த நிறுவனம், மும்பையில் இருக்கும் சாஹித் உஸ்மான் பல்வா (இவர் தனியாக டைமிக்ஸ் ரியாலிட்டி என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்) குடும்பத்தினரும், வினோத் கோயங்கோ குடும்பத்தினரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனமாகும்.

ரியல் எஸ்டேட், பைனான்ஸ், ஏற்றமதி, இறக்குமதி போன்ற பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்த இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்துதான் டைனமிக்ஸ் பல்வா ரியாலிட்டி என்ற பெயரில் நிறுவனத்தைத் துவக்கி அதன் பெயரைச் சுருக்கி டி.பி. ரியாலிட்டீஸ் என்று ஆக்கிவிட்டார்கள்.

சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சாஹித் பல்வா இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இன்றுவரையிலும் தேடப்படும் சர்வதேச பயங்கரவாத குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அஷிஷ் பல்வா தலைமைச் செயல் அதிகாரி. இவர்களில் சாஹித் பல்வா 11 குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர். தாவூத் இப்ராஹிம் 14 குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. ஆக, இவர்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிறுவனத்தோடு நேரடியாக தொடர்பில் இருப்பது பற்றி அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் கேள்வியெழுப்பியதால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை வேறு சில நிறுவனங்களுக்கு விற்க தீர்மானித்துள்ளார்கள்.

இதற்காக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமையைக் கையில் வைத்திருந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 45.73 சதவீத பங்குகளை அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எடிசலாட் (இ.டி.ஏ. குழும நிறுவனத்தின் சலாஹூதீன், பி.எஸ்.ரஹ்மான், ஆகியோர்தான் எடிசலாட் நிறுவனத்தின் பங்குதாரர்கள்) என்கிற நிறுவனத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எடிசலாட் டி.பி. டெலிகம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்துக்கு சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள். மூன்று தவணைகளில் மொத்தப் பணமும் செட்டில் செய்யப்பட்டுவிட்டதாம்.

அன்னிய மூலதன வாரியத்தின் அனுமதியோடு வந்து சேர்ந்த இந்தப் பண பரிவர்த்தனைக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டு இருக்கிறது. இந்த எடிசலாட் - டி.பி.டெலிகம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 45.73 சதவீத பங்குகளை மட்டுமே தங்களது வசம் வைத்திருந்தால், நிறுவனத்தில் பெரும்பான்மை இல்லாமல் போய், தாங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போய்விடும் என்பதால், 51 சதவிகிதம் அளவுக்கு பங்குதாரர்களாக மாறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

இதற்காக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஜெனிக்ஸ் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் (இதன் அலுவலகம் சிட்டி சென்டர் கட்டிடத்தில் உள்ளது) ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். முகமது அசன் (இ.டி.ஏ. குழும பி.எஸ்.ரஹ்மானின் சகோதரியின் மகன்), அகமது சாஹிர் (இ.டி.ஏ. குழும சலாஹுதினின் மருமகளின் அண்ணன்) ஆகியோரை முக்கிய பங்குதாரர்களாகக் கொண்டுதான் இந்த நிறுவனமும் துவக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனிக்ஸ் எக்ஸிம் நிறுவனம், டி.பி. ரியாலிட்டீஸ் நிறுவனத்தில் இருந்து 5.27 சதவிகிதப் பங்குகளை வாங்குகிறது.

இந்த நிறுவனத்தை எடிசலாட் டி.பி.டெலிகம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைத்து மொத்தம் 51 சதவிகிதப் பங்கு உள்ள பங்குதாரர்களாக இவர்கள் உருவெடுத்துவிட்டார்கள். மீதமிருக்கும் 49 சதவிகிதப் பங்குகளை சீனாவின் உவேயி நிறுவனம் (மத்திய அமைச்சர் சரத்பவாரின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது) வாங்கிக் கொண்டது.


அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Empty Re: கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

Post by அருண் Sat Feb 12, 2011 11:05 am

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Kalaignartv

“கலைஞர் தொலைக்காட்சி தொடங்​கப்பட்டதில் இருந்து இன்றுவரையில் கம்பெனி பதிவாளர் அலுவலகத்திடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். சரத்குமார் ரெட்டி, அமிர்தம் பெரியநாயகம், தயாளு அம்மாள் கருணாநிதி மற்றும் கனிமொழி கருணாநிதி ஆகியோர் இந்த கம்பெனியின் இயக்குநர்களாக இருந்திருப்பதையும்... அவர்களின் பதவிகளில் இடையே மாற்றங்கள் நடந்திருப்பதையும்... அது தொடர்பான தேதிகளையும் கையில் எடுத்​திருக்கிறோம். இதோடு சேர்த்து, அந்த தொலைக்காட்சி சேனலுக்கு பணம் வந்து சேர்ந்த தேதிகளையும் கவனமாகப் பார்த்து வருகிறோம்!'' என்று கூறுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

இதில் என்ன விசேஷம் எனில், 2007-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதியன்று கனிமொழி கருணாநிதியும், தயாளு அம்மாளும், சரத்குமார் ரெட்டியும் கலைஞர் டிவியின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த ஆறு நாட்கள் கழித்து அதாவது ஜூன் 12-ம் தேதியன்று அமிர்தம் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் மிகச் சரியாக இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட 14 நாட்கள் கழித்து ஜூன் 20-ம் தேதியன்று கனிமொழி கருணாநிதியும், தயாளு அம்மாளும் இயக்குநர்கள் பொறுப்பில் இருந்து விலகுகிறார்கள்.


கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Kuseakaan12
இப்போது சரத்குமார் ரெட்டியும், அமிர்தமும் மட்டுமே இயக்குநராக தொடர்ந்திருந்த நிலையில், அடுத்த ஒரு மாதம் கழித்து ஜூலை 27-ம் தேதியன்று அமிர்தமும் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுகிறார். இவர் விலகிய அதே தினத்தன்று மீண்டும் தயாளு அம்மாள் கலைஞர் டிவியின் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். ஆக மொத்தம் இப்போது கலைஞர் டிவியின் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருப்பது தயாளு அம்மாளும், சரத்குமார் ரெட்டியும் மட்டும்தான்..!

இது எதற்காக என்ற குழப்பம் சி.பி.ஐ.யினருக்கு இருந்தாலும், கலைஞர் டிவிக்கு பணம் வந்து சேர்ந்த கதையோ நன்கு திட்டமிட்ட ஒரு சிறப்பான சினிமா திரைக்கதையை போல இருக்கிறது என்கிறது சி.பி.ஐ.

டி.பி. ரியாலிட்டீஸ் கம்பெனியின் பணம் நேரடி​யாக கலைஞர் டிவிக்கு வந்து சேர்ந்தால் குட்டு வெளிப்படும் என்பதற்காகவே, இரண்டு மூன்று கம்பெனிகளைத் தாண்டி இந்தப் பணம் வந்துள்ளது. 'இந்தப் பணத்தை நாங்கள் திரும்ப வாங்கிவிட்டோம்' என்றும், 'நாங்கள் கடனாக வாங்கியதைத் திரும்பக் கொடுத்துவிட்டோம்' என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சொன்னாலும்... கை மாறிய தொகை மற்றும் தேதிகளில் பல சேதிகள் ஒளிந்து கிடப்பதாகவே தெரிகிறது.

டைனமிக் ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஆஷிப் பல்வா என்பவரும் டைனமிக்ஸ் பல்வா ரியாலிட்டி நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ராஜீவ் அகர்வால் என்பவரும் இணைந்து ஆளுக்கு 50 சதவிகிதப் பங்குகளோடு குசேகான் ரியாலிட்டி என்கிற நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள்.

டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம், குசேகான் நிறுவனத்தில் 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் 210 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இதன் பிறகு குசேகான் நிறுவனம், சினியூக் என்ற சினிமா பைனான்ஸியல் கம்பெனிக்கு 221 கோடி ரூபாயை கடனாகக் கொடுத்திருக்கிறது. குசேகான் நிறுவனத்தின் 31.3.2010 தேதியிட்ட பேலன்ஸ் ஷீட்டில் 'லோன்ஸ் அண்டு அட்வான்ஸஸ்' என்ற பிரிவின் கீழ் இந்த 221 கோடி ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.



அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Empty Re: கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

Post by அருண் Sat Feb 12, 2011 11:08 am

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 123lli

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Cineu13

இந்தப் பணப் பரிவர்த்தனையின் மூலம் சினியூக் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை குசேகான் நிறுவனம் பெற்றிருக்கிறது. மீதமுள்ள பங்குகளை கரீம் மொரானி என்ற சினிமா பைனான்ஸியர் வாங்கி விடுகிறார்.

'சினியுக்' நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டிலும் கிட்டத்தட்ட அதே தொகை வந்து சேர்ந்திருக்கிறது. தவிர, அதே பேலன்ஸ் ஷீட்டில் 214 கோடியே 86 லட்சத்து 54 ஆயிரத்து 109 ரூபாய், 'கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு 'அதர் அட்வான்ஸஸ்' என்ற தலைப்பில் அளிக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்​களும் உள்ளன.


கலைஞர் டிவியின் 27 சதவிகிதம் முதல் 34 சதவீத பங்குகள்வரையில் வாங்கிக் கொள்வதாக முதலில் ஒப்பந்தம் போட்ட சினியூக் நிறுவனம் பிற்பாடு இன்னொரு ஒப்பந்தம் மூலம் அதனை ரத்து செய்துள்ளது.

இருந்தாலும் இதன் பின்பு, தன்னுடைய நூறு சதவிகித பங்குகளை அடமானம் வைத்து 214.8 கோடி ரூபாய்களை சினியூக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி பெற்றதுபோல ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்படுகிறது.

ஒரே ஆண்டில் கலைஞர் டி.வி. நிர்வாகம் தான் வாங்கிய 214.8 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கூடவே வட்டியாக 35.2 கோடியையும் சினியூக் நிறுவனத்துக்குத் திருப்பி செலுத்தியது போலவும் ஆவணங்கள் சொல்கின்றன. கலைஞர் டி.வி-யின் இதே காலகட்டத்துக்கான பேலன்ஸ் ஷீட்டிலும், இந்தத் தொகை பெறப்பட்டது குறிப்பிடப்பட்டு உள்ளது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Empty Re: கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

Post by அருண் Sat Feb 12, 2011 11:09 am

பணப் பரிவர்த்தனை தொடர்பான கேள்விகள் வரும்போது, தயாளு அம்மாளுக்கோ, கனிமொழிக்கோ, கம்பெனியின் இயக்குநராக இருந்த அமிர்தம் பெரியநாயகத்துக்கோ எதுவும் தெரியாது என்று சொல்லி சரத்குமார் ரெட்டி எல்லாப் பொறுப்பையும் தன் பக்கம் மட்டுமே ஈர்த்துவிட முடியாது. அப்படியொன்று நடந்தால், கம்பெனியின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் கூட்டங்களின் மினிட்ஸ் புத்தகங்களை சி.பி.ஐ. தோண்டியெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

'டிபி ரியாலிட்டிக்கு சொந்தமானதுதான் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம். இந்த டைனமிக்ஸ் நிறுவனத்திலும் குசேகான் நிறுவனத்திலும் இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை. பால்வா மற்றும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் ராஜீவ் பாட்டே, கிருஷ்ண அகர்வால் ஆகியோர்தான். இவர்களுடைய பங்குகள் பற்றிய விவரங்களை நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

இங்கே இருந்து பணம் மாற்றப்பட்ட சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் புரோமோட்டரான கரீம் குலாமலி மொரானியின் பின்னணி பற்றியும் சி.பி.ஐ. தீவிரமாகப் பல தகவல்களை சேகரித்து வருகிறதாம். “மொரானிக்கும் தனக்கும் பல வருடங்களாக இருந்த பழக்கத்தின் காரணமாகவே, கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடிக்கும் அதிகமான தொகையைக் கடனாக வாங்க முடிந்தது. இந்தப் பண டீலிங்கில் தயாளு அம்மாளுக்கும், கனிமொழிக்கும், கலைஞருக்கும் எந்தத் தொடர்புமில்லை..” என்று சரத்குமார் ரெட்டி தன்னிலைவிளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கப் பிரிவில் கிடைத்த செய்திகள் அடிப்படை​யில் சில டெல்லிப் பத்திரிகையாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த நிறுவனத்தினர் சொல்லிய தகவல்களும் விறுவிறுப்பானவை.

சினியுக் நிறுவனத்தினர், ''நாங்கள் கலைஞர் டி.வி-யின் 27 சதவிகிதப் பங்குகளை வாங்குவதாக இருந்​தோம். ஆனால், பங்குகளின் மதிப்பு குறித்து எழுந்த வித்தியா​சங்கள் காரணமாகவே, அந்தப் பரிமாற்றம் நடக்கவில்லை. அளிக்கப்பட்ட பணம் கடனாகக் கருதப்பட்டது!'' என்று மொரானி கூறியுள்ளார்.

ஆனால், பணத்தை கலைஞர் டி.வி. வட்டி​யுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கூறினாலும், எப்போது, எப்படி திரும்ப ஒப்படைத்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இது, வரும் நிதியாண்டில் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போதுதான் தெரிய வரும்!'' என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

“கலைஞர் டிவியின் பிரதான பங்குதாரராக நான் இருந்தாலும் நிர்வாகத்தைக் கவனிக்கும் நிர்வாக இயக்குநர் அமிர்தமும், செயல் இயக்குநராக இருக்கும் சரத்ரெட்டியும்தான் இந்தப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து பதிலளிக்க வேண்டும். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லி பதில் அனுப்பிவிட்டாராம் தயாளு அம்மாள்.

அதேபோல கனிமொழியும் “மொத்த விவகாரங்களும் எனக்குத் தெரியாது. நான் அந்த டிவி அலுவலகம் இருக்கும் பக்கமே ஒரு வருடமாகப் போகவில்லை. மற்றபடி கலைஞர் டிவி நிர்வாகிகள்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டார்.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநரான அமிர்தமோ, “ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு தொடர்பாக தனியாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தலைவர் குடும்பத்தை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று சிலர் தொடர்ந்து முயற்சித்து, இப்படியெல்லாம் இல்லாததுகளையும், பொல்லாததுகளையும் கிளப்பி விடுகிறார்கள். கலைஞர் டிவிக்கு கடன் பெற்றது.. திருப்பிச் செலுத்தியது எல்லாமே சட்டத்திற்கு உட்பட்டதுதான். அதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. தேவையானால் உரிய நேரத்தில், உரிய இடத்தில் இதற்கான விளக்கங்களை சம்பந்தப்பட்டவர்கள் அளிப்பார்கள்..” என்கிறார்.

இதற்கிடையில் வருமான வரித்துறையிடம் கலைஞர் டிவிக்காக காட்டப்பட்ட கணக்கு வழக்குகளில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம். இந்த முரண்பாடுகளையும் சி.பி.ஐ. தனது விசாரணையில் நோண்டி எடுத்திருக்கிறது. என்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில் பலனடைந்தவர்கள் பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டிவிக்கு இப்படி பணம் கொடுத்தது போல கொடுத்து பணப் பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள். இதுதான் சுற்றி வளைத்து இப்போது தி.மு.க.வுக்கு வில்லங்கமாகியிருக்கிறது.

இதே நேரத்தில் நேற்றைய தினம்வரையிலான விசாரணக்குப் பின் இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தின் பின்னணியில் சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் ஆ.ராசாவின் மூலமாக பல்வேறு தலைவர்களுக்கும், புள்ளிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது என்ற தகவலை சி.பி.ஐ. கசிய விட்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடிக்காமல் இருந்திருந்தாலோ, அல்லது குற்றச்சாட்டுக்கள் ஏதும் சொல்லாமல் இருந்திருந்தாலோ கலைஞர் டிவியின் 27 முதல் 34 சதவித அளவிலான பங்குகள் 221 கோடிக்கு விற்கப்பட்டிருக்கும். ஆனால் டிவி ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாக 221 கோடி ரூபாய் அளவுக்கான மதிப்பை கலைஞர் டிவிக்கு எதை வைத்து முடிவு செய்தார்கள்..? யார் அதற்கான அளவீடுகளை செய்தது என்றெல்லாம் கணக்கிட்டால் பணம் கொடுத்தவர்கள் முட்டாள்கள் என்றுதான் தொழில் உலகத்தில் சொல்வார்கள். கலைஞர் டிவியின் ஆரம்ப முதலீடே மூன்று லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சாஹித் பல்வாவிடம் கலைஞர் டிவிக்கு எதற்காகப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது என்கிற விவரத்தை அறிவதுதான் சி.பி.ஐ.யின் முதல் வேலையாக இருக்கும் என்கிறார்கள்.

சாஹித் பல்வா மூலம் ஸ்வான் நிறுவனத்தில் ஆரம்பித்து சினியூக் நிறுவனம்வரையில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது போன்ற விவரங்களை அறியவும்தான் சாஹித் பல்வாவை கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறது சி.பி.ஐ. அவரிடம் நடக்கும் விசாரணைக்குப் பிறகு அரசியல் தொடர்புடைய முக்கிய வி.ஐ.பி.க்கள் பலருக்கும் சிக்கல்கள் காத்திருக்கின்றனபோல் தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த விவகாரத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கரங்களும், தீவிரவாதிகளின் மறைமுகச் செயல்பாடுகளும் இருப்பதாகவும் அறிகிறோம். இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்வகையில் பல்வேறு டீலிங்குகள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுவது குறித்த தகவல்களும் விசாரணைக்குப் பிறகு ஊர்ஜிதமாகலாம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்கள் சி.பி.ஐ. வட்டாரத்தில்..!

இந்த வழக்கு இன்றைக்குவரைக்கும் சுப்ரீம் கோர்ட்டின் நேரடி பார்வையில் நடப்பதால்தான் இந்த அளவுக்கான திருட்டுகளும், கொள்ளைகளும் வெளிப்பட்டுள்ளன. இல்லையேல் இந்த விவகாரத்தையே குழி தோண்டி புதைத்திருப்பார்கள் நமது மதிப்பிற்குரிய கில்லாடி அயோக்கிய அரசியல்வியாதிகள்..!

இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டி சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்காக ஒரு பூச்செண்டை காணிக்கையாக்கி அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

[ இந்தக் கட்டுரையை ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன், சூரியக்கதிர், தமிழக அரசியல், தினமலர், தெஹல்கா.காம் ஆகியவற்றின் உதவியோடுதான் எழுதினேன். இதில் இருக்கும் ஆதாரங்கள் ஜூனியர்விகடனில் இருந்து கையாளப்பட்டது..! - இவர்களுக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும்..! ]

நன்றி : http://truetamilans.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Empty Re: கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

Post by அசோகன் Sat Feb 12, 2011 11:22 am

அடங்கப்பா திருடன பணத்த பதுக்குறதுக்கு செலவளிக்கிற மூளையில் நூறில் ஒரு பங்கை நாட்டு நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் நாடு எங்கேயோ போயிருக்கும்.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Empty Re: கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

Post by பிரகாசம் Sat Feb 12, 2011 12:05 pm

அசோகன் wrote:அடங்கப்பா திருடன பணத்த பதுக்குறதுக்கு செலவளிக்கிற மூளையில் நூறில் ஒரு பங்கை நாட்டு நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் நாடு எங்கேயோ போயிருக்கும்.

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 677196 கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 677196 கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 677196 கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 677196 கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 677196 கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 677196 கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..! Empty Re: கொள்ளையடித்த பணம் கலைஞர் டிவிக்குள் வந்த கதை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம்
» பணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம் : பலி எண்ணிக்கை 56 ஆனது
» லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த ரகசிய தகவல்... துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ.40 லட்சம் பணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum