புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
84 Posts - 41%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
75 Posts - 37%
i6appar
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

Page 25 of 32 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 28 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 9:47 am

எப்படித்தான் திருத்துவதோ..!

சமீபத்தில் எனது உறவினரின் மகளுக்கு திருமணம் நடந்தது. நான் ரிசப்ஷனுக்குச் சென்றிருந்தேன்.

மாப்பிள்ளை ஐ.டி. கம்பெனியில் உயர் பதவியில் இருப்பதால் நிறைய அலுவலக நண்பர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் போட்ட ஆட்டத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

லைட்மியூசிக் கச்சேரி தொடங்கியதும் அடுத்த கட்ட அதிர்ச்சி. வந்திருந்த ஆண்களும், பெண்களும் ஒருவரோடு ஒருவர் பின்னிக் கொண்டு ஆடுவதைப் பார்க்கவே கண்றாவியாக இருந்தது. மேலும் சிலர் மது அருந்தி விட்டு உச்சஸ்தாயியில் கத்த, அந்த மண்டபமே அதிர்ந்தது. குடித்து விட்டு ஆடிய ஆட்டத்தில் சிலர் வாந்தì எடுத்து அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி விட்டனர். ரிசப்ஷனுக்கு வந்திருந்த பெரியவர்கள் இந்த நிகழ்வுகளை பார்த்து முகம் சுளித்தனர்.

நாகரீகம் என்ற பெயரில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொள்பவர்களுக்கு எப்படி நம் பண்பாட்டை புரிய வைத்து திருத்துவதோ?

- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 9:47 am

வேகம் விவேகமல்ல!

பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்தை ஓட்டியவாறு மிக அதிக வேகத்தில் ஒரு இருசக்கர மோட்டார் வாகனம் வந்து கொண்டிருந்தது. பல நேரங்களில் பேருந்தை முந்தியும் அந்த பைக் சென்றது. பைக்கில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தனர்.

குழந்தைக்கு ஐந்து மாதம் இருக்கும். அப்பெண் மோட்டார் வாகனத்தில் இருபக்கங்களிலும் கால்களை போட்டவாறு அமர்ந்திருக்க, இடையில் குழந்தை படுத்திருக்கிறது. அக்குழந்தையின் வாயில் பால்பாட்டில். அவர்கள் செல்லும் வாகனத்தின் வேகம் அதிகம் என்பதால், பால் அருந்திக் கொண்டிருக்கிற குழந்தைக்கு திடீரென புரைக்கேறி, மூச்சு அடைப்பு ஏற்படுமோ என்று பயந்தேன். சற்று நேரத்தில் நான் நினைத்தது நடந்தது. அந்த மோட்டார் வாகனத்திற்கு முன்பு சென்ற வாகனம் விபத்துக்குள்ளாக, பின்னால் வந்த அந்த தம்பதிகளின் மோட்டார் வாகனம் திடீரென பிரேக் போட, குழந்தைக்கு புரைக்கேறியது. அலறி அடித்துக் கொண்டு அத்தம்பதியினர், வண்டியை சாலையில் நிறுத்திவிட்டு, ஆட்டோவில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

வாகனத்தில் செல்லும்போது குழந்தைகளுக்கு இதுபோன்று தண்ணீர், பால் தருவதை தவிர்க்க வேண்டியது நல்லது. அப்படிவேண்டுமென்றால், வாகனத்தை நிறுத்திவிட்டு கொடுக்கலாமே. இன்னொன்று: சாலையில் செல்லும் போது குறைவான வேகத்தில் செல்வது அனைவருக்கும் நல்லது.

- பா.மீரா, பொழிச்சலூர்.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 9:48 am

மனிதாபிமானமில்லாத மனிதர்கள்!

நானும் எனது கணவரும் சாலையில் சென்று கொண்டிருந்தோம். வழியில் ஏதோ கூட்டமாக இருந்ததால் எட்டிப் பார்த்தோம். எங்கள் தெருவில் வசிக்கும் பெண் டூ வீலரில் இருந்து கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டு ரத்தக் காயத்தோடு இருப்பதை பார்த்து பதறினோம். எதிர்பாராமல் அந்தப் பெண்ணின் அப்பாவின் நண்பர் அங்கு வர, அவளின் அப்பாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்து விட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்.

அவள் தினமும் கல்லூரிக்கு டூ வீலரில் சென்று வருபவள். முறையான பயிற்சியும் ஓட்டுநர் உரிமமும் பெற்றவள். சாலை விதிகளை சரியாக கடைப்பிடிப்பவள். அன்று கல்லூரிக்கு டூ வீலரில் சென்றவள் ரோட்டை கிராஸ் செய்வதற்கு முன் வேகத்தை குறைத்து இரு புறமும் பார்த்து சைகை காட்டி முக்கால்வாசி தூரத்தை கடந்திருக்கிறாள். அப்போது பின்னால் மிகுந்த வேகத்தில் இருவர் பைக்கில் உரக்கப்பேசிக் கொண்டு கவனக்குறைவாக ஓட்டி வந்து மோத அவள் கீழே விழுந்துள்ளாள்.

இத்தனைக்கும் பைக்கில் வந்தவர்கள் கொஞ்சமும் மனிதாபிமானமின்றி இறங்கிக் கூட பார்க்காமல் வேகமாக சென்றுள்ளனர். தவறாக ஓட்டிவந்து இடித்து தள்ளிவிட்டு சென்ற அந்த கல் நெஞ்சுக்காரர்களை பொது மக்கள் திட்டி தீர்த்தனர்.

பாவம்... இப்போது அந்தப்பெண் மாவு கட்டுப் போட்டுக்கொண்டு கால் எலும்பு முறிவின் வலியோடு கல்லூரிக்கு ஒரு மாதம் லீவு போட்டு விட்டு துன்பத்தை அனுபவித்து வருகிறாள். அவளது பெற்றோரும் மருத்துவச் செலவோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.

- சுப்புலட்சுமி சம்பத்குமார், நாமக்கல்

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 12:03 pm

பறந்தது பணம்... தடுமாறியது மனம்...

நான் திருநெல்வேலி பஸ் நிலையத்தில் இருந்து வேலை விஷய மாக நாகர்கோவில் செல்ல பேருந்தில் ஏறினேன். பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு மீதி இருந்த பணம் அத்த னையையும் எண்ணினேன். ஏறக்குறைய 2560 ரூபாய் மீதி இருந்தது. அதனை எனது கைப் பையில் வைத்து இருந்தேன். பேருந்தும் தென்ற லும் என்னை தாலாட்ட தூக்கம் என்னை தழு வியது. நாகர்கோவில் பஸ் நிலையம் வந்ததும் அவசரம் அவசரமாக கன்னியாகுமரி பேருந்து நிற்கும் இடத்திற்கு ஓடிச் சென்று ஏறி அமர்ந்தேன். பேருந்து கிளம்பியது. பயணச் சீட்டு எடுப்பதற்கு என்று கைப்பையை தேடிய போது தான் முந்தின பஸ்சில் அதை தவற விட்டு விட்டதை உணர்ந்து அதிர்ந்தேன். அடுத்து என்ன செய்வது என்ற பதட்டத்தில் கண்களில் கண்ணீர் பொங்கியது.

என் அருகில் இருந்த கல்லூரி மாணவி நான் பஸ் டிக்கெட்டுக்கு பணம் இல்லாமல் தடுமாறுவதை கவனித்து விட்டார். உடனே நான் கேட்காமலே 10 ரூபாய் தந்தாள். அவளது நல்ல உள்ளத்தை வாழ்த்தி பணத்தை பெற்றுக் கொண்டு விரைவாக வீடு வந்து சேர்ந் தேன். பஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது பணத்தை ஒரே இடத்தில் வைப்பது தவறு என்பதை என்அனுபவத்தில் உணர்ந்தேன். அதுமாதிரி பயண நேரத்தில் உறக்கத்தையும் தவிர்க்கப் பாருங்கள்.

- சஜி பிரபு, கன்னியாகுமரி.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 12:04 pm

இன்னுமா மூடநம்பிக்கை!

மார்க்கெட்டில் மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்தேன். சாலையில் வழக்கம் போல், வாகனங்கள் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந் தன. ஒரு திருப்பு முனையில் கறுப்புப் பூனை ஒன்று குறுக்காக சாலையைக் கடந்து சென் றது. என் பின்னால் ஸ்கூட்டரில் வந்த ஒருவர் அந்த பூனை, சாலையைக் கடந்து சென்றதை கவனித்தார். உடனே, தன் ஸ்கூட்டரைத் திருப் பிக்கொண்டு, முணுமுணுத்தபடி, வந்த வழியே திரும்பி சென்று விட்டார்.

`பூனை குறுக்கே வந்தால் போகும் செயல் உருப்படாது` என்ற எண்ணம் காலம் காலமாக இவர்கள் மனதில் தேங்கி விட்டது போலும். அப்படி மனதிற்குச் சலனம் ஏற்பட்டால் சற்று
நிதானித்து, இறைவனைப் பிரார்த்தித்தபடி நம் செயலைத் தொடர்வது தான் புத்தி சாலித்தனம்.

எத்தனையோ அவசர வேலைகள், தவிர்க்க இயலாத செயல்கள், போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை நாம் தவிர்த்தாக வேண்டும்.

-வி.பார்வதி, ராசிபுரம்

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 12:04 pm

இக்கட்டில் இளமை... காப்பாற்றியது முதுமை...!

என் வயது 70. முதுமை கருதி பேருந்து பயணத்தை தவிர்ப்பேன். தவிர்க்கமுடியாமல் பயணம் செய்தே ஆகவேண்டும் என்றால், வீட்டுக்கு அருகே உள்ள டெப்போவுக்கு சென்று காலியாக இருக்கும் பேருந்தில் ஏறி அமர்ந்து விடுவேன். இரண்டு நிறுத்தம் போவதற்குள் பேருந்தில் கூட்டம் நிரம்பிவிடும்.

அன்றும் அப்படித்தான். நிரம்பிவழிந்த கூட்டத் துடன் பேருந்து போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஒரு இளம்பெண் கையில் புத்தகங்களுடன் ஏறி என்னருகில் நின்றாள்.

திருப்பங்களில் பேருந்து குலுங்கி குலுங்கி திரும்ப, அருகில் நின்ற ஆண்கள் வேண்டு மென்றே அந்த இளம்பெண் மீது சாய்ந்தார்கள். அவளோ நெருக்கடிக்குள் ஏதும் செய்ய முடியா மல் தவித்தபடி நின்று கொண்டிருந்தாள். இதை கவனித்த நான், உடனே எழுந்து கொண்டு என் இருக்கையில் அவளை அமரச் சொன்னேன். அந்தப்பெண் `பாட்டி நீங்கள் வயதானவர்கள், நீங்கள் தானே உட்கார்ந்து வர வேண்டும் என்று சங்கடப்பட்டாள். அதற்கு நான், "பரவா யில்லையம்மா, என்னால் நிற்க முடியும். வயதுப் பெண்களை பாதுகாப்பது வயதானவர் களின் கடமை தானே! என்னை யாரும் இடிக்கமாட்டார்கள். இல்லையா?'' என்றபடி அவளை அமரச் செய்தேன்.

- ஷே.மரியம்பி, புதுவை.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 12:04 pm

பாஷை புரியவில்லை.. .மனித நேயம் புரிந்தது..!

என் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்த சமயம் பஞ்சாப்பில் உள்ள ராணுவ குடியிருப்பில் குடியிருந்தோம். எனக்கு இந்தி தெரியாது அந்த சமயம் என் கணவர் வேலை விஷயமாக வெளி யூர் சென்றார். வீட்டிற்கு சில சாமான்கள் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டு அம்மா வோடு பஸ்ஸில் சென்று கடையில் சாமான்கள் வாங்க போனேன். இருவரும் வாங்கிவிட்டு திரும்பி வரும்போது, அந்த அம்மா திடீரென `நீ இங் கேயே இரு. நான் கடையில் போய் இன்னும் சில சாமான்கள் வாங்கி வருகிறேன்' என்று கூறி சென்றார். அரைமணி நேரம் ஆகியும் வரவில்லை.

எனக்கு பயமாகி விட்டது. புது ஊரில் மொழி தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றேன். அந்த சமயம் ஒரு பஞ்சாபி இளைஞன் டூ வீலரில், என் பக்கமாக வந்து நின்றான். கிதர் ஸானா என்று இந்தியில் அவன் கேட்டான். எனக்கு பயமாக இருந்தது. என்றாலும் தைரி யத்தை வரவழைத்துக் கொண்டு `நான் சாமான்கள் வாங்க பஜார் வந்தேன். என் கூட வந்த அம்மாவை காணவில்லை' என்று கூறினேன். நாங்கள் குடியிருக்கும் இடத்தை கூறி னேன். `டர்ணா ஹை. பைட்டோ' என்று கூறியவன், என் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு என்னை உட்கார சொன்னான். நான் பயத்தோடு அவன் பின்னால் அமர்ந்தேன். பத்தே நிமிஷத்தில் அவன் நாங்கள் குடியிருந்த வீட்டின் அருகில் என்னை கொண்டு வந்து இறக்கி விட்டான். `ரொம்ப தேங்க்ஸ் பையா' என்று எனக்கு தெரிந்த இந்தியில் நன்றி கூறினேன். `நோ நோ தேங்க்ஸ்' என்று கூறி விட்டு போய் விட்டான்.

- வே.கணேஷ்வரி, சேலம்.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 12:58 pm

சின்ன வீடா? பெரிய வீடா?

என் உறவினர் ஒருவரின் மகனது வீடு கிரகப்பிரவேசத்திற்கு சென்றிருந்தேன். அவன் வசதிக்கு தகுந்தபடி ஒரு ஹால், படுக்கையறை, சமையலறை என்று வீட்டை கட்டியிருந்தான். உறவினர்களும், நண்பர்களும் வந்து போய்க் கொண்டிருந்தனர். அப்போது அங்கே பணக்கார தோற்றத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் வந்தார்.

வீட்டை உள்ளே சென்று பார்த்துவிட்டு வெளியே நின்று கொண்டிருந்த அந்தப் பையனிடம் வந்தவர், `என்னப்பா! சின்ன வீட்டை முதல்லே கட்டிட்டியா? பெரிய வீடு பின்னாலேயா?' என்று கிண்டலடிக்க, அவன் முகம் ஒரு மாதிரி மாறியது. என்றாலும் அவருக்கு பதிலடி கொடுக்க விரும்பியவன், `ஏதோ என் தகுதிக்கு ஏத்த மாதிரி கட்டியிருக்கேன். நீங்க ஏன் சின்ன வீடு, பெரிய வீடுன்னு பிரிச்சி பேசறீங்க? அதெல்லாம் உங்க மாதிரி வசதி படைத்தவங்களுக்கு தான் அமையும்' என்று ஒரு போடு போட்டான். சுற்றிலும் இருந்தவர்கள் சிரிக்க, அந்தப் பெரியவர் முகம் போன போக்கை பார்க்கணுமே.

தங்கள் வசதி வாய்ப்பை மனதில் வைத்துக்கொண்டு மற்றவர்களை வார்த்தைகளால் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதை அந்தப் பெரியவர் போன்றவர்கள் உணர வேண்டும்.

- மா.மாரிமுத்து, ஈரோடு.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 12:59 pm

பாம்படமா, பாசமா?

வயதான பாட்டிமார்கள் பலர் தங்களின் வடித்த காதுகளில் பெரிய பெரிய தங்க பாம்படங்களை அணிந்திருப்பார்கள். இது பார்ப்பதற்கு ரொம்ப அழகாகவும் இருக்கும். பழமையான நாகரீகம் இன்னமும் பாதுகாக்கப்படுகிறதே என மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

ஒருமுறை கோவையிலிருந்து சொந்த கிராமத்திற்கு சென்றபோது வயதான பாட்டி ஒருவர் முக்காடு போட்டிருந்தார். எப்போதும் பாம்படம் அணிந்திருக்கும் அந்த பாட்டியின் காதுகள் இரண்டும் மூளியாய் இருப்பதை கண்ட நான், "பாட்டி உங்களுடைய பாம்படத்தை எங்கே?'' என்று கேட்டேன்.கேட்டது தான் தாமதம்...உடனே பாட்டி கேவிக்கேவி அழத் தொடங்கி விட்டார். "எம்பிள்ளைங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பாம்படத்தை பிடுங்கிக் கிட்டாங்கப்பா...நான் என் காலம் வரைக்கும் இதை போட்டுக்கிடறேனப்பா என்று எவ்வளவோ சொல்லியும் என் பிள்ளைகள் கேட்கவில்லை '' என்றார் வேதனையுடன்.

வயதான பாட்டியம்மா இன்னும் சில வருடங்களே உயிருடன் இருப்பார். அதுவரை பொறுத்துக் கொள்ளாமல் அவர் உயிருடன் இருக்கும் போதே பாம்படங்களை வலுக்கட்டாயமாக பங்கு போட்டுக் கொண்டதை அறிந்தபோது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. பறிபோனது பாம்படமா? பாசமா?

- எஸ்.டேனியல் ஜீலியட், இராமநாதபுரம்

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 1:00 pm

திட்டுவதற்கும் ஒரு அளவு உண்டு

எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு வயதான தம்பதியினர் குடியிருந்தனர். அவர்களின் பிள்ளைகள் இருவரும் திருமணமாகி வெளிïரில் குடி இருந்தனர். அந்த வயதானவர் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டு பிடித்து மனைவியை திட்டுவார். அப்போது கோபத்தில் `தாலியை கழட்டி வைத்துவிட்டு வெளியே போ' என அநாகரீகமாக கத்துவார். மகன்களிடம் போனால் மதிப்பில்லை என அந்தப் பாட்டி பொறுமையாய் இருந்தார். அவருக்கும் மனம் என்று ஒன்று இருக்கும் என அவர் யோசிப்பதில்லை.

ஒரு நாள் தகராறில் இதையே சொல்லவே, அந்த பாட்டி நிஜமாகவே தாலியை கழட்டி வைத்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டார். போலீசில் புகார் செய்தும், விளம்பரம் கொடுத்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. உயிருடன் இருக்கிறாரா? என்றும் தெரியவில்லை. முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள் எல்லாம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவருக்கோ காபி கூட போடத் தெரியாது. அம்மாவை விரட்டி விட்டார் என்ற கோபத்தில் பிள்ளைகள் கவனிப்பதில்லை. நாக்குக்கு ருசியாக சாப்பிட்டவருக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. காலங்கடந்து தன் தவறை எண்ணி வருத்தப்படுகிறார். வயதானவர்களுக்கு வேண்டியது அன்பும், அனுசரணையும் தான். அதுதான் இல்வாழ்க்கையின் இனிய அச்சாணி என்பதை இவர் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

- ஜி.பொன்னம்மாள், திருநெல்வேலி.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 25 of 32 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 28 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக