புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 07, 2011 1:19 pm

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய ஒரு விரிவான அலசல்.

இந்த பதிவு விகடன் இணையதள வாசகர் எழுதியது

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7:
இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி.

இந்த பதிவு அனைவரையும் சென்றடைய அவசியம் வாக்களியுங்கள்...

நன்றி: விகடன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 07, 2011 1:39 pm

நல்ல பதிவை வெளியேட்டமைக்கு மிக்க நன்றி மணி....
தெள்ள தெளிவாக ஊலலை பற்றி கூறியுள்ளார்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்...

2G & 3ஜி அலைக்கற்றைகள் சோனியா காந்தி தங்கைக்கும் இதன் உரிமம் உண்டாம் தற்போதய தகவல்...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 2:26 pm

நிச்சயம் பல நாட்களுக்கு இந்த பதிவு முதல் பக்கதில் இருக்குமாறு நாம் வைதிருக்கவேண்டும்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Feb 07, 2011 2:43 pm

ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! 677196 நல்ல பதிவு மணி ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! 677196

ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Mஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Oஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Hஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Aஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 3:05 pm

இவற்றை கணினி பயன்படுத்தாத மக்களும் படித்து அறியும் வகையில் பிரிண்ட் எடுத்து அனைவருக்கும் அளிக்க வேண்டும்!

ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 3:24 pm

தொலை தொடர்பு துறையில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை கூறியது. இந்த விவகாரம் விசுவ ரூபம் எடுத்து நாட்டையே உலுக்கி கொண்டிருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போன்ற முறைகேடு மத்திய விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோவிலும் நடந்து இருப்பதை மத்திய தணிக்கை துறை கண்டு பிடித்து உள்ளது. தொலை தொடர்பு துறை போலவே இஸ்ரோவிலும் அலைவரிசை ஒதுக்கீடுகள் நடக்கின்றன. இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் உள்ள அலைவரிசைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கின்றன. ரேடியோ, டி.வி., 3-ஜி, செல்போன் சேவை போன்றவற்றுக்கு இந்த அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

2005-ம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனம் ஆன்டி ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. ரூ. 1000 கோடி மட்டுமே இதற்கு கட்டணமாக பெறப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு இவற்றை பயன்படுத்தி கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் மூலம் ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. இந்த ஒப்பந்தம் விவகா ரங்களை மத்திய பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து தணிக்கை துறை அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் தேவாஸ் நிறுவனத்துக்கு அலை வரிசை ஒதுக்கீடு முறையாக செய்யவில்லை. இதனால் இஸ்ரோவுக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோ பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். டெலிபோன் நிறுவனங்களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்கியது. இதற்காக ரூ. 12 ஆயிரத்து 847 கோடி கட்டணமாக பெற்றது. ஆனால் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு 70 மெகாஹெட்ஸ் அலை வரிசையை விற்று அதற்கு கட்டணமாக ரூ. 1000 கோடி மட்டுமே பெற்றுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு 15 மெகாஹெட்ஸ் அலை வரிசைகளை 3-ஜி செல் போன் சேவைக்காக ஏலம் மூலம் விற்றது.

அதில் மத்திய அரசுக்கு ரூ. 67 ஆயிரத்து 719 கோடி வருமானம் கிடைத்தது. 15 மெகாஹெட்ஸ் அலை வரிசையில் ரூ. 67 ஆயிரம் கோடி கிடைத்து இருக்கும் போது 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைக்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் பொது ஏலம் மூலம் விடாமல் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் மூலம் நேரடியாக அலைவரிசைகளை ஒதுக்கியதால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய தணிக்கை துறை கூறி உள்ளது.

பல நாடுகளில் இது போன்ற அலைவரிசைகளை பொது ஏலம் மூலமே விற்கின்றனர். ஆனால் இஸ்ரோ மட்டும் பொது ஏலத்துக்கு விடாமல் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக தணிக்கை துறை கூறி உள்ளது. இஸ்ரோ நிறுவனம் மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி துறையின் கீழ் செயல்படுகிறது.

இந்த துறை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உள்ளது. அப்படி இருந்தும் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி இருப்பது எல்லோரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. இதில் ஊழல் ஏதும் நடந்திருக்குமா? என்று தெரியவில்லை. தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோ நிறுவனத்தின் அறிவியல் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். எனவே பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்சினை போல இஸ்ரோ அலைவரிசை ஒதுக்கீடு பிரச்சினையும் பெரிய அளவில் வெடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 3:35 pm

உக்காந்து யோசிப்பாங்களோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Feb 07, 2011 6:02 pm

அதி முக்கியமான திரி..
நிச்சயமாக நண்பர்களுக்கு பகிர்வேன்..

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Feb 07, 2011 6:45 pm

மிக பெரிய பதிவு .ஆனால் மிக அதிக குறைகள் மற்றும் ஆதார மற்ற தகவல்கள்

1.2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள் (உங்கள் வரி )

1.அப்போ 2001 இல் இருந்து 2008 வரைக்கும் கூட சுமார் 500000 கோடி வருமானம் போகி இருக்கும் அல்லவா (என் கேள்வி )

2.நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது(உங்கள் வரிகள் )
2.என் அப்போதே சரியான கொள்கையை வகுக்க வில்லை
2கோடி மக்கள் 2001 பேசும் பொது இருந்த கொள்கை 2008 இல் 60 கோடியாக மாறும் என அன்று அவர்கள் நினைக்கவும் இல்லை ,இந்த விலை எது வரை தொடரும் என்பதை குறிப்பிடவும் இல்லை (என் வரிகள் )

3.அதிக விலை கொடுத்து வங்கி இருந்தால் தொலை தொடர்பு நிறுவனகல் அதனை மக்களிடம் இருந்துதானே பெற்று இருப்பார்கள் ( என் வரிகள் )

4.இந்தியா இந்த பத்து ஆண்டுகளில் மிக வேகமாக முநேரியதற்கு காரணம் தகவல் தொழில் நுட்பமும் ,தொலை தொடர்பு மட்டும்தான்

5.உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உங்கள் வரிகள் )

5.எதனை வைத்து இந்த மதிப்பை நிர்ணயிதீர்கள் (3 ஜி)யை வைத்து .அதுவும் 2010 மதிப்பை வைத்து

கடைசியாக இதில் மிக அதிகமாக அரசியல்தான் தெரிகிறது ,பாகிஸ்தானுக்கு விதுட்டாங்க ,பணம் வெளி நாட்டுக்கு போயிடுச்சி ,பணத்தில் தலித் ,ஏழை மக்கள் நிலங்கள் பிடுங்கபட்டன என்பதெல்லாம் சுத்த டுபாக்கூர் .

ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது .அதற்காக பரதேசிகள் (பி.ஜே.பி)பேச்சை கேட்டு 2 லட்சம் கோடி என கூறுவது எல்லாம் மக்களை ஏமாறும் வேலை . சரியாக என்ன நடந்தது என்பதை கண்டு பிடித்து மக்களுக்கு கூறுவது அரசின் கடமை .பத்திரிக்கைகளின் கடமை .ஜும் போட்டு சொல்வதே பாதிரிக்கைகளின் வேலை யாகி போயிட்டது .ஏனென்றால் அவனுக்கு அவன் பத்திரிக்கை அதிகம் விற்க வேண்டும்

லாஜிக்காக எழுதவேண்டும்

ராம்

deva darshni
deva darshni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 12/10/2010

Postdeva darshni Mon Feb 07, 2011 8:10 pm

ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..! 502589

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக