புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

Page 30 of 32 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 11:32 pm

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 22, 2013 7:37 am

உறவை வளர்ப்போம்... மறதியை தொலைப்போம்..!

நான் எப்போதும் குளிக்கப் போகும்போது என் மோதிரத்தை பாத்ரூமிலோ, எங்கள் ரூமிலோ கழற்றி வைத்து விட்டு செல்வது வழக்கம். அன்று வீட்டுக்கு திருவிழாவையொட்டி நிறைய உறவினர்கள் வந்திருந்தார்கள்.

நான் பாத்ரூமில் மறதியாக அரை பவுன் மோதிரத்தை கழற்றிவைத்து விட்டு வந்து விட்டேன். வழக்கமாக இப்படி மறந்து வரும்போது, அத்தை மோதிரத்தை எடுத்து தருவது வழக்கம். அன்று உறவினர்களிடம் பேசும் மும்முரத்தில், அத்தையும் என்னை கவனிக்கவில்லை. கடைசியில் ஞாபகம் வந்து பாத்ரூமிலும், என் அறையிலும் எவ்வளவு தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.

வீட்டுக்கு வந்த உறவினர்களில் யாரைப்போய் கேட்பது? வீணாக உறவுதான் கெடும். மோதிரம் வேண்டுமானால் வேறு வாங்கிக் கொள்ளலாம். உறவை வாங்க முடியாது என்று அத்தையும் அதை ஒரு பிரச்சினையாக்காமல் விட்டு விட்டார்கள்.

எனவே தங்கம் அணிந்திருப்பவர்கள், தூங்கும் போதும் குளிக்கும் போதும் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். என் போன்ற ஞாபக மறதிக்காரர்கள் இதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

சி.சித்ராதேவி, திருவள்ளூர்.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 22, 2013 7:41 am

நடைப் பயிற்சியில் நடந்த தாலிப் போராட்டம்!

என் உறவுக்காரப் பெண்ணும் அவரது கணவரும் தினமும் அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். ஒரு நாள் கணவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அந்தப் பெண் மட்டும் தனியாக நடைப்பயிற்சிக்கு சென்றிருக்கிறார். அப்போது ஜாகிங் வருவது போல ஓடிவந்த இருவர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை அறுக்க முயன்றிருக்கிறார்கள்.

சுதாரித்துக் கொண்ட அவர் ஒரு கையால் தாலிச்சங்கிலியை இறுகப் பற்றியவாறு மறு கையால் அந்த ஜாகிங் திருடர்களை எதிர்த்து போராடியிருக்கிறார். போராட்டத்தில் கீழே விழுந்தும் கூட தாலிக்கொடியை விடவில்லை அவர். அத்துடன் சத்தம் நடைப்பயிற்சியில் நடந்த தாலிப்போராட்டம் போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்.

வாக்கிங் வந்த மற்றவர்கள் அவரது குரலைக் கேட்டு உதவிக்கு வருவதைப் பார்த்தவுடன் திருடர்கள் அப்பெண்ணை விட்டுவிட்டு வேகமாக ஓடிப்போய் விட்டனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் அவரது வீட்டுக்கு செல்போன் மூலமாக தகவல் தந்து அவருடைய மகனை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

விவரம் அறிந்த நான் அந்தப் பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறி, அவரது தைரியத்தைப் பாராட்டினேன். அத்துடன் தனியாக வாக்கிங் போக வேண்டாம் என்று கூறியதோடு, தாலியை சங்கிலியில் அணியாமல், கயிற்றிலேயே கோர்த்து அணியுமாறு அறிவுறுத்தினேன். எந்த சூழலிலும் தைரியத்தை விடக்கூடாது என்பதற்கும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் வெளியில் செல்லும் போது தங்க நகைகள் அணியக்கூடாது என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு பாடம்.

சி.விஜயாம்பாள், கிருஷ்ணகிரி.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 4:14 pm

மறவாத நட்பு, மறக்காத உறவு!

தோழியின் வீட்டுக்குசென்றிருந்தேன். அவளது புத்தக அலமாரியில் சுற்றம், நட்பு என்று எழுதப்பட்டிருந்த இரண்டு டைரிகள் என் கவனத்தை கவர்ந்தது. அதுபற்றி என் தோழியிடம் கேட்டேன். அதற்கு அவள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பற்றிய பெயர், முகவரி, தொலைபேசி எண், பிறந்ததேதி, திருமண நாள், ரத்தப்பிரிவு, படிப்பு, வேலை விபரம் போன்ற அத்தனை தகவல்களையும் திரட்டி, டைப் செய்து டைரியில் வைத்திருக்கிறேன். அவர்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்புவதற்கும் மற்ற சில விஷயங்களுக்கும் இந்த தகவல்கள் உதவியாக இருக்கிறது. உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இந்த முறைக்கு நல்ல மரியாதை இருக்கிறது என்று தெரிவித்தாள்.

இயந்திர யுகமாக மாறிவரும் இந்தக் காலத்தில் நம் வாழ்க்கை சுக, துக்கங்களில் உரிமையுடன் கலந்து, நம்மோடு என்றென்றும் இணைந்து வருகிற சுற்றத்தார் மற்றும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருவது நல்லதுதானே!

- ஆர்.வனஜா, போளூர்.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 4:18 pm

கிணற்றில் விழுந்த மாடு

எங்கள் வீட்டு அருகில் என் நண்பருக்கு கிணற்றுடன் கூடிய தென்னந்தோப்பு உள்ளது. அவர் மாடு ஒன்று வளர்க்கிறார். மாட்டை மேய்த்துவிட்டு கோடை வெயில் காரணமாக மதியம் கிணற்றருகில் தொட்டியில் மாட்டுக்கு தண்ணீர் காட்டியவர், அருகில் உள்ள மரத்தடியில் கட்டிவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்று விட்டார்.

கிணற்றருகில் அடர்த்தியாக வளர்ந்திருந்த பசும்புல் கண்ணில் படவே, மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு பசும்புல் மேய்வதற்கு ஓடி வர, அப்போது கால் இடறி அங்குள்ள கிணற்றில் விழுந்து விட்டது. மாடு விழுந்த சத்தம் கேட்டு பக்கத்து வயக்காட்டில் வேலை செய்தவர்கள் கூக்குரலிட்டு சத்தம் போட, அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஒன்று கூடி தீயணைப்புத் துறைக்கு செல்போன் மூலம் தகவல் சொல்ல, பொது மக்களும் தீயணைப்புத் துறை வீரர்களும் சேர்ந்து கிணற்றில் இறங்கினார்கள். நாலா பக்கமும் கயிறு கட்டி மாட்டை பாதுகாப்பாக மேலே தூக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கால் நடை மருத்துவர் உதவியுடன் மாடு உயிர் பிழைத்துக் கொண்டது.

தகவல் தெரிந்து அலறியடித்துக் கொண்டு வந்த நண்பரோ, 46 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கின எனது மாடு உங்களால் பிழைத்துக் கொண்டது என்று இருகரம் கூப்பி பொதுமக்களுக்கும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதிக பணம் கொடுத்து விலைக்கு வாங்குவது பெரிதல்ல, அதை பாதுகாப்பதும் அவசியம். ஆபத்தான இடங்களில் அதை மேய விடும்போது கூடவே இருந்து கண்காணிக்க வேண்டும். அலட்சியம் வேண்டாம்.

-எஸ்.சின்னதம்பி, மொரப்பூர்.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 4:20 pm

மெல்லவும் முடியல, துப்பவும் முடியல!

தோழியின் வீட்டில் மாலை நேரம் வெளியே அமர்ந்து காற்றோட்டமாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது என் தோழியின் 6 வயது மகன் நாங்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் நைசாக உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் வீட்டுக்குள் ஏதோ உடையும் சத்தம் கேட்டது. உடனே நாங்கள் உள்ளே சென்று பார்த்தோம். அங்கு தோழியின் மகன் வாயில் எதையோ வைத்துக் கொண்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் விழிபிதுங்கி நின்று கொண்டிருந்தான்.

அவன் அருகே ஹார்லிக்ஸ் பாட்டில் உடைந்து சிதறிக் கிடந்தது. என்னவென்று பார்த்தபோது அதிர்ச்சி. என் தோழி சீயக்காயை அரைத்து தூளாக்கி அதை ஹார்லிக்ஸ் பாட்டிலில் கொட்டி வைத்திருக்கிறாள். அதை அறியாத சிறுவன் ஹார்லிக்ஸ் என நினைத்து வாயில் அள்ளிப் போட்டிருக்கிறான். சீயக்காய் தூளின் கசப்பால் விழி பிதுங்கி நின்றதன் காரணம் தெரிந்தது.

பிறகு அவனை அழைத்து சென்று கை, கால்களை கழுவிவிட்டு படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றார். நல்ல வேளையாக கண் போன்ற முக்கிய உறுப்புகளில் படவில்லை. அன்பான இல்லத்தரசிகளே, உணவுப் பண்டங்கள் இருந்த பாட்டில்களில் மசாலாப் பொருட்களையோ, சீயக்காய் பொருட்களையோ கொட்டி வைக்காமல் இருந்தால், இம்மாதிரியான விளைவுகளை நீங்களும் தவிர்த்து விடலாமே!

- சி.பிர்தவுஸ் பாத்திமா, புதுக்கோட்டை.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 4:24 pm

நகர்வலம் வந்த தாலி

அன்று வெள்ளிக்கிழமை, கோவிலுக்குச் சென்ற என் அப்பா தேங்காய் பழக் கூடையை அர்ச்சகரிடம் தந்திருக்கிறார். அவரும் அதைப் பிரித்து தேங்காய், பழம், ஊது பத்தி, கற்பூரம் என எல்லாவற்றையும் எடுத்து வைக்கும் போது வேறு ஏதோ கையில் அகப்பட, எடுத்துப் பார்த்தால் பையின் உள்ளே 8 பவுன் தாலிக் கொடி இருந்திருக்கிறது. அர்ச்சகர் திரும்பி அப்பாவிடம், என்னங்க தாலிக் கொடி பையில் இருக்கிறது பூஜையில் வைக்கணுமா? என்று கேட்க, அப்பா திருதிரு என விழித்து பின் சுதாரித்து, ஆமாங்க சாமி பாதத்துல வைத்து பூஜை பண்ணிக் கொடுங்க என்றிருக்கிறார்.

பூஜை முடிந்தபின் கோபமாக வீடு திரும்பிய அப்பா, அம்மாவிடம், உன்னுடைய தாலிக்கொடி எங்கே? என்று கேட்க, அம்மா பீரோவில் இருக்கு என்றிருக்கிறார். அப்ப இது என்ன? என்று கையில் வைத்திருந்த தாலியை எடுத்துக் காட்ட, அம்மா பயந்து போய் விட்டார். இரவு தாலியைக் கழற்றி ஆணியில் மாட்டியிருந்த பையில் போட்டதைப் பார்க்காமல், அப்பா அதே பையில் தேங்காய், பழம் எடுத்துச் சென்றிருக்கிறார்.

எங்கள் மாவட்டத்தில் மஞ்சள் கயிறு தான் மிக முக்கியம். அதை எப்போதும் கழற்ற மாட்டோம். ஆனால் தாலியை, இரவு தூங்கும் முன்பு பத்திரமாக ஓரிடத்தில் வைத்து விடுவது வழக்கம். அம்மாவும் அப்படித்தான் நகையைக் கழற்றி பையில் போட்டு வைத்திருக்கிறார். அது தெரியாமல் அப்பா பையோடு தாலியையும் எடுத்துச் சென்றிருக்கிறார். அப்பா , அம்மாவிடம் நான் தேங்காய், பழக்கடையில் கால் மணி நேரமும் பூக்கடையில் கால் மணி நேரமும் நின்றிருந்தேன். அப்ப நான் சைக்கிளை வெளியே தான் நிறுத்தி பையையும் தொங்க விட்டிருந்தேன். அப்ப எவனாவது எடுத்துப் போயிருந்தா என்னாகறது? என்று சத்தம் போட்டார்.

அதான் கடவுள் காப்பாத்திட்டாரில்ல... கஷ்டப்பட்டு சம்பாதித்தது எங்கும் போகாது என்ற அம்மா, மேலும் பேசிக்கொண்டிராமல் வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டார். நின்றால் திட்டு விழுமே!

- பைரவி, ஈரோடு.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 17, 2013 3:56 am

சிவா wrote:நகர்வலம் வந்த தாலி

அடிப்பாவி .............. எதை எங்கே வைப்பது என்று ஒரு வரை முறை இல்லையா? கழட்டுவதே மகா பாவம்...........சரி ஏதோ அவங்க வழக்கம் என்கிறார்கள்......கழட்டுவதை பிரோவில் வைக்கவேண்டியது தானே? கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 8:42 am

நேர்மையை தொலைத்துவிட்டு நியாயத்தை எங்கே போய்த் தேடுவது?

உண்மையான வரிகள்

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Apr 17, 2013 11:59 am

சூப்பருங்க அருமையிருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 05, 2013 5:25 pm

போட்டது வேஷம், போனது பட்டு

நானும் என் மனைவியும் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது மூன்று பெண்கள் தெருவில் வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் கர்ப்பிணி பெண். மூவரும் எங்கள் வீட்டை நோக்கி வந்தனர்.

புடவை நெகிழ்ந்து விட்டது. சரி செய்து கொள்கிறேன் என்றார் கர்ப்பிணி பெண். என் மனைவியும் தனி அறைக்கு அழைத்து சென்றாள். அதற்குள் மற்ற இருவரும் தண்ணீர் கேட்கவே கிச்சனுக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் என் மனைவி. அவர்கள் நீர் அருந்தி முடிக்கவும், கர்ப்பிணி பெண் புடவையை சரி செய்து முடிக்கவும் சரியாக இருந்தது. மூவரும் நன்றி கூறிவிட்டு சென்றனர்.

இச்சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பின் எங்கள் திருமண நாள் வந்தது. கோவிலுக்கு செல்ல வேண்டி என் மனைவி பட்டுப்புடவை எடுப்பதற்காக அலமாரியை திறந்து பார்த்த போது தான் அங்கிருந்த 2 விலையுயர்ந்த பட்டுப்புடவைகளை காணவில்லை என்று தெரிந்தது. அப்போது தான் புரிந்தது. அந்த பெண் கர்ப்பிணி வேஷத்திலே புடவைகளை திருடியிருக்கிறாள் என்று. இது போன்று அறிமுகம் இல்லாத யாராவது இனி நியாயமான காரணத்துக்காக வீட்டுக்கு வந்தால் கூட எப்படி அனுமதிக்க மனம் வரும்?

எஸ்.கணேசன், சாத்தான்குளம்.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 30 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 30 of 32 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக