ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_c10குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_m10குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_c10 
heezulia
குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_c10குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_m10குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_c10 
mohamed nizamudeen
குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_c10குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_m10குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்?

3 posters

Go down

குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Empty குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்?

Post by சிவா Fri Feb 11, 2011 3:03 pm

நம்மில் பலர் ஒரு டீக்கடைக்கோ, குளிர்பானக் கடைக்கோ போகிறோம். நமக்குப் பிடித்த பானத்தைப் பெற்றுக் குடித்துவிட்டு காகிதக் கோப்பை அல்லது பிளாஸ்டிக் கோப்பையைக் கசக்கி தூக்கி எறிகிறோம். பிஸ்கட் சாப்பிட்ட பிறகு, பிஸ்கட் சுற்றி வரும் பேப்பரை அல்லது அட்டையைத் தூக்கி எறிகிறோம். இப்படி நமது வாழ்க்கையில் பயன்படாதவை, தேவையற்றவை என்று எத்தனையோ விஷயங்களைக் குப்பை, கழிவு என்று தூக்கி எறிகிறோம்.

ஆனால் பெருநகரங்களில் வாழ்பவர்கள் குப்பைத் தொட்டிகள் அருகே செல்லும்போது, பொதுவாக என்ன செய்கிறார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? மூக்கைப் பிடித்துக்கொண்டு வேகமாக அந்த இடத்தைக் கடந்து செல்வார்கள். குப்பைத் தொட்டியிலிருந்து வெளிவரும் சகிக்க முடியாத துர்நாற்றமே இதற்குக் காரணம். அதேபோல குப்பைகள் ஓரிடத்தில் அகற்றப்படாமல் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டுக்கொண்டிருந்தால் அவை அழுகி, அங்கிருந்து ஒருவித துர்நாற்றம் ஏற்படுகிறது. வீட்டிலுள்ள குப்பைத் தொட்டியில் குப்பையை அகற்றாமல் சில நாட்கள் விட்டுவிட்டாலும்கூட துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது?

இந்த நாற்றம் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறது. இப்படி துர்நாற்றம் வருவதற்கான காரணம் என்ன? குப்பை அழுகுவது எப்படி?

காற்றில் நிறைய பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் இருக்கின்றன. எந்த ஒரு திடக் கழிவிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகை இருக்கும். காய்கறி, பழம், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை மக்கும் கழிவுகள். பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகப் பொருட்கள்போன்றவை உடனடியாக மக்காத குப்பைகள். மக்கும் குப்பைகளில் தாவரப் பொருள் இருக்கிறது. இது அழுகுவதே துர்நாற்றத்திற்குக் காரணம். பெரும்பாலும் வெதுவெதுப்பான, அதேநேரம் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில்தான் இந்த அழுகுதல் விரைவாக நடைபெறுகிறது.

பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் தாவரப்பொருளை சாப்பிடுவதால் ஏற்படும் வேதியியல் சிதைவுதான் அழுகுதல். உண்ணும் உணவு, அதை உட்கொள்ளும் பாக்டீரியாவின் வகையைப் பொருத்து இந்த துர்நாற்றம் மாறுபடுகிறது.

ஒரு ஆரஞ்சுப் பழக் கழிவின் மேல் உருவாகும் பென்சிலின் பாக்டீரியாவும், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பென்சிலின் பாக்டீரியாவும் ஒரே மாதிரி துர்நாற்றத்துடனே இருக்கின்றன. அவற்றின், மூக்கைத் துளைத்து எரிச்சலூட்டும் தன்மை கொண்ட துர்நாற்றம் நாம் ஏற்கனவே சுவாசித்தது போலவே இருக்கும்.

வீட்டிலுள்ள குப்பைகளில் சில நேரம், நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களும் இருக்கக்கூடும். இவற்றில் மிகவும் மோசமானது "பாஸ்டுரெல்லா பெஸ்டிஸ்'. இந்த பாக்டீரியா ஆட்கொல்லியான பிளேக் நோயைப் பரப்பக் கூடியது. எலிகளின் மூலம் பரவும் தன்மை கொண்டது. எனவே, அழுகிய குப்பைகள் குறித்து எப்பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். அதிகம் முகர்ந்து பார்த்துவிடாதீர்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். நம்மையெல்லாம் இவ்வளவு காலம் வாழ வைத்துக்கொண்டிருப்பதும், எதிர்காலத்தில் வாழ வைக்கப் போவதுமான இயற்கை எவ்வளவு பெரிய விஞ்ஞானி தெரியுமா? இயற்கை, எதையுமே கழிவு என்று வீணாக்குவது இல்லை. இயற்கையில் எல்லாமே மூலப்பொருட்கள்தான். இயற்கையில் ஓர் உயிரினத்திற்குத் தேவையற்றதாகக் கருதப்படுவது, மற்றொரு உயிரினத்திற்கு உணவாகக்கூட மாறலாம். இறந்த ஒரு உயிரினம், புழு பூச்சிகளுக்கு உணவாக மாறுகிறதல்லவா? அது போலத்தான் இதுவும். எல்லாமே இயற்கை சுழற்சியின் பகுதிகள்தான்.

அமிதா


குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Empty Re: குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்?

Post by SK Fri Feb 11, 2011 3:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பதிவு அண்ணா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Empty Re: குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்?

Post by mkag.khan Fri Feb 11, 2011 6:20 pm

மகிழ்ச்சி


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்? Empty Re: குப்பை அழுகிய துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum