ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 31 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Mon May 06, 2013 2:58 am

எதிரே வந்தவர்...
எகிற வைத்தவர்...


சென்ற வாரம் ஒருநாள் மாலை நானும் என் கணவரும் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். வழியில் உள்ள ஒரு பள்ளியின் மாணவ, மாணவிகள் வகுப்புகள் முடிந்து அவரவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து தெருவில் இருக்கும் என் தோழியின் 9-ம் வகுப்பு படிக்கும் மகள் பள்ளியின் வாசல் அருகில் தனது தந்தையின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் பள்ளியில் இருந்து சற்றுத் தொலைவில் அவளது தந்தை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் பள்ளியை நெருங்கும் சமயத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த நபர் அவரை இடித்துவிட்டுத் திரும்பிப்பார்க்காமலே போய் விட்டார். தந்தை வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததைப் பார்த்த அவரது மகள் அதிர்ச்சியடைந்து அப்பா என்று அலறிக் கொண்டே ஓடி வந்தாள். ரோட்டில் சென்ற சிலரும், நாங்களும் அவரை தூக்கி தண்ணீர் கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து அந்த மாணவியை அவளது தந்தையுடன் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

பொறுப்பற்ற சிலர் இப்படி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதால் தான் இப்போது விபத்துக்களும் சகஜமாகி விட்டன. இதுவே லேசான விபத்து என்றளவில் பாதிப்பு இல்லாமல் போனாலும், அந்தநேரத்தில் அந்த மாணவி அப்பா என்று அலறிய அலறல் இப்போதும் காதுக்குள்ளேயே நிற்கிறது. நேச குடும்பங்களை அஜாக்கிரதை விபத்து மூலம் ஒருபோதும் பிரித்து விடாதீர்கள்.

சத்தியமாலா, திருச்சி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Mon May 06, 2013 3:02 am

மிஸ்டு கால் பெண்

என் நண்பர் மளிகைக்கடையுடன் இணைத்து பொது தொலைபேசி ஒன்று வைத்துள்ளனர். பேன்சி ஸ்டோருக்கு வேலைக்கு செல்லும் ஒரு பெண் தினமும் அந்த பொது தொலைபேசியில் குறைந்தது முக்கால் மணிநேரம் வரை பேசியிருக்கிறாள். கடை வேலைப்பளுவால் அவளை அன்றாடம் கூர்ந்து கவனிக்க முடியவில்லை.

ஒருநாள், கடையில் கூட்டம் இல்லாத நேரத்தில் தற்செயலாக அவளை கவனித்தபோது அரை மணி நேரத்திற்கு மேல் பேசியும் அவள் காசு போடவே இல்லை என்பதை கண்டு பிடித்தார் நண்பர். உடனடியாக அவளை விசாரித்ததில் அவள் சொன்ன தகவல் எங்களுக்கெல்லாம் படு அதிர்ச்சி! அவள் பேன்சி கடையில் வேலை செய்கிறாளாம். காதலனுடன் காசு செலவில்லாமல் தினம் பேசுவது அவள் இயல்பாம். அதன்படி தினம் குறிப்பிட்ட நேரத்தில், ஒரு ரூபாய் காயின் போட்டு, அவளின் காதலன் செல்போனுக்கு இரண்டு மிஸ்டு கால் விட்டு இணைப்பை துண்டித்து விடுவாளாம். உடனே அந்தக் காதலன் அந்த பொது தொலைபேசி இணைப்புக்கு டயல் செய்வானாம். மணி அடித்ததும், இவள் இணைப்பைப் பெற ஒரு ரூபாய் காயினை உள்ளே போட்டு விட்டு மணிக்கணக்காய் அளவளாவி பேசுவாளாம். இணைப்பைத் துண்டிக்கும்போது அவள் போட்ட அந்த நாணயமும் வெளியில் வந்து விழுந்து விடும்.

ஆக மணிக்கணக்காய் பேசினாலும் செலவு அந்த பெண்ணுக்கு ஒன்றுமில்லை. மளிகைக்கடை எப்போதும் பிசியாக இருப்பதால் எவரும் கவனிக்காமல் இருப்பதை இவள் சாதகமாக்கிக் கொண்டு பேசி வந்த விபரம் அன்று தெளிவாகியது. எப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிக்கிறார்கள் பாருங்கள்.

பொன்.ராஜேந்திரன், முருங்கப்பேட்டை


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Mon May 06, 2013 3:07 am

இந்தக் காலத்திலுமா இப்படி....!

சில நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டையில் உள்ள என் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தேன்! அப்போது அங்கு திருமண மண்டபத்தில் நடந்த காட்சி என்னை வியப்படையச் செய்தது!

காலை 9.30 முதல் 10.30 வரை முகூர்த்தம் என்பதால் மண மேடையில் மாப்பிள்ளையை அழைத்து வந்து அமர்த்தினார்கள். சற்று நேரத்தில் மணப் பெண்ணின் சகோதரர் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு வந்தார்.

திருமணம் முடிந்ததும் இதுவிஷயமாய் நான் விசாரித்த போது ஆச்சரியமான தகவல் கிடைத்தது.

மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும்போது, திடீரென்று கரண்ட்கட் ஆகி, வெளிச்சம் இல்லாமல் போனால், பொண்ணு வரும்போதே அபசகுனமா? கரண்ட் நின்னு போச்சே என்று யாரும் சொல்லாமல் இருக்க வேண்டும் என் பதற்காகவே, இப்படி விளக்கு வெளிச்சத்தோடு மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வருவது எங்கள் ஊர் பழக்கம் என்றார்கள்! இதைக் கேட்ட நான் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன்.

பீ.ஆர்.பூஜாரமேஷ், சென்னை.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ராஜு சரவணன் Mon May 06, 2013 7:31 am

சிவா wrote:இந்தக் காலத்திலுமா இப்படி....!

சில நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டையில் உள்ள என் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தேன்! அப்போது அங்கு திருமண மண்டபத்தில் நடந்த காட்சி என்னை வியப்படையச் செய்தது!

காலை 9.30 முதல் 10.30 வரை முகூர்த்தம் என்பதால் மண மேடையில் மாப்பிள்ளையை அழைத்து வந்து அமர்த்தினார்கள். சற்று நேரத்தில் மணப் பெண்ணின் சகோதரர் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு வந்தார்.

திருமணம் முடிந்ததும் இதுவிஷயமாய் நான் விசாரித்த போது ஆச்சரியமான தகவல் கிடைத்தது.

மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும்போது, திடீரென்று கரண்ட்கட் ஆகி, வெளிச்சம் இல்லாமல் போனால், பொண்ணு வரும்போதே அபசகுனமா? கரண்ட் நின்னு போச்சே என்று யாரும் சொல்லாமல் இருக்க வேண்டும் என் பதற்காகவே, இப்படி விளக்கு வெளிச்சத்தோடு மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வருவது எங்கள் ஊர் பழக்கம் என்றார்கள்! இதைக் கேட்ட நான் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன்.

பீ.ஆர்.பூஜாரமேஷ், சென்னை.

அப்ப இந்த மின்சார வெட்டு நமது தமிழ் பண்பாடு பழக்கவழக்கதையே மாற்றியமைக்கும் அளவிற்கு போய்விட்டதோ.


Last edited by ராஜு சரவணன் on Mon May 06, 2013 7:52 am; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Mon May 06, 2013 7:49 am

இன்று தான் இந்த பதிவை காண நேர்ந்தது

நல்ல பதிவு



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Mநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Uநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Tநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Hநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Uநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Mநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Oநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Hநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Mநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Eநெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Mon May 13, 2013 10:50 am

இப்படியும் ஒரு நடத்துனர்!

பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் குழந்தைகளை அவர்கள் பாட்டி ஊருக்கு அழைத்து செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தோம். சிறிது நேரத்தில் பஸ் கிளம்பியதும் நடத்துனர் டிக்கெட் தந்தார்.

நாங்கள் கொடுத்த பணத்திலிருந்து டிக்கெட்டிற்கு போக மீதி 5 ரூபாய் எங்களுக்கு அவர் தர வேண்டும். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் மீதிசில்லறையை கேட்கக்கூட தோன்றாமல் இறங்கினோம்.

பஸ் கிளம்பிய அடுத்த நொடியில் நடத்துனர் பஸ்சை நிறுத்தி விட்டு இறங்கி வேகமாய் எங்களை நோக்கி வந்தார். நாங்கள் என்னவென்று திகைத்து நிற்க, எங்கள் அருகில் வந்தவர், எங்களுக்கு தர வேண்டிய 5 ரூபாயை தந்து விட்டுப் போனார். வெளியூர் பயண நேரத்தில் ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானது என்பதை உணர்ந்து, கேட்காமலே ஓடிவந்து பணத்தை தந்த கண்டக்டர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

எஸ்.பிரியங்கா, திருநெல்வேலி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Mon May 13, 2013 10:51 am

உயர்ந்த உள்ளம்...!

நான் சில நாட்களுக்கு முன்னர் பெரியப்பாவை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரி சென்றிருந்தேன். அவர்களை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது என் பர்ஸ் எங்கோ தவறி கீழே விழுந்திருக்கிறது. வீட்டில் வந்து பார்த்தபோதுதான் பர்ஸ் தவறியது எனக்கு தெரிந்தது. அதில் ஐடி கார்டு, பேன் கார்டு, இரண்டு ஏ.டி.எம். கார்டு போக கொஞ்சம் பணமும் இருந்தது. என்றாலும் தொலைந்து போனதை யாரிடம் போய் கேட்க முடியும்? போனது போனது தான் என்று விஷயத்தை அத்தோடு விட்டு விட்டேன்.

சில நாள்களுக்குப் பின்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு எங்கள் வீட்டின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து நின்றார். விசாரித்த போது தொலைந்துபோன என் பர்சை கொடுப்பதற்காக வந்ததாக கூறினார். பர்ஸ் அவர் கையில் கிடைத்த நேரத்தில் அவர்அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் உடனே தகவல் தர முடியவில்லை. அதனால் ஊருக்கு வந்ததும் இதில் இருந்த முகவரி பார்த்து ஓடோடி வந்தேன் என்றார். அவருக்கு நன்றி கூறி கொஞ்சம் பணத்தை கொடுத்தேன். அவரோ பணத்தை பெற்றுக் கொள்ளாமல் கடமையைச் செய்ததற்கு எனக்கெதற்கு பணம்? என்று கூறி சிரித்தபடியே விடைப்பெற்றுப் போனார்.

பர்ஸ் வைத்திருப்பவர்கள் அதில் தங்கள் வீட்டு முகவரி, செல்போன் நம்பரை எழுதி வைக்கலாம். நான் முகவரி அடங்கிய அட்டையை மட்டும் வைத்திருந்ததால்நல்லவர் கையில் சிக்கிய பர்ஸ் எனக்கு நாட்கள் சிலவானாலும் திரும்பக் கிடைத்து விட்டது.

ம.கோவிந்தசாமி, தருமபுரி.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Mon May 13, 2013 10:51 am

காதலில் புரியவில்லை... கல்யாணத்தில் புரிந்தது...

என்னுடன் கல்லூரியில் படித்த தோழி பெற்றோர்களை எதிர்த்து காதலித்து திருமணம் செய்தவள். அவளது கணவன் திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் உள்ளவர் என்பது அவளுக்கு தெரியும். நான் அவளிடம் சில அறிவுரைகள் சொன்னேன். ஆனால் அவளோ நான் அவரை சரி செய்து விடுவேன் என்று கூறி திருமணம் செய்தாள்.

ஆனால் அதுவே அவளது வாழ்க்கையை சீர்குலைத்து விட்டது. அவளது கணவன் திருமணத்திற்கு பிறகு அதிகமாக குடித்ததோடு, அவளுடன் அலுவலகத்தில் வேலை செய்பவருடன் சேர்த்து சந்தேகப்பட்டு அடிக்கிறார், சண்டை போடுகிறார் என்று கூறிவேதனைப்பட்டாள்.

பெற்றோரின் ஆதரவு இல்லாமலும், காதலித்த கணவனின் கொடுமையாலும் தினமும் என் தோழி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாள்.

எனவே, தோழிகளே... குடிப்பழக்கம் உள்ள ஆண்மகன்களைப் பற்றி தெரிந்தும் திருத்தி விடலாம் என்ற எண்ணத்தில் இதுபோல் ரிஸ்க் எடுத்து வாழ்க்கை முழுக்கவும் வருத்தத்தை சுமந்து கொள்ளாதீர்கள்.

ப.மரகதவள்ளி, வள்ளியூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Mon May 13, 2013 10:52 am

அக்கா மறந்தாள்.. அம்மா நெகிழ்ந்தாள்...

ஒரு நாள் நானும் என் அம்மாவும் தி.நகருக்கு சென்று இருந்தோம். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழியில் ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள்.

நானும் என் அம்மாவும் அவள் அருகில் சென்று ஏனம்மா அழுகிறாய் என்று கேட்டோம் அதற்கு அவள், நான் என் அக்காகூட துணி வாங்க வந்தேன். என் அக்கா போன் பேசிக்கொண்டே என்னை விட்டுவிட்டு போய்விட்டாள் என்று கூறினாள்.

உன் வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டபோது, அவள் சைதாப்பேட்டையில் இருக்கிறது என்று கூறினாள்.

எங்க கூட வா! நாங்கள் உன் வீட்டில் விட்டுவிட்டு போகிறோம் என்று அவளிடம் சொன்னோம். அவளும் எங்களுடன் பேருந்தில் வந்தாள். சைதாப்பேட்டை வந்தவுடன் இறங்கி அவள் வீட்டு விலாசம் கேட்டு நடந்து சென்றோம்.

அப்போது அவளது உறவினர்கள் அவளை தேடிக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தனர். திடீரென்று அவள் உற்சாகமாக அதோ என் அம்மாவும் பாட்டியும் வருகிறார்கள் என்று கூறினாள். இதற்குள் மகளை பார்த்த தாய் ஓடோடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். சிறுமியின் பாட்டி எங்கள் கையை பிடித்துக் கொண்டு, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

பிறகு நாங்கள் எங்களுடைய வீட்டுக்கு வந்து விட்டோம். குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது பெற்றோர்களோ, உறவினர்களோ கவனமாக கையில் பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.

ந.மோகனா, அடையாறு.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by யினியவன் Mon May 13, 2013 10:56 am

துணி மீது இருந்த அக்கறை தங்கச்சி மீது இல்லாம போச்சே!!! என்ன கொடுமை???

(நீங்க சொல்றது கேக்குது சிவா - வீட்ல துணி எடுக்க போறப்ப நாம எத்தன தடவ தொலைக்கப் பட்டுள்ளோம் - காசு குடுக்கற நேரம் மட்டும் கபால்ன்னு நம்மள கண்டுபிடிச்சிடுவாங்க - அது எப்படி?) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 31 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum