புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 6 of 32 Previous  1 ... 5, 6, 7 ... 19 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:43 pm


அம்மாக்களால் `அலைபாயும்' இளைஞர்கள்!


திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். நிறைய கூட்டம். வழக்கத்தைவிட இளைஞர்கள், நடுத்தர வயது ஆண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கலகலப்பாக நடந்த அந்த விழாவில் சில ஆண்களின் முகங்களில் மட்டும் வாட்டம் தெரிந்தது. அவர்களின் பேச்சில் ஒருவித விரக்தி தெரிந்தது. அது என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் காது கொடுத்தேன்.

ஒரு இளைஞர் பேசும்போது `என் நண்பர்களுக்கெல்லாம் கல்யாணம் `பிக்ஸ்' ஆகி விட்டது. எனக்குத்தான் இன்னும் அமையலை. நானும் நல்ல வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கறேன், ஆனாலும் கொடுப்பினை இல்லை' என்றார். அவருக்கு வயது 30 முதல் 35-க்குள் இருக்கும். அவரைத்தொடர்ந்து அடுத்தடுத்த இளைஞர்களும், நடுத்தர வயது ஆண்களும் இதே ரீதியில் புலம்பிக் கொண்டிருந்தனர்.

சோகம், வருத்தம் எல்லாருக்கும் பொதுவானது. திருமணம் ஆகாமல் ஏக்கத்துடன் வாழ்வது `முதிர்கன்னிகள்' மட்டுமல்ல, `முதிர்கண்ணர்களும்' தான் என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன்.

அதேநேரம் இவர்களின் திருமண தாமதத்திற்கு வரதட்சணை டிமாண்ட் செய்யும் இவர்களின் பேராசைப் பெற்றோர் தான் காரணம் என்பதையும் அவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.

பெரிய இடத்திலிருந்து மருமகள் வரவேண்டும், நிறைய அள்ளிக்கொண்டுவர வேண்டும் என்பது போன்ற பேராசையால் தங்கள் மகன்களை முதிர்காளையர்களாக்குவதே அவர்கள் பெற்றோர்கள்தான். அப்படிப்பட்ட பெற்றோரால் தங்கள் இளமை தொலைவதை இளைஞர்கள் புரிந்துகொண்டால் சரிதான்!

-ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார் பாளையம்,



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:44 pm

கலரான பொண்ணு! `கறுப்பான' வாழ்க்கை!

என் நெருங்கிய உறவினர் மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரே பையன். துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்தான். திருமணம் விமரிசையாக நடைபெற்றது. பையன் கறுப்பு நிறம். மணப்பெண்ணோ நல்ல நிறம். தக்காளி நிறத்தில் தகதகத்தாள். திருமணவிழாவுக்கு வந்தவர்கள், `மணமேடையில் அமாவாசையும்- பவுர்ணமியுமாக மணமக்கள் காட்சியளிக்கிறார்களே' என்று பேசிக்கொண்டனர்.

பையனின் தாய் எனக்கு சொந்தம் என்பதால் அவளிடம் ``ஏன் இப்படியொரு கலர் வித்தியாசத்தில் பெண் எடுத்தாய்? அந்தப்பெண் நம் பையனை அனுசரித்து வாழ்க்கை நடத்துவாளா? நீ கஷ்டப்பட்டு அவனை இந்த நிலைக்கு கொண்டு வந்தாய். நாளை அவள் உன் பையனை எடுத்தெறிந்து பேசுகிற மாதிரி ஆகி விடக்கூடாதே..!'' என்று கேட்டேன்.

அவளோ, "பெண் தேவதை மாதிரி அமைவது எல்லோருக்கும் கிடைக்குமா? சிலர் மனதுக்கு பொறாமை. பெண்ணின் குணத்தைப்பார்த்த பிறகுதான் திருமண ஏற்பாடுகளை செய்தேன். பெண்ணுக்கு என் மகனை பிடித்து விட்டது? பிறகென்ன?'' என்று ஒருவித தலைக்கனத்தோடு பதில் சொன்னாள். திருமணமானவுடனே புதுமணத்தம்பதிகள் துபாய் சென்று விட்டார்கள்.

ஒருசில மாதங்கள் கழித்து, இன்னொரு விசேஷ நிகழ்ச்சியில் அந்தப் பையனின் தாயைப் பார்த்தேன். அவளது தோற்றம் பரிதாபமாய் இருந்தது. விசாரித்தபோது கல்யாணமான அன்றிலிருந்தே மருமகள் தன் மகனைக் கேலி செய்வதும், கேவலமாக மற்றவர்கள் முன் மட்டம் தட்டுவதும் தொடர்கிறது என்றாள். `உங்க முகத்தை ஒரு நாளாவது கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா? பிறகு எப்படி என்னை கல்யாணம் செய்து கொள்ளத் தோன்றியது? உங்கள் சம்பளத்தைச் சொல்லி என் கனவு கற்பனை எல்லாத்தையும் எங்க வீட்டார் கலைச்சுட்டாங்க! நானும் ஏமாந்து போய்விட்டேன்' என்று பேசிப்பேசி மாப்பிள்ளைப் பையனை நோகடித்துக்கொண்டிருக்கிறாளாம்.

இதற்கிடையே அவளுக்கும் துபாயிலே வேலை கிடைத்துவிட்டதால் இவனைத் துளியும் சட்டை பண்ணாமல் தன் இஷ்டப்படி வெளியில் சுற்றுகிறாளாம். இதனால் மனம்நொந்த பையன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பழையபடி அம்மாவோடு வந்து தங்கிவிட்டான். அவனது வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாய் நிற்கிறது.

-மாதவி நித்தியானந்தன், திருவள்ளூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 20, 2011 11:45 pm

உண்மைதான் நானும் இதுபோன்று நிறையபேர்களை பார்த்திருக்கிறேன் சிவா! பாவம் அம்மா தங்கைக்காக 40 வயது வரை திருமணமாகாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 10:48 am

சுதந்திரம் கொடுத்ததால் சுற்றித்திரிந்த கிளி!

எங்கள் மாமாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என 2 பிள்ளைகள் உள்ளனர். பையன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். பெண்ணை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டனர். அண்ணனும் அவள் படிப்புச் செலவிற்காக மாதம் தவறாமல் பணம் அனுப்பி வந்தான்.

அவள் பதினோராம் வகுப்பு படித்து வந்தாள். அத்துடன் மாலை நேரத்தில் கம்ப்யூட்டர் வகுப்பிற்கும் சென்று வந்தாள். அதனால் வழக்கமாக இரவில் தான் வீடு திரும்புவாள். கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற இடத்தில் அங்கு படிக்க வந்த கல்லூரி மாணவன் ஒருவனுடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலானது. அவனும், அவளும் கோவில், சினிமா என்று சுற்றினர். தாமதமாக வீடு திரும்பும் நாட்களில் பெற்றோரிடம் ஸ்பெஷல் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் என்று காரணம் கூறி ஏமாற்றினாள்.

ஒரு நாள் அவள் தாயாருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மகளிடம் தகவல் சொல்வதற்காக உறவினரை கம்ப்யூட்டர் சென்டருக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் அவளது குடும்பமே அதிர்ந்தது. அவள் மூன்று மாதங்களாக கம்ப்யூட்டர் வகுப்பிற்கு வருவதே இல்லை என்று கூறி விட்டனர்.

இதற்கிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவளது தாயார் இறந்து விட்டார். தாய் இறந்தது கூட தெரியாமல் அந்தப் பெண் ஊர் சுற்றிவிட்டு வழக்கம்போல இரவில் வீடு திரும்பினாள். வீட்டில் கூடியிருந்த ஊராரும், உறவினரும் அவளை திட்டித் தீர்த்தனர். அவளது தந்தையோ மனைவியை இழந்த துக்கத்துடன் மகள் தந்த அவமானத்தையும் தாங்க முடியாமல் கூனிக்குறுகி நின்றார். பெற்றோர் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரத்தை பிள்ளைகள் தவறாக பயன்படுத்தும்போது கடைசியில் இந்த மாதிரியான அவமானத்தில் தான் கொண்டு போய் விடும்.

-எஸ்.வெற்றிவேல், ஆலங்குடி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 10:48 am


காலம் மாறிவிட்டது; மனிதர்கள் மாறவில்லை!


என் தோழி ஒருத்தி காதலித்து திருமணம் செய்து கொண்டாள். அதுவும் கலப்புத் திருமணம். முதலில் இரு வீட்டுப் பெற்றோரும் கலப்புத்திருமண தம்பதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சில மாதங்கள் கழித்து ஏற்றுக் கொண்டனர். அவளுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இப்போது என் தோழியின் தம்பிக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பெண் வீட்டாரிடம் இவர்களே தங்கள் பெண் வேறு ஜாதிப் பையனைத் திருமணம் செய்து கொண்டதை மறைக்காமல் சொல்லி இருக்கிறார்கள். உடனே பெண்ணின் தந்தை அவர்களிடம், "எங்கள் பெண் உங்கள் வீட்டு மருமகளானால் உங்கள் வேறு ஜாதி மருமகனை உறவுமுறை சொல்லி அழைக்க வேண்டியிருக்கும். அது எங்களுக்கு சரிவராது'' என்று சொல்லி தனது மறுப்பை தெரிவித்திருக்கிறார்.

என்னதான் படித்து முடித்து நாகரீகமாக காட்டிக் கொண்டாலும் இன்னும் சாதி, மதத்தை தடையாய்த்தானே பார்க்கிறார்கள்..!

-வீ.ஸ்ரீவித்யா, ஓசூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 10:49 am


விலை குறைந்தது... வினை வந்தது...


எங்கள் பெண் குழந்தைக்கு எட்டு மாதம் ஆனபோது பஜாரில் ரோட்டோரம் விற்ற ஒரு கவுனை வாங்கி வந்தேன். அந்த கவுனை காலையில் என் குழந்தைக்கு போட்டுவிட்டு கணவரை வேலைக்கு அனுப்புவதில் மும்முரமானேன்.

கொஞ்சநேரத்தில் குழந்தை அழத் தொடங்கியது. பசிக்குத்தான் அழுகிறது என்று நினைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்த வேலைகளை முடித்துவிட்டு பிறகு குழந்தையை கவனித்தேன். எவ்வளவோ சமாதானம் செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

ரொம்ப நேரம் கழித்து உற்றுக் கவனித்தபோதுதான் நான் மாட்டிவிட்ட கவுனில் இருந்த எலாஸ்டிக் குழந்தையின் இடுப்பில் அழுத்தி அலர்ஜியை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன். பிறகு அதற்கு மருந்து மாத்திரைக்கு செலவு செய்தபிறகு தான் சரியானது.

சிக்கனம் என்று நினைத்து ரோட்டோரம் விற்ற விலை குறைந்த, குவாலிட்டி இல்லாத துணியை எடுத்தேன். அதனால் எனக்கு கூடுதல் செலவானதே தவிர, எந்த பிரயோஜனமும் இல்லை. விலை குறைவாக கிடைக்கிறது என்று நினைத்து ஒருபோதும் ரோட்டோரம் விற்கும் துணிமணிகளை வாங்காதீர்கள்.

ஆர்.நிர்மலா ரமேஷ், சென்னை-118



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 10:49 am

மூதாட்டி நல்ல வழிகாட்டி!

உறவினர் திருமணத்திற்காக மும்பைக்கு பெற்றோருடன் சென்றிருந்தேன். விழாவிற்கு பெங்களூரிலிருந்தும் ஒரு குடும்பம் வந்திருந்தது. அவர்களுடன் வந்திருந்த ஒரு மூதாட்டிக்கு 70 வயதிற்கு மேலிருக்கும்.

`புது இடம். தெரியாத மொழி. சுற்றிப் பார்க்க ஆசையாக இருந்தாலும் எப்படிச் செல்வது, பத்திரமாக திரும்பி வர முடியுமா?' என்ற தயக்கம் எல்லோருக்கும் இருந்தது.

அப்போது மும்பை உறவினர் ஒருவர் தனது விசிட்டிங் கார்டை அந்த பாட்டியிடம் கொடுத்துவிட்டு, "அம்மா, சுற்றிப் பார்க்க போறீங்களா? இந்த அட்டையை உங்களோடு வைத்து கொள்ளுங்கள். தப்பித் தவறி எங்கேயாவது சென்றுவிட்டு வீட்டை கண்டுபிடிக்க முடியாது போனால் இந்த அட்டையைக் காட்டினால் போதும்... உங்களை பத்திரமாக இங்கு கொண்டுவந்து சேர்ப்பார்கள்'' என்று சொல்லிவிட்டுப் போனார்.

அன்று மாலை என் தந்தை கடைத் தெருவிற்கு புறப்பட்டார். இதை கவனித்துவிட்ட அந்தப் பாட்டி அவரிடம் இருந்த அந்த விசிட்டிங் கார்டை, என் தந்தையிடம் கொடுத்து, `வழி தெரியாமல் எங்கேயாவது போய்விட்டால் இதைக்காட்டுங்கள். உங்களை இங்கே கொண்டு வந்து சேர்ப்பார்கள்' என்றாரே பார்க்கலாம்! அவரது உயர்ந்த உள்ளத்தைக் கண்டுநெகிழ்ந்து போனோம்.

ம.டைட்டஸ் மோகன், எட்டாமடை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 26, 2011 11:06 am

நல்ல பதிவு நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Scaled.php?server=706&filename=purple11
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu May 26, 2011 11:40 am

மனதில் பதியத்தக்க நிகழ்வுகளின் பதிவுகள். விந்தை மனிதர்களின் சந்தை தான் இந்த உலகம். பகிர்தலுக்கு மிக்க நன்றி சிவா.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Bநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Dநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Uநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Lநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Lநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 4:52 pm

ஏமாற்றாதே! ஏமாறாதே!

பேருந்தில் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்தேன். 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தான். வண்டி புறப்பட்டு சென்ற பத்தாவது நிமிடத்தில் அந்தப் பையன் திடீரென பதட்டமானான். அழுகிற குரலில் என்னைப்பார்த்தவன், தான் படிக்கும் பள்ளியைக் குறிப்பிட்டபடி, "ஹால் டிக்கெட் வாங்க நூறு ரூபாய் வைத்து இருந்தேன். காற்றில் எங்கோ பறந்து விட்டது'' என்றான்.

நான் அவனிடம் பதில் பேசுவதற்குள் பஸ்ஸில் ஒவ்வொரு இருக்கையின் அடியிலும் வாடிய முகத்துடன் தேட ஆரம்பித்தான். ரூபாய் கிடைக்கவில்லை என்று பெருங்குரலில் அழுதான். பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையில் பஸ்சில் இருந்தவர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு நூறு ரூபாய் சேகரித்துக் கொடுத்து விட்டோம்.

இந்நிலையில் அவனுக்கு ஏற்கனவே பாடம் கற்பித்த ஆசிரியை அதே பேருந்தில் ஏறினார். இவனைப் பார்த்ததும், `இங்கேயும் உன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருப்பாயே' என்று கேட்ட பிறகுதான், பையன் அத்தனை பேரையும் ஏமாற்றியது தெரிய வந்தது. சிறு வயதில் கஷ்டப்படாமல், பிறரை ஏமாற்றிப் பிழைப்பவன், வாழ்நாள் முழுவதும் உழைக்க மறுப்பவன் ஆகிவிடுவான். நாங்கள் அந்த மாணவனின் எதிர்காலத்தை எண்ணி வருத்தப்பட்டோம்.

-இராம.கண்ணன், திருநெல்வேலி.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 32 Previous  1 ... 5, 6, 7 ... 19 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக