புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 7 of 32 Previous  1 ... 6, 7, 8 ... 19 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 4:53 pm


கதவைத் தட்டிய திருடன்... கண்டு கொள்ளாத பக்கத்து வீட்டார்!


புறநகரில் வீடு கட்டி நான் என் கணவர், 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 4 பேர் குடியேறினோம். அக்கம்பக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வீடுகளே இருந்தன. சில வீடுகள் பாதி கட்டியநிலையில் வேலை நடந்து கொண்டிருந்தன. என்றாலும் ஏதோ ஒரு தைரியத்தில் அங்கே குடியேறி விட்டோம்.

ஒரு நாள் நள்ளிரவு ஒரு மணியளவில் கதவருகே ஏதோ சத்தம். கூர்ந்து கவனித்தபோது திருடன் ஒருவன் கதவில் உள்ள பூட்டை இரும்புக் கம்பி வைத்து திறக்க முயற்சி செய்ததை உணர்ந்தேன். என் கணவரை எழுப்பி விஷயத்தை சொன்னதும், அவர் ஜன்னல் வழியே `பேய்... பேய்' என்று தெருவே அதிர கத்தினார்.

அதன்பிறகு கொஞ்ச நேரம் சத்தம் எதுவும் இல்லாததால் ஒருவழியாக நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக கதவை திறந்து பார்த்தேன். அப்போது சுவர்மறைவில் ஒளிந்திருந்த திருடன் என்னைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த இரும்புக்கம்பியால் என்னை குத்த ஓடிவந்தான். நான் சட்டென்று கதவை மூடினேன். பிறகு என் 2 பிள்ளைகளையும் சட்டென்று கட்டிலின் அடியில் படுக்க வைத்து விட்டு எங்கள் எதிர்வீட்டுக்கு போன் பண்ணி, எங்கள் வீட்டை திருடர்கள் ரவுண்டு கட்டியிருக்கிறார்கள். எங்களுக்கு உதவுங்கள். போலீசுக்கும் தகவல் சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டேன்.

அதற்கு அவர்கள் `ம்... ம்...' என்று கேட்டுக் கொண்டார்களே தவிர, இதுவிஷயத்தில் எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் வந்திருந்த 4 திருடர்களும் கொல்லைப்புற கதவைத் தட்டினர். பிள்ளைகளோ விபரீதம் புரிந்து அலறினார்கள். ஆனது ஆகட்டும் என்ற நிலையில் பின்பு நானே போலீசுக்கு போன் செய்தேன். போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் திருடர்கள் கதவைத் தட்டுவதை நிறுத்தினார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்கள் `தபதப'வென்று ஓட்டம் பிடிப்பது கேட்டது.

-க.சித்ரா, இளங்குடி




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 4:53 pm


ஒடிந்து போனார்... உயர்ந்து வந்தார்


நாங்கள் முன்பு விழுப்புரத்தில் வசித்தோம். அப்போது எங்கள் வீட்டின் ஒருபகுதியில் மளிகை கடை வைக்க ஒருவருக்கு இடம் கொடுத்தோம். அவருக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருந்தாள். என்ன காரணத்தினாலோ, அவளது திருமணம் தடைபட்டுக்கொண்டே இருந்தது.

எனது அம்மா அவரிடம் `கவலைப்படாதீங்க. உங்க பெண்ணுக்கென்று ஒருவன் எங்கேயாவது பிறந்திருப்பான்!' என ஆறுதல் கூறுவார். அவரும் `உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.. பார்க்கலாம்..!' என விரக்தியாய் சிரிப்பார்.

இதற்கிடையில் அவரது கடையிலும் வியாபாரம் சரியாக நடக்கவில்லை. வாடகையும் கொடுக்க முடியாத சூழ்நிலை. மிகுந்த மனப் போராட்டங்களுக்கு பிறகு அவர் தனது சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்தார். லாரியில் சாமான்கள் ஏற்றும்போது எங்களைப்பார்த்து அழுதே விட்டார்.

இந்நிலையில் நாங்களும் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டோம்.

சமீபத்தில் ஒரு நாள் அவர் எங்கள் முகவரியை தேடிக் கண்டுபிடித்து சென்னைக்கு வந்திருந்தார். `மதுரையில் இட்லிக் கடை நடத்துவதாகவும், வியாபாரம் நன்றாக போவதாகவும் திருமணம் தள்ளிப்போன தன் மகளுக்கு மதுரையில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் திருமணத்திற்கு அவசியம் வந்து பெண்ணை வாழ்த்த வேண்டுமென்றும்' கூறினார். அதோடு, தாம்பாள தட்டில் பூ, பழம், புடவை, ஜாக்கெட், ஆறாயிரம் ரூபாய் ரொக்கம்.. இவைகளுக்கு மத்தியில் திருமண பத்திரிகை வைத்து தந்தார்.

`பணமெல்லாம் எதுக்குங்க அண்ணாச்சி?' என என் அம்மா கேட்டார்.

அதற்கு அவர், `மூன்று மாத வாடகைப்பணம் பாக்கி நிலுவையில் இருந்தபோதும் அதை மனசுல வச்சிக்காம நீங்க நல்லாயிருந்தாப் போதும் என எங்களை வாழ்த்தி ஊருக்கு அனுப்பி வைத்தீர்களே.. அதை எப்படி மறக்க இயலும்?' என்று கேட்டார் கண்ணில் நீர் ததும்ப. நன்றி மறவாத மனிதர்கள் இப்பவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-சுமதிபாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 4:54 pm


இரவில் தவித்த இளம்பெண்


மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு டிபனை முடித்து விட்டு, வெளியே வந்தேன். வரும் வழியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க, கிராமத்து தோற்றம் கொண்ட ஒரு அழகான இளம் பெண், ஒரு பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தன. பார்வையில் ஒரு தவிப்பும், பதட்டமும் தெரிந்தது. அவளுக்குச் சற்று தூரத்தில் ஒரு ஆட்டோவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த இருவர், அந்த பெண்ணை பார்ப்பதும், பிறகு தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வதும் தெரிந்தது.

அந்தச் சூழ்நிலை எனக்கு சற்று விபரீதமாகப் பட்டது. நேரம் இரவு 10 மணியைக் கடந்திருந்தது. அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கலாமா? என்று நான் யோசித்த வேளையில், அவளாகவே என்னிடம் வந்து பேசினாள். ``சார் என் சொந்த ஊர் மணப்பாறைக்கு அருகில் உள்ள கிராமம். என் கணவர் வியாபார விஷயமாக அடிக்கடி ஊட்டி வருவார். இந்த முறை என்னிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு வந்து விட்டார். 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஊர் திரும்பாததால், நான் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் அவரைத் தேடிப் புறப்பட்டு வந்து விட்டேன். பஸ்சிலிருந்து இறங்கும் போது, கூட்டத்தில் என் கையிலிருந்த பையை யாரோ திருடி விட்டார்கள். அதற்குள்தான் பர்சும், பணமும் இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. காலையிலிருந்து நானும், என் குழந்தையும் பட்டினி!'' என்று கூறி கண்கலங்கினாள்.

நான் உடனடியாக அருகிலிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்தேன். பின்பு பேருந்து நிலையம் அழைத்து வந்து, "எப்படியும் உன் கணவர் வந்து விடுவார்! இனிமேல் நீ ஊட்டிக்கு செல்ல பஸ் கிடையாது. சொந்த ஊருக்கே சென்று விடு! கோவையிலிருந்து திருச்சி சென்று, அங்கிருந்து மணப்பாறை சென்று விடலாம். நீ என்னிடம் உதவி கேட்டது நல்லதாய் போயிற்று! அந்த ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த இருவரிடம் சிக்கியிருந்தால் உன் நிலைமை என்ன ஆகியிருக்கும்? ஒரு இளம் பெண் இது போன்று தனியாகக் கிளம்பி வருவது தவறும்மா'' என்று கூறி கோவை செல்லும் பேருந்தில் அவர்கள் இருவரையும் ஏற்றி அமர வைத்து, பிரயாணத்திற்கு தேவைப்படும் பணத்தையும் அவளின் கையில் கொடுத்தேன். அவள் கலங்கிய கண்களுடனும், நன்றிப் பெருக்குடனும் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டாள். பேருந்து புறப்பட்டு மறையும் வரை அவளின் குழந்தை எனக்கு நன்றி சொல்லும் விதமாக டாட்டா காண்பித்துக் கொண்டிருந்தது!

கோ.குப்புசாமி, மேட்டுப்பாளையம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 5:14 pm

இது போல உங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பதியுங்கள் தல



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 5:37 pm

SK wrote:இது போல உங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பதியுங்கள் தல

அது இன்னும் சில வருடங்களில் நான் எழுதவிருக்கும் என் சுயசரிதையாகிய "சிவா புராணம்" புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 5:46 pm

சிவா wrote:
SK wrote:இது போல உங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பதியுங்கள் தல

அது இன்னும் சில வருடங்களில் நான் எழுதவிருக்கும் என் சுயசரிதையாகிய "சிவா புராணம்" புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

அப்போ பல கற்பளிப்பு வழக்குகள் முடிவுக்கு வரும்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Jun 04, 2011 5:50 pm

பிறர்க்கின்னா முற்பகல் செயின்
தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்.

எதையும் எதிர்நோக்காவண்ணம் செய்த உங்களின் உதவிகள் உங்களுக்கு மேன்மயைத் தரும். உறுதி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 5:52 pm

SK wrote:
சிவா wrote:
SK wrote:இது போல உங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பதியுங்கள் தல

அது இன்னும் சில வருடங்களில் நான் எழுதவிருக்கும் என் சுயசரிதையாகிய "சிவா புராணம்" புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

அப்போ பல கற்பளிப்பு வழக்குகள் முடிவுக்கு வரும்

ஓ, கற்பளிப்பா... நான் கற்பழிப்பு எனப் பயந்துவிட்டேன்!



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 04, 2011 5:54 pm

உண்மையில் அவர் செய்த காரியம் மனதை நெகிழச் செய்து விட்டது! நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 2825183110

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 04, 2011 6:00 pm

அட நம்மல மாதிரி நல்லவங்க இந்த நாட்டுல இருக்கிறார்கள்.நம்மல அப்படின்னு சொன்னது நம்ம ஈகரை குடும்பத்தை.சரிதானே நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 755837



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நெகிழ வைத்த நிஜங்கள் - Page 7 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 7 of 32 Previous  1 ... 6, 7, 8 ... 19 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக