ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 27 of 32 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by அருண் Mon Sep 24, 2012 3:28 pm

அருமையிருக்கு நன்றி அண்ணா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Oct 16, 2012 1:13 pm

நண்பர்கள் கூட்டு... தொழிலுக்கு வேட்டு...

ஷேவிங் செய்து கொள்வதற்காக சலூன் ஒன்றிற்கு சென்றிருந்தேன். கடையை நடத்துபவர் சுமார் 25 வயது இளைஞர். சலூனில் சிறிய டிவி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்தியா-நிïசிலாந்து அணிகளுக்கிடையே 20-20 கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. கடை முழுவதும் அவருடைய நண்பர் கூட்டம் நிறைந்து, குழுவாக கிரிக்கெட் மேட்ச்சை பரவசமாய் ரசித்துக் கொண்டிருந்தனர். நான் அவரிடம் ஷேவ் செய்யுமாறு கூற, அவரும் தயாரானார்.

அப்போது அவரது நண்பர்களில் ஒருவர் அவரிடம், "மச்சி, ஷேவிங்கை நாளைக்குக் கூட பண்ணலாம். மேட்ச்சை பார்க்க முடியுமா? கஸ்டமரை நாளைக்கு வரச்சொல்லு'', என்றார். அதையே பலரும் வலியுறுத்தினர். அந்த இளைஞர் வருமானம் போகிறதே என்று வருந்தினாலும் அவரால் நண்பர்களின் பேச்சை மீற முடியவில்லை. பரிதாபமாக என்னைப் பார்த்து, "சாரி சார்'' என்றார். "பரவாயில்லை தம்பி, நான் வேற எங்கயாவது போய் ஷேவ் பண்ணிக்கிறேன்'' என்று கூறிவிட்டு கிளம்பினேன்.

என்ன மாதிரியான நண்பர்கள் இவர்கள்? சக நண்பன் பிழைப்பு நடத்துவதற்காக வைத்திருக்கும் கடைக்குள் அமர்ந்து டிவி பார்ப்பதோடு, அவனுடைய வருமானத்துக்கும் அல்லவா வேட்டு வைக்கின்றனர். வாடிக்கையாளர்களை கவர வைக்கப்பட்ட டிவி, அவரது வருமானத்துக்கே தடையாகிப் போனது தான் பரிதாபம்.

- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Oct 16, 2012 1:14 pm

பாலுக்கு அழுத குழந்தை... பசியமர்த்தாத அம்மா!

நான் சமீபத்தில் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது. என் பக்கத்து பெட்டில் இருந்த பெண்மணிக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அந்த குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் அவள் அந்த குழந்தையையே வெறித்து பார்ப்பாள்.

குழந்தை அழுது முகமெல்லாம் சிவந்து போய் விடும். பின்பு பிறர் திட்டிய பிறகே பால் கொடுப்பாள். எதனால் இப்படி என்று விசாரித்தால் அந்த பெண்ணுக்கு இது நான்காவது பெண் குழந்தையாம். ஆண் குழந்தையை எதிர்பார்த்த அவள் கணவன் நாலாவதும் பெண் குழந்தை என்றதும் வெறுப்பில் மனைவியையும் பிள்ளையையும் வந்து பார்க்கக் கூட இல்லையாம். அதனால் இவளுக்கும் அந்த குழந்தை மீது வெறுப்பு வந்து, பாலூட்டாமல் இருந்திருக்கிறாள்.

இந்த காலத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிக்கின்றனர். அதனால் பெண் குழந்தைகளை வெறுப்பதை முதலில் கைவிடுங்கள். அதோடு ஆணோ பெண்ணோ இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் இப்படியான வேதனைகளுக்கு வாய்ப்பு இருக்காதே!

- எஸ்.அனுபிரபா, காரைக்கால்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Oct 16, 2012 1:14 pm

கண்டக்டரின் சாமர்த்தியம்

சமீபத்தில் நான் பெங்களூரில் உள்ள என் மகனைப் பார்ப்பதற்காக பஸ்ஸில் ஏறிச் சென்றேன். அது இரவு நேர பயணம். தர்மபுரியை தாண்டியதும் ஒரு ஓட்டல் முன்பு பஸ்சை நிறுத்தினர். பஸ்சில் இருந்து இறங்கும் ஒவ்வொரு பயணியிடமும் துண்டு சீட்டு ஒன்றை கொடுத்தார் கண்டக்டர். அதில் பஸ் நம்பர் எழுதப்பட்டு இருந்தது.

கண்டக்டரை `இது எதற்கு?' என்று கேட்டபோது, `நிறைய பஸ்கள் இங்கு சாப்பாட்டுக்காக நிறுத்துவார்கள். கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரியான பஸ்கள் என்பதால் பயணிகள் எந்த பஸ்சில் இருந்து இறங்கிச் சென்றோம் என்பதை மறந்து தவிக்கின்றனர். அல்லது வேறு பஸ்சில் ஏறி விடுகிறார்கள். அப்படி நடப்பதை தவிர்க்கவே பஸ் நம்பர் எழுதின சீட்டை தருவது வழக்கம்' என் றார். `நானே முன்பு ஒரு தடவை இப்படி தடுமாறியது நினைவுக்கு வர அவரிடம் உங்கள் சேவை மகத்தானது. பாராட்டுகள்' என்று சொன்னேன்.

- மா.மாரிமுத்து, ஈரோடு.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Oct 16, 2012 1:15 pm

மழை இருட்டில்... தெரியாத ஊரில்...

நான் ஆசிரியையாகப் பொறுப்பேற்ற புதிதில் சக ஆசிரியர்கள், மாணவிகளுடன் சுற்றுலாவாக நீலகிரிக்குச் சென்றிருந்தோம். அங்கு சென்றவுடன் தலைமை ஆசிரியரின் நண்பர் வீட்டிற்குச் சென்று, எங்கள் உடமைகளை வைத்துவிட்டு, சிறிது தொலைவில் உள்ள ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென வானம் இருண்டு மழை பெய்யத் தொடங்கியது. இருட்டவும் ஆரம்பித்து விட்டது. ஒருவர் பின் ஒருவராக சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து சென்று கொண்டிருந் தோம். திடீரென மழை வலுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அந்த இருட்டில் தொடர்ந்து வந்த எங்கள் சங்கிலித் தொடர்பும் துண்டிக்க, ஆங்காங்கே உள்ள வீடுகளில் கதவைத் தட்டி புகலிடம் தேடினோம். நாங்கள் கதவைத் தட்டிய வீடுகளில் யாருமே கதவை திறக்கவில்லை. எங்கள் நிலையை மனக்குமுறலுடன் வெளியிட, இறுதியாகக் கதவைத் திறந்து விசாரித்தனர்.

நாங்கள் தங்கிய வீட்டு விலாசம், அக்குடும்ப நண்பர் விவரம் எங்களுக்குத் தெரியவில்லை. அவ்வீட்டுத் தலைவரின் மகன் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் பெயரை மட்டும் என் உடன் வந்திருந்த ஆசிரியை தெரிந்து வைத்திருந்தார். அவன் பெயரை சொன்னதும் வீட்டிலுள்ளோர் நன்கு சிந்தித்து, ஒரு குறிப்பிட்ட மாணவனின் வீடாகத் தான் இருக்கும் என்று அனுமானித்து எங்களை அங்கு கொண்டு வந்து சேர்த்தனர். அந்த மழை இருட்டில் மாணவிகளுடன் நாங்கள் தவித்த தவிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.

புதிய ஊர்களுக்கு சுற்றுலா போகும்போது ஆசிரியர்கள் தங்க வேண்டிய இடங்களின் முகவரி, அவர்களின் தொலைபேசி நம்பர் வரை தெளிவான குறிப்புகளுடன் தகுந்த திட்டமிடலையும் ஏற்படுத்திக் கொண்டே பயணிக்க வேண்டும்.

- வி.பார்வதி, இராசிபுரம்


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Guest Tue Oct 16, 2012 1:15 pm

ஆமா மச்சி , சொல்லு மச்சி என்று சொன்னாலே அவர்கள் ஆப்பு மட்டும் தான் வைப்பார்கள் ..

அருமை தல மாமா ...
avatar
Guest
Guest


Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by noorvkr Sat Oct 20, 2012 2:00 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 678642
[img][/img]
noorvkr
noorvkr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 20/10/2012

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by அருண் Sat Oct 20, 2012 2:45 pm

நண்பர்கள் செய்தது மிகத்தவறு..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by கரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 7:34 pm

அனைத்து பதிவுகளும் ஒரு சமூக அக்கறை கொண்டது நன்று
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Oct 24, 2012 12:49 pm

தொலைந்தது செல்போன்... தொலையாதது நேர்மை...

திருவிழாவிற்காக சமீபத்தில் என் நண்பனுடைய ஊருக்குச் சென்றிருந்தேன். திருவிழாவில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அந்த நெரிசலில் என்னுடைய செல்போன் தொலைந்து விட்டது. பதறிப்போன நான் உடனடியாக நண்பனிடம் செல்போன் தொலைந்த விஷயத்தைக் கூறினேன்.

உடனே என்னுடைய நண்பன் ஒலிபெருக்கியில், `வெளிïரிலிருந்து வந்திருக்கும் எனது நண்பனின் செல்போன் தொலைந்து விட்டது. யாரிடமாவது கிடைத்தால் தயவு செய்து கொண்டுவந்து கொடுத்து விடுங்கள்' என்று கேட்டுக் கொண்டான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னருகே வந்த ஒரு பெரியவர், தொலைந்து போன என் செல்போனை என்னிடம் கொடுத்து `தம்பி இந்த செல்போன் கீழே கிடந்தது. உங்களுடையதா பாருங்க' என்று கேட்டார். செல்போன் கிடைத்த மகிழ்ச்சியில் நான் அவரிடம், "அய்யா...இது என்னுடையது தான். என்னிடம் கொண்டு வந்து கொடுத்ததற்கு நன்றி'' என்று சொல்லி விட்டு அந்தப் பெரியவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தேன்.

அந்தப் பெரியவரோ, `வேண்டாம் தம்பி விருந்தாளியா வந்த உங்களையும், உங்க உடமையையும் பாதுகாக்கறது எங்க கடமை அதுக்கு கூலி எதிர்பார்க்கலாமா?' என்று கேட்க, பெரியவரின் ஊர்ப்பற்றும் அக்கறையான வார்த்தைகளும் என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டன.

- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 32 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum