புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
15 Posts - 79%
Barushree
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
1 Post - 5%
heezulia
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
1 Post - 1%
heezulia
உள்ளம் உறவு உலகம்! Poll_c10உள்ளம் உறவு உலகம்! Poll_m10உள்ளம் உறவு உலகம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் உறவு உலகம்!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 08, 2011 1:06 pm

உள்ளம் உறவு உலகம்! 12123184316f9vso
பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல ; என்றாலும், பசி தூக்கம் பார்த்து கவனித்து விட்டால், விளையாடிக் ö காண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர வளரத்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்று பெற்றோரும், பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று பிள்ளைகளும் புலம்புகிறார்கள். கரு முதல் இறுதி வரை கூடவே இருக்கும் ஒரே உறவு, இந்தப்பெற்றோர் – பிள்ளை உறவுதானே? அதை பலப்படுத்தும் முயற்சி மிகவும் அவசியம் அல்லவா!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 08, 2011 1:07 pm

* தலைமுறை இடைவெளி என்பது என்ன? புரிந்துகொள்ளுதலில் இடைவெளி என்பது பெற்றோர் பிள்ளைகள் இடையே மட்டும்தான் வருகிறதா? இடைவெளியைக் குறைத்து இந்த உறவுக்குப் பாலம் அமைப்பது எப்படி?

தலைமுறை இடைவெளி என்பது, கருத்துப் பரிமாற்றத்திலும், புரிந்துகொள்ளுதலிலும் இருக்கக் கூடிய இடைவெளி. அது பொதுவாக, இளையவர்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே இருப்பதாகக் கருதப்படுகிறது.எண்ணப்போக்கிலும், இலட்சியங்களை நோக்கிச் செல்வதிலும் இந்த இடைவெளி தோன்றுகிறது.
இந்த இடைவெளியை அதிகப்படுத்துவதில் பெரியவர், சிறியவர் என்ற இரு பக்கத்தினருக்குமே பங்கிருக்கிறது. ஆர்வம், சாதிக்கும் வெறி. துணிச்சல் எல்லாம் இளம்தலைமுறையினருக்கு அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், அனுபவமும், ஞானமும் பெரியவர்களுக்கு அதிகம் என்பதையும் மறுக்க முடியாது. ஆக, இரு வெவ்வேறு பலங்கள் கொண்ட இரு சாராருமே இணைந்து செயல்பட்டால் அதிக நன்மை உண்டு.
இருவருமே ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு, நல்லவற்றை மற்றவர்களிடமிருந்து கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும். விரிசலுக்குக் காரணம் சொல்லாமல், பாலம் அமைக்க வழிகள் கண்டுபிடிப்பது தான் சரியான வழி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 08, 2011 1:08 pm

* வாழ்க்கையில் பல விஷயங்களை அனுபவம்தான் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அனுபவம் போல் சிறந்த ஆசான் இல்லை. அதே நேரத்தில், பிள்ளைகளுக்க நல்லவை தீயவற்றைப் புரிய வைத்து நல்வழிப்படுத்தும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது. பெற்றோர்கள் எவற்றை அனுபவம் என்னும் ஆசானிடம் விடுவது? எவற்றை தங்கள் அறிவுரையின் மூலம் திருத்த முனைவது?

எப்போது பெற்றோர் தலையிடவேண்டும், எப்போது தலையிடக் கூடாது என்று எழுதி வைத்த நியதி கிடையாது. மூளையும் மனதும் இணைந்து செயல்படுதல் மிக அவசியம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆண் பெண் என்ற இரு சக்திகளும் ஒருங்கிணையும் போது, ஒரு சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்பது தானாகப் புரிந்துவிடும்.
ஒவ்வொரு அனுபவமும் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். ஒரு அனுபவத்தில் பலியாகாமல் அதிலிருந்து கிடைக்கும் பாடத்தை கற்கும் மனோபாவம் வேண்டும். பெரியவர்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முயலும் போது, தவறைச் சுட்டிக்காட்ட முனையாமல், சரியானவற்றை உணர்த்த முயல வேண்டும். அறிவுரை என்பது பெரும்பாலானோர் செய்வது போல் குத்திக் காட்டுவதாய் இல்லாமல், உங்கள் கோணத்தை எடுத்துக்காட்டுவதாய் மட்டும் இருக்க வேண்டும்.
அதோடு, நீங்கள் அறிவுரை கூறும் போது, அவர்கள் அதைக் கேட்டும் மனநிலையில் இருக்கிறார்களா என்பதையும் பாருங்கள். கேட்கும் நிலையில் இல்லையென்றால் நீங்கள் சொல்லும் எதையுமே அவர்கள் உள்வாங்கிக் கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, வார்த்தைகளால் கிடைக்கும் உணருதலை விட, நம் உள்நோக்கமும் நாம் வாழும் முறையும் தரும் உணருதல் மிகுந்த சக்திவாய்ந்தது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 08, 2011 1:09 pm

* குழந்தைகளோடு பழகும்போது பெற்றோர் அவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருப்பது சரியா அல்லது ஒழுக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு சற்றுக் கடுமையாக நடந்து கொள்வது சரியா? பெற்றோர் எப்போதுமே அவர்கள் நலம் விரும்பிகள் என்பதை எப்படிப் புரிய வைப்பது/

நல்ல நண்பர்களைப் போல் இருக்கும் அதே நேரத்தில், நியாயமாகவும் வெளிப்படையாகவும், விட்டுக்கொடுத்தும் இருப்பது அவசியம். நிறைய இளைஞர்கள் ஒழுக்கம் என்பது சுதந்திரத்தைப் பறிக்கும் விஷயமென்று நினைக்கிறார்க ள். அந்தப் போக்கு மாற வேண்டும். ஒழுக்கம் சுதந்திரத்தைச் செம்மைப்படுத்தும். நதிக்கு கரை போல, சுதந்திரத்துக்கு ஒழுக்கமாகும்.
குழந்தைகளை வளர்ப்பதென்பது ஒரு கல்விமுறை. அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் சொன்னவுடனே அவர்கள் புரிந்துகொண்டு கேட்பார்கள் என்று இருந்து விடாதீர்கள். குழந்தைகளின் மனதை ஆட்கொள்ளும் பெற்றோர்களாய் நம்மை வளர்த்துக் கொள்வது ஒரு கலை. அதில் தேர்த்தி பெற காலம் ஆகும்.
உலகம் நன்மை, தீமை இரண்டையுமே தரக்கூடியது. நல்ல பெற்றோருக்கு, நல்லவற்றை எடுத்துக் கொள்ளவும் தீயவற்றை ஒதுக்கவும் கற்றுத் தரும் பொறுப்பு இருக்கிறது. அதோடு, எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளின் நலம் தெரிந்து நடப்பவர்கள் என்று சொல்ல முடியாது. குறிக்கோள் நல்லதாகவே இருந்தாலும், நடைமுறையில் முட்டாள்தனமாக நடந்து கொண்டால் அது பிள்ளைகளுக்கு அதிக துன்பத்தை விளைவிக்கும். உதாரணத்துக்கு, ஜாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகளினால் தங்கள் குழந்தைகளுக்குப் பிரிவினையைத்தான் சொல்லிதருகிறார்கள். இத்தகைய பிரிவினைகளால் பிரச்னைகளும் வலியும் உண்டாகின்றன. ஆகவே, பெற்றோரின் உள்நோக்கம் பிள்ளைகளின் நலம் என்கிறபோதிலும், தங்கள் மனதை முதலில் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியம்.

* வயதானவர்களைப் பார்க்கும் போது, அவர்கள் மீண்டும் ஒருமுறை குழந்தைகளாக மாறிவிடுவதாகவே தோன்றகிறது. யதார்த்தத்தில், சில நேரங்களில் பிள்ளைகளைப் போல கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் சில நேரங்களில் பெரியவர்களைப் போல அவர்கள் போக்கில் விட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இதை எப்படி அணுகுவது?
அன்பிற்கு இருக்கும் சக்தி கடவுளை ஒத்தது. அன்பின் சக்தியை உணர்ந்து நடக்கும்போது, வயதானவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பது புரிந்துவிடும். அவர்களோடு உறவாடுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். முதிர்ச்சி öன்ற பருவத்தை அடையும் அதே நேரத்தில், குழந்தை போல் ஆகிறோம் என்பது அவர்களுக்கும் குழப்பத்தை உண்டாக்கும் விஷயம். அதைப் புரிந்து பரிவோடு நடந்து கொள்ள முயன்றீர்களானால், அவர்களுக்கு உதவ முடியும். ஆத்மார்த்தமான முயற்சி செய்து உங்களால் இயன்றவரை அன்பைக் கொடுக்கும்போது, கிடைக்கும் பலனும் அதிகம். உங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பது போல் அவர்களுக்கு செல்லம் கொடுப்பதில் என்ன தவறு? அவர்களுக்கு அது இரண்டாவது குழந்தைப் பருவம் அல்லவா?

வயதில் சிறியவர்கள்தான் அதிகம் அனுசரித்துப் போகவேண்டும். பெரியவர்களும் அனுசரித்துப் போகும் நிலையில் மிகவும் நல்லது. அப்படி இல்லாத நிலையில், அவர்களுக்குத் தேவையானதை எதிர்ப்பார்ப்பின்றி கொடுக்கும் போது, உங்கள் வாழ்க்கைத் தரம் மேலோங்கும். அறிவுப்பூர்வமாக நிறைய யோசிக்காமல் அன்பைப் பொழியப்பழகுங்க ள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 08, 2011 1:12 pm

* பெற்றோரைத் தவிர மற்றவர் பேச்சைக் கேட்கும் தன்மை எல்லா வயதினருக்கும் இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பெற்றோர் சொல்லும் போது “முடியாது’ என்று மறுத்து வாக்குவாதம் செய்யும் ஒருவர், அதே விஷயத்தை நண்பரோ வேறொருவரோ சொல்லும்போது ஏற்கிறார்கள். இந்த பாரபட்சம் ஏன் வருகிறது?

அருகாமை, மனத்தில் அலட்சியத்தைத் தோற்றுவிக்கிறது.பெற்றவர்கள் எப்படி இருந்தாலும் தங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணம் அவர்கள் சொல்வதைக் கேட்காததற்குக் காரணமாகிறது. பெற்றோரின் அருகாமை மற்றும் அன்பின் மதிப்பு புரியாமல் போய்விடுகிறது. மற்றவர் விஷயத்தில் இது அரிதாகிறது. சிறு வயதிலிருந்தே எதையுமே அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்ற உணரல் மிகவும் அவசியம்.நம் ஆரோக்கியம், பணம், அந்தஸ்து எதையுமே துச்சமாக நினைக்கக்கூடாது. இயற்கை தரும் பரிசுகளை நன்றியுணர்ச்சியோடு மெச்சும் மனம் அவசியம். பெற்றோர்களைப் பெறுவதும் அப்படிப்பட்ட பாக்கியம்தான். பெற்றோரின் அன்பு கிடைக்காத குழந்தைகள் எதையெல்லாம் அனுபவிக்கத் தவறியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள். வாழ்க்கையின் ஸ்திரமின்மையை உணர்ந்து இவற்றை மதிக்க வேண்டும். இந்த உணருதலை பெற்றோர், குழந்தைகளுக்குச் சாதுர்யமாக கற்றுத் தரவேண்டும்..

நன்றி : senthilvayal.wordpress

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 2:13 pm

பயனுள்ள குறிப்புகளின் தொகுப்பு அருமை அருண்!



உள்ளம் உறவு உலகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 08, 2011 2:45 pm

அழகான கட்டூரயை பகிர்ந்தமைக்கு நன்றி அருண்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக