புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
156 Posts - 79%
heezulia
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Pampu
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
321 Posts - 78%
heezulia
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:12 am

First topic message reminder :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Netaji10

பிறப்பு:  ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945


#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2015 10:19 pm

அப்புறம் .............................

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 14, 2021 4:03 pm

பொறுப்பு கிடைத்தது- சிறப்பு சேர்ந்தது!

காந்திஜியிடம் விடை பெற்றுச் சென்ற சுபாஷ், வில்லிலிருந்து விடுபட்ட அம்பைப் போல நேராகக் கல்கத்தாவை வந்தடைந்து தேசபந்து சித்தரஞ்சன தாஸை அணுகினார். அவரைச் சந்தித்த மாத்திரத்தில் சுபாஷின் மனதில் உணர்வலைகள் பொங்கின. “என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளார். திட்டவட்டமான செயல் திட்டங்கள் இவரிடம் உள்ளன. இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துச் செயலில் ஈடுபடுத்தும் ஆற்றலும் இவரிடம் இருக்கிறது. இவர் வழி நல்வழி; இதுவே நம் வழி. இவரே நம் தலைவர்." என்று உறுதி பூண்டார் சுபாஷ். தேசபந்துவும் இவரது துடிப்பையும் ஆர்வத்தையும் எடுத்த எடுப்பில் புரிந்து கொண்டு விட்டார். தேச சேவைக்காக, இளைஞர்கள் பெரிதும் ஆசைப்படும் ஐ.சி.எஸ் பதவியையே துறந்துவிட்டு இவர் வந்திருப்பது அவர் மனதைக் கவர்ந்தது. “உங்களைப் போல இளைஞர்கள் பலரும் தியாக மனப்பான்மையுடன் முன்வந்தால் போதும். சுயராஜ்யம் மிக விரைவாகக் கிடைத்துவிடும்" என்று சுபாஷைப் பாராட்டிப் பேசினார் சித்தரஞ்சன் தாஸ்.

ஒத்துழையாமை இயக்கம் காரணமாக மாணவர்கள் கல்விச்சாலைகளை விட்டு விலகினார்கள் அல்லவா? அவர்களின் வசதிக்காக ஒரு தேசியக் கல்லூரியை சி.ஆர்.தாஸ் நடத்தி வந்தார். துளிக்கூடத் தயக்கமில்லாமல், அந்தக் கல்லூரியின் முதல்வர் பதவியை சுபாஷ¤க்கு வழங்கினார் அவர். அப்போது சுபாஷின் வயது 25. குருவி தலையில் பனங்காயா என்று பலரும் திகைத்தார்கள். தேசபந்துவுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது என்று கேலி பேசியவர்களும் உண்டு. இவற்றை எல்லாம் கேட்டுச் சிரித்துக் கொண்டார் சி.ஆர்.தாஸ். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்ற வள்ளுவரின் குறளை அவர் படித்திருக்க நியாயமில்லை. என்றாலும், அதன் உட்கருத்து அவருக்கு அனுபவத்தாலும் இயல்பான அறிவினாலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அந்தப் பதவிக்கு சுபாஷை விடத் தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

அது மட்டுமல்லாமல், சுபாஷின் குடும்ப நிலைமை அவருக்கு நன்கு தெரிய வந்திருக்கிறது. அவரது தந்தை தமது வருமானம் முழுவதையும் மூன்று பிள்ளைகளின் மேற்படிப்புக்கும், ஐந்து பெண்குழந்தைகளின் திருமணத்துக்குமாகச் செலவிட வேண்டிய சூழ்நிலை. மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்த சுபாஷோ ஐ.சி.எஸ். பதவியை உதறி விட்டார். தாயார் பிரபாவதி தேவி, “ஆண்டவன் விட்ட வழி" என்று சுபாஷின் முடிவை ஏற்றுக் கொண்டாலும், தந்தையாருக்கு வருத்தம்தான். எனினும், சுபாஷின் மனப்போக்கை உணர்ந்து கொண்டவராதலால் ஒன்றும் பேசவில்லை. இந்த நிலையில் குடும்பத்தைக் காக்கும் பெரும் பொறுப்பு சுபாஷின் தலையில்தான். இதை நன்கு உணர்ந்து கொண்டதால் அவருக்குப் பெரிய பதவியைக் கொடுத்தது மட்டுமல்லாமல், கணிசமான மாத ஊதியமும் நிர்ணயித்தார் தாஸ்.

இதைத் தவிர வங்காள மாகாணக் காங்கிரஸின் விளம்பரப் பிரிவுச்செயலாளர் பொறுப்பையும் அவருக்கு அளித்தார். ஸ்வராஜ்யா பத்திரிகை ஆசிரியப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர் படைக்கும் அவர் தலைவர் ஆனார்.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 14, 2021 4:03 pm


எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் மூக்கில் விரல் வைத்து வியக்கும் அளவுக்குத் தம் முதல்வர் பதவியில் சுபாஷ் சிறப்பாகச் செயல்பட்டார். மாணவர்களுக்கு பாரதத்தின் பழம் பெருமைகளை எடுத்துச் சொன்னார். இன்று தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டிருக்கும் இழிநிலைமையும் எடுத்து விளக்கினார். 1857 முதல் விடுதலைப் போரின் வரலாற்றை விரித்துரைத்தார். மேலை நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாறுகளை எல்லாம் உணர்ச்சி பொங்கச் சொன்னார். அயர்லாந்து போராட்ட வீரர் டிவேலராவை சுபாஷ¤க்கு மிகவும் பிடிக்கும். “பிரிட்டனின் துன்பம் எங்கள் இன்பம்" என்ற கொள்கை முழக்கத்தை அவர் பெரிதும் வியந்தார். டிவேலராவின் வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னார். இவற்றினால் எல்லாம் , மானவர்களின் மனதிலே ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவர் என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக ஒரு இளைஞர் பட்டாளமே உருவாகி விட்டது.

அந்தக் கால கட்டத்தில், வங்காள காங்கிரஸில் வக்கீல்கள் போன்ற மேட்டுக் குடியினரும், பணம் படைத்த நில முதலாளிகளுமே நிறைந்திருந்தார்கள். வங்காள மாநிலம் தழுவிய இயக்கமாக காங்கிரஸ் இருந்தது, வங்கப் பிரிவினை எதிர்ப்புப் போருடன் முடிந்து விட்டது. கிராமப்புறங்களிலும், வெளி மாவட்டங்களிலும் காங்கிரஸின் ஈர்ப்பு அவ்வளவாக இல்லை. அங்கெல்லாம், அனுசீலன், மற்றும் யுகாந்தர் போன்ற புரட்சியாளர்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. தேசபந்து சித்தரஞ்சன தாஸ் அரும்பாடு பட்டு, புரட்சிக் குழுக்களைத் தம் வசப்படுத்தினார். புரட்சிக் குழுக்கள் வன்முறையைக் கைவிட்டு காந்திஜியின் அஹிம்சை வழி ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற வகையில் மனமாற்றத்தை எற்படுத்தினார். காந்திஜி வங்காளத்துக்கு வந்து புரட்சியாளர்களுடன் ஒரு ரகசியக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் சி.ஆர்.தாஸின் இல்லத்தில் நடை பெற்றது. காந்திஜியும் கூடவந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களும் தாஸின் விருந்தினர்கள். விருந்து உபசரணையிலிருந்து, கூட்டம் ஏற்பாடு, குறிப்பெடுத்தல் என அத்தனை பணிகளையும் சுபாஷ் சிறப்பாகச் செய்தார். முடிவில் புரட்சிக் குழுக்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டன. வங்காள மாகாண காங்கிரஸில் அவற்றின் உறுப்பினர்கள் முக்கிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். இவர்களில் உண்மையாகவே மனமாற்றம் ஏற்பட்டு அஹிம்ஸை வழிக்குத் திரும்பியவர்களும் உண்டு. வன்முறையைக் கையாள்வதால் பயனில்லை என்று தெரிந்து கொண்டு, ஓர் உத்தி என்ற அளவில் அஹிம்ஸை வழியை ஒத்துக்கொண்டவர்களும் உண்டு. இன்னும் ஒரு பிரிவினர், மனமாற்றம் அடைந்தவர்களும் இல்லை, உத்தி அளவில் அஹிம்ஸையை ஏற்றவர்களும் இல்லை. காங்கிரஸ் பேரியக்கத்தில் ஊடுருவி வன்முறை இயக்கத்தை வளப்படுத்திக் கொள்ள நினைத்தவர்கள் அவர்கள். என்றாலும், சி.ஆர் தாஸின் முயற்சியால்தான், வங்காளத்தில் காங்கிரஸ் இயக்கம், கல்கத்தா எல்லைக்கு அப்பாற்பட்டு விரிவடைந்து, பட்டிதொட்டியெல்லாம் பரவியது என்பதே நிஜம்.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 14, 2021 4:04 pm

வந்துவிட்டார் வேல்ஸ் இளவரசர்!

முதல் உலகப் போர் முடிந்து விட்டிருந்த தருணம். பிரிட்டன் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போரில் இந்தியர்கள் ஒத்துழைத்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்து சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டை உற்சாகத்துடன் செய்தவர் கவர்னர் ரீடிங் பிரபு. ஆனால், இந்திய மக்கள் மனத்தில் உற்சாகம் சிறிதும் இல்லை. யுத்தம் முடிந்ததும் இந்தியர்களுக்கு சுயராஜ்யம் வழங்குவதாக, பிரிட்டன் அளித்த வாக்குறுதி காற்றோடு காற்றாகப் பறந்து போயிற்று. ஏற்கெனவே, ஜாலியன்வாலாபாக் கொடுமைகள், கிலாபத் பிரச்சினைகளால் ஏற்பட்ட கொந்தளிப்பு. இந்தச் சூழ்நிலையில் பிரிட்டிஷ் இளவரசரை வரவேற்க இந்திய மக்கள் சிறிதும் தயாராக இல்லை.

மகாத்மா காந்தி பிரிட்டிஷ் இளவரசர் பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்கும் தினமான நவம்பர் 27, 1921 அன்று நாடு முழுவதும் மக்கள் அர்த்தால் அனுஷ்டிக்க வேண்டும் என்று அறிவித்தார். கல்கத்தா நகரத்தில் இந்த அர்த்தாலை முன்னின்று நடத்தும் பொறுப்பை சுபாஷின் இளந்தோள்களில் சுமத்தினார் தேசபந்து சித்தரஞ்சனதாஸ்.

அகில இந்தியாவிலும் நடந்த அர்த்தால் போராட்டத்தில் கல்கத்தா நகரமே முதன்மை வகித்தது. எப்பொழுதும் ஜே ஜே என்றிருக்கும் அந்த நகரம் அன்று வெறிச்சோடிக் கிடந்தது. பஸ்கள், டிராம்கள் ஓடவில்லை. கடைகள் அலுவலகங்கள் அனைத்தும் மூடிக் கிடந்தன. அலுவலகம் வர விரும்பிய பிரிட்டிஷ்கரர்கள் கூட அன்று இந்தியர்கள் யாரும் வேலைக்கு வரமாட்டார்கள், ஒரு வேலையும் நடக்காது என்று தெரிந்து கொண்ட காரணத்தால் வேலைக்குச் செல்லவில்லை.

“தேசியப்பணியில்" என்று லேபில்கள் ஒட்டப்பட்ட காங்கிரஸ¤க்குச் சொந்தமான வண்டிகள் மட்டும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அன்று இரவு, தேசபந்து சி.ஆர்.தாஸ் சுபாஷை அழைத்துப் பாராட்டியபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஐ.சி.எஸ். பதவியைத் துறந்ததன் பலன் உடனடியாகக் கிடைத்ததுபோல் மகிழ்ந்தார்.

பிரிட்டிஷ் ஆதரவுப் பத்திரிகைகள், வங்காள அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடின. அன்றைய ஒரு நாள் அரசாங்கம் நிர்வாகத்தை காங்கிரசிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டுவிட்டது என்று கேலியாக எழுதின. வங்காள வர்த்தக சங்கம் என்ற பிரிட்டிஷ் வணிகர்கள் சங்கம் ஒரு புகார் மனுவைத் தாக்கல் செய்தது. அர்த்தாலில் கலந்துகொள்ள விரும்பாதவர்களையும் அச்சுறுத்திக் கலந்து கொள்ளச் செய்தார்கள் என்று புகார்.

ரீடிங் பிரபு கடுங்கோபத்தில் இருந்தார். இதற்கு முன்னால் எல்லாம், லண்டனிலிருந்து அரசு விருந்தினர்கள் வந்தார்கள் என்றால், அமர்க்களப்படும். கோலாகலங்கள், களியாட்டங்கள், விருந்துகள், வரவேற்புகள், தோரணங்கள், வளைவுகள், இப்படி. இப்போதோ நேர்மாறு. வேல்ஸ் இளவரசர் சென்ற இடங்கள் எல்லாம் மூடிய கதவுகள். எங்கேயாவது கூட்டம் கூடியிருந்தது என்றால் அது வரவேற்பதற்கு அல்ல, கறுப்புக் கொடி காட்டுவதற்கு. அல்லது, அன்னியத் துணிகளை நடு வீதியில் போட்டுக் கொளுத்துவதற்கு. சமீபத்தில்தான் ரீடிங் பிரபு பதவி ஏற்றிருந்தார். இப்படி இருந்தால், பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடமும், பொது மக்களிடமும், இவர் திறமையில்லாதவர் என்றல்லவா பெயர் உருவாகி விடும்? நாடு முழுவதும், குறிப்பாக வங்காளத்தில் காங்கிரஸ்காரர்களைப் பழி வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

சி.ஆர்.தாஸ் நவம்பர் 22ம்தேதி சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்ல வேண்டியிருந்ததால், சுபாஷ் உட்பட்ட, காங்கிரஸின் இரண்டாம் நிலைத் தலைவர்களிடம் என்ன நேர்ந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டுச் சென்றார். மற்ற விஷயங்களை காந்திஜியைக் கலந்தாலோசித்த பின் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 14, 2021 4:18 pm

நான் என்ன கோழிக்குஞ்சையா திருடினேன்?

இதற்கிடையில், பம்பாய்த் துறைமுகத்தில் இளவரசர் வந்திறங்கிய நவம்பர் 17 அன்று அந்த நகரில் நடந்த சம்பவங்களைச் சொல்ல வேண்டும். இந்துக்களும், முஹம்மதியர்களும் ஒன்று சேர்ந்து பகிஷ்கரிப்பை சிறப்பாக அனுஷ்டித்தார்கள். பார்சியர்கள், ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய வகுப்பினரில் சிலர் புறக்கணிப்பில் கலந்து கொள்ளவில்லை. பார்சி வகுப்பினர் அவருக்கு உற்சாக வரவேற்பே அளித்தார்கள். இதனால் கோபமடைந்த தொண்டர்கள், அவர்கள் மீது வன்முறையை ஏவி விட்டார்கள். பார்சியர் அணிந்திருந்த அன்னிய ஆடைகளை எல்லாம் களைந்து தீ¢க்கிரையாக்கினார்கள். கள்ளுக்கடைகளைத் தாக்கினார்கள். போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. சில போலீஸ்காரர்கள் உயிரோடு கொளுத்திக் கொல்லப்பட்டனர். இப்படியெல்லாம் நகரின் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருக்க, காந்திஜி இன்னொரு பகுதியில் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். பர்தோலியில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப் போகிறது. போலீஸ்காரர்கள் அடக்குமுறையை ஏவி விடுவார்கள், சுட்டுத் தள்ளுவார்கள், என்றாலும் தொண்டர்கள் நிதானம் இழந்துவிடக்கூடாது என்றெல்லாம்.

அந்த சமயத்தில் நகரின் இன்னொரு பகுதியில் நடக்கும் அராஜகங்கள் பற்றிக் கேட்டு அவர் மனம் உடைந்து போனார். உடனடியாக விரைந்தார். போலீஸ் உட்படக் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கச் செய்தார். மயங்கிக் கிடந்தவர்கள் முகத்தில் நீர் தெளித்து ஆசுவாசப் படுத்தினார். சத்தியாக்கிரகத் தத்துவத்தை நடைமுறைப் படுத்த இயலவில்லையே என்று தம்மைத் தாமே நொந்து கொண்டார். "இன்று நான் பார்த்த சுயராஜ்யம், என் நாசித்துவாரங்களை நாற்றத்தால் துளைக்கிறது" என்றார் அவர்.

நவம்பர் 19ம்தேதி அவர் விடுத்த அறிக்கை: 'கடந்த இரண்டு நாட்களாக நான் பட்டு வரும் வேதனையை விவரித்துச் சொல்ல முடியாது. இப்போது அதிகாலை 3.30 மணி. பூரண அமைதியுடன் இருக்கிறேன். இரண்டு மணி நேர பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் பிறகு, எனக்கு வழி தெரிந்துவிட்டது. பம்பாயின் ஹிந்துக்களும், முகம்மதியர்களும், பார்சிகள், கிறிஸ்துவர்கள், யூதர்களுடன் சமாதானம் செய்துகொள்ளும் வரை, ஒத்துழையாமைவாதிகள் ஒத்துழைப்பவர்களுடன் சமதானமாகும் வரை, நான் தண்ணீரைத் தவிர வேறெதையும் உண்ணவோ பருகவோ மாட்டேன்."

நவம்பர் 22 அன்று அமைதி திரும்பியதும் காந்திஜி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

"இந்த நிகழ்ச்சிகள் காரணமாக, காங்கிரஸ் கூட்டம் சூரத்திலிருந்து காந்திஜி தங்கியிருந்த பம்பாய் நகரத்துக்கு மாற்றப் பட்டது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒத்துழையாமைப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. வீதி வீதியாகக் கதர்த்துணியை விற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கல்கத்தாவில் இந்தப் போராட்டத்தை நடத்தும் பொறுப்பு சுபாஷ¤க்குக் கிடைத்தது. ஏற்கெனவே சுபாஷ் மீது ஆத்திரம் அடைந்திருந்த சர்க்கார் அவர் மீது வழக்கு தொடுத்தது. நீதிபதி அவருக்கு ஆறு மாதத் தண்டனை வழங்கினார். அப்போது சுபாஷ், என்ன, எனக்கு ஆறு மாத தண்டனைதானா? நான் என்ன கோழிக்குஞ்சையா திருடினேன்?" என்று கிண்டலாகக் கூறியது, கோர்ட் முழுவதும் சிரிப்பலைகளை எழுப்பியது.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 14, 2021 4:23 pm

ஒத்துப் போனால் என்ன?

பிரிட்டிஷ் நிர்வாகம் படு ஆத்திரத்தில் இருந்தது. காங்கிரஸ் அலுவலகங்கள் சோதனை என்ற பெயரில் சூறையாடப்பட்டன. ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத், லாலா லஜபத்ராய், சித்தரஞ்சன் தாஸ் உட்பட்ட தேசியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

சுபாஷம் சித்தரஞ்சன் தாஸம் ஒரே சிறையில் இருந்தார்கள். சுபாஷ் அவருக்கு செயலரைப் போல இயங்கியதுடன் அல்லாமல், துணி துவைப்பது, பணிவிடைகள் செய்வது போன்ற சொந்தக் காரியங்களையும் கவனித்து அவரது குருகுல சிஷ்யன் போலவே நடந்து கொண்டார். தேசபந்துவின் பெருந்தன்மையான நடத்தை, அனைவரிடமும் கனிவு, பொறுமை இவற்றைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததைப் பெரும்பேறாகவே அவர் கருதினார். சுபாஷின் தலைமைப் பண்புகள் வளர்ச்சிக்கு இந்த ஆறு மாத சிறைவாசமும் முக்கிய காரணம் எனலாம்.

பிரிட்டிஷ் அரசின் கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. கல்கத்தாவில் அனைத்து முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டுவிட்டதால் சித்தரஞ்சன்தாஸின் மனைவி வசந்தி தேவியும் சகோதரி ஊர்மிளாதேவியும் கதர்த் துணியை எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக விற்கப் புறப்பட்டார்கள். வசந்தி தேவியை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றார்கள். இது போலீஸ்காரர்களிடையே கூட பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த அரசில் பணிபுரியக்கூடாது என்று தீர்மானிக்கும் அளவு சென்றுவிட்டார்கள். அரசாங்கம் அவரை இரவோடு இரவாக விடுதலை செய்ததும் அல்லாமல், கைது செய்தது தவறு என்றும் ஒத்துக் கொண்டு அறிக்கை விடுத்தது. தேசபந்துவின் மகன் கடுமையாகத் தாக்கப்பட்டதும், மக்களின் பெரும் எதிர்ப்பைப் பெற்றது.

மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுங்கோன்மையைக் கண்டு பண்டித மதன்மோகன் மாளவியா மனம் நொந்துபோனார். ரீடிங் பிரபுவுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார். ரீடிங் பிரபுவுக்கோ டிசம்பர் 24ம் தேதி வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவுக்கு வரும்போது அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாது, தடபுடலான வரவேற்பு தந்து அசத்தி விட வேண்டும் என்று ஆசை. மாளவியாவின் சமரச முயற்சியை ஏற்றுக் கொண்டார். மாளவியா கல்கத்தாவுக்கு வந்து சிறையில் இருந்த சித்தரஞ்சன்தாஸிடமும் ஆசாதிடமும் விவரத்தை எடுத்துரைத்தார். சிறையில் இவர்கள் பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது ரீடிங்கும் கல்கத்தாவுக்கு வந்து தவிப்போடு காத்துக்கொண்டிருந்தார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, இந்திய அரசியல் உரிமை பற்றிப் பேச வட்டமேஜை மகாநாடு ஒன்றைக் கூட்டுவது- இது அரசு தரப்பில். இதற்குப் பதிலாக காங்கிரஸ் ஒத்துழையாமையை விலக்கிக் கொள்ளவேண்டும், இளவரசர் வருகையைப் புறக்கணிக்கக் கூடாது என்று ஒப்பந்தமிட ஒப்புதல். சுபாஷ¤க்கு இந்த சமரசத்தை ஏற்றுக்கொள்வதில் உடன்பாடில்லை. என்றாலும் சித்தரஞ்சன்தாஸின் விளக்கங்களைக் கேட்டு அவரும் இந்த உடன்பாட்டுக்கு சம்மதித்தார்.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 14, 2021 11:25 pm

ம்ம்... வெகு நாட்களுக்குப்பிறகு இந்த தொடர் தொடர்கிறது.... நடக்கடும் நடக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 9:49 pm

காந்திஜியின் நிலைப்பாடு என்ன?

முதலில் இதனைக் கொள்கையளவில் ஒப்புக்கொண்ட அவர், ஒப்பந்தம் சம்பந்தமான முழு விவரங்களும் தெளிவாகத் தெரிய வேண்டும் என்று கோரினார். அரசியல் கைதிகள் மட்டுமல்லாமல், அலி சகோதரர்களும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று நிபந்தனை போட்டார். (இஸ்லாமியர்கள், கிலாபத் அநீ£தி நீடிக்கும் வரை பிரிட்டிஷ் அரசாங்க ராணுவத்தில் பணிபுரிவது இஸ்லாத்துக்கு விரோதம் என்று மத குருக்கள் விதித்திருந்த பத்வாவை எடுத்துச் சொன்னதற்ககக் கைது செய்யப் பட்டவர்கள் இந்த அலி சகோதரர்கள்,) என்றாலும் சில மணி நேரங்களிலேயே தமது ஒப்புதலை காந்தி வாபஸ் வாங்கி விட்டார். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. நல்லதொரு வாய்ப்பை காந்தி நழுவ விட்டுவிட்டார் என்பவர்கள் இருக்கிறார்கள். மற்றும் சிலர், ‘ரீடிங் பிரபு, படு சூழ்ச்சிக்காரர், இளவரசர் விஜயத்தை ஜாம் ஜாமென்று நடத்துவதுதான் அவர் நோக்கமே தவிர, வட்டமேஜை மகாநாடெல்லாம் ஒன்றுமில்லாமல் பிசுபிசுத்துவிடும். வெள்ளை மனம் படைத்த தாஸ் அவரிடம் ஏமாற இருந்தார். சமயத்தில் நாம் காப்பாற்றப் பட்டோம்’ என்கிறார்கள்.

இப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு ரீடிங் பிரபுவுக்கும் எதிர்ப்புகள் இருந்தன. எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள், லாயிட் ஜார்ஜ். இவர் வைஸ்ராய் பதவியை எதிர்பார்த்திருந்து அந்த இடத்துக்கு ரீடிங் பிரபு வரவே ஏமாந்து போனவர். நடப்பு சமயத்தில் பம்பாய் கவர்னர். மற்றொரு எதிர்ப்பாளர், வெல்லிங்டன் பிரபு, அப்போது மதராஸ் ராஜதானி கவர்னர்.

எது எப்படியோ, இந்த முயற்சி நிறைவேறவில்லை.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 9:50 pm

நழுவிப் போனதா நல்லதொரு வாய்ப்பு?

அது சரி. இப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் எண்று சித்தரஞ்சன்தாஸ் சொன்ன காரணம் என்ன? - சுபாஷ் எழுதுகிறார்.:

"சரியாகவோ, தவறாகவோ, காந்தி ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் என்று உறுதியளித்துவிட்டார். அந்த வருஷம் முடியப் போகிறது.. காங்கிரஸ் தன் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள எதாவது செய்தாக வேண்டும். வைஸ்ராயின் அழைப்பு கடவுள் அளித்த வரப்பிரசாதம் போல் வந்துள்ளது. டிசம்பர் 31க்குள் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு, எல்லா அரசியல் கைதிகளும் விடுதலையானால், பொது ஜனங்கள் மத்தியில் காங்கிரஸுக்குப் பெரிய வெற்றி கிடைத்தது போல் தோற்றம் அளிக்கும். வட்டமேஜை மகாநாடு வெற்றியடையலாம், அடையாமல் போகலாம். அது வெற்றியடையாமல் போய், மக்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காமல் போனால், காங்கிரஸ் எப்போது வேண்டுமானாலும் போராட்டத்தைத் தொடங்கலாம். அப்போது அதற்கு அதிக கவுரவமும் கிடைக்கும். பொதுஜன நம்பிக்கையும் இருக்கும்." தேசபந்துவின் அபிப்பிராயத்தில், ஒத்துழையாமை இயக்கம், மக்கள் மனத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டது. அது தோற்று விட்டதான எண்ணம் ஏற்படக்கூடாது.

நிறைவாக, ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் கிடைக்காதது பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்?

"கால வரம்பு குறித்ததற்கான பழிச்சொல்லை நன் ஏற்றுக் கொள்வதற்கில்லை. சுலபமாக நிரைவேற்றக் கூடிய நிபந்தனைகளை மக்கள் பூர்த்தி செய்திருந்தால் சுயராஜ்யம் பனிரெண்டு மாதங்களில் நிச்சயம் கிடைத்திருக்கக் கூடியதுதான். இதைத் தெரிந்து கொண்ட நான் கால வரம்பு சொல்லாமல் இருந்தால்தான் தப்பாக இருந்திருக்கும். இந்தக் கால நிர்ணயம் செய்தது மக்களை உசுப்பிவிடுவதற்காக அல்ல. உடனடிக் கடமையையும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய மகத்தான சாதனையையும் காங்கிரஸ்காரர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவர்களது சிந்தனையை ஒன்று குவிப்பதற்காகவே அதைச் செய்தேன். இப்படி ஒரு கால வரம்பு நிர்ணயித்திருக்காவிட்டால் நாம் கோடி ரூபாய் சேர்த்திருக்க மாட்டோம். இவ்வளவு சர்க்காக்களைக் கொண்டு வந்திருக்க மாட்டோம். ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கதர் உற்பத்தி செய்திருக்க மாட்டோம். ஏழை மக்களுக்கு லட்சக் கணக்கில் வினியோகம் செய்திருக்க மாட்டோம். வங்காளம், ஐக்கிய மாகாணம், பஞ்சாப் இவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு கைதிகளை அளித்திருப்பது ஒன்றும் மோசமான செயல்பாடு அல்ல.."

டெண்டுல்கர் என்ற வரலாற்றாசிரியர் சொல்வது, "சுயராஜ்யம் உதிக்கவில்லைதான். என்றாலும், விலங்கிடப்பட்டிருந்த மனங்கள் விடுபட்டன."



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 9:52 pm

ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை

அப்படியும் இப்படியுமாக வேல்ஸ் இளவரசர் கல்கத்தா வந்தே விட்டார். 1921 டிசம்பர் 21ம்தேதி. வரவேற்பு எப்படி என்று தெரிந்து கொள்ளத்தானே ஆவலாக இருக்கிறீர்கள்? தெருவில் ஈ காக்காய் கிடையாது. ஒன்றிரு அரசாங்க சேவகர்கள், மற்றும் சில ஆங்கிலேய வியாபாரிகள். அவ்வளவுதான். வீடுகள் கடைகள் அடைத்துக் கிடந்தன. ஒவ்வொரு கட்டிடத்திலும் கருப்புக் கொடி. இத்தனைக்கும் தலைவர்கள் எல்லாரும் சிறையில். உண்மையான மக்கள் எழுச்சி என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும். ரீடிங் பிரபு அடிபட்ட வேங்கையானார்.

இதற்கிடையில் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தென் ஆப்பிரிக்காவில் நடைமுறைப் படுத்தி வெற்றி கண்ட சத்தியாக்கிரகப் போர்முறையை இந்தியாவில் செயல்படுத்த விரும்பினார் காந்திஜி. சத்தியாக்கிரகம் என்பது இரு முனையும் கூர்மையுள்ள ஆயுதம். அதை ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டால் ஆபத்துத்தான் விளையும். இதனைக் கையாள, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், தவிர, ஆழ்ந்த பயற்சியும் கூடத் தேவை.. நாட்டின் ஒரே ஒரு பகுதியில் முதலில் இதைச் செயல்படுத்த விரும்பினார் காந்திஜி. அதற்கு ஏற்ற இடம் எது? சூரத் தான். ஆங்கிலேயர்கள் அங்கேதான் முதல் முதலில் காலடி எடுத்து வைத்து நாட்டைக் கபளீகரம் செய்து கொண்டார்கள். அங்கேயே ஆரம்பித்து வைக்கலாமே? சூரத்தில் பர்தோலி என்ற சிற்றூர் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கே 500 பெண்கள் உட்பட 4000 கதர் அணிந்த தொண்டர்கள், காந்திஜியின் தலைமையிலும் வழிகாட்டலிலும் வெகுஜன சட்ட மறுப்பு இயக்கத்தை, அவர் சொல்லும் தேதியிலிருந்து நடைமுறைப் படுத்துவது என்று உறுதி பூண்டார்கள். இதற்கு காந்திஜி விதித்த நிபந்தனைகள் கடுமையானவை. மத வேறுபாடு பார்ப்பதில்லை, ஒற்றுமையோடு செயல்படுவோம், தீண்டத்தகாதவர்கள் என்று பிரித்து வைத்திருப்பவர்களுடன் தோளோடு தோளிணைந்து பழகுவோம், அகமும் புறமும் தூய்மையாய் இருப்போம், நூல் நூற்போம், கதர் ஆடையே அணிவோம், சிறைவாசமோ மரணமோ வந்தாலும் கூட மனமுவந்து ஏற்போம், கோபம் மற்றும் ஆத்திரத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம், என்பன அந்த நியமங்கள். பர்தோலி மக்களிடையே உற்சாகம் கரை புரண்டோடியது. அச்சம் என்பது அணுவளவும் இல்லை.

பர்தோலி மக்களின் இந்தத் தீர்மானத்தை 1922 ஜனவரி 31ம் தேதி சூரத்தில் கூடிய காங்கிரஸ் கமிட்டி மூழு மனதுடன் ஏற்றுக்கொண்டது. நாடு முற்றிலும் உள்ள மக்கள் இதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. அவர்கள் எப்படி ஒத்துழைப்புத் தருவது? வேறு யாரும் ஒத்துழையாமையை, அமைதியாகவோ, தீவிரமாகவோ கைக்கொள்ளக்கூடாது என்பதே விதி. எதுவானாலும், காந்திஜியின் முன் அனுமதி பெற்றே செய்ய வேண்டும்.

பிப்ரவரி 5, 1922 அன்று அந்த துன்பியல் சம்பவம் நடந்தேவிட்டது. ஐக்கிய மாகாணத்தில், கோரக்பூர் மாவட்டத்தில் செளரிசெளரா என்னும் இடத்தில் ஒரு ஊர்வலம். ஊர்வலம் முடிந்து போகிற வழியில் சில போலீஸ்காரர்கள், கூட்டத்திலிருந்து கலைந்தோ தனியாகவோ சென்ற சிலரை வம்புக்கிழுத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்த்துக்கொள்ள சண்டை முற்றிவிட்டது. கூட்டம் சேர்ந்து விட்டது. போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிட்டார்கள். ரவை தீர்ந்துவிடவே, கூட்டத்தினர் அவர்களைத் துரத்தியிருக்கிறார்கள். அவர்கள் காவல் நிலையத்துக்குள் சென்று ஒடுங்கிக் கொள்ள, கும்பல் காவல் நிலையத்துக்குத் தீ வைத்து விட்டது. அலறியடித்துக் கொண்டு போலீஸார் வெளியே வர, 22 பேரைத் தாக்கிக் கொன்று விட்டது கும்பல். இந்தச் செய்தி அறிந்து காந்திஜி அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை. அவரது சத்தியாக்கிரக சித்தாந்தப்படி, என்ன தாக்குதல் நடந்தாலும் திருப்பித் தாக்காமல் வலிந்தேற்றுக் கொள்ள வேண்டும். சிந்துவது ரத்தமானால் அது போராளியின் ரத்தமாக இருக்க வேண்டுமே தவிர, எதிராளியின் ரத்தமாக இருக்கக் கூடாது. 1930 உப்பு சத்தியாக்கிரகத்தில் இது சாத்தியமாக முடிந்தது. 1922ல் அந்த அளவுக்கு சத்தியாக்கிரகத்துக்கு நாம் தயாராகவில்லை.

காந்திஜி பிப்ரவரி 12ம்தேதியிலிருந்து ஐந்து நாள் தூய்மைப்படுத்திக் கொள்ளும் உண்ணாவிரதம் இருந்ததோடு, போராட்டத்தைக் கை விட்டுவிட்டார். “நாம் இன்னும் அறப்போர் வழிமுறைக்குத் தயாராகவில்லை, நான் அவசரப்பட்டு விட்டேன்" என்று தமது “இமாலயத் தவறுக்காக" அவர் வருத்தப்பட்டார். காங்கிரஸின் அத்தனை தலைவர்களும் காந்திஜியைச் சாடினார்கள். மாளவியா 70 பக்கக் கடிதம் ஒன்றை எழுதினார். மோதிலால் நேரு, “கன்னியாகுமரியில் ஒரு கிராமம் அஹிம்சையைக் கடைப் பிடிக்கத் தவறினால், இமயமலை அடிவாரத்தில் உள்ள கிராமம் தண்டிக்கப்பட வேண்டுமா? கோரக்பூரையும் செளரிசெளராவையும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடருவதில் என்ன தவறு?" என்றார். காந்திஜியோ மிகப் பிடிவாதமாக, “ஒரு துளி நஞ்சு சேர்ந்தாலும் அத்தனை பாலும் வீண்தானே" என்று சொல்லி விட்டார். “எதிராளிகள் கொக்கரிப்பார்களே?" என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்: “நமது அவமானத்தினை அல்லது தோல்வி என்று சொல்லுவதை எதிராளிகள் கொண்டாடிவிட்டுப் போகட்டும். கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்வது, அல்லது வாக்குத் தவறுவது என்பதை விட, பயங்கொள்ளி, அல்லது பலவீனன் என்று குற்றம் சாட்டப்படுவது மேலானதே.நமக்கு நாமே பொய்யனாக இருப்பதை விட உலகத்தின் கண்களுக்குப் பொய்யனாகத் தோற்றமளிப்பது ஆயிரம் மடங்கு மேலானது." காந்திஜியைப் பொறுத்த வரையில் அஹிம்சை என்பது ஒரு அடிப்படை நெறி.

பிப்ரவரி 14, 2002 ல் டில்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அத்தனை பேரிடமும் பாட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார் காந்திஜி. எப்படியோ, அவரது செய்கைக்கு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஒப்புதல் கிடைத்துவிட்டது. அவரது செயலுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் கூட, பின்னால் அவரை ‘சர்வாதிகாரி ' என்றே ஏசினார்கள். “நமது அஹிம்சை மேலுக்குத்தான். இயலாமை காரணமாகவே நாம் அகிம்சை, அகிம்சை என்கிறோம்" என்று மனம் நொந்து கொண்டார் அவர்.

இந்தப் பாடத்தின் காரணமாகவே, காந்திஜி பத்து ஆண்டுகள், எந்த வித சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. முழு மூச்சாக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார். தொண்டர்களை ஈடுபடுத்தினார். 1930ல் நடந்த உப்புச் சத்தியாக்கிரஹம், தீவிர முன் தயாரிப்பின் காரணமாக, சத்தியாக்கிரகப் போர் எப்படி இருக்க வேண்டும் என்று காந்திஜி கருதினாரோ அதற்கு இலக்கணமாக விளங்கியது.

காந்திஜி செல்லாக்காசாகி விட்டார் என்று கருதியது பிரிட்டிஷ் அரசு. யங் இந்தியாவில் அவர் எழுதிய நான்கு கட்டுரைகள் ராஜத்துவேஷமானவை என்று சொல்லி அவரை மார்ச் 10ம் தேதி கைது செய்தார்கள். இதை எதிர்பார்த்திருந்த காந்திஜி. நான் கைதானால், நாட்டில் எந்த வித வன்முறையும் கூடாது, நான் கைதாகும் நாள் மகிழ்ச்சி தினம் என்று அறிக்கை விடுத்தார். எனவே நாட்டில் அவரது கைதுக்கு எந்த வித எதிர்வினையும் இல்லை. அரசுக்கு மகிழ்ச்சி. “காந்திஜியின் கைதை எதிர்த்து ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை" என்று பெருமைப்பட்டுக் கொண்டார் வைஸ்ராய்.

மார்ச் 18ம்தேதி ப்ரூம்ஸ்பீல்டு என்ற நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப்பட்டார் காந்திஜி.. அந்த நீதிபதி காந்திஜியிடம் அவரது அறநெறிகளுக்காகப் பெரு மதிப்பு வைத்தவர். காந்திஜி, “நான் குற்றம்தான் செய்தேன். நீங்கள் தர்மப்படி நடந்துகொள்வது என்றால் உங்கள் பதவியை ராஜினாமா செய்து விடவேண்டும். அல்லது, உங்கள் அரசு செய்வது நியாயம் என்று தோன்றினால், எனக்கு அதிக பட்ச தண்டனை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். நீதிபதி, முன்னர் திலகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை முன் உதாரணம் காட்டி, ஆறு ஆண்டுகள் தண்டனை விதித்தார். அதோடு இல்லாமல், அரசாங்கம் இந்தத் தண்டனையைக் குறைத்தாலோ, ரத்து செய்தாலோ என்னை விட மகிழ்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்று முடித்தார். காந்திஜி, பெருந்தியாகி திலகருக்கு ஈடாக தம்மைக் கருதியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, தம்மைக் கனிவுடன் நடத்திய நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அது ஒரு நீதிமன்ற அறை போல இல்லை, வெகு செளஜன்யமான நிலை நிலவியது என்கிறார் ஒரு வரலாற்றாசிரியர்.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக