ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் தமிழர்?

5 posters

Go down

யார் தமிழர்? Empty யார் தமிழர்?

Post by அசோகன் Wed Feb 09, 2011 11:05 am

தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?


”அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,” என்று பட்டென சொல்ல தோன்றினால், “அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?” “வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?” என்ற கேள்வியும் வரும்.

அப்படியில்லை, அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தால் அவர் தமிழரே, என்று விளக்கம் சொன்னலோ, அப்படியானால் நெதர்லாந்துகாரரான கமில் ஸ்வெலிபில் எனும் தமிழ் அறிஞரும் தமிழர் தானா? ஒரு சாராசரி தமிழனை விட, அதிகம் தமிழை பற்றி தெரிந்துவைத்திருக்கிறவர் ஆயிற்றே. அப்படியானால் அவர் தமிழர் தானே? என்று வாதிட்டாலோ, “அதெல்லாம் இல்லை, அவருக்கு எவ்வளவு தமிழ் தெரிந்திருந்தாலும், அவருடைய அசல் தாய் மொழி டச்சு தான், அவர் சொந்த விருப்பத்திற்க்காக அவர் தமிழ் கற்றார்…. தேர்சி பெற்றார். அவர் தமிழுக்காக, எவ்வளவு சாதித்திருந்தாலும் அவர் தமிழர் ஆக மாட்டார். காரணம், அவர் தாய் மொழி தமிழே இல்லை” என்று பதில் வரும்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை, தமிழ் பெற்றோருக்கு பிறந்தும், பல காலம் வெளி நாட்டில் வாழ்ந்ததால் தலைமுறை தலைமுறையாக, ஆங்கிலம், ஜெர்மன், அல்லது, ஃபிரென்ஞ்ச் மட்டுமே பேசும் தமிழ் தெரியாத மனிதராக இருந்தால், அப்போது அவர் தமிழரில்லையா? உதாரணம்: இன்று ஃபிஜி, மொரீஷியஸ், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தீஸில் வாழும் பல தமிழ் வம்சாவழியினருக்கு தமிழே தெரியாதே. அவர்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைப்பது, அந்தந்த ஊரின் மொழியை மட்டும் தானே.

அல்லது, வேலை நிமித்தமாக தமிழ் நாட்டில் வசிக்க நேர்ந்ததால், தொன்று தொட்டு பல தலை முறைகளாக தமிழையே பேசிக்கொள்கிறார்கள் …..உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டில் வாழும் பல ரெட்டிமார்கள் வீட்டிலும், மனதிற்குள்ளும் தமிழை தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கே தெரிவதில்லை…..அப்படியானால் அவர்கள் தமிழர்களா?

அப்படி இல்லை, தமிழ் தெரியுமோ தெரியாதோ, அது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம். பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்றூ மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?

இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால் தமிழ் என்பது மொழியின் அடையாளமா? இனத்தில் அடையாளமா?”

தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.

சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.

அது சரி, ஆனால் இந்த திராவிட இனம் என்பது எங்கே, எப்போது, எப்படி தோன்றியதாம்? அது கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கு முன்னால் எல்லாம் தோன்றியது என்று நாம் மிகை படுத்தி, “முதலில் தோன்றிய மூத்த குடியாக்கும்” என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது. காரணம் இன்று எல்லா கூற்றூகளையும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்க முடியும்! மானுடம் என்ற ஜீவராசி தோன்றியே ஒரு மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன, என்பது அறிவியல் உண்மை, அப்புறம், இந்த கல் தோன்றி, மண் தோன்றா காலத்து கதைகளை சொன்னால், அது அபத்தம் ஆகிவிடுமே!

கதை எல்லாம் எதுவுமில்லை, நிஜம் இது தான்: கிட்ட தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். ஆஸ்கோ பார்போலா என்ற மொழியியல் புணரும், ஐராவதம் மஹாதேவன் அவர்களும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார், சிந்து சவவெளி காரர்களின் எழுத்து ஆதி திராவிட எழுத்துவடிவம் தானாம்! என்றாலும், அடுத்த கேள்வி எழுகிறது…..சிந்து சமவெளிக்கு திராவிடர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அதற்கு முன்னால் அவர்கள் எங்கே இருந்தார்கள்?

எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. இந்த ஹோமினினே குரங்கு தான் கிட்ட தட்ட ஐந்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சிம்பான்சி, போனோபோ, ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற மூன்று வகைகளாக பிரிந்தது. இதில் ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற வகை மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக்கொண்டே போய், கிட்ட தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பேப்பியன்ஸ் என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். ஆரம்பத்தில் இந்த இனத்தில் ஜனத்தொகை சில நூறுகளாக மட்டுமே இருந்தன. இவை ஒரே மொழியை பேசின. ஒரே விதமான நம்பிக்கைகளை கொண்டிருந்தன. ஒரே விதமான மரபுகளை பின்பற்றின. உணர்ச்சிகள், தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், அவ்வளவு ஏன், உடல் மற்றும் மனநலநோய்கள் கூட இவற்றுக்கு ஒரே மாதிரி தான் இருந்தன. இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இப்படி பரவிய இந்த மனித கூட்டம், கடந்த பத்தாயிரம் ஆண்களகாய், பல திக்குகளுக்கு பிரிந்து போயின. போன இடத்தில் புது புது உணவுகளை உட்கொண்டு, புது புது வாழ்க்கை முறைகளை பின்பற்றி, மொழியை மாற்றி மாற்றி பேசினாலும், இன்று வரை இவை அனைத்துமே ஒரு இனம் தான். உலகின் எந்த கோடியில் பிறந்த மனிதருக்கும், வேறு எந்த கோடியில் பிறந்த அடுத்தவர் ரத்த/உருப்பு தானம் செய்ய முடியும், இருவரது திசுகளும் பொருத்தமாய் இருந்தால். இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், பொனோபோக்களின் உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஐந்தாறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரிந்து போன சகோதர இனக்களான பொனோப்போவும் மானுடமும் இத்தனை ஒற்றூமைகள் இன்னும் இருக்கின்றன என்றால், பத்தே பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவை தேடி போனதில் பிரிந்து போன மனித வர்கம் இன்னும் எத்தனை நெருக்கமானதாக இருக்க வேண்டும்!

அதனால் தான் எத்தனை மொழிகளை நாம் பேசினாலும் எல்லா மொழிகளுமே தாயை, “மா” என்று தான் அழைக்கின்றன. அதனால் தான் நெதர்லாந்தில் பிறந்தாலும் கமில் ஸ்வெலிபில், மாதிரியான ஆசாமிகளுக்கு தமிழ் மீது ஆர்வம் வருகிறது. ஆக, எல்லா மனிதரக்ளும் அடிப்படையில் ஒன்று தான் என்றால் தமிழர்கள் என்பவர்கள் யார்?

ஆஃப்ரிக்காவில் தோன்றி, சிந்துசமவெளியில் நாகரீகம் கண்டு, திராவிட மொழியையும், கலாச்சாரத்தையும் தோற்றூவித்து, பல ராஜியங்கள் கண்டு, இன்னும் இன்னும் பல புதிய நிலபறப்புகளுக்கு பரவிக்கொண்டு இருக்கும் அந்த இனம் தான் தமிழ் இனம். இந்த பெரிய பயணத்தில் அவர்களின் மொழி மாறி இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம்….ஆனால் தொடர்ந்து பயணிப்பதும், பிழைப்பதும், புதிய சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டே போவதும் தான் இவர்களின் அடையாளங்கள். இவற்றை வைத்து இவர்களை நீங்கள் இனம் காணலாம்…..இப்பது சொல்லுங்கள் பார்ப்போம், தமிழர்கள் என்றால் யார்?
நன்றி:டாக்டர் என்.ஷாலினியின் வலைப்பூ
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by கண்ணன்3536 Wed Feb 09, 2011 11:57 am

தயவு செய்து திராவிடத்கை தமிழுக்குள் கொண்டு வந்து தமிழை அழித்துவிடாதீர்கள் ,இன்னும் ஆய்வு செய்யுங்கள்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by சிவா Wed Feb 09, 2011 12:11 pm

இரண்டு வரியில் எழுத வேண்டிய கருத்தை இப்படியா ஜவ்வாக இழுத்து படிப்பவர்களை எரிச்சல் மூட்டுவது! யார் தமிழர்? 56667


யார் தமிழர்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by SK Wed Feb 09, 2011 2:07 pm

ஒண்ணுமே புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by உதயசுதா Wed Feb 09, 2011 2:11 pm

எப்படிப்பா இத பொறுமையா படிக்கிறது.பாதி படிக்கிறதுக்குள்ள
எரிச்சல் வருது.சிவா சொன்ன மாதிரி இரண்டு வார்த்தைளா முடிக்க வேண்டிய விசயத்த இவ்வல்வு பெரிய கட்டூரையா எழுதி இருக்காங்க


யார் தமிழர்? Uயார் தமிழர்? Dயார் தமிழர்? Aயார் தமிழர்? Yயார் தமிழர்? Aயார் தமிழர்? Sயார் தமிழர்? Uயார் தமிழர்? Dயார் தமிழர்? Hயார் தமிழர்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by Guest Wed Feb 09, 2011 4:40 pm

அசோகன் அண்ணே இப்ப என்ன சொல்ல வரிங்க.... இப்படியா ஒரு கட்டுராய முழுசா சுடுறது ... முக்கியமானதா மட்டும் சொல்லி இருக்கலாம்
avatar
Guest
Guest


Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by அசோகன் Wed Feb 09, 2011 6:14 pm

நண்பர்கள் என்னை மன்னித்தருள்வீர்களாக!இனிமேல் இம்மாதிரி ஜவ்வு பதிவுகளை பதிய மாட்டேன்.................
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by சிவா Thu Feb 10, 2011 7:16 am

அசோகன் wrote:நண்பர்கள் என்னை மன்னித்தருள்வீர்களாக!இனிமேல் இம்மாதிரி ஜவ்வு பதிவுகளை பதிய மாட்டேன்.................

யார் தமிழர்? 705463 யார் தமிழர்? 705463 யார் தமிழர்? 705463 இனிமேல் ஜவ்வு மிட்டாய் விற்க மாட்டீர்களா? யார் தமிழர்? 572280


யார் தமிழர்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by கண்ணன்3536 Thu Feb 10, 2011 9:42 am

சிவா அண்ணா ,இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில் பேராசிரியர் மதிவாணன் அவர்களின் சந்தித்தவேலையில் நிகழ்ச்சியில் தமிழின் தொன்மை சிந்துவேளிநா கரிகத்துக்கு முற்பட்டது என்பதனை மிகவும் ஆதாரபுர்வமாக சொன்னார் .அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளாராம் கூகிளில் தேடினேன் கிடைக்கல .நீங்கள் கிடைத்தால் லிங்க் தாருங்கள் .தமிழனின் தொன்மைகளை அறிய விரும்புபவர்கள் தேடிக்கொண்டேயிருங்கள்
எமது தொன்மை எமக்க்கு வியப்புத்தரும்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by சிவா Thu Feb 10, 2011 9:44 am

kannan3536 wrote:சிவா அண்ணா ,இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில் பேராசிரியர் மதிவாணன் அவர்களின் சந்தித்தவேலையில் நிகழ்ச்சியில் தமிழின் தொன்மை சிந்துவேளிநா கரிகத்துக்கு முற்பட்டது என்பதனை மிகவும் ஆதாரபுர்வமாக சொன்னார் .அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளாராம் கூகிளில் தேடினேன் கிடைக்கல .நீங்கள் கிடைத்தால் லிங்க் தாருங்கள் .தமிழனின் தொன்மைகளை அறிய விரும்புபவர்கள் தேடிக்கொண்டேயிருங்கள்
எமது தொன்மை எமக்க்கு வியப்புத்தரும்

இணையத்தில் கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன் கண்ணன்!


யார் தமிழர்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யார் தமிழர்? Empty Re: யார் தமிழர்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum