ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்

+46
ஹாசிம்
றினா
ராஜா
அகல்
கரூர் கவியன்பன்
noorvkr
முஹைதீன்
சந்திரகி
ARR
dhilipdsp
sinthiyarasu
இரா.பகவதி
பது
யினியவன்
ரா.ரா3275
தம்பி வெங்கி
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
ஹர்ஷித்
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
ரபீக்
positivekarthick
சுரேஷ்குமார்
krishnaamma
ஜாஹீதாபானு
kitcha
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
அசுரன்
Manik
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
கலைவேந்தன்
varsha
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
ஸ்ரீஜா
SK
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
50 posters

Page 13 of 32 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 22 ... 32  Next

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Wed Nov 09, 2011 10:54 am

தவித்த தாய்... செழித்த மகன்!

எங்கள் வீட்டருகே ஒரு பாட்டி இருக்கிறார். அவருக்கு ஒரே மகன். கணவனை இழந்த அந்தப் பாட்டி, இட்லி மாவு விற்று தன் மகனை உயர்கல்வி வரை படிக்க வைத்தார். ஒரே மகன் என்பதால் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.

மகனும் தாய் சொல்லைத் தட்டாதவனாகவே வளர்ந்தான். படித்து முடித்தவுடன் நல்ல வேலை கிடைத்தது. தாய் பெருமகிழ்ச்சி அடைந்தார். 2 ஆண்டுகள் கழித்து மகனுக்கு திருமணம் முடிக்க நினைத்தார். அந்தநேரத்தில் பெரிய இடத்து சம்பந்தம் ஒன்று வந்தது. பெண் நல்ல வேலையில் இருந்தாள். மகனுக்கு பெண்ணைப் பிடித்திருந்ததால் பாட்டியும் சம்மதித்தார். திருமணம் இனிதாகவே முடிந்தது. 2 மாதங்களுக்கு எந்தக் குறையுமில்லை.

பிறகு பெண் வீட்டினர், `மாப்பிள்ளைக்கு எங்கள் வீட்டு அருகே ஒரு வேலை பார்த்துள்ளோம்' என்று கூறி மகளையும், மருமகனையும் அவர்களோடு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு ஊருக்கு போய்ச் சேர்ந்து விட்டோம் என்ற தகவலைக் கூட அந்த மகன் பெற்ற தாய்க்கு தரவில்லை. மகன்மேல் உயிரையே வைத்திருந்த பாட்டி இன்று, செய்வதறியாது தவிக்கிறார்.

- த.மாஸ்மி, டோனாவூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Nov 24, 2011 8:12 am

எதிர்பார்த்தது பாராட்டு! கிடைத்தது திட்டு!

நடுத்தர வசதி கொண்ட எனது உறவினர் பெங்களூரில் மனைவி குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார். அவர், சமீபத்தில் கிராமத்தில் இருக்கும் அவரது பெற்றோரை, நகரை சுற்றிக் காட்டுவதற்காக பெங்களூருக்கு வரவழைத்தார். கோவில், சுற்றுலாத் தலங்களை சுற்றி காண்பித்து, வாய்க்கு ருசியாக பெரிய ஓட்டல்களில் சாப்பாடு, சிற்றுண்டி களை வாங்கித் தந்தார்.

ஒரு வாரம் தங்க வைத்திருந்து போகும்போது அவர்களுக்கு துணிமணிகளை வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக ஊருக்கு அனுப்பி வைத்தார். கடன் வாங்கிச் செலவு செய்தாலும் பெற்றோர்கள் மனம் குளிரச் செய்து அனுப்பி விட்டோம் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு, மறுநாள் தன் தாயி டமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அதிர்ச் சியைத் தந்தது.

`ஊருக்கு வந்துவிட்டோம், பெங்களூர்ப் பயணம் சந்தோஷமாக இருந்தது' என்று தன்னை மகிழ்விக்கும் வார்த்தைகளை அம்மா பேசுவார் என்று நம்பிக் கொண்டிருந்தார் என் உறவினர். ஆனால் அவரது அம்மாவோ, ``ஏண்டா! நீ கஷ்டப்படுவதாக எங்களிடம் பொய் சொல்லி விட்டு, நீயும் உன் மனைவியும் கோவில், குளம் என்று ஊர் சுற்றித் திரிகிறீர்கள். வீட்டில் சமைக்காமல் ஓட்டல்களில் தின்று கொண்டு அலைகிறீர்கள். இப்படி இருந்தால் நீ எப்படி உருப்பட முடியும்! நீ கஷ்டப்படுவதாக சொல்வதை நான் நம்பத் தயாராக இல்லை! மாதாமாதம் இப்ப அனுப்பறதை விடஅதிகமா பணம் சேர்த்து அனுப்பி வை! இல்லையென்றால் எங்களை மறந்துவிடு!'' என்று கடுமை யாக பேசியிருக்கிறார்.

தன்னைத் தவறாகப் புரிந்து கொண்ட தன் தாயை நினைத்து கோபப்படுவதா? பரிதாபப் படுவதா? என்று அவருக்கு புரியவில்லை. அவர்களுக்கு பணத்தை கையில் கொடுத்து அனுப்பாமல் செலவு செய்தது நம் முட்டாள்தனம் என்று தன் மனைவியிடம் சொல்லி வருத்தப்படத்தான் அவரால் முடிந்தது.

- பி.ஹரிகிருஷ்ணன், திருச்சி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Nov 24, 2011 8:13 am

அழுத குழந்தை அறுந்த உறவை இணைத்தது!

என் தோழியின் குழந்தையும், அவளின் பக்கத்து வீட்டு குழந்தையும் எப்போதும் ஒன்றாகத்தான் சேர்ந்து விளையாடுவார்கள். ஒருநாள் பக்கத்து வீட்டிற்கு விருந்தினர் வந்துள்ளனர். அதனால் பக்கத்து வீட்டு குழந்தை, அவர்களது விருந்தினரின் குழந்தை களோடு விளையாடியது.

இதைப் பார்த்த என் தோழியின் குழந்தை, தன் தாயிடம், "அம்மா! நமக்கு சொந்தக்காரங்க இல்லையா? நம்ம சொந்தக்காரங்களை நம்ம வீட்டிற்கு வர சொல்லுங்க!'' என்று கேட்க, அம்மாவோ `நமக்குஅப்படி சொந்தக்காரங்க யாரும் இல்லை' என்று சொல்லியிருக்கிறாள். இதனால் அவள் குழந்தை தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தது. விடாமல் அழுததில் குழந்தைக்கு காய்ச்சலும் வந்துவிட்டது.

என் தோழிக்கு சொந்தம் என்று சொல்ல ஒரு அண்ணன் மட்டும் உண்டு. அண்ணியிடம் ஏற்பட்ட சிறு சண்டையால் இரு குடும்பத்தாரும் பேசாமல் இருந்து வந்தார்கள். தன் குழந்தை இப்படி உறவுக்கு ஏங்குவதை கருத்தில் கொண்ட தோழி, தன் பகையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, அண்ணன் குடும்பத்தை போன் செய்து வரவழைத்தாள். அண்ணனும் தன் மனைவி, தங்கள் மூன்று குழந்தை களுடன் உடனே விருந்திற்கு வந்தார்கள். அந்தக் குழந்தைகளை பார்த்த பிறகுதான் என் தோழியின் குழந்தைக்கு காய்ச்சல் குறைந்தது. அவர்களோடு மகிழ்ச்சியோடு விளையா டியது. இரு குடும்பமும் பகையை மறந்து இணைந்து விட்டது.

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதை விட்டுக் கொடுக்காமல் வீறாப்பாக காட்டிக் கொண்டு நம் சந்ததிகளை உறவுக்கு ஏங்கும் நிலையில் கொண்டு விட்டுவிடக்கூடாது.

அ.அனிஷீபா, இலந்தவிளை.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Nov 24, 2011 8:15 am

பெருமை எப்போதுமே `ஒருவழிப்பாதை' தான்!

என் நண்பன், புது மாடல் பைக் ஒன்று வாங்கி இருந்தான். புதிய வண்டியில் ஒரு ரவுண்டு வரலாம் என்று என்னையும் ஏறச் சொன்னான். நானும் அவனுடன் கிளம்பினேன்.

வண்டியை மிக வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றான். அவனது கண்மூடித்தனமான வேகத்தில் எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. அவன் அத்துடன் நிறுத்தாமல் திடீரென்று `ஒன்-வே' ரூட்டில் நுழைந்துவிட்டான். அது எனக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

எதிரே வேகமாக பஸ், கார், டூ-வீலர்ஸ் என வந்து கொண்டிருந்தன. அவன் போகப்போக வேகத்தை இன்னும் கூட்டிக் கொண்டே சென்றான். `இவ்வளவு வேகம் வேண்டாம்டா... அதுவும் இது ஒன்-வே' என்று நான் எச்ச ரிக்கை செய்து பார்த்தேன். அவனோ அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் `இது புதுவண்டி... செம கண்ட்ரோல்' என்றபடி ஓட்டிச் சென்றான். அடுத்து அவனது செல்போன் மணி அடிக்க, அவன் சற்று பாக்கெட்டை பார்க்க, எனக்கு எம வாகனத்தில் பயணிப்பது போலவே திக்திக் கென்று இருந்தது.

போனை கவனித்த அவன், சாலையை கவனிக்கவில்லை. அடுத்த கணம் கண் எதிரே ïனிபார்மில் நின்ற போலீஸ்காரர் மீது நேருக்கு நேராக வண்டியை மோதினான். "எல்லாம் போச்சு, நான் நினைத்தது மாதிரியே ஆகி விட்டது'' என்று எண்ணிய அடுத்தகணம் மூவரும் கீழே கிடந்தோம். எங்களை விட எதிரே வந்த போலீஸ்காரரின் முழங்காலில் அடிபட்டு ரத்தம் பீறிட்டது!

பிறகு போலீஸ்காரரை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ செலவு, வண்டி ரிப்பேர் செலவு என்று வீணாக பணத்தை செலவு செய்தான் என் நண்பன். வழக்கையும் சந்தித்து வருகிறான்.

நல்ல வேளையாக காயத்தோடு தப்பினோம். யாராவது உயிரிழந்திருந்தால் இழப்பை யார் ஈடுகட்ட முடியும்? இந்த அதிவேகம், புதுவண்டி என்ற பெருமையைக் காட்டவா? பெருமைக்கு எப்போதுமே ஒரு வழிப்பாதை தான்.

- ப.முரளி, அம்மாபேட்டை.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Thu Nov 24, 2011 8:21 am

அங்கே கொண்டாட்டம்... இங்கே திண்டாட்டம்...

எனக்கு இரண்டு பிள்ளைகள். மகன் கல்லூரியில் படிக்கிறான். மகள் 12-ம் வகுப்பு படிக்கிறாள். மகன் 10-ம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் வீட்டில் டி.வி. கேபிள் இணைப்பை எடுத்து விட்டோம். எங்கள் எதிர் வீட்டினர், தெருவில் `பங்க்' கடை வைத்திருக் கிறார்கள். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டதால், வீட்டில் கணவன்- மனைவி இருவர் மட்டுமே உள்ளனர்.

அவர்களது தொலைக்காட்சி பெட்டியை கடையில் வைத்துள்ளனர். காலை நேரத்தில் தெருவிற்கே கேட்கும்படி சத்தத்தை அதிகமாக வைத்து பார்க்கிறார்கள். இதனால் எத்தனை மாணவச் செல்வங்கள், அக்கம் பக்கத்தினர் பாதிக்கிறார்கள் என்று அவர்கள் யோசிப்பதே கிடையாது. சொன்னாலும் கேட்பதில்லை.

இதனால் என் பிள்ளைகள் போல இன்னும் எத்தனை பேர் சங்கடப்படுகிறார்களோ தெரிய வில்லை. நமக்குத்தான் படிக்கிற வயதில் பிள்ளைகள் இல்லையே என்று நினைத்துக் கொண்டு படிக்கிற பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு இப்படிப்பட்டவர்கள் உலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், பங்குடன் மனிதநேயம் கொண்ட வர்களின் ஒத்தழைப்பும் அவசியமானதல்லவா!

- பி.மல்லிகா, பிச்சனூர்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 24, 2011 9:22 am

nanri மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Sun Dec 11, 2011 10:46 am

பஸ்சில் அறிமுகம்... பார்க்கில் துணிகரம்!

எனது தோழி, உயிரியல் முதுகலைப் படிப்பு முடித்தவள். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள். ஒருநாள் பள்ளி முடிந்ததும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம்.

அருகே சற்றே வயதில் மூத்த பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என் தோழியிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார். தோழியின் படிப்பு விவரம் தெரிந்து கொண்டதும், முதுகலை படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியிலா பணிபுரிகிறாய்? கவலைப்படாதே, நான் அறிவியல் மைய ஆய்வாளராக பணியாற்றுகிறேன். என் சக ஊழியர்களிடம் விசாரித்து உனக்கு நல்ல வேலை பெற்றுத் தருகிறேன். உன் ஓய்வு நாளில் என்னை சந்திக்க வா'' என்று கூறி இவள் கைப்பேசி எண்ணையும் பெற்றுக் கொண்டார்.

ஒரு வாரம் கழித்து என் தோழியைச் சந்தித்தேன். `என்ன, புதிய இடத்தில் வேலை கிடைத்ததா? என்றேன். `இல்லை தங்கச் சங்கிலி தான் அபகரிக்கப்பட்டது' என்றாள் வருத்தத்துடன். அவள் நடந்ததைச் சொன்னதும் அதிர்ந்து போய்விட்டேன்.

அறிவியல் ஆய்வாளர் என்று சொல்லிய அந்தப்பெண், தோழியின் கழுத்துச் சங்கிலியை குறிவைத்தே அன்று பஸ்சில் அந்த அனுதாப நாடகம் நடத்தியிருக்கிறாள். அவள், என் தோழியை ஒரு பூங்காவுக்கு வரச் சொல்லி சந்தித்திருக்கிறாள். கூட்டம் குறைந்த நேரத்தில் தோழியை மிரட்டி சங்கிலியை அபகரித்துவிட்டு ஓடிப்போயிருக்கிறாள்.

இதைக் கேள்விப்பட்டதும், இப்படியும் பெண்கள் உள்ளனரா? என்று அதிர்ந்தே போனேன். அறிமுகம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் நம் சொந்த விஷயங்களை அப்படியே கொட்டி விடக்கூடாது என்ற உண்மை அப்போதுதான் எங்களுக்கு உறைத்தது.

-த.மாஸ்மி, சுந்தராஜபுரம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Sun Dec 11, 2011 10:47 am

சீரியசாகப் போகும் சீரியல் ஆர்வம்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டபோது என் நண்பனுக்காக பிரசாரம் செய்ய அவனுடன் சென்றேன். மாலை நேரத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் கொடுத்து எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறினோம்.

சில வீடுகளில் கதவு திறந்தே கிடந்தது. எங்களுடன் வந்த சிறுவர்கள் அக்கா, அம்மா என்று கூறிக் கொண்டே உள் வீடு வரைக்கும் சென்று துண்டு பிரசுரம் கொடுத்தனர். ஆனால் அவ்வீட்டில் உள்ள பெண்மணிகள் ரொம்ப சாவகாசமாக அதை வாங்கி வைத்துவிட்டு டி.வி. சீரியல் பார்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

எங்களுடன் வந்த ஒரு குறும்புக்கார சிறுவன், ஒரு வீட்டில் நுழைந்து துண்டுபிரசுரம் கொடுத்துவிட்டு அங்கிருந்த பிரிஜ்ஜை திறந்து கூல் டிரிங்ஸை எடுத்து குடித்திருக்கிறான். இதையும் அவர்கள் கவனிக்கவில்லை. இதை அச் சிறுவன் எங்களிடம் சொன்னபோது ஒரு புறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் டி.வி. சீரியல் பெண்களை எந்தளவுக்கு மயக்கி உள்ளது என்று நினைத்து வேதனையடைந்தோம்.

சீரியல் பார்க்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. இப்படி தன்னை மறந்து, தன் வீட்டை மறந்து, உலகத்தையே மறந்து சீரியல் பார்ப்பவர்களால்தான் `நகையை பறிகொடுத்தேன், பணத்தை பறிகொடுத்தேன்' போன்ற செய்திகள் செய்தித்தாள்களில் இடம் பிடிக்கிறது. சிரியலை சீரியசாய் பார்ப்பவர்கள் இதைப் படித்த பிறகாவது விழிப்படையட்டும்!

- பொன்.வரதராஜு, திருச்சி.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Sun Dec 11, 2011 10:47 am

மறுப்பதிலும் பொறுப்பு தேவை!

நான் பணிபுரியும் நிறுவனத்தில் கேஷியராக ஒரு பெண் அலுவலர் இருக்கிறார். அவரது கணவர் சமீபத்தில் இறந்து விட்டார். அன்று நான் அலுவலக வேலையாக வெளிïர் சென்றிருந்ததால், ஊர் திரும்பிய பிறகு நானும் அலுவலக நண்பர் ஒருவரும் கேஷியரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றிருந்தோம்.

துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் வீட்டிலிருந்து எங்களுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார்கள். நான் காபியை வாங்கிக் குடித்தேன். நண்பரோ `நான் துக்க வீட்டில் எதுவுமே சாப்பிடுவதில்லை' என்று கூறி காபி குடிக்க மறுத்து விட்டார். இதைக் கேட்டதும், கேஷியரின் முகம் சட்டென்று வாடிப்போனதை கவனித்தேன்.

சிறிது நேரம் பேசிவிட்டு நாங்கள் புறப்பட்டோம். வெளியில் வந்த பின் நான் நண்பரிடம், `சிலர் குழந்தை பிறந்தவர்கள் வீட்டிலும், இறப்பு நடந்த வீட்டிலும், பூப்பு நன்னீராட்டு விழா நடக்கும் வீட்டிலும் தீட்டு என கூறி சாப்பிட மறுக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய வீடுகளிலும் இந்நிகழ்ச்சிகள் நடந்து கொண்டேதான் இருக்கும்.

ஆகையால் நீங்கள் இம்மாதிரியான வீடுகளுக்குச் செல்லும்போது அவர்கள் மரியாதை நிமித்தம் கொடுப்பதை அவர்களின் மன நிறைவுக்காகவாவது சாப்பிட பழகுங்கள். அல்லது எனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி நாகரீகமாக மறுத்து விடுங்கள். அதைவிடுத்து நேரடியாக முகத்தில் அடித்தாற்போல் மறுப்பது அவர்களை வருத்தத்தில் தள்ளிவிடும்" என்று விளக்கினேன். நண்பரும் தன் தவறை உணர்ந்தார்.

- சுந்தர் சுந்தரி, ஆர்.எஸ்.புரம்.


நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா Sun Dec 11, 2011 10:48 am

யானைப் பசிக்கு வாழைப்பழம்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தேன். என் உறவினர்களும் வந்திருந்தனர். அந்த கோவிலில் ஒரு யானை அனைவரையும் ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தது.

தரிசனம் முடித்து வந்த பிறகு அந்த யானைக்கு காசு கொடுக்க சென்றேன். அப்போது என் உறவினர் பழங்களை வாங்கி கொடுங்கள் என்று சொன்னார். ஏன்? என்று கேட்டேன்.

"அந்த யானை காலையில் இருந்து இரவு வரை கோவிலுக்கு வருவோரை ஆசீர்வாதம் செய்து கொண்டிருக்கிறது. ரொம்ப நேரம் நின்று கொண்டே இருக்கும். நிறைய பேர் காசு தான் கொடுப்பார்கள். யாரும் சாப்பாடு போடமாட்டார்கள். அதற்கும் பசிக்கும் அல்லவா? பாவம் அதுவும் ஒரு உயிரினம் தானே. ஆகவே, நாம் யானைக்கு பழங்களை வாங்கி கொடுத்தால், அது சாப்பிட்டுவிட்டு நம்மை மனதார வாழ்த்தும். அதுவே நமக்கு புண்ணியம்தானே!'' என்று விளக்கம் சொன்னார்.

நானும், அதை ஏற்றுக் கொண்டு அந்த யானைக்கு பழங்களை வாங்கி கொடுத்து அது பசியாறிய திருப்தியில் அங்கிருந்து வந்தேன்.

- ப.சுபஸ்ரீ, கரூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 13 Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 32 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 22 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum