ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் வரலாறு

Go down

ஈழம் வரலாறு Empty ஈழம் வரலாறு

Post by Guest Mon Feb 07, 2011 10:06 am

ஈழம் வரலாறு

ஈழம் வரலாறு Photo2fd2

தற்காலத்தில்
இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது.
பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்'
போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ்
மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற
பெயரைப் பயன்படுத்தின.

பொருளடக்கம்

1 பெயர்த் தோற்றம்

2 'தமிழு'ம் 'ஈழ'மும்

3 தற்காலத்தில் 'ஈழம்'

4 வெளி இணைப்புகள்

பெயர்த் தோற்றம்

ஈழம்
என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய
வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற
பெயர் இத்தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து
திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ
ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால்
பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.

'தமிழு'ம் 'ஈழ'மும்ஈழம்

என்ற
சொல்லுக்குப் பாளி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர்
'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே
உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.

தற்காலத்தில் 'ஈழம்'

இலங்கையில்
இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு
போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன.
அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில்,
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப்
பயன்படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற
கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட
அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள்.
காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்'
சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப்
பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக
மாறியுள்ளது.

அரசியல் அமைப்பு

தமிழீழம்
எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக
கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர்
தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்
தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து
ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த அரசாங்கம் சர்வதேச
ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதன்று. தமிழீழ பகுதியில் பெரும்பான்மை
நிலப்பரப்பின் பகுதியின் நிர்வாகம், நீதிமன்றம், கட்டமைப்புகள் அனைத்தும்
தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கடந்த 10
ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி பெரும்பாலான அம்சங்களுடன்
செயல்பட்டுவருகிறது. இந்த பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து
இராணுவ, நிர்வாக அடிப்படையில் துண்டிக்கப்பட்டதாக அமைந்துள்ளது.

தமிழீழத்தில் முஸ்லீம்கள்

தமிழீழப்
பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை முஸ்லீம்கள் கருதுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும்
தனித்துவமான ஒரு முஸ்லீம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம்,
மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர். யாழ்
மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழீழத்தில் சிங்களவர்

ஈழப்போராட்டத்தின்
முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள்
வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து
பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள். தமிழர்களின்
தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல
சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும்
பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. கிழக்கு
மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள
குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு சிங்களவர்களே
வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும்
திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.

தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை

இந்தியாவில்
இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை
செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது
இந்திய வம்சாவழித் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு -
கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த
இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத்
தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி
வருகின்றதெனலாம்.

தமிழீழ மொழிகள்

தமிழீழத்தில்
தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்)பயன்படுகின்ற
மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம்
பிரதான வெளி தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்பலகைகள்,
வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின்
தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக
பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை,
இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக
தமிழீழத்தில் பயன்படும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் பல மொழி தளங்களில்
இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும்
தேவையாக இருக்கும்.

தமிழீழத்தில் சமயங்கள்

தமிழ்
மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன்,
அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர்.
தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.
தமிழ்க் கிறிஸ்தவர்களின் ஈழப் போராட்டத்துக்கான பங்களிப்பு
குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் முஸ்லீம் மற்றும் பெளத்தம் சிங்கள
மக்களால் பின்பற்றப்படுகின்றன.

கல்வி

தமிழீழ
மக்கள் கல்விக்கு மிக முக்கித்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு
90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ்
பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் இரு
பல்கலைக்கழகங்கள் ஆகும்.

பொருளாதாரம்

தமிழீழ
மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக
மேற்கொள்கின்றனர். தற்சமயம் ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள்
அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப்
பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே
பங்களிக்கின்றன.

உலகமயமாதல்

நவீன அரசியல்,
பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு
பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை
உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம்,
புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு
உணர்த்தியுள்ளது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு NGOs, நிகழும் அரசியல்
திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின்
எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முக பண்பாடு, பல் சமய, திறந்த
சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித
உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள்
என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.

எதிர்காலம்

தமிழீழத்தின்
எதிர்காலம் அதன் அரசியல் நிலைமைகளிலேயே தங்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கு
ஒரு சுமூகமான தீர்வு கிடைத்தால் தமிழீழம் ஒரு வளர்ச்சிமிக்க சமூகமாக
பரிணமிக்க சந்தர்ப்பம் உண்டு.

ஈழப்போராட்டக் காரணிகள்.


ஈழப்போராட்டம்
ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது, இற்றை வரை அது எதிர்கொண்ட
சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை. இந்தத்
தேவையை மயூரன் அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே பெயரிலி இது
பற்றி எழுத முயற்சிப்பதாகச் சொல்லியுள்ளார். அந்த வகையில் எனது மிகச்சின்ன
முயற்சியிது.

முதலில் சிங்கள - தமிழ் இனமுறுகல் என்பது இன்று
நேற்றுத் தொடங்கப்பட்டதன்று என்பது என் எண்ணம். இதை மற்றவர்களும்
ஏற்றுக்கொள்வார்களென்றே நம்புகிறேன். ஏறக்குறைய ஈராயிரம் -குறைந்தபட்சம்
1500 வருடங்களாகப் புகைந்து வருவது தான் இந்த இன முரண்பாடு. ஆயிரம்
வருடங்களுக்கு முன்பேயே இலங்கையைத் தனிச்சிங்கள - பொளத்த நாடாக மட்டுமே
அடையாளங்காட்டியும் மற்றவர்களை வந்தேறு குடிகளாகவும் துரத்தப்பட
வேண்டியவர்களாகவும் கதை கட்டமைக்கப்பட்டு காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்பட்டு
வந்துள்ளது. இடையில் இவ்வுணர்வு தொய்யும் போதெல்லாம் யாராவது வந்து
எண்ணெய் ஊற்றி எரித்து விடுவார்கள். இன்றும் கூட தங்கள் வரலாற்று நூலாகச்
சிங்களவர் அடையாளங்காட்டும் 'மகா வம்சம்' என்ற நூல் இதற்குச் சிறந்த
எடுத்துக்காட்டு.

முதலில் மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாக
அடையாளங்காட்டுதலே சுத்த காட்டுமிராண்டித்தனமும் அயோக்கியத்தனமுமாகும்.
அப்படிப் பார்க்கப்போனால் இராமாயணம் மகாபாரதங்களைக்கூட யாரும்
தமக்கேற்றபடி வரலாற்று நூற்களாகக் கட்டமைத்து எதையும் கதைக்க முடியும். காம
வேட்கையுற்ற சிங்கமொன்றினால் உருவாக்கப்பட்டு ஒரே தாய்வயிற்றில் பிறந்த
ஆண்-பெண் கூடி உருவாக்கப்பட்ட இனம் தான் இந்தச் சிங்கள இனமென்றும்,
புத்தரால் அவர்களுக்கெனச் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீவுதான் இந்த இலங்கை
என்றும், அவர்களை அங்கே குடியேற்றுவதற்காக 'வாக்களிக்கப்பட்ட'
தீவிலிருந்தவர்களை புத்தர் வெருட்டிக் கலைத்தார் என்றும் கதை சொல்கிறது
மகாவம்சம். நிறைய மாயாஜாலச் சம்பவங்களைக் கொண்ட இந்நூல்தான் அவர்களின்
வரலாற்று நூலாம். (இதன் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பகுதிகளை வன்னியில்
வாசித்தேன். முழு மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் வெளியிட்டுவிட்டார்களா
தெரியவில்லை. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்)

இதன்பின்
அவ்வப்போது தமிழர்களுக்கும் சிங்களவருக்குமிடையில் போர்கள் நடந்தன.
போர்த்துக்கேய வருகைவரை தனித்தனி இராச்சியங்கள் இருந்துள்ளன. வெள்ளையரிடம்
இறுதியாக இழக்கப்பட்ட இன்றைய மத்திய இலங்கையான கண்டி இராச்சியத்தின் கடைசி
மன்னன் ஒரு தமிழன் என்ற தகவல் வியப்பானது.
ஆகவே இந்த
இனப்பிரச்சினையின் வேர் ஆயிரமாண்டுகளாக ஊட்டியூட்டி வளர்க்கப்பட்ட
இனவெறியில் தங்கியுள்ளது. அதிகம் கிளறாமல் நான் சொல்லவந்த விசயத்துக்கு
வருகிறேன்.

ஈழம் வரலாறு Tamiltigers_picஆயுதப்போராட்டம்
தொடங்கப்பட்டது எழுபதுகளில், அது முனைப்புப்பெற்றது எண்பதுகளின்
தொடக்கத்தில். இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியான வன்முறைகளையும்
அழிவையும் சந்தித்து வந்தார்கள். அவ்வப்போது நடந்த இனப்படுகொலைகள்
(இனக்கலவரம் என்பது பிழையான சொல்லாடல்) இதற்குச் சான்று. அடக்குமுறைக்கு
மொழி முக்கிய மூல காரணியானது. மொழி மூலமே முதன்மையான அடக்குமுறையை
எதிர்கொண்டனர் தமிழர்கள். தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது
முக்கிய விடயம். (அந்த நேரத்தில் எவன் தமிழனை அதிகமாக வதைக்கிறானோ, அல்லது
வதைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறானோ அவனே தேர்தலில் வெல்வான் என்ற
நிலையிருந்தது. அதன் உச்சபட்ச தேர்தல் வாக்குறுதியே '24 மணிநேரத்தில்
தனிச்சிங்களச் சட்டம்' என்ற தேர்தல் கோசமும் அதைத் தொடர்ந்த வெற்றியும்.)


ஈழம் வரலாறு Burned_libraryஇந்த
நேரத்தில் தமிழ் மாணவர்களை வதைக்கும், தமிழ் மக்களின் கல்வித்திறன் மேல்
கைவைக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆயுதப்போராட்டப்
பொறி பற்றுவதற்கான முதன்மைக்காரணியும் இதுவே. இச்சட்டம் குறிப்பாக இளம்
தமிழ் மாணவரை நேரடியாகப் பாதித்தது. இச்சட்டம் மூலம் தமிழர்களுக்கெதிராக
சிங்கள அரசு செய்த மோசடியும், அது எவ்வளவு தூரம் மாணவரைப் பாதித்தது
என்பதையும் அது எவ்வாறு ஆயுதப்போராட்டத்துக்கு இட்டுச்சென்றது என்பதையும்
அடத்த பதிவில் தருகிறேன்.

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
இனப்படுகொலைகள் பற்றி இங்கே எழுதத்தேவையில்லையென்று நினைக்கிறேன்.
சிங்களம் மட்டும் சட்டத்தின் கொடூர முகம் பற்றி வேறு யாரேனும்
எழுதுங்களேன். நாங்கள் தான் வயதாற் சிறியவர்கள். புலிவிமர்சனத்தை மட்டும்
கருப்பொருளாய் வைத்து பதிவு எழுதும் நேரத்தில் இப்படியாக
ஆயுதப்போராட்டத்துக்கு முந்தைய நிலையினையும் நீங்கள் எழுதலாம் என எமது
மூத்தவர்கள் சிலரைக் கேட்கிறேன். புலியைப்பற்றி எழுதப்போனால் தான்
உங்களுக்குச்சிக்கல். இனச்சிக்கல்களின் தொடக்ககாலத்தைப்பற்றி நீங்கள்
எழுதலாம் தானே.


மாணவர்கள் மேல் பாய்ந்த அச்சட்டம் தான் தரப்படுத்தல் சட்டம்.
இச்சட்டத்தின்படி,
பல்கலைக்கழகம் நுழைய வேண்டுமானால் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களைவிட
அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இது எல்லாப்பாடங்களுக்கும்
பொருந்தும். கீழேயுள்ள அட்டவணையில் காட்டப்படும் புள்ளிகள் 1970 ஆம் ஆண்டு
சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் பல்கலைக்கழகம் புகவேண்டிதற்காகப்
பெற்றிருக்க வேண்டிய புள்ளிகள்.

ஈழம் வரலாறு Cut%20off1

இதன்படிப்பார்க்கும்போது
எவ்வளவு தூரம் தமிழ்மாணவர்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்பது
புரியும். பின்னர், இத்தரப்படுத்தல் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டதாக
அறிகிறேன். இன்றிருக்கும் முறை தொடக்கத்திலிருந்து வேறுபட்டுள்ளது.


எழுபதுகளின்
ஆரம்பத்தில் சத்தியசீலன் தலைமையில் தமிழ் மாணவர் பேரவை தொடக்கப்பட்டது.
அது படிப்படியாக மாற்றமடைந்து பல இயக்கங்கள் உருவாகின. 1972 இல் புதிய
தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு உருவானது. பின் அது 1976 இல் தமிழீழ
விடுதலைப்புலிகள் என்ற பெயரைப் பெற்றது.

ஆரம்பகாலங்களில் ஆயுத
வழியிற்போராடப் புறப்பட்டவர்களில் முக்கியமானவர் பொன்.சிவகுமாரன். தான்
சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டார். பின் சிகிச்சை பலனின்றி
வைத்தியசாலையில் இறந்தார். சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட
முதலாவது போராளி பொன்.சிவகுமாரன் ஆவார்.

தொடரும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஈழம் வரலாறு Empty Re: ஈழம் வரலாறு

Post by Guest Mon Feb 07, 2011 10:25 am

real vampire என்ற பெயர் கொண்ட ... ஈழ தமிழர் என்றால் யார் என்று வினவி இருந்தார் .. இந்த பதிவை படிது பாரும் அய்யா... cotton city காரரே ..... உங்களுக்கு தமிழே தெரியவில்லை அல்லது தமிழை நீர் விரும்பவில்லை .. பின் எப்படி எம் தொப்புள் கொடி உறவுகள் உனக்கு யார் என்று தெரியும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஈழம் வரலாறு Empty Re: ஈழம் வரலாறு

Post by கண்ணன்3536 Mon Feb 07, 2011 11:37 am

வாழ்த்துக்கள் மதன் தொடர்ந்து பதியுங்கள் .ஈழம் என்ற பெயர் இதில் குறிப்பிடுவது போல் இல்லை என கருதுகிறேன் .தேடி பார்த்து பதிவதற்கு முயல்கிறேன்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஈழம் வரலாறு Empty Re: ஈழம் வரலாறு

Post by Guest Mon Feb 07, 2011 11:49 am

நன்றி கண்ணன் அண்ணே... இவர்கள் கூறுவது முரண் தான்... ஈழம் என்பது தமிழ் சொல் தான்... அதற்கான பதிவை நானும் தேடி கொண்டு இருக்கிறேன்...
avatar
Guest
Guest


Back to top Go down

ஈழம் வரலாறு Empty Re: ஈழம் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum