ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 14 of 32 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 23 ... 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Dec 21, 2011 5:37 pm

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

நான் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளேன். ஒருநாள் ஒரு அம்மாவும் புத்திசுவாதீனமற்ற அவளது பெண்ணும் என் கடைக்கு வந்தார்கள். அந்தம்மா தனக்கு பக்கத்து ஊர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். "அய்யா, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இது எனது வங்கிக்கணக்கு புத்தகம். இதில் எவ்வளவு பணம் போடப்பட்டு இருக்கிறது என்று கொஞ்சம் பார்த்து சொல்கிறீர்களா?'' என்று கேட்டாள்.

நான் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் 70 ரூபாய் மட்டும் இருந்ததை சொன்னேன். அதிர்ந்து போன அந்தம்மா, "அய்யோ... ஊரில் உள்ள என் சொத்தை விற்று 41/4 லட்ச ரூபாய் போட்டிருந்தேனே'' என்று கதறி விட்டார்.

நான் அந்தம்மாவை ஆசுவாசப்படுத்தி, விவரம் கேட்டேன். "என் நிலத்தை விற்று பணமாக்கி னேன். எங்கள் தெருவில் இருக்கும் பெட்டிக் கடைக்கார இளைஞன் எனக்கு உதவி செய்தான். பணம் என் கைக்கு வந்ததும், "டவுனில் உள்ள வங்கியில் பணம் போட்டால் வட்டி அதிகம் தரு கிறார்கள்'' என்று சொல்லி இந்த ஊருக்கு கூட்டி வந்தான். பணம் போடுவதாகச் சொல்லி ஒரு சிலிப்பில் என் பெருவிரல் ரேகையை உருட்டிக் கொண்டான்.

அப்போதே எனக்கு சின்னதாய் சந்தேகம் வந்தது. மாதாமாதம் வட்டி என்ற பெயரில் மூவாயிரம் ரூபாய் தந்தான். இருந்தாலும் என் உள்மனதில் ஏதோ தவறு நடப்பதாக தோன்றியதால் அந்தப் பெட்டிக்கடைக்காரனிடம் சொல்லாமல், வங்கியில் போட்ட பணம் இருக்கிறதா? என்று பார்க்க உங்கள் ஊருக்கு வந்தேன். உங்களிடம் கேட்ட பிறகுதான் அந்த பெட்டிக்கடைக்காரன் என்னை மோசம் செய்து விட்டது தெரிகிறது. இந்த அப்பாவிப் பெண்ணை வைத்துக்கொண்டு இனி நான் என்னசெய்வேன்?'' என்று அந்த அம்மா அழுது புலம்பினாள்.

நான் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கள் ஊர் போலீஸ் நிலையம் சென்றேன். இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைக் கூறி, அந்தம்மா மூலம் ஒரு பெட்டிஷனும் கொடுத்தேன். அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதில், பெட்டிக்கடைக்காரன் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டான். பணமோசடியை ஒப்புக்கொண்டவன், வீட்டில் வைத் திருந்த அந்த பணத்தை இன்ஸ்பெக்டர் முன்னிலையில் அந்தப் பெண்ணிடம் ஒப்படைத் தான்.

அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கும் இப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எம்.சூசைமணி, அழகப்பபுரம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Dec 21, 2011 5:38 pm

அக்கறை மனைவி, சர்க்கரை வாழ்க்கை!

நண்பரோடு சேர்ந்து ஒரு திருமண விழாவிற்கு செல்ல இருந்தேன். நண்பரது வீட்டில் இருந்து நாங்கள் கிளம்பத் தயாரானோம். அப்போது அவரை நெருங்கிய அவரது மகன், "அப்பா! நீங்கள் கல்யாண வீட்டுக்கு சென்று வர இரண்டு நாட்கள் ஆகும் அல்லவா? அதுவரை எனக்கு செலவுக்கு காசு கொடுங்கள்'' என்று கேட்டான். நண்பரும் மகனிடம் ஒரு தொகையை கொடுத்தார்.

அப்போது கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அவரது மகளும் அப்பாவிடம் ஓடோடி வந்தாள். "அப்பா! எனக்கு பஸ் பாஸ் வாங்க காசு கொடுங்கள்'' என்று கேட்டு வாங்கிக் கொண்டாள்.

இப்போது அவர் மனைவி கணவருக்கு முன்பாக எதிர்ப்பட்டார். இவர் என்ன கேட்கப் போகிறாரோ? என்று யோசித்த நேரத்தில், நண்பரின் மனைவி அவரிடம், "இரண்டு நாளைக்கும் தேவையான டயாபடீஸ் மாத்திரை, பிரஷர் மாத்திரை எடுத்துக் கொண்டீர்கள் அல்லவா?'' என்று கேட்டார். அதோடு நில்லாமல், "உங்களுக்கு பார்வை முன் போல் தெளிவாக இல்லை. அதனால் கண்ணாடி போடாமல் எங்காவது போய்விடாதீர்கள்'' என்று சொன்னவர், அடுத்து என்னைப் பார்த்தார். "அய்யா இங்கே வந்து இவரை எப்படி அழைச்சிட்டுப் போறீங்களோ? அப்படியே இங்கே வந்து விட்டுட்டுப் போங்க'' என்றும் கேட்டுக் கொண்டார். அப்படியே வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

வெளிïருக்குப் போகிற தந்தையிடம் பிள்ளைகள் தங்கள் தேவையை மட்டும் கேட்டார்கள். மனைவியோ தன் கணவரின் நலம் பற்றி மட்டுமே அக்கறைப்பட்டார். அவர் நலமே தன் நலம் என்ற எண்ணம் தான் அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டது. அக்கறை மிகுந்த மனைவி அமையும் வீட்டில் என்றுமே சர்க்கரை வாழ்க்கை தான்!

பி.ஹரிகிருஷ்ணன், மேல கல்கண்டார்கோட்டை.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Dec 21, 2011 5:39 pm

காதல் ஒன்றும் அவமானம் அல்ல!

என் உறவினரின் மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது காதல் வசப் பட்டிருக்கிறாள். இது அவளது வீட்டுக்கு தெரிந்ததும், மகளை கல்லூரிக்கு அனுப்புவதை நிறுத்தினர். வெளியே எங்கும் செல்லவும் அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட வீடே அவளுக்கு சிறையாகிப் போனது.

அதோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை. தினம் தினம் பார்க்கும் நேரத்தில் எல்லாம் பெற் றோர் அவளைத் திட்டித் தீர்த்தனர். ஒருமுறை நான், அவர்கள் வீட்டுக்குப் போயிருந்த நேரத்தி லும் அந்தப் பெண்ணுக்கு பெற்றோரின் அர்ச் சனை நடந்தது. அதிர்ந்து போன நான் அவர்க ளிடம், `ஏற்கனவே கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டீர்கள், அதுவே பெரிய தண்டனை தான். இதற்கு மேலும் வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண் டிருந்தால் அவள் மனதளவில் ரொம்பவே உடைந்து போவாள்' என்று எச்சரித்தேன்.

ஆனால் அவர்களோ, `இப்படி செய்தால்தான் அவளுக்கு புத்தி வரும். வீட்டில் அடைச்சிப்போட்டு இப்படி திட்டிக்கொண்டே இருந்தால் காதல் கசக்கும். காதலனை மறப்பாள். நாங்க பேசிமுடிக்கிற மாப்பிள்ளைக்கு சம்மதிப்பாள்` என்று சொன்னார்கள்.

ஆனால் நடந்தது வேறு. ஒருநாள் பெற்றோர் உறவினரின் திருமணத்துக்காக வெளிïர் சென்றிருந்தபோது அந்தப்பெண் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டாள். திரும்பி வந்த பெற்றோரால் மகளின் முகத்தை இறுதியாகப் பார்த்து கதறி அழத்தான் முடிந்தது. இன்றும் அழுது புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இளம் வயதில் ஆண், பெண் எல்லோரும் காதல் வயப்படுவது இயற்கையானது. இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவரும்போது, காதலை மாபெரும் தேசத்துரோக குற்றமாக கருதிக்கொண்டு தங்கள் பிள்ளைகளை தாங்களே அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். அது சுற்றுவட்டாரத்திற்கும் தெரியவருவதால் அவமானம் தாங்க முடியாமல் இளம்பெண்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை தேடிக் கொள்கிறார்கள்.

பெற்றோரே உங்கள் கண் போன்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு பிரச்சினையை பக்குவமாக அணுகுங்கள்.

சா.சின்னத்துரை, தென்காசி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Dec 21, 2011 5:39 pm

நம்பிக்கையை விதைத்த நல்லாசிரியர்!

நான் கல்லூரியில் இளங்கலை வணிக மேலாண்மையியல் வகுப்பில் முதல் வருடம் சேர்ந்த புதிது. எனது வகுப்பில் நானும், எனது தோழியும் மட்டுமே பள்ளியில் இறுதியாண்டு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர்கள். மற்ற மாணவர்கள் ஆங்கில வழியில் பயின்றவர்கள்.

கல்லூரியில் எல்லா பேராசிரியர்களும் ஆங்கிலத் திலேயே பாடம் நடத்தினார்கள். பேராசிரியர்கள் சொல்வதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்ததே தவிர, ஆங்கிலத்தில் பதிலளிக்கவோ, பேசவோ முடியவில்லை. இதனால் சக மாணவர்கள் எங் களை கிண்டல் செய்தனர்.

இதை அறிந்த எங்கள் கல்லூரி பேராசிரியர் ஒரு வர் எங்களிடம், "ஆங்கிலம் பெரிய விஷய மில்லை. பாடம் புரிகிறதா? என்பதே முக்கியம். பாடம் புரிந்துவிட்டால் தெரிந்த பதிலை முதலில் தமிழிலேயே கூறலாம். பின்னர் ஆங்கிலத்தில் கூற முயற்சி செய்யுங்கள்'' என்று எங்களை ஊக்கப்படுத்தினார். அதோடு எங்களை கேலி செய்த சக மாணவர்களையும் எச்சரித்தார்.

கிண்டல், கேலி நின்று போனதால் நாங்களும் ஆங்கிலத்தில் பேசும் திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டோம். மொழி என்பது பிறரை கேலி செய்வதற்காக அல்ல. ஒருவரை யொருவர் புரிந்து கொள்வதற்காகத்தான் என்று உணர்த்திய அந்த பேராசிரியர் தான், எங்கள் மனதில் `நம்மாலும் முடியும்' என்ற தன்னம்பிக்கையை விதைத்தவர்.

எஸ்.மகாராணி, தூத்துக்குடி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ஹர்ஷித் Thu Dec 22, 2011 2:34 am

இவர்களை எப்படி திட்ட்வது சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Dec 28, 2011 2:07 pm

கதறிய குழந்தை... புத்திசாலி பெரியவர்!

பெங்களூரில் இருந்து திருச்சிக்கு மைசூர் மயிலாடுதுறை விரைவு ரெயிலில் வந்து கொண்டிருந்தேன். எனது எதிர்ப்புறம் உள்ள இருக்கையில் ஒரு இளம் வயது தம்பதி 2 வயது பெண் குழந்தையுடன் அமர்ந்திருந்தனர்.

இரவானதும், அந்த இளம் பெண், சாமான்கள் வைக்கும் மேல் பலகை காலியாக இருந்த தால் தன் குழந்தையுடன் மேலே ஏறி படுத்தார். இதைப் பார்த்த நான் ``குழந்தையுடன் மேல் பலகையில் படுப்பது ஆபத்தில்Ûயா?'' என்றேன். ``இது எனக்கு பழக்கமானது தான்'' என்று கூறிவிட்டு அந்தப் பெண்மணி படுத்துக் கொண்டாள்.

நள்ளிரவில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் தூக்கம் கலைந்து எழுந்தோம். மேலே படுத்திருந்த அந்தக் குழந்தையின் கால், பலகை இடுக்கில் மாட்டி கொண்டதால் வீறிட்டு அழுது கொண்டிருந்தது.

எல்லோரும் என்னென்னவோ முயற்சி செய்தும் குழந்தையின் காலை வெளியே எடுக்க முடியவில்லை... என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் அனை வரும் பதற்றத்தில் திகைத்துப் போயி ருந்தோம். குழந்தை அழுது கொண்டே இருந்தது.

இதையெல்லாம் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். குழந்தையின் காலை அந்த இடுக்கு வழியாக நகர்த்தி, நகர்த்தி இடை வெளி அதிகமாக இருந்த இடத்திற்கு கொண்டு வந்தார். பிறகு கால் கொலுசை கழற்றச் சொல்லி மெதுவாக வெளியே எடுத்து விட்டார்.

அந்தப் பெரியவர், அந்தக் குழந்தையின் தாயைப் பார்த்து, ``அம்மா உனக்கு தூக்கம் தேவை தான்! உன் குழந்தை உன்னோடு படுத்திருக்கிறது என்ற உணர்வோடு நீ தூங்க வேண்டும்! இல்லையென்றால் இப்படித்தான் அவதிப்பட வேண்டியிருக்கும்..!'' என்று புத்தி மதி சொல்லிவிட்டுப் போனார்.

வயதான அவரின் சமயோசித புத்தியை எல்லோரும் பாராட்டினார்கள்.

- பி.ஹரிகிருஷ்ணன், திருச்சி-11.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Dec 28, 2011 2:08 pm

அறியாமை தந்த ஆசிரம வாழ்க்கை...

என்னுடைய தூரத்து உறவுப் பெண்மணிக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. ஆசிரியை பணியில் இருந்தார். கணவருக்கோ நிலையில்லாத வேலை. ஆசிரியையின் வருமானத்தில் சொந்தமாக பிளாட் வாங்கி, அதில் குடியிருந்தார்கள்.

கணவர், `ஏதேதோ பிஸினஸ் செய்கி றேன் பேர்வழி` என்று பணத்தை விரயம் செய்து கடனை ஏற்றிக் கொண்டு வந்தார். கடன் சுமை தலைக்குமேல் வந்தவுடன் கடன்காரர் கள் வீடுதேடி வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

பிளாட்டை விற்க வேண்டிய நிலை. இதைப் பார்த்த உறவினர்களும் `இவனுக்கு இதே தான் வேலை' என்று கண்டுகொள்ளவில் லை. கணவருக்காக, பிளாட்டை விற்க சம்ம தித்தார் அந்த ஆசிரியை. அதற்குப் பிறகு தான் ஆசிரியையின் வாழ்வில் இடி இறங்கியது.

அந்த துர்க்குணம் பிடித்த கணவர், மனைவியைக் கொண்டுபோய் ஆதரவற்றோர் இல்லத் தில் சேர்த்து விட்டார். அதன்பிறகு அவரை நேரில் சென்று பார்ப்பதுமில்லை. பேசுவது மில்லை. ஏதோ கொஞ்சம் பணத்தை மட்டும் அனுப்பி வைக்கிறார்.

`ஆசிரியையாக இருக்கும் அளவுக்கு படித்திருந்தும், தனக்கென்று தனியாக சேமிக்கவும், பாதுகாப்பு தேடிக் கொள்ளவும் தெரியாதவராக இருக்கிறாரே?' என்று உறவினர்கள் அவரைத்தான் திட்டித் தீர்க்கிறார்கள்.

ஒவ்வொரு பெண்ணும், தனது கணவர் செய்யும் வேலை, வியாபாரம் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். வரவு, செலவையும் அறிந்திருக்க வேண்டும். புருஷன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டாமல் தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள வேண்டும்.

சந்திரா சிவபாலன், ஸ்ரீரங்கம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Dec 28, 2011 2:08 pm

விளையாட்டு நேரத்தில் விபரீதம்

அன்று பள்ளி விடுமுறை நாள். எங்கள் தெருவில் குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் விளையாடுகிறார்களே என்று பெற்றோரும் அவர்களை கவனிக்காமல் மற்ற வேலைகளில் மூழ்கி விட்டனர்.

குழந்தைகள், விளையாட்டிற்கு இடையில் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென் றுள்ளனர். குழந்தைகள் வருவதற்கு சற்று முன்புதான், பூசாரி கோவிலில் இருந்து சென்றுள்ளார். அதனால் கோவிலுக்குள் நுழைந்த சிறுவர்கள், குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு இருக்கை யில், எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கு நெருப்பு, ஒரு சிறுவனின் உடையில் பற்றி தீப்பிடித்து விட்டது.

எல்லோருமே சிறு குழந்தைகள் என்பதால் செய்வதறியாமல் கூச்சல் போட்டுள்ளனர். மற்றவர்கள் வந்து நெருப்பை அணைக்கும் முன்பாக சிறுவன் உடம்பில் தீ பரவி விட்டது. இதில் கழுத்து, முதுகு முதல் கால்பாதம் வரை கருகிவிட்டது.

சிறுவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விடுமுறை நாள் என்பதால் அங்கு தலைமை டாக்டர் இல்லை. தீப்புண்ணுக்கான மருந்தும் அருகில் எங்கும் கிடைக்கவில்லை. அதனால் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கலாகி விட்டது. பிறகு சென்னைக்கு கொண்டு சென்றனர். பிரபல மருத்துவமனை ஒன்றில் பெரும் பொருட் செலவில் அந்த சிறுவன் சிகிச்சை பெற்று தேறினான்.

எனவே பெற்றோர்களே, குழந்தைகள் விளையாடப் போய்விட்டால் நமக்கு தொல்லை விட்டது என்று இருந்து விடாதீர்கள். எப்போதும் அவர்கள் பாதுகாப்பில் ஒரு கண் வைத் திருக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

- ர.ரவிச்சந்திரன், தேவிகாபுரம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Dec 28, 2011 2:08 pm

பயணிகளின் நண்பன்!

என் உறவினர் ஒருவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி புரிகிறார். சமீபத்தில் அவர் வீட்டிற்கு போயிருந்த நேரம், கணவன் மனைவிக்குள் கடுமையான சண்டை.

என்னை பார்த்தவுடன் நண்பரின் மனைவி, ``இவருடன் பணிபுரிந்த ஒரு பையன் வாங்கிய வங்கிக்கடனுக்கு முன் ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கிறார். அவன் பட்டை நாமம் தீட்டிவிட்டு போய் விட்டான். அந்தப் பணத்திற்கு இந்த மனு ஷன் வட்டியும், அசலும் கட்டிட்டு வர்றார். அதுபோக கொஞ்சம் தொகையையே வீட்டு செலவுக்கு தருகிறார். அதைவைத்து நான் எப்படி குடும்பம் நடத்துவது?'' என்று புலம்பினார்.

மனைவியின் வாதத்திற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கணவர். விருந்தாளியாய்ப் போன நான் அவர்களின் விவாதத்திற்கு நீண்ட நேரம் விலக்குத்தீர்க்க வேண்டியதாய் இருந்தது. ஒரு வழியாய் சண்டை ஒரு முடிவுக்கு வந்த பிறகு அவர் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.

அவரிடம் நான் ``நீங்கள் டென்ஷனாய் இருக்கிறீர்கள். நூற்றுக்கணக்கான பயணிகள் உங்களை நம்பி பயணம் செய்கிறார்கள். இன்று லீவு போட்டுவிடுங்களேன்'' என்றேன்.

அதற்கு அவரோ, ``இந்த ïனிபார்ம் போட்டவுடனே எனக்கு வீட்டு நினைப்பு எதுவுமே வராதும்மா... நான் பயணிகளின் நண்பன்'' என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு வேலைக்கு கிளம்பினார்.

நான் அவரையே ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். குடும்பத்தையும், வேலையை யும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு மத்தியில் அவர் வித்தியாசமாக தெரிந்தார்.

- தனலட்சுமி, நம்மாழ்வார்பேட்டை.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ரேவதி Wed Dec 28, 2011 2:10 pm

குடும்பமலரில் இதையெல்லாம் நான் படிக்க தவரவே மாட்டேன்
நன்றி அண்ணா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 14 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 32 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 23 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum