ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 9 of 32 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 20 ... 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Jun 15, 2011 7:11 pm

பஸ்சில் கலாட்டா! பறி போனது பை!

வெளிïரில் தங்கி பிளஸ்-1 படித்த என் மகளை பள்ளி விடுமுறையில் ஊருக்கு அழைத்து வருவதற்காக சென்றேன். பஸ்சில் என் மகள் உட்கார்வதற்கு மட்டும் இடம் கிடைத்தது. நான் நின்று கொண்டு வந்தேன். புத்தகப்பையை என் மகளும் துணிப்பையை நானும் வைத்திருந்தோம்.

அடுத்த நிறுத்தத்தில் ஒருவர் குடிபோதையில் தடுமாறிக்கொண்டு பஸ்சில் ஏறினார். அவர் பஸ்சில் ஏறிய வேகத்தில் என் பக்கத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியின் தோளில் கை பட்டுவிட்டது. அந்தப் பெண் வாயில் வந்தபடி திட்ட, ஆத்திரம் கொண்ட குடிகாரர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்து விட்டார். அந்த அம்மாவும் விடவில்லை. பதிலுக்கு குடிகாரரின் கன்னத்தில் பளாரென்று ஒருஅறை விட்டார். இந்த களேபரத்தில் நின்றிருந்தவர்கள் கூட்டத்தில் நெருக்கடி ஏற்பட, நான் கீழே இருந்த பையை கையில் எடுக்காமல் பாதுகாப்பாக சற்று தள்ளி நின்று கொண்டேன்.

பஸ் பாலக்கரை வந்ததும் எதிர் பக்கம் திருச்சி செல்லும் பஸ் புறப்பட தயாராக இருந்தது. நானும் என் மகளும் அவசரமாக இறங்கி அந்த பஸ்சில் ஏறினோம். பஸ் சிறுவாச்சூர் அருகில் சென்ற பொழுது என் மகள் `பையை எங்கப்பா?' என்று கேட்க, பையை மறதியாக முந்தின பஸ்சில் விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

நான் பஸ் கண்டக்டரிடம் விபரத்தை கூறினேன். அவர் பெரம்பலூரில் உள்ள டிப்போவில் சென்று கேளுங்கள் என்று கூற, நான் மட்டும் பஸ்சில் இருந்து இறங்கி மீண்டும் பெரம்பலூரில் உள்ள டிப்போவிற்கு சென்று கேட்டேன். அவர்களோ அரியலூரில் உள்ள டிப்போவிற்கு போய்க் கேளுங்கள் என்றார்கள்.

பையில் ஸ்கூல் ïனிபார்ம், ஐடென்டி கார்டு, 6 செட் சுடிதார்- பேண்டு உட்பட என் மகள் பயன்படுத்திய அனைத்து துணிகளும் இருந்தது. நான் அரியலூரில் உள்ள டிப்போவில் போய் விவரத்தை கூறினேன். அதற்கு அவர்கள் பஸ் தஞ்சாவூர் கிட்ட போயிருக்கும். உங்கள் செல்போன் நம்பரை கொடுத்து விட்டு ஊருக்கு செல்லுங்கள். கிடைத்தால் தகவல் தெரிவிக்கிறோம் என்றார்கள். நானும் பொறுமையாக அந்த பஸ் வரும்வரை அங்கேயே காத்திருப்பது என்று முடிவு செய்தேன். ஒருவழியாக இரவு 10.45 மணிக்கு அந்த பஸ் வந்தது. ஓடிப்போய் பஸ்சில் ஏறிப் பார்த்தபோது நான் வைத்த இடத்திலேயே அந்த பை இருந்தது. பையை எடுத்துக்கொண்டு, கண்டக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

ஆர்.மாணிக்கம், சீதேவிமங்களம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Jun 15, 2011 7:12 pm

தவறிய பணம்... தவறாத நேர்மை...

நெடுந்தூர ரெயில் பயணம் மேற்கொண்டிருந்தோம். குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில், ரெயில் அதிக நேரம் நின்றிருந்தது. ஒரு சிறுமி எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏறி, அதில் கிடந்த குப்பையை சிறிய துடைப்பத்தால் கூட்டி சுத்தம் செய்தாள். வழக்கம் போல் சுத்தம் செய்து குப்பையை ஒரு சாக்குப் பையில் போட்டு விட்டு, கையேந்தினாள். அவரவர் கொடுத்த சில்லரையை பெற்றுக் கொண்டாள்.

தொடர்ந்து என் சீட்டுக்கு கீழே பெருக்குகையில் ஏதோ ஒரு பொருள் கிடைத்திருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த என்னைக் கூப்பிட்டு.. `சார்!.. இது உங்களுடையதா?' என்றாள்.

அது என் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பிளாஸ்டிக் உறை. பளிச்சென தெரியும் ஆயிரம் ரூபாய் நோட்டு இரண்டு அதில் இருந்தது. ஆச்சரியத்துடன் `என்னுடையது தான்' என்றதும் என்னிடம் கொடுத்தாள். ஏழ்மையிலும் நேர்மையான அந்த பண்பு என்னை ஆச்சரியப்படுத்தியது.

சில்லரை காசுக்கு கையேந்தும் அவள் பளிச்சென தெரியும் ரூபாய் நோட்டை என் கவனம் திரும்பி இருந்த நேரத்தில் குப்பையோடு எடுத்துச் சென்றிருக்கலாம்!.. ஆனால் அப்படி செய்யவில்லையே! உடனே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அந்தச் சிறுமியிடம் கொடுத்து வாழ்த்தினேன். நன்றி சொல்லி தன் வேலையை தொடர புறப்பட்டாள்.

என்.வி.எஸ்.மணி, ஜாகீர் அம்மாபாளையம்


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by krishnaamma Wed Jun 15, 2011 7:52 pm

இந்த நிஜ நிகழ்ச்சிகள் சினிமா கதைகளையும் தோற் க்கடித்து விடும் போலிருக்கிறதே ? பகிர்ந்தமைக்கு நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சுரேஷ்குமார் Wed Jun 15, 2011 8:32 pm

உண்மைலயே உங்க ஓனர் மனுசன்யா ஆமோதித்தல்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Fri Jun 24, 2011 10:25 am

ஆபத்தில் உதவிய ஆட்டோக்காரர்!

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் இரவுப் பணிக்காக இரு சக்கர வாகனத்தில் கிளம்பினார். அன்று நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. தெருக்களில் சில இடங்களில் விளக்குகள் எரியவில்லை. மழை தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததாலும், இருட்டாக இருந்ததாலும் பள்ளம் இருப்பது தெரியாமல் பைக்கை பள்ளத்தில் இறக்கி, கீழே விழுந்து விட்டார்.

தெரு சீரமைக்கும் பணிக்காக அங்கங்கே கருங்கற்களைக் கொட்டி வைத்திருந்தனர். அவர் விழுந்த வேகத்தில் உடம்பு, தலை, முகம் முழுக்க கல்லில் அடிபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. எழ முடியாமல் உதவி, உதவி என்று குரல் எழுப்பியிருக்கிறார். மழை பெய்து கொண்டிருந்ததால் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது.

சில மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி, இருட்டில் விழுந்து கிடந்தவரை தன் ஆட்டோவில் தூக்கிக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்து விட்டார். பின்பு அடிபட்டவரின் சட்டைப்பையில் இருந்த விசிட்டிங் கார்டைப் பார்த்து அவருடைய வீட்டு நம்பருக்குப் போன் செய்து அழைத்துள்ளார். அவர்கள் பதறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்கள். அடிபட்டவர் அணிந்திருந்த வாட்ச், மோதிரம், கைபேசி ஆகியவற்றையும் உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்று சென்றிருக்கிறார். இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பதை எண்ணி சந்தோஷப்பட்டோம். அவருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தோம்.

-பிரேமா சாந்தாராம், சென்னை.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Fri Jun 24, 2011 10:26 am

அம்மா.. குழந்தை.. ஆச்சரியம்..

வேலூர் பேருந்து நிலையத்தில் திருப்பதி செல்லக் காத்திருந்தேன். அங்கே பிச்சை எடுக்கும் பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் அவளது குழந்தை விழித்திருந்தது. பசி ஏக்கத்துடன் தின்பண்டங்கள் உண்போரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

குழந்தையை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நான் இரக்கப்பட்டு, பையில் இருந்த ரொட்டியை (பன்) எடுத்துக் கொடுத்தேன். உடனே அந்தக் குழந்தை, அம்மாவை எழுப்பி, `இதை வாங்கிக் கொள்ளவா?' என்று கேட்டது. அந்தப் பெண் விழித்து எழுந்ததும் ``யார்யா நீ? என் பிள்ளைக்கு அதை, இதைக் கொடுத்து, பிள்ளையைக் கடத்திட்டு போகலாம்னு பார்க்கிறியா?'' என்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டாள்.

அந்த கூச்சலால் கூட்டம் கூடி விட்டது. சிலர் என்னை ஏசவும் செய்தனர். உதவிக்குப் போன நான், தலை குனிந்தபடி இடத்தைவிட்டு நகர்ந்தேன். ஆனாலும், `பிச்சைக்காரப் பெண்ணின் குழந்தையாக இருந்தாலும், அது பசியோடு இருந்தபோதும் அன்னியரான நான் கொடுத்த உணவுப் பொருளை வாங்காமல், தன் தாயிடம் அனுமதி கேட்டது' என்னைக் கவர்ந்தது. மட்டுமின்றி, `தான் பிச்சை எடுக்கும் பெண்ணாக இருந்தாலும் அவள் தன் குழந்தை மீது வைத்திருந்த பற்றும், அதையும் யாராவது கடத்திச் சென்றுவிடுவார்களோ' என்ற அவள் கவலையும் என்னை யோசிக்க வைத்தது.

-மு.நடராசன், வாணியம்பாடி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Fri Jun 24, 2011 10:26 am

சகலகலா திருடன்.. சாதுரியப் பெண்!

எங்கள் பக்கத்து வீட்டில் தாயும், மகனும் வசித்து வருகிறார்கள். அவர்கள் சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை வங்கியில் போட்டு வைத்திருந்தார்கள்.

அன்று அவர்களுக்கு ஏதோ அவசரமாக பணம் தேவைப்பட்டிருக்கிறது. மகனுக்கு இன்னொரு வேலை இருந்ததால், தாயை வங்கிக்கு அனுப்பினார். வங்கியில் இருந்து பணத்தைப் பெற்று பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அங்கேயே இருக்குமாறும், தான் வந்து வீட்டுக்கு அழைத்துவருவேன் என்றும் கூறியுள்ளார்.

தாயின் பெயரிலே வங்கி கணக்கு இருந்தது. மகன் சொன்னபடி தாய் சென்று பணத்தை எடுத்து விட்டார். மகன் வர தாமதமாகும் என்று தெரிந்ததும் பக்கத்திலுள்ள கடைக்கு சென்று சாமான் வாங்கலாம் என்று நினைத்து வங்கியை விட்டு வெளியே வந்திருக்கிறார்.

அவர் கையில் பணத்தோடு சந்து போன்ற பகுதிவழியாக கடையை நோக்கிச் சென்றிருக்கிறார். சிறிது தூரம் செல்வதற்குள் இரண்டு பேர் வந்து, ``அம்மா உங்களை பேங்க் மேனேஜர் அழைக்கிறார், உடனே வாங்க'' என்று கூறி அழைத்துள்ளனர். அழைக்கும்போதே அக்கம்பக்கத்தில் யாராவது வருகிறார்களா என்றும் நோட்டமிட்டிருக்கிறார்கள்.

உடனே அவருக்கு, அந்த நபர்கள் இருவரும் திருடர்கள் என்பதும், தன் கையில் இருக்கும் ஒரு லட்சம் ரூபாயை பறித்துச்செல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் தெரிந்து போயிற்று. அப்போது பார்த்து அவரது கையில் இருந்த செல் போன் மணி அடிக்கவே, எதிர்முனையில் இருப்பது யார் என்று தெரியாமலே `கிட்டே வந்திட்டியா உடனே வா.. ஒரு குள்ளனும், கருப்பனும் என் பக்கத்திலே நிற்கிறானுக..! எங்களை பார்த்திட்டியா.. நல்லது உடனே வா..' என்று தன் மகன் மிக அருகில் இருப்பதுபோல் பேசி, நிலைமையை சமாளித்துவிட்டார்.

அதைக் கேட்ட அந்த ஆசாமிகள், அந்த தாயாரின் மகன் பக்கத்தில்தான் நிற்கிறான் என்று நினைத்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் தப்பியது. அவரும் ஆபத்தில் இருந்து தப்பினார்.

-ஆர்.கீதா விஜயராகவன், காப்புக்காடு.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Fri Jun 24, 2011 10:27 am

மாயமானார், ஒரு மாப்பிள்ளை...!

எங்கள் வீட்டில் 7 பெண்கள். நான் மூன்றாவது மகள். என் கடைசி தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தோம். அப்பாவின் சொந்தக்காரர்கள் சிலர் ஒரு வரனை எங்களிடம் அழைத்துவந்து, `இவர் ரொம்ப நல்லவர். இவருக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்துகொடுங்கள்' என்றார்கள். அப்பாவும் அதை நம்பி, என் தங்கையை அவருக்கு திருமணம் செய்துகொடுத்தார்.

திருமணமாகி பல நாட்கள் ஆன பின்பும் அந்த புதுமாப்பிள்ளை எங்கள் பெற்றோர் வீட்டிலேயே இருந்து சாப்பிட்டு வந்தார். வேலைக்கு செல்லவில்லை. கம்பெனியில் ஏதோ பிரச்சினை என்று சொல்லிக் கொண்டே காலம் கடத்தி வந்தார். மூன்று மாதமாய் வேலை வெட்டிக்கு போகாமல் எங்கள் பெற்றோர் வீட்டிலே இருந்து விட்டார். பிறகு அவரைப் பற்றி விசாரித்தபோதுதான் உண்மை தெரிந்தது. அவர் எப்போதுமே எந்த வேலைக்கும் போகமாட்டாராம். அடுத்தவர்களிடம் தான் வேலைக்கு செல்வதாகக்கூறியே, ஊரை ஏமாற்றி வந்திருக்கிறார்.

எங்களுக்கு அந்த உண்மை தெரிந்ததும், ஒரு நாள் `நான் என் பெற்றோரைப் பார்த்துவிட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக் கிறார். போனவர் பல நாட்கள் திரும்பவில்லை. அப்போதுதான் என் தங்கைக்கு போட்ட நகைகளையும் அவர் தூக்கிகொண்டு சென்றது தெரிந்தது. பல மாதங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றிய எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஏமாந்து போய் நிற்கிறோம்.

-கவுரி, மேடவாக்கம்


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by positivekarthick Fri Jun 24, 2011 12:46 pm

சிவா wrote:பலூன் பறந்தது... பஸ் நின்றது...

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சிக்கு நான் எனது அண்ணன், அண்ணி குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் குழந்தைகளும் அடக்கம்.

பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்சில் ஏறினோம். ஒரு குழந்தையுடன் அண்ணியும், இன்னொரு குழந்தையுடன் அண்ணனும் இடம் கிடைத்து சீட்டில் அமர்ந்து விட்டார்கள். பொருட்காட்சியில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு பலூன் வாங்கி கொடுத்து இருந்தார்கள். கூட்ட நெரிசலில் பலூன் உடைந்து விடும் என்று எண்ணிய ஓட்டுனர் என் அண்ணனிடம், "பலூனை என்னிடம் கொடுங்கள் இறங்கும் போது வாங்கி கொள்ளுங்கள்'' என்று வாங்கி, இஞ்சின் அருகில் கட்டி விட்டார். வண்டி செல்லும் வேகத்தில் கட்டி இருந்த பலூன் ஒன்று காற்றில் பறந்து வெளியேபோய் விட்டது.

அதை கவனித்த ஓட்டுனர் சரியாக மெரினா பீச் ஓரம் வந்ததும் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு பீச்சை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஒரு பலூன் கடையில் 1 பலூனை வாங்கிக் கொண்டு ஏறினார். ஒரு பலூனுக்காக இந்தமாதிரி பஸ்சை நிறுத்திவிட்டு நீங்கள் ஓடிப்போக வேண்டியதில்லையே? என்று டிரைவரிடம் நாங்கள்கேட்டோம்.

அதற்கு டிரைவர் சொன்ன பதில்: "நானும் இரண்டு பிள்ளைகள் பெற்றவன் தான். குழந்தைகள் பஸ்சை விட்டு இறங்கும்போது, இருக்கும் ஒரு பலூனுக்கு இருவரும் சண்டை போடுவார்கள். அப்படி ஒரு சண்டை நடக்க நான் காரணமாக இருக்கக்கூடாதில்லையா!'' என்றாரே பார்க்கலாம்!

அவர் ஒரு பொறுப்பான டிரைவர் மட்டுமின்றி, பொறுப்பான அப்பாவாகவும் இருப்பதை நினைத்து மகிழ்ந்தோம்.

தங்கபாண்டி, முடிச்சூர்.
டிரைவர் the க்ரேட்


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Pநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Oநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Sநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Tநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Vநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Eநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Emptyநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Kநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Tநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Hநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Cநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by positivekarthick Fri Jun 24, 2011 1:02 pm

சிவா wrote:`பார்த்தது' அக்காவை... `மணந்தது' தங்கையை..!

வெளியூரில் சொந்தத் தொழில் செய்யும் என் உறவினர் மகனுக்கு பெண் பார்க்க சென்றிருந்தோம். ஏற்கனவே இரு வீட்டாரும் பேசி முடிவாகி இருந்ததால் அன்றே திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்த முடிவு செய்தோம். அதற்கான உறுதிப் பத்திரம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

உறவினருக்கு 27 வயதிலும், 23 வயதிலுமாக இரு மகள்கள். இளைய மகள் கால் ஊனமானவர். வீட்டிற்குள்ளேதான் அதிகம் இருப்பார். வெளியூர் செல்லும் போது மூன்று சக்கர சைக்கிளில் செல் வார். மூத்த மகள் எக் குறையும் இல்லாதவர். இளைய மகள் மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தால் மாப்பிள்ளை வீட்டார் மூத்தவளை பார்க்க வரமாட் டார்கள் என நினைத்து இவ்விஷயத்தை பெண் வீட்டார் மறைத்து விட்டனர்.

இந்த உண்மையை மாப்பிள்ளை எப்படியோ தெரிந்து கொண்டார். சபையில் பெரியோர்கள் உறுதி வாங் கும் போது எழுந்து, `எனக்கு மூத்த பெண் வேண் டாம். இளையவளை கொடுத்தால் திருமணம் செய்து கொள்கிறேன்' என அதிர்ச்சி குண்டை வீசினார்.

இதை கொஞ்சமும் எதிர்பாராத பெண் வீட்டார் தடுமாறினார்கள். மாப்பிள்ளை வீட்டில் இருந்து போனவர்களும் இதை எதிர்பாராததால் அதிர்ந்து தான் போனார்கள். இருதரப்புக்கும் தன்னிலை விளக்கம் அளிக்கும் விதத்தில் மாப்பிள்ளைப்பையன் இப்படிச்சொன்னார். "பெரிய மகளுக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. ஊனம் என்பதால் சின்னவளைத் திருமணம் செய்யத்தான் பலரும் தயங்குவர். என்றாலும் மூத்த பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு இளைய மகளை பெண் கேட்பதும் முறையல்ல. அதற்கும் ஒரு யோசனை வைத்திருக்கிறேன். மூத்த மகள் திருமணம் பேசி முடித்தபிறகு இரண்டு திருமணத்தையும் ஒரே மேடையில் வைத்துக் கொள்ளலாம். அதுவரை நான் காத்திருக்கிறேன்'' என்றார்.

மாப்பிள்ளை பையன் இப்படிச்சொன்னதும் பலித்தது. ஒரு மாதத்திலேயே மூத்த மகளுக்கும் மாப்பிள்ளை நிச்சயமானது. இரண்டு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் கோவில் ஒன்றில் திருமணம் நடந்தது. குடும்பத்தோடு சென்று மணமக்களை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்த போது அந்த மாப்பிள்ளைப் பையன் என் மனதில் ரொம்பவே உயர்ந்து நின்றார்.

எஸ்.பரிமளா, கோபிசெட்டிபாளையம்.
உண்மையிலயே உயர்ந்தவர்தான்!!!!!!!!!!


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Pநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Oநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Sநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Tநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Vநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Eநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Emptyநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Kநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Tநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Hநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Iநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Cநெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 9 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 32 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 20 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum