புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 10 of 32 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 21 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jun 24, 2011 1:38 pm

அனைத்தும் அருமை அண்ணா !!!!!!!!நன்றி !!!!!!!



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Pநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Oநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Sநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Tநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Vநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Eநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Emptyநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Kநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Tநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Hநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Cநெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 K
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:47 pm

`நீ முன்னாலே போனா... நான் பின்னாலே வாரேன்...'

நான் பள்ளி விடுமுறையில் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு போய்விட்டு சென்னைக்கு திரும்பினேன். அதற்காக திருச்செந்தூரிலிருந்து நெல்லை செல்லும் ரெயிலில் ஏறினோம். பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தை தாண்டியதும் ஒரு பாலத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

ரெயில் ஏன் நிற்கிறது? என்று தெரியாமல் எல்லோரும் வெளியே எட்டிப் பார்த்தார்கள். தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் செல்போன் பேசியபடி பாலத்தில் நடந்து வந்திருக்கிறார். ரெயில் ஹாரன் சத்தம் கேட்ட பிறகு ரெயிலைக் கவனித்த வாலிபர் திடுக் கிட்டு ஒதுங்க இடம் இன்றி தவித்திருக்கிறார்.

ரெயில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் ஓட்டுனர் ரெயிலை நிறுத்தி இருக்கிறார். அந்த வாலிபர் பாலத்தின் பில்லரில் ஆள் நிற்கும் அளவுக்கு தாழ்வாக இருந்த பகுதியில் குதித்து நின்றுகொண்டார். ஓட்டுனர் அவனைப்பார்த்து `போன் பேச உனக்கு இதுவா இடம்?' என்று சத்தம் போட்டுவிட்டு ரெயிலை எடுத்தார்.

நாங்கள் அந்த பையனை எட்டிப் பார்த்தோம். உயிர் தப்பிய சந்தோஷத்தில் பில்லரை கட்டிப்பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்.

-ஞா.தங்கபாண்டி, முடிச்சூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:48 pm

புண்பட்ட மனதில் புயலைக் கிளப்பிய கேள்விகள்!

என்னுடன் வேலை பார்க்கும் தோழியின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, தன்னருகே இருந்த 30 வயது பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்களைச் சுற்றி மற்ற பெண்கள் அமர்ந்திருந்தனர்.

அந்த வயதான பெண் பேசப்பேச, இளம் பெண்ணின் உடல் கூனிக் குறுகியது. சிறிது நேரத்தில் அழுது கொண்டே மண்டபத்திலிருந்து வெளியே கிளம்பினார் அந்த இளம் பெண்.

என் மனம் மிகவும் சங்கடப்பட்டது. நான் அந்த பெண்ணின் பின்னால் சென்று, அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தேன். கண்ணீர் ததும்ப பேச ஆரம்பித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணின் கணவர் இரண்டு குழந்தைகளையும், இவரையும் விட்டுவிட்டு, வேறொரு பெண்ணுடன் ஓடி விட்டாராம். அதனால் அவமானம் அடைந்து எங்கேயும் வெளியில் செல்லாமல் இருந்த இந்த பெண்மணியை என் தோழி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த திருமண விழாவிற்கு வந்தாராம்.

அந்த வயதான பெண்மணி இவருக்கு நெருங்கிய உறவினராம். ``உன் கணவனைக் கூட முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ள தெரியவில்லையே! நீயெல்லாம் என்ன பெண்? இனி உன் பிள்ளைகளை எப்படி உன்னால் காப்பாற்ற முடியும்?'' என்று மற்ற பெண்களை வைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார். மனதுக்கு சங்கடமாக இருந்ததால் வெளியேறிவிட்டேன் என்று கூறினார்.

நான் அவரிடம் ஆறுதலாக பேசினேன். ``கணவர் இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளை உங்களால் நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முடியும்'' என்று நம்பிக்கைïட்டினேன். அவர் அழுகையை நிறுத்தி கொஞ்சம் சமாதானம் அடைந்தார். பின்பு அவரை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்குச் சென்றேன்.

சிலருக்கு வயதுதான் ஆகிறது; ஆனால் சபை நாகரீகம் தெரிவதில்லை. மற்றவர்களின் மனக்காயமும் புரிவதில்லை.

-எஸ்.ஜமுனா தேவி, சென்னை




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:48 pm

இணக்கமான நட்பல்ல... இலக்கணமில்லா நட்பு!

நான் என் தோழியின் திருமணத்திற்காக திருச்சி சென்றேன். என்னுடன் கல்லூரித் தோழிகள் 4 பேர் வந்தார்கள். அங்கு கல்யாண மண்டபத்தில் 2 நாட்கள் தங்கி திருமணவிழாவை சிறப்பித்தோம். அதோடு தோழிகளுடன் சந்தோஷமாக பொழுதை கழித்தோம்.

ஆனால் ஒரு விஷயம் என் மனதை உறுத்தியது. அது என்னவென்றால், என்னுடன் வந்திருந்த தோழிகளில் இரண்டு பேர் டூத்பேஸ்ட் முதல் லிப்ஸ்டிக் வரை எல்லாமே கொண்டு வந்திருந்தார்கள். நானும் கொண்டு சென்றிருந்தேன். மற்ற 2 பேர் எதுவும் கொண்டு வரவில்லை.

நான் எப்போதுமே அடுத்தவர் பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன். எதுவுமே கொண்டு வராத தோழிகள் எங்கள் மூன்று பேரின் பொருட்களையே பயன்படுத்தினார்கள். டூத் பேஸ்ட், எண்ணையாவது பரவாயில்லை. குளிக்கும் சோப்பு, லிப்ஸ்டிக், முகத்திற்கு போடும் பவுடர், ஸ்பான்ச் இப்படி எல்லாவற்றையும் எடுத்துப் பயன்படுத்தினார்கள்.

ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர் பயன்படுத்தினால் சரும வியாதி வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஏன் அவர்களுக்கு தெரியவில்லை? இப்படி பயன்படுத்துவது இணக்கமான நட்புக்கு எடுத்துக்காட்டாகுமா? இலக்கணமில்லாமல் நடந்து கொள்வதுபோல் அல்லவா இருக்கிறது. நட்பு கொடுத்த உரிமையில் ஆரோக்கியம் பேணுவதை மறந்தால் எப்படி?

-ஆர்.அம்பிகா, பெங்களூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:49 pm

பார்சலில் வந்த பாசம்!

என் அண்ணனின் 35-வது திருமண நாளை கொண்டாடினோம். அவருடைய பையன்கள் இருவரும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். அதனால் அவர்களால் விழாவுக்கு நேரில் வர முடியவில்லை. நாங்களாக விழாவைக் கொண்டாடினோம்.

விழா நடந்து கொண்டிருந்தபோது ஒரு கூரியர் பார்சல் வந்தது. வாங்கிப் பார்த்தால் அண்ணன் மகன்கள் ஒரு வீடியோ கேசட்டை அனுப்பியிருந்தார்கள். அதில் `எங்கள் தந்தைக்கு திருமண நாள் பரிசு' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

வீடியோ கேசட்டை ஓட விட்டோம். அதில் தன் அம்மா, அப்பாவைப் பற்றிய நினைவுகளை மகன்கள் இருவரும் பேசியிருந்தார்கள். சிறுவயதில் பெற்றோர் அவர்களை எப்படி எப்படியெல்லாம் அன்பு பாராட்டி வளர்த்தார்கள்... வளர்ந்து பெரியவர்களானபோதும் தங்களை குழந்தையாகவே பாவித்து பாசத்தை கொட்டினார்கள்... என்பதையெல்லாம் கண்கள் பனிக்க, குரல் தழுதழுக்க கூறியிருந்தார்கள். வீடியோவில் அவர்கள் பேசும்போது பின்புறத்தில் பெற்றோருடன் அவர்கள் இருக்கும் குடும்ப போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. அந்த போட்டோக்களைக் காட்டி, அது எப்போது எடுத்தது, அப்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள், என்பதையும் மறக்காமல் பதிவு செய்திருந்தனர்.

இதை பார்த்த என் அண்ணன் ஆனந்தத்தில் அழுதே விட்டார். உறவினர்கள் கொடுத்த நகை, பணம், ஆடைகள் தராத சந்தோஷத்தை தன் பிள்ளைகள் அனுப்பிய வீடியோ கேசட் தந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். வீடியோவை நாங்களும் பார்த்து சந்தோஷப்பட்டோம். பண்பும், பாசமும் குறையாத பிள்ளைகளால்தானே பெற்றோருக்குப் பெருமை!

-ஜி.கண்ணாத்தாள், திருச்சுழி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 11:39 am

`சிடுசிடு' மாமனார்... `ஜில்' மருமகள்...

பிள்ளைகளிடம் அவதிப்படும் பெற்றோரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தந்தை தன்னை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தாலும் தன் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்ட ஒரு மகன், தன் மனைவியையும் அப்படி மாற்றி வைத்திருப்பது தான் என் ஆச்சரியத்துக்கு காரணம்.

என் தோழியின் கணவர்தான் அந்த அபூர்வ மகன். நான் என் தோழியைக் காண அவள் வீட்டிற்குப் போய் இருந்தேன். அவளுக்கு மாமனார் மட்டும்தான் இருக்கிறார். அவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சுபாவத்திலேயே `சிடுசிடு' ரகம் போலும். நான் போனதே அவருக்குப் பிடிக்கவில்லை. காபி கொடுக்கும் போதும் சரி! சின்னச் சின்ன விஷயங்களிலும் சரி! ஒன்றுமில்லாததற்கெல்லாம் மருமகளை குத்திக் காட்டிக் கொண்டே இருந்தார்.

வழியனுப்ப பேருந்து நிறுத்தம் வந்த அவளிடம் ``எப்படி இதைப் பொறுத்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டேன். ``என் மாமனாருக்கு நான்கு பிள்ளைகள். இவருடைய குணாதிசய குறைபாட்டால் மூன்று மகன்கள் வீட்டிலும் சில நாட்கள் கூட தங்க முடியவில்லை. ஆனால் என் கணவரோ, `அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இருக்கும் வரை அவருக்கு நாம் நம் கடமையைச் சரி வர செய்ய வேண்டும். அதனால் எப்பாடுபட்டாவது அனுசரித்து செல் ' என்று தெளிவாகச் சொல்லி விட்டார்.. அந்த அன்புக்கட்டளைக்கு இணங்கித்தான் பொறுமையாக இருக்கிறேன்'' என்றாள். நல்ல அப்பா அம்மாவையே முதியோர் இல்லத்தில் சேர்ப்போரிடையே இப்படியும் ஒரு மகனா? வியந்தேன்.

- கல்யாணிபாலு, திருநெல்வேலி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 11:41 am


மகன் ஹீரோ! அப்பா வில்லன்!


என் நண்பன் ஓரளவு வசதியானவன். திருமண வயது கடந்தும் திருமணம் ஆகாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். முதலில் நிறைய இடங்களிலிருந்து பெண் கொடுக்க முன் வந்தவர்களும் இப்போது சம்பந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்கள். இவர்களும் பல இடங்களுக்கு சென்று பெண் பார்த்து வந்தார்கள். ஆனால் எதுவும் ஒத்துவரவில்லை.

இதனால் மனம் வெறுத்த நண்பன் காரணத்தை ஆராய்ந்தபோது அதிர்ச்சியானான்.அவனது திருமணம் தடைபட்டதற்கு காரணம் அவனது தந்தையின் துஷ்ட பிரசாரம் தானாம்! அவனுக்கு வலிப்பு நோய் எப்போதோ சின்ன வயதில் ஒருமுறை வந்திருக்கிறதாம். அவன் தந்தை எந்த வேலைக்கும் செல்லாமல் சீட்டு விளையாட செல்வாராம். இவன் சம்பாதிக்கும் பணத்தில் சீட்டு விளையாட பணம் கேட்பாராம். இவன் மறுத்து புத்திமதி சொன்னதால் ஏற்பட்ட கோபத்தில் மகனின் திருமணத்தை தடுப்பதை ஒரு குறிக்கோளாக கொண்டு செயல்பட்டிருக்கிறார்.

இவர்கள் பெண் பார்த்து விட்டு வந்த பிறகு இவனது அப்பா பெண் வீட்டுக்கு சென்று நல்லவர்போல் நடித்து, `எனது மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதால் அவன் அப்படி இப்படி `ஒரு மாதிரியாக திரிகிறான். பாவம் நீங்க நல்ல குடும்பம் போல் தெரிகிறீர்கள். எங்க வசதிக்கு ஆசைப்பட்டு பெத்த பெண்ணை பாழும் கிணற்றில் தள்ளி விடாதீர்கள். உங்க நன்மைக்குத்தான் சொல்கிறேன்' என்று புளுகிவிட்டு, அவர்களிடம் கைச்செலவுக்கும் 100, 200 என்று பணம் கறந்து விடுவாராம். பெற்ற தந்தையே வந்து சொன்னால் யார்தான் அதை மீறி பெண் கொடுக்க முன் வருவார்கள்?

இந்த உண்மை தெரிந்த என் நண்பன் பெற்ற தகப்பனின் துரோகம் தாங்காமல் குடிப்பழக்கத்துக்குஅடிமையாகி விட்டான். மகனின் வாழ்க்கைக்கே உலை வைக்கும் இப்படி அப்பாக்களும் இருப்பார்களா?

- ஏ.எஸ். யோகானந்தம், அவ்வையார்பாளையம்




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 11:43 am


கல்யாணம் அங்கே! சாப்பாடு இங்கே!


நானும், என் மகளும் சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்று இருந்தோம். பஸ்சை விட்டு இறங்கி அங்கு ஒரு கடையில் மண்டபத்தின் பெயரை சொல்லி எங்கு இருக்கிறது என்று கேட்டோம். நாலு கடை தள்ளி ஒரு மண்டபம் இருக்கிறது அதுதான் என்று சொன்னார்கள். நாங்களும் மண்டபத்தின் பெயரை பார்க்காமல் உள்ளே சென்று அமர்ந்து விட்டோம். அழைத்து டிபன் தந்தார்கள். சாப்பிட்டோம்.

மாடியில் மணவறை என்பதால் கொஞ்சம் கூட்டம் குறைந்தபிறகு மணமக்களை வாழ்த்தி வரலாம் என்று காத்திருந்தேன். ஆனால் அதுவரையும் என் வழி சொந்தக்காரர்கள் யாரும் என் கண்ணில் படாததால் எனக்குள் ஏதோ உறுத்தியது. பிறகு மகளை மாடிக்கு சென்று பார்த்து வரச்செய்தேன். அவளும் கொஞ்சம் அதிர்ச்சி முகமாய் திரும்பி வந்தாள். `கல்யாண வீட்டார் அனைவரும் தெலுங்கில் பேசுகிறார்கள். நம் உறவுக்காரர்கள் கல்யாணம் இது இல்லை' என்று என் காதோடு சொன்னாள்.

அப்பொழுதுதான் சந்தேகப்பட்டு மண்டபத்தின் பெயரை பார்த்தேன். வேறு மண்டபம். நாங்கள் போக வேண்டிய மண்டபம் அடுத்து இருந்தது. எங்களுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. நைசாக நழுவி வெளியே வந்துவிட்டோம்.

- சீதா சீனிவாசன், சென்னை.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 11:44 am

தொலைந்த பணம்... தொலையாத மனிதநேயம்...

நானும், என் கணவரும் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் 10 நாள் புண்ணிய தல யாத்திரை சென்றோம். எங்கள் குழுவில் மொத்தம் 30 பேர் இருந்தோம். முதலில் ரெயிலில் ஒரிசா சென்றோம். அங்கு புவனேஸ்வர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்த்து விட்டு அன்று இரவே ஸ்டேஷன் வந்து கொல்கத்தா செல்வதற்கு ரெயில் ஏறினோம்.

மறுநாள் காலை 7 மணி அளவில் கொல்கத்தா ரெயில்வே ஸ்டேஷனில், அனைவரும் இறங்கினோம். அப்போது எங்களுடன் சுற்றுலா வந்த ஒரு பெண், ``ஐயோ, என் பெட்டியை காணவில்லையே. அதில்தான் பணம் வைத்து இருந்தேன்...'' என அழுதார். அந்தப்பெண் தன் 7 வயது மகனோடு டூர் வந்து இருந்தார். எங்களை சுற்றுலாவுக்கு அழைத்து வந்தவர், "உன் லக்கேஜை நீ தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி தொலைத்து விட்டு தவிக்கிறாயே...'' என்று கூறினார். அவரோ "நான் கவனமாகத்தான் இருந்தேன். எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லையே...'' என்று கண்ணீர் விட்டார்.

உடனே நானும், என் கணவரும் அந்தப்பெண்ணிடம், "வருத்தப்படாதே. நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு 100 ரூபாய் போட்டு உன் கைச்செலவுக்கு பணம் தருகிறோம்'' என்று கூறினோம். 30 பேரும் தலா 100 ரூபாய் வீதம் 3000 ரூபாயை அந்த பெண் கையில் கொடுத்தோம். கண்களில் கண்ணீர் மல்க பணத்தை பெற்றுக்கொண்டு நன்றி கூறினார். பின்பு எங்களைப் போல அவரும் சந்தோஷமாக சுற்றுலாவை அனுபவித்தார்.

-வே.கணேஷ்வரி, பெரமனூர்



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 11:47 am

அனைத்து பகிர்வுகளும் நிறைவு !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 10 of 32 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 21 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக