ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 23 of 32 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 27 ... 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Jul 12, 2012 1:35 pm


மகிழ வைத்த நேர்மை!


எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை நடக்கும். நானும் வெள்ளி தோறும் மினி பஸ்சில் சந்தைக்கு சென்று காய்கறி, மற்றும் சாமான்கள் வாங்கி வருவேன். அவ்வாறு ஒரு நாள் சென்று திரும்பும்போது வீட்டுக்கு வந்து பார்த்ததும்தான் தெரிந்தது, நான் வீட்டுச் சாவி வைத்திருந்த பையைக் காணவில்லை.

மாற்றுச்சாவி ஒன்று என் மகளிடம் இருந்ததால் அவளுக்கு போன் பண்ணி கல்லூரியில் இருந்து அவளை வரவழைக்கும்படி ஆகி விட்டது. எனக்கோ வேறு யாராவது திருடர்கள் எடுத்து, என்னைப் பின் தொடர்ந்து என் வீட்டை பார்த்து வைத்து விட்டு ஆள் இல்லாத போது வீட்டைத் திறந்து பொருட்களைத் திருடி சென்று விட்டால் என்ன ஆவது என்ற கவலை வாட்டியது. அது கதவுடன் சேர்ந்த பெட்டி பூட்டு என்பதால், அதை மாற்ற ஆசாரி தான் வேண்டும். தவிர செலவும் அதிகமாகும். அதனால் என்ன செய்வது என்று யோசித்தேன்.

எதற்கும் மறு வாரம் வரை பொறுத்து விசாரித்த பின் செய்யலாம் என்ற எண்ணத்துடன் மறு வெள்ளியன்று சந்தைக்கு சென்றேன். அங்குள்ள பல கடைகளிலும் விசாரித்த போது ஒரு கடைக்காரர் யாரோ ஒருவர் கீழே கிடந்தது என்று கொடுத்ததாக ஒரு பையைக் கொடுத்தார். அது என் பைதான். உள்ளே சாவி இருந்தது. அந்தக் கடைக்காரருக்கும் பையை எடுத்துக் கொடுத்த முகம் தெரியாத அந்த நபருக்கும் நன்றி சொல்லி விட்டு வந்தேன்.

- வி.பி.மகராசி, வள்ளியூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Jul 12, 2012 1:35 pm

இதுவா தாய்ப்பாசம்...?

சமீபத்தில் எங்கள் தூரத்து உறவினரான வயதான மூதாட்டி ஒருவரின் இறந்த செய்தி வந்தது. சற்றுத் தொலைவிலுள்ள அந்த ஊருக்கு வேனைப் பிடித்துக் கொண்டு உற்றார் உறவினர்களாக சென்றோம். மேள தாளங்கள், ஆட்டம் பாட்டங்கள் விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இறுதி ஊர்வலத்திற்காக தேர் ஜோடனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் மாலை அணிவிக்க வீட்டிற்குள் நுழைய முயன்ற போது ஒருவர், ``பாடி கொஞ்ச நேரத்தில் வந்திடும்.. உக்காருங்க'' என்றார்.

நாங்கள் பந்தலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். அருகில் இருந்த ஒருவரிடம் ``எந்த ஆஸ்பத்திரியிலே வச்சிருந்தாங்க?'' என்று நான் கேட்டேன். உடன் அவர், ``அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்குறீங்க? மூணு மகன்கள் இருந்தும் யாரும் அந்த அம்மாவை வச்சிப் பராமரிக்க முன் வரல்லே... தான் வச்சிருந்த `சாவு முதலைக்' கொண்டு பக்கத்து ஆளுங்க உதவியோட ஒரு முதியோர் இல்லத்திலே சேர்ந்திடுச்சி.. அங்கே இறந்து போச்சுன்னு செய்தி வந்ததும் போயி பாடியைக் கொண்டு வர்றாங்க'' என்றார்.

நாங்கள் இதைக் கேட்டு அதிர்ந்து போனோம். இருக்கும்போது தாயை அனாதையாக்கி விட்டு இறந்த பிறகு அமர்க்களமாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்வதைப் பார்த்ததும் மனம் நொந்து போனோம். எங்கே போனது பந்த பாசம்...?

- கு.சுப்புலட்சுமி, செவல்குளம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by அசுரன் Thu Jul 12, 2012 2:13 pm

தாயை அநாதையாக்கியவர்கள் வாழ்க்கையில் அவமானப்பட நேரிடும். மனது வலிக்கிறது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Jul 18, 2012 1:39 pm

தலைப் பிரசவம்... தவித்த இளம்பெண்...

தலைப்பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்த என் பள்ளித்தோழியை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். எப்போதும் சிரிப்பும் களிப்புமாக இருக்கும் அவள், முகம் வாடி காணப்பட்டாள். "ஏதாவது பிரச்சினையா, ஏன் இப்படி சோகமாக காணப்படுகிறாய்?'' என்று கேட்டது தான் தாமதம், உடனே அழத்தொடங்கிவிட்டாள்.

அவள் சோகத்துக்கு காரணம், அவளை பார்த்துப் போக வந்திருந்த உறவுக்கார பெண்கள் தான்.அவர்கள் அவளிடம், "இப்போதெல்லாம் சுகப்பிரசவம் என்பதே அரிதாகி விட்டது. எங்கு பார்த்தாலும் சிசேரியன் தான் நடக்கிறது. நீ வேறு குள்ளமாக இருக்கிறாயா, அதனால் உனக்கு சுகப்பிரசவம் நடப்பது கஷ்டம் தான். சிசேரியன் செய்து கொண்டால் பயங்கரமாக வலிக்கும். ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்குள் உயிர் போய் உயிர் வரும். இதையெல்லாம் எங்க அனுபவத்தில் இருந்து சொல்கிறோம்'' என்று அவர்கள் சொல்லி விட்டுப் போக, அதுவரை தாய்மையின் அனுபவத்தை மகிழ்ச்சியாக நினைத்துக் கொண்டிருந்த தோழி, மனதளவில் உடைந்து பயப்படத் தொடங்கி யிருக்கிறாள். பிரசவத்தின்போது தனக்கோ தன் குழந்தைக்கோ அசம்பாவிதமாக எதுவும் ஆகி விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு அவளுக்குள் ஒருவித பதட்டம் தெரிந்தது.

நான் அவளிடம், "உன் உறவினர்கள் கூறியதை அப்படியே உன் மனதில் இருந்து எடுத்து விடு. நீ பயப்படும்படி உனக்கோ உன் குழந்தைக்கோ எதுவும் ஆகாது. பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் நிகழக்கூடிய வழக்கமான செயல்பாடு தான். அதிலும் நீ இதுவரை முறையாக அத்தனை மருத்துவ பரிசோதனைகளையும் செய்திருப்பதால் உனக்கு சுகப்பிரசவத்திற்கே வாய்ப்பு அதிகம். எனவே கவலையை விட்டு விட்டு இயல்பாக இரு'' என்று ஆறுதல்படுத்தினேன். நான் இப்படி பேசிய கொஞ்ச நேரத்தில் அவள் இயல்பாகி விட்டாள். மறுபடியும் அவள் முகத்துக்கே உரிய அந்த குறுஞ்சிரிப்பு எட்டிப்பார்த்தது.

தலைப் பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களிடம் நல்ல விஷயங்களை, நம்பிக்கைக்குரிய விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். மாறாக அவர்கள் பயப்படுகிற மாதிரி பேசினால் இருக்கிற கொஞ்ச தைரியத்தையும் இழந்து பிரசவ நேரத்தை சிக்கலாக்கி விடுவார்கள்.

பின்குறிப்பு: என் தோழிக்கு 11/2 மாதத்தில் சுகப்பிரசவமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.ஜமுனா, கரையான்சாவடி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ஜாஹீதாபானு Wed Jul 18, 2012 1:48 pm

தலைப் பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களிடம் நல்ல விஷயங்களை, நம்பிக்கைக்குரிய விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். மாறாக அவர்கள் பயப்படுகிற மாதிரி பேசினால் இருக்கிற கொஞ்ச தைரியத்தையும் இழந்து பிரசவ நேரத்தை சிக்கலாக்கி விடுவார்கள்.

சியர்ஸ்

பகிர்வுக்கு நன்றி தம்பி.......... அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Jul 18, 2012 1:51 pm

அடிக்காத தேள், கடிக்காமல் விடுமா?

என் நண்பரின் மனைவி கடவுள் பக்தி மிக்கவர். அடிக்கடி விரதம் இருப்பவர். சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் அவர்களுடைய குளியலறையில் "தேள்'' ஒன்றைக் கண்டுள்ளார்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார். காரணம் வெள்ளிக்கிழமைகளில் உயிர்களைக் கொன்றால் பாவம் என்பது அவரது கொள்கை.

இதை அவர் தன் கணவரிடமும் கூறி பெருமைப் பட்டிருக்கிறார். அதற்கு அவர் "விஷ ஜந்துக்களுக்கு பாவ புண்ணியம் பார்க்கக்கூடாது. ஏன் அந்த தேளைக் கொல்லாமல் விட்டாய்?'' எனக்கடிந்து கொண்டுள்ளார். மறுநாள் சனிக்கிழமை அதே "தேள்'' எங்கேயோ பதுங்கியிருந்துவிட்டு என் நண்பரின் மனைவியை தனது விஷக் கொடுக்கால் கொட்டிவிட்டது. அவர் வலியால் துடித்து விட்டார். உடனே அவருடைய கணவர் டாக்டரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். எனவே விஷமுள்ள உயிரினங்களைக் கண்டவுடன் பாவ புண்ணியம் பாராமல் உடனே கொன்று விட வேண்டும்.

-கி.கணேசன், விரிஞ்சிபுரம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Jul 18, 2012 1:52 pm

வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சாதீர்கள்!

விபத்தில் மரணமடைந்த தூரத்து உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். கணவர் இறந்து 15 நாட்களே ஆகியிருந்த நிலையில் அவருடைய மனைவியோ துக்கம் தொண்டையை அடைக்க பேச்சு மூச்சின்றி இருந்தார்.

அந்தப் பெண்மணியுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரும் அங்கு வந்திருந்தார். என்ன பேசுவது என்றே தெரியாமல், இறந்தவரின் மனைவியை கேள்விகளால் குடைந்து கொண்டிருந்தார்.

`விபத்து எப்படி நடந்தது? எங்கே நடந்தது? எப்படி ஆஸ்பத்திரிக்குச் சென்றீர்கள்? எப்படி அந்த ஆஸ்பத்திரியை தேர்ந்தெடுத்தீர்கள்? எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தீர்கள்? கடைசியில் எப்படி இது நடந்தது? மூளையில் ரத்தம் உறைந்ததா? இல்லை இதயம் அரெஸ்ட் ஆகி நின்று விட்டதா?' என விடாமல், விடாப்பிடியாக கேட்டுக் கொண்டே இருந்தார்.

இவர் தொடுத்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் இறந்தவரின் மனைவி கண் கலங்கி அழத் தொடங்கி விட்டார். அதற்குள் அவருடைய மகன் துக்கம் விசாரிக்க வந்தவரிடம், "சார் விடுங்க. அதெல்லாம் இப்ப எதுக்கு? எல்லாம் தான் முடிஞ்சாச்சே....'' என்று பேசி அவருடைய பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

இறந்தவர்கள் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் செல்பவர்கள் அந்த குடும்பத்தினருக்கு முடிந்தால் ஆறுதலாக நாலு வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்.

-விஜயசாந்தி இளங்கோ, ஆண்டிவிளை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Jul 18, 2012 1:55 pm

ஆடம்பரத்தால் வந்த ஆபத்து!

அலுவலக நண்பர் ஒருவரை இரண்டு ஆண்டுகள் கழித்து சமீபத்தில் எதிர்பாராதவிதமாய் சந்தித்தேன். என்னுடன் பணிபுரியும் காலத்தில் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அவர், அப்போது சோகத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்தவர் போல் காணப்பட்டார். என்னவென்று விசாரித்தபோது "நாங்கள் நடுத்தர குடும்பம். என் மனைவியின் அக்காவோ பணக்காரர்.

அவர் தன் மகளுக்கு தங்கள் அந்தஸ்துக்கு ஏற்றவிதத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொடுத்தார். அதுமுதல் என் மனைவி எங்கள் மகளுக்கும் இதுமாதிரி ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். நமது தகுதிக்கு மீறியதாயிற்றே என்று ஆரமபத்தில் தயங்கினேன். ஆனால் அவள் விடாப்பிடியாக நிற்கவே, எனது மகளுக்கு முப்பது பவுன் நகை, மூன்று லட்சம் ரொக்கம், பண்ட பாத்திரம் என்று கொடுத்ததோடு, பெரிய திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்தி முடித்தோம்.

இது என் தகுதிக்கு மீறிய செயல் என்பதை அறிவு உணர்த்தவே செய்தது. ஆனாலும். என் மனைவியின் நச்சரிப்பால் வட்டிக்கு பணம் வாங்கினேன். இப்பொழுது வட்டியும் கட்ட முடியாமல், அசலையும் அடைக்க முடியாமல் திணறுகிறேன்'' என்றார். நண்பருக்கு ஒருவழியாக ஆறுதல் கூறி விட்டு கனத்த மனதுடன் அங்கிருந்து புறப்பட்டேன்.

வறட்டுக் கவுரவத்திற்காக நிம்மதியை ஒருபோதும் தொலைத்து விடக்கூடாது.

-அன்புச்சோலை, குண்டூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ARR Wed Jul 18, 2012 1:57 pm

அற்புதமான திரி..

வேறு களங்களில் காணவியலா கருப்பொருள்..

பாராட்டுகள் சிவா..!


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 0018-2நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 0001-3நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 0010-3நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சந்திரகி Wed Jul 18, 2012 2:02 pm

நெகிழ, மகிழ, சிந்திக்க, என பல பதிவுகளை தன்னுளே கொண்டது. சூப்பருங்க அருமையிருக்கு

பகிர்வுக்கு நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 23 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 32 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 27 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum